கசங்கும் காலம்

This entry is part 3 of 51 in the series 3 ஜூலை 2011

எங்கள் நடைச் சேற்றில்
சாத்தான் விதைகளின் முளை.
உழக்கும் கால்களைத் தடவி அது
அங்கக் கொடியாய்ப் படரும்.
நிலத்தின் படுக்கைகள்
ஒவ்வொரு இராப்பொழுதிலும்
கசங்கிப் போகிறது.

அந்தரங்கத் துணையொன்று
இரகசியங்களில்
பறந்தோடும் மின்மினிகளைப்
பிடித்தொட்டுகிறது.
மெதுவாய்த் தின்னும் பூச்சிகளால்
கரைந்து போகிறதெல்லாம்.

சாத்தானின் பொழுதுகளில்
ஒளிப்பேதம் எங்கே?
ஆச்சரியங்கள் மயங்கிய
சாதாரண நாளொன்றில்
நிரந்தரமாயிற்று நிர்வாணம்.

நிலத்தைப் புணருமுடல்களின் கீழ்
கசங்கிப் போகிறது காலம்.

-ந.மயூரரூபன்

Series Navigationகுரூர மனச் சிந்தனையாளர்கள்இந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா?
author

ந.மயூரரூபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *