மன்னிக்க வேண்டுகிறேன்

This entry is part 20 of 33 in the series 12 ஜூன் 2011

தெலுங்கில்  T. பதஞ்சலி சாஸ்திரி

தமிழாக்கம்  கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

 

“நீங்க என்ன எடுத்துக்கறீங்க?”

“பிஸ்தா ஐஸ்க்ரீம். பெரிய கப்.”

“டு பிஸ்தா ஐஸ்க்ரீம் ப்ளீஸ் …. ஐஸ்க்ரீம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன்.”

“ரொம்ப பிடிக்கும். சமீபத்தில்தான் பழக்கமாகிவிட்டது.”

“பருமானாகி விடுவோம் என்று பெண்கள் பயப்படுவார்கள் இல்லியா? நீங்க அப்படி ஒன்றும் பருமன் இல்லை என்று வைத்துகொள்ளுங்கள்.”

“எனக்கு அந்த பயம் எதுவும் இல்லை. போன மாதம்தான் எனக்கு முப்பது வயது முடிந்து விட்டது. சொல்ல போனால் நான் இளம் பெண்களில் சேர்த்தி இல்லை. பருமானாவது எனக்கும் பிடிக்காது என்று வையுங்கள். என்னுடைய காரணம் வேறு.”

“குட்!  எடுத்துக்கொள்ளுங்கள்.. உங்களுடைய காரணம் என்ன?”

“கல்யாணம் ஆகாத பெண்கள் பருமனாகி விட்டால் கல்யானமாகாது என்று ஜாக்கிரதையாக இருப்பார்கள். எனக்கு அந்த கவலை இல்லை. ஹெல்த் கான்ஷியஸ் இருப்பதால் பருமனாவதை விரும்ப மாட்டேன். என் ஜாக்கிரதையில் நான் இருப்பேன்.”

“சமீபத்தில் பதினைந்து நாட்கள் லண்டனில் தங்கியிருந்தேன். அதாவது  அமெரிக்காவிலிருந்து இறுதியாக இங்கே வருவதற்கு முன்னால் போயிருந்தேன். நம் வயதில் இருப்பவர்கள் எல்லோரும் பருமனாகி விட்டதோடு, தொப்பையை வேறு போட்டு விட்டார்கள். அமெரிக்காவிலும் தொப்பை பிரச்சினை அதிகமாகிவிட்டது”

“கேள்விப்பட்டேன்.. ஜன்க் புட் காப்பிடுவதாலும்,  கூல் டிரிங்க்ஸ் குடிப்பத்தாலும்  இருக்கலாம். இங்கேயும் அபப்டிபட்ட வெண்டாத உணவு வகைகளை சாப்பிடுவது பேஷனாகி விட்டது. அவற்றை விட பானி பூரி, மிளகாய் பஜ்ஜி சாப்பிடுவது மேல்.”

“பாய் பிரண்ட்சுடன் எப்போதும் அப்படிப்பட்ட கிளப்புகளுக்கு போனதே இல்லையா?”

“போவேன். ஆனால் சாப்பிட மாட்டேன். பாய் பிரண்ட்ஸ் என்றால் என்னுடைய கொலீக்ஸ். ஐ ஹவே மெனி ஆப் தெம்.”

“ஐஸீ. நீங்க தவறாக நினைக்க மாட்டீங்க இல்லியா.. இந்த ஐந்தாறு வருடங்களில் நீங்க ரொம்ப மாறி போய் விட்டீங்க.”

“ஆமாம். அப்போ எனக்கு வயது இருபத்தைந்து. நாங்கள் ஹைதராபாதுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தன. இப்போ நான் வேலையில் சேர்ந்து ஆறு வருடங்கள் ஆகி விட்டன. மாற்றம் வராமல் ;இருக்குமா? நீங்களும் கொஞ்சம் மாறியிருப்பது போல் தோன்றுகிறது.”

“அப்படியா.. உங்கள் வேலை எப்படி இருக்கு? நன்றாக பொழுது போகிறது இல்லையா?”

“ரொம்ப விருப்பப்பட்டு வேலை பார்கிறேன். நல்ல சம்பளம். நாம் முதல் முதலில் சந்திக்கும் போது  எம்.பி.ஏ. முடித்துவிட்டு வேலையைத் தேடி கொண்டிருந்தேன். போழுதுபோவதற்காக இல்லை நான் வேலைக்கு போவது.”

“ஐ நோ. நல்ல சம்பளம் என்று சொன்னீங்க இல்லையா.”

“ஆனால் அதைப்பற்றி  கூட இல்லை. இந்த வேலையில் சேர்ந்த புதிதில் என்னைப் பற்றி எனக்கே அதிகம் தெரியாது. சாதாரணமாகப்  படித்தேன். என் பெற்றோர்கள் ரொம்ப நல்லவர்கள். இந்த ஊருக்கு வந்த புதிதில் என் பிரண்ட்ஸ் சிலரின் அலுவலகங்களுக்கு போயிருந்தேன். வித்தியாசம் அப்போ புரிந்தது. வேலையில் சேர்ந்த பிறகுதான் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நிற்கக் கூடிய தைரியம் வந்தது. முக்கியமாக நான் என்னவென்று எனக்கு புரிந்தது.”

“உங்களிடம் வந்த மாற்றத்தை என்னால் உணர முடிகிறது. யு ஆர் எ டிபரென்ட் பர்சன். அப்போ அட்ஜெஸ்ட் மென்ட் பிரச்னைகள் இருக்கவில்லையா?

“ஆறு வருடங்களுக்கு முன்னால் கல்யாணமாகியிருந்தால் வழக்கம் போல் வீடு, குழைந்தைகள், தேவைப்  பட்டால் வேலைக்குப்  போவது எல்லாம் சாதாரணமாக இருந்திருக்கும். இப்பொழுது அதைப் பற்றி நினைத்தால் ஏதோ ஆபத்திலிருந்து வெளியே வந்துவிட்டார் போல் தோன்றுகிறது. நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதில் சில இடைஞ்சல்களும் இருக்கு.”

“உண்மையைச் சொல்லணும் என்றால் நான் ஒரு நாளும் அந்த விதமாக யோசித்ததில்லை. கல்லூரியில் படிப்பைத் தவிர வேறு எதுவும் இருந்தது இல்லை. எங்களுக்கு நியூஸ் பேப்பர்கள் கூட கிடையாது. பிறகு இந்த ஊரிலேயே வேலை. எதிர்பராமல் கலிபோர்னியாவில் ஆபர் வந்தது. போய்விட்டேன். அங்கே எல்லாமே நன்றாக இருந்தது. வேலையும், சம்பளமும். அறுந்து போன காற்றடியைப் போல் தரையில் விழுந்தோம். கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இன்னும் பத்து வருடங்கள் வேலை பார்த்து விட்டு இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆகி விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்..”

“நீங்க தவறாகக் நினைக்கவில்லை என்றால்..”

“எதுவும் நினைக்காமல் இருப்பதற்காகத் தான் இங்கே வந்திருக்கிறோம். சொல்லுங்கள்.”

“அங்கே ..அதாவது உங்களுடைய தகுதிகளுக்கு தகுந்தாற்போல் ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?’

“ரொம்ப நியாயமான கேள்வி. இரண்டு மூன்று வருடங்கள் பணம் சம்பாதிப்பதில் மூழ்கி விட்டதில் வேறு யோசனையே இருந்தது இல்லை. எங்க வீட்டார் பார்த்த ஓரிரு வரன்களும் எனக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவிலும் …”

“அப்படி என்றால் அங்கேயும் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?’

“இலை இல்லை. அவ்வளவு தூரத்திற்கு வரவில்லை.”

“இப்போ என்ன செய்வதாக இருக்கீங்க?”

“முதல் இரண்டு மாதங்களும் மன உளைச்சலில் இருந்தேன். அம்மா என்னைப் பற்றி கவலைப்பட தொடங்கினாள். எதிர்பாராமல் இங்கிலாந்து லிருந்து என் நண்பர்கள் இரண்டு பேர் என்னைப் போலவே வேலையை இழந்து ஹைதரபாதுக்கு வந்துவிட்டார்கள். மூன்று பெரும் சேர்ந்து ஏதாவது செய்யணும் என்று திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறோம். வீட்டில் தொந்தரவு  அதிகமாகி  கொண்டு வருகிறது.”

“தொந்தரவு என்றால்? ஒஹ் …  .புரிகிறது. நம் நாட்டில் கல்யாணம் என்பது சுய விருப்பு வெறுப்புகளுக்காக அல்லாமல் தேவைக்காக நடக்கும். முக்கியமாக பத்து பேர் என்ன சொல்லுவார்களோ என்ற ஸ்டுபிட் பியர்.”

“`அப்போ உங்க  பெற்றோர்கள்?’

“வரன் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். திகையவில்லை. அம்மாவுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை அதிகம். என்  திருமணம் தாமதமானால் வந்த ஆபத்து என்னவென்று எனக்குப் புரியவில்லை. எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. அதது காலாகாலத்தில் நடந்தால்தான் அழகு என்பாள் என் சித்தி.”

“ஆமாம்.. எங்க அம்மாவும் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருப்பாள்.”

“சில்லி.. அழகு யாருக்காம்? பார்க்கிறவங்களுக்கு. பண்ணிக் கொள்பவர்களுக்கு இல்லை. பார்க்கிறவர்களின் சந்தோஷத்திற்காக நான் ஏன் பண்ணிகொள்ளணும் சித்தி என்பேன் நான். நமக்கு என்று ஒரு யோசனை இருக்க வேண்டாமா? ஏன் சிரிக்கிறீங்க?”

“ஒன்றும் இல்லை. நீங்க ரொம்ப ராடிகல் ஆக சிந்திக்கிறீங்க.”

“இல்லை. லாஜிகல் ஆக பேசுகிறேன். நாம் மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நமக்காக அல்ல .எல்லோரும் என்ன செய்கிறார்களோ அதையே பின் பற்றுவோம். வேடிக்கை என்னவென்றால் மாலை போட்டு, சிலை வைத்து போற்றும் அளவுக்கு நாம் எந்த சிறப்பான காரியமும் செய்யவில்லை. உங்களுக்கு போர் அடிக்கிறதா? போகட்டும் விடுங்கள். வேறு ஏதாவது பேசுவோம்.”

“இல்லை இல்லை. அமெரிக்கன் விமன் கூட இன்டிபெண்டென்டுடன் இருப்பதை விரும்புவார்கள்.”

“அது இன்டிபெண்டென்ஸ் இல்லை. மற்றவர்களுடன் சேர்ந்து இருக்க முடியாத குணம். அது போன்ற சுபாவத்தை என்னால் சப்போர்ட் செய்ய முடியாது. இது என்னுடைய தனிதன்மைக்கு சம்பந்தப்பட்டது.”

“தனிதன்மை இருப்பது நல்லதுதான் என்று வையுங்கள். அப்போ உங்களுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் ப்ராப்ளம் இருக்காதா?’

“தனிதன்மை என்றால் மற்றவர்களுடன் ஒற்றுப்போக முடியாது என்று அர்த்தம் இல்லை. இதுநாள் வரையில் ஒற்றுப் போவதை  பெண்கள்தான் செய்து கொண்டு வந்தார்கள். இப்பொழுது நீங்களும் அதை கடை பிடிக்க வேண்டும்.”

“அங்கேயும் பெண்கள் உரிமையைப் பற்றி நிறைய போராட்டம் நடந்து  கொண்டு இருக்கிறது.”

“இது வெறும் உரிமைகளுக்கு சம்பந்தபட்டது மட்டும் இல்லை. நம் முன் தலைமுறையினர் வாழ்ந்த வாழ்க்கை இல்லை இது . அவர்கள் பார்த்த வேலையில்லை இது . அவர்கள் அனுபவித்த  மன அழுத்தம் இல்லை இது. அதனால் நமக்கு என்ன வேண்டுமோ நமக்குத்தான் முதலில் தெரியவேண்டும்.  வேலையில் புத்திசாலியாக இருக்கும்  பெண்மணி நல்ல இல்லத்தரசியாக  இல்லாமல் இருக்கலாம். வேலைக்குப் போகும் மனைவியை விரும்பும் கணவனுக்கு, இல்லத்தரசியாக அவளைப் பிடிக்காமல் போனால் அது யாருடைய தவறு?

“நீங்க இவ்வளவு நன்றாக பேசுவீங்க என்று அப்பொழுது எனக்கு தெரியாமல் போய்விட்டது.”

“எனக்கும் தெரியாது. வாழ்க்கை எனக்கு பாடம்  கற்றுக் கொடுத்தது. பேரர்!  வேறு எதுவும் வேண்டாம். சிப்ஸ் மட்டும் கொண்டுவா. தேங்க்ஸ்.”

‘உங்களுக்கு ஆண்களிடம் கோபம் என்று நினைக்கிறேன்.”

‘இல்லை இல்லை. ஆண்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்றோ பெண்கள் மட்டுமே நல்லவர்கள் என்றோ எந்த முட்டாளும் சொல்ல மாட்டான். நம் தலைமுறையில் ஆண் பெண் இருவருமே பாதிக்கப் பட்டவர்கள்தான். சாயிஸ் இல்லாமல் போகிறது. மாறிக் கொண்டு வரும் வாழ்கைக் முறையில் இருவருக்குமே சாயிஸ் குறைவு. நாம் அதை  முதலில் உணர் வேண்டும். அந்த மாற்றத்தை கையாள நமக்குத் தெரியவில்லை. இந்த சூழ்நிலை பெரியவர்களுக்குப் புரியாது. வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு வேண்டியது தோழமை. .சொற்பொழிவு அல்ல. அமெரிக்காவில் உங்களைப் போன்றவர்களுக்கு வேலை போனது எவ்வளவு நல்லதாகி விட்டது என்று உங்களுக்கு புரியவில்லை.”

“வேலை போனது நல்லதா? வேடிக்கைதான் போங்க.”

“ஆமாம். நீங்க நினைக்கும் அர்த்தத்தில் இல்லை. யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும். ஒரு விதமாகக் சொல்லணும் என்றால் அதற்கு நீங்களே ஒரு எடுத்துக்காட்டு.”

“எனக்குப் புரியவில்லை.”

“உங்களுக்கு கோபம வந்து விட்டது போல் இருக்கு. ஐ யாம் சாரி. வேறு ஏதாவது பேசுவோம். சிப்ஸ் நன்றாக இருக்கு.”

“நீங்க புத்தகங்கள் நிறைய படிப்பீங்களா?”

“ரொம்ப குறைவு. சமீபத்தில் எங்க சித்தப்பா ‘என்ன சலம் புத்தகங்கள்  படிக்கிறாயா?’ என்று கேட்டார்.”

“படித்தீங்கள? சலம் யாரு?”

.”எனக்கும் சரியாக தெரியாது.  தம்பி சொன்னான். குடிபாடி வெங்கடாசலம் பெண்களை பற்றி உயர்வாக எழுதியிருக்கிறாராம். நானும் என் தம்பியும் நிறைய பேசிக் கொண்டிருப்போம்.”

“குட்! உங்களுடன் பொழுது  இவ்வளவு நன்றாக போகும் என்று எதிர்பார்க்கவில்லை. பத்து நிமிடங்கள் என்று நினைத்திருந்தேன். வெரி நைஸ் ஈவினிங்.”

‘நீங்களும் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உங்களுக்கு அனுபவம் அதிகம் இல்லையா?”

“உங்களைப் போல் யோசித்திருந்தால் அனுபவம் கிடைத்திருக்குமோ என்னவோ. வெளிநாட்டில் இருப்பதால் மட்டும் உண்மையான அனுபவம் வந்துவிடாது. இத்தனைக்கும் உங்களுடைய அபிப்பிராயத்தை சொல்லவேயில்லை.”

‘நீங்க தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு விஷயம் கேட்கலாமா?'”

“கேளுங்கள். நம் வெளிப்படையாக பெசிகொல்வது  நல்லது என்றுதானே இங்கே வந்திருக்கிறோம். உங்க அப்பா வெளியே காத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.”

‘ஆறு வருடங்களுக்கு முன்னால் உங்களுக்குப்  பிடிக்காமல் இருந்தவளை மறு படியும் தேடி கொண்டு வந்திருக்கீங்க. அப்போ நான்  இஞ்சினியர் இல்லை என்பதால் வேண்டாமென்று நினைத்தீங்க. இப்பவும் நான் இஞ்சினியர் இல்லை.”

“அதாவது உங்களைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. அப்போ ஒரே புரோபஷனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இப்போ சூழ்நிலை மாறிவிட்டது.”

‘வெளிப்படையாகக் சொல்லணும் என்றால் இப்போ யாராக இருந்தாலும் ஒன்றுதான். உங்களுடைய தேவை மாறிவிட்டது. நீங்க என்னை பார்க்க வந்தபோது கட்டாயம் சம்மதிப்பீங்க என்று நினைத்தேன். உண்மைச் சொல்லணும் என்றால் கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனால் உங்களுக்கு நன்றி சொல்லணும்.”

‘ஐ யாம் சாரி. பட் .. போகட்டும் விடுங்கள். அதான் முடித்து விட்டதே. நீங்க இந்த ஆறு வருடங்களில் வீடு மாறி இருந்தால் சிரமமாக இருந்திருக்கும். ஒ. கே. உங்களுடைய அபிப்பிராயம் சொல்லுங்கள். அம்மா ;இந்நேரம் ஆயிரம் கடவுளுக்கு வேண்டிகொண்டிருப்பாள்.”

“உங்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. தயவு செய்து என்னை தவறாக  புரிந்து கொள்ளாதீங்க.. ஒரு விதமாகக் சொல்லப் போனால் நீங்க எனக்கு உபகாரம்தான் செய்திருக்கீங்க. ஆனால் ஐ யாம் சாரி மிஸ்டர் மூர்த்தி.”

 

 

Series Navigationவட்ட மேசைஎனது இலக்கிய அனுபவங்கள் – 2 ஆசிரியர் உரிமை
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *