மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“வாழ்க்கை வீணையை எவரது விரல்களும் மீட்ட முடியாது என்னுடைய கரம் தொட்டு அவை ஆசீர்வதிக்கப் படா விட்டால், அவரது கண்கள் எனது ஆசனப் பீடத்தின் தெரிசனம் பெறா விட்டால் ! தேவ தூதர் இசையா (Isaiah) வார்த்தைகளை என் காதல் தங்கச் சங்கிலியில் விலை மதிப்பில்லாக் கற்களாய்க் கழுத்தணியில் கோர்த்தார். புனித தூதர் ஜான் (Saint John) என் சார்பாகத் தனது ஒளிமயக் காட்சியைக் கண்டார்.”
கலில் கிப்ரான். (The Goddess of Fantasy)
++++++++++++++++
மெய்யான சொத்து
++++++++++++++++
கற்கும் அறிவுதான்
ஒருவரது சொத் தாகக்
கருதப் படும் !
முரடர் பறித்துக் கொள்ள
முடியா தது !
மரணம் ஒன்றே உள்ளத்தில்
எரியும்
அறிவு விளக்கை
அணைத்திடச் செய்வது !
தேசத்தின் மெய்யான சொத்து
பொற் காசில் இல்லை
வெள்ளி நாண யத்தில் இல்லை !
கற்கும் அறிவில் தான்
உள்ளது !
நாட்டுப் புதல்வர்
நேர்மைப் போக்கில் உள்ளது !
++++++++++++
ஆன்மீகச் செழிப்புகள்
மானிட முகத்துக்கு
வனப்பூட்டும் !
பரிவும் மதிப்பும் தோன்றப்
பாதை வகுக்கும் !
ஆத்மாவின் ஒளிக் கூர்மையை
விழிகள் காட்டும் !
எழில் மேனியில் தெரியும் !
உடல் நெளிவில்
பாவனை யில் புரியும் !
நமது தோற்றம்
நவிலும் வார்த் தைகள்
நடை, கால் நகர்ச்சி
நடிப்புகள் – இவை யெல்லாம்
நம்மை விடப் பெரிதல்ல
ஒருபோதும் !
ஆத்மாவே நமது இல்லம் !
அதற்குச் சாளரம் நம் விழிகள் !
ஓதும் வாசகம் அதன்
தூதர்கள் !
(தொடரும்)
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 21, 2011)
- முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்
- கதையல்ல வரலாறு (தொடர்) 1
- சலனப் பாசியின் பசலை.
- நிழல் வேர்கள்
- நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
- ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்
- காற்றும் நானும்
- ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..
- சமன் விதி
- புறமுகம்.
- புழுக்கம்
- நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.
- (71) – நினைவுகளின் சுவட்டில்
- சனி மூலையில் தான் நானும்
- வினா ….
- இறந்து போன எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- எனது இலக்கிய அனுவங்கள் – 4ஆசிரியர் உரிமை (3)
- மகளே கனிமொழி, வருந்துகிறேன், உனக்காக
- பிறந்த மண்
- காலம் – பொன்
- ப.மதியழகன் கவிதைகள்
- காட்சியும் தரிசனமும்
- ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி
- சின்னப்பயல் கவிதைகள்
- காகித முரண்
- அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்
- விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்
- மேலதிகாரிகள்
- அண்ணாவும் மாணவர்-தொழிலாளர் மோதலும்: மேலும் கொஞ்சம் பேசலாம்
- என்னைக் கைது செய்யப் போகிறார்கள்
- கவிஞனின் மனைவி
- வாழ்தலை மறந்த கதை
- ஊதா நிற யானை
- இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
- “அறுபத்து நான்காவது நாயன்மார்“
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)
- 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5
- பாரிசில் இலக்கிய விழா, இலக்கியத் தேடல் விழா
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 6
- கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
- ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்
- திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்
- இருள் குவியும் நிழல் முற்றம்
- பழம் இசைக்கருவி மோர்சிங் தமிழில் – நாமுழவு
- பெண்களின் விஸ்வரூபம் -வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..