மனபிறழ்வு

This entry is part 36 of 51 in the series 3 ஜூலை 2011

அங்குலட்சுமிக்கு குறிஞ்சி நகரில் வீடு, அலுவலகமோ அவனாசி ரோட்டில் தினமும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சிக்னல் சிக்னலாக தாண்டி அலுவலகம் செல்லுவாள். வண்டி ஓட்டுகின்ற போது மனது பாதையில் இருக்கும், சிக்னலில் நிற்கும் போது அது சற்று அடம் பிடிக்கும் அன்றைக்கு அவளுக்கு நல்ல வரன் அமைந்துள்ளதாக அவளின் பெற்றோர்கள் நிரம்ப சந்தோசமாக இருந்தனர். இவள் இடைப்பட்ட பெண், அக்காவுக்கு திருமணமாகி விட்டது. இவளுக்கு கீழே ஒரு தங்கை படித்துக் கொண்டு இருக்கிறாள்.

நடுத்தர குடும்பத்திற்கே உண்டான உபசரிப்புகள், திருமணத்தை எங்கே வைப்பது, ஜவுளி எடுப்பது எங்கே சமையல் காரர்கள் எத்தனை பேர், யார் யாரை அழைப்பது, பத்திரிக்கை எப்படி அடிப்பது போன்ற விசயங்களிலும் இரண்டு சம்பந்திகளும் நீங்கள் சொன்னால் சரி என்று ஒரே அமர்களமாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக நிறைய சொந்தபந்தங்கள் வந்து போனார்கள் தொலைபேசியிலும் அலைபேசியிலும் நிரம்ப நேரம் எடுத்துக் கொண்டு பேசினார்கள், பேசிக்கொண்டே இருந்தார்கள். இது நடந்தது ஆறு மாதங்களுக்கு முன்னால்.

இப்பொழுது அவள் அலுவலகம் செல்லவில்லை, பதிலாக நீதிமன்றம் செல்வதற்காக தாராபுரம் ரோடு சிக்னலில் நின்று புதிதாக தொடங்கப்பட்ட உயர்தர சைவ உணவகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மாநகராட்சி சிக்னல் எப்பொழுதுமே சற்று அதிக நேரம் பிடிக்கும். மெல்ல நகர்ந்தது சிக்னல் அப்பொழுது அவளுடைய கல்லூரிகால தோழி காரில் இருந்தாள் கோமதி. ஏய் எப்படி இருக்கே?
அப்புறம் பேசலாம் அங்குலட்சுமிக்கு கண்ணீர் பணித்தது கண்ணில், கோபம் கோபமாக வந்தது பல சொந்தங்கள் மேல்!

நீதிமன்றம் வந்தவுடன் கைபேசியில் எடுத்து தனது வழக்கறிஞரின் உதவியாளரிடம் தான் வந்து விட்டதாக தெரிவித்தாள். அவளுக்கு நீதிமன்ற விவகாரங்கள் எதுவுமே புரிய வில்லை. வழக்கறிடம் அதிகமாக கேள்வி கேட்டால் நீயும் போய் B.L. படித்து 10 வருடம் பிராக்டிஸ் பண்ணு, அப்பொழுது தான் உனக்கு புரியும், சொன்னதை மட்டும் செய் என்கிறார் சற்று கடுப்புடன். அதற்மேல் அவரிடம் பேச முடியாது. வாழ்க்கை தான் தொலைந்து போய் விட்டது. வக்கீலுடன் சண்டை என்றால் அது வேறு புதிய பிரச்சனை.

அங்குலட்சுமி இளம் பெண் தான், அதனால் பெண் பிள்ளை தனியாக நீதிமன்றத்துக்கு அனுப்ப முடியாது நீங்கள் கூட செல்ல வேண்டும் என்று அவள் அம்மா நச்சரிக்க அவர் வேலை செய்யும் இடத்தில் அவ்வளவு சுலபமாக லீவு கொடுக்க மாட்டார்கள். எப்படியோ சமாளித்து அவரும் அங்கு வந்து நின்று கொண்டார்.

பாவம் அவர், திருமணம் முடிந்தால் ஒருத்தியை கரை ஏற்றிவிட்ட திருப்தியில் இருக்கலாம் என்றால்! ஒன்றுக்கு இரண்டாய் பிரச்சனை விசுவரூப மெடுத்திருந்தது. அடுத்தவளை வேறு கரையேற்ற வேண்டும். அவருக்கும் வயது அதிகம் ஆனதினால் முன்புபோல உடம்பும் மனமும் ஒத்துழைக்க வில்லை. இருந்தாலும் ஆத்மா இப்படியாகி விட்டதே என்று தவித்துக்கொண்டு இருந்தார். நானே கலங்கினால் என்னை பார்த்து மகளும் மேலும் கலங்குவாள் என்று எண்ணி இருதலை கொள்ளி எறும்பு போல சொல்லவும் முடியாமல் மெள்ளவும் முடியாமல் பிரமை படித்தவை போல பார்த்துக் கொண்டு நின்றார் போகிற வருகிற நபர்களை பார்த்து.

அங்குலட்சுமிக்கு வழக்கறிஞரின் அலுவலகத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமைகளை சொன்ன போது, இந்த உலகில் இவளுக்கு மட்டுமே நடந்ததாக எண்ணி மிகவும் கோபப் பட்டவள், நீதிமன்றம் வந்தவுடன் தன்னை போல ஏமாந்தவர்கள் ஏராளம் என்று எண்ணியவுடன் அவளின் கோபம் நாகரீகம் கருதி சற்று தணிந்தது.

அன்பான அம்மா அப்பா, அக்கா, சண்டை பிடிக்க அன்பு தங்கச்சி என்று நன்றாகத் தான் சென்று கொண்டு இருந்தது குடும்பம். நல்ல கல்லூரி வாழ்க்கை நல்ல சினேகிதிகள். பெரிய பணக்கார வாழ்க்கை பங்களா கார் என்று இல்லாவிட்டாலும், அமைதியான குடும்பம் உழைப்பு தெரிந்த குடும்பம், எந்தவிதமான சிரமமும் இல்லாமல் தான் சென்று கொண்டு இருந்தது திருமணத்திற்கு முன்பு வரை.

அங்குலட்சுமிக்கு நீதிமன்றம் சென்று வந்தாலே உடம்பு அடித்து போட்ட மாதிரி ஆகிவிடும், அன்றும் அதேபோல வீடு வந்து சேர்ந்தவுடன் குளித்து அம்மா செய்து வைத்திருந்த புளியோதரை சாதம் மோர் ஊறுகாய் என்று சிக்கனமாக முடிந்திருந்தது. அது என்னவோ கோர்ட்டில் கேஸ் இருக்கிறது என்று தெரிந்து விட்டால் அம்மாவுக்கு அன்றைக்கு சமைக்க பிடிக்காது பித்து பிடித்தவள் போல் ஏதாவது ஒன்றை சமைத்து பட்டினி இல்லாமல் காப்பாற்றி விடுவாள்.

குளித்து விட்டு ஈர தலையுடன் சாப்பாட்டு சாப்பிட உட்கார்ந்தால் தலையில் ஈரீழை துண்டுடன் அவளுக்கு அவள் வாழ்க்கை நாசமானத்தை பற்றி பற்றி அவளுக்கு அதிகம் கவலையில்லை. தன்னை பெற்றெடுத்த இருவரும் மருகுகிறார்களே எனபது தான் அவளுக்கு வருத்தம். பசி இருக்கிறதோ இல்லையோ நன்றாக சாப்பிட்டதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதாக உணர்ந்து இப்பொழுது நடிக்கவும் பழகி விட்டால் அவள். தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக்கு ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை என்பதில் மிக நேர்த்தியாக நடிக்க பழகி விட்டாள் அவள்.

நீதிமன்ற வளாகத்தில் வெயிலின் களைப்பு உட்கார இடமில்லை காலை சிற்றுண்டி காபி, டி என்று எதுவாது அருந்தினால் கழிப்பறை வசதி வாய்ப்புகள் இல்லை என்கின்ற புரிந்துணர்வு, மனதில் எழுகின்ற எண்ணங்களை எல்லாம் வெளியில் சொல்லி விட முடியாது.

காலை எதுவும் சாப்பிடாமல் நீதிமன்றம் சென்று பல்வேறு தரப்பு மக்கள் மத்தியில் நின்றதன் பலன் அவளை ஏகோபித்தது, தன்னை அறியாமல் தூங்கினால் தாயின் அரவணைப்பில்.
ஏய் அங்கு!

உன்னுடைய பிரன்ட் கோமதி கூட்பிடரா? அலைபேசி அங்குலட்சுமி கைக்கு வந்தது.
ஏண்டி என்னை மறந்திட்டியா?
கோமதி கோவிச்சுக்காதே இங்கே நானே நடிச்சுகிற்றுகேன் நீ ஏதும் நாரதர் வேலையை பண்ணாதே!

சும்மா நடிக்காதே தண்ணீர் குடம் ரூ.2 கொடுத்து அது எப்ப வரும் என்று தெரியாத ஊர்ல பொழைச்சுகிட்டு இருக்கின்ற ஊர்ல இருந்து உன்னை எல்லாம் அமைதியாக வற்றாத ஜீவ நதியான காவேரி கரை ஊருக்கு கட்டி கொடுத்த எங்களை எல்லாம் உனக்கு மதிக்க தெரியாது டி.!

நீ சொன்ன மாதிரி தாண்டி நடிக்கிறேன். உனக்கு ஆத்திரம் உன்னை கூப்பிட்டு ஆல்பம் காட்டலே. உன் வீட்டுக்கு சாப்பிட வரலே என்று கோபம் உனக்கு. அது எனக்கு புரியாம இல்ல இப்ப மணி மாலை 6, ஒர் ஆறாறை மணிக்கு மாநகராட்சி பூங்காவுக்கு வந்துடு நேரில் பேசணும் வைக்கட்டுமா.

அம்மாவுக்கு சந்தேகம் இவளுக ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்ச காது சூடு ஏறினாலும் பேசுவாளுக, என்னமோ இருக்குது.

உடை உடுத்தினாளால் வக்கீல் உதவியாளர் அழைத்ததாக அமமாவிடம் சொன்னாள் அம்மாவுக்கு நெருடியது. இருந்தாலும் தன பெண் தன்னை தாண்டி தப்பு செய்ய மாட்டாள் என்கின்ற ஓர் உணர்வு, ஏற்கனவே ஏமாந்து அவளை கொடுத்தாகி விட்டது தப்பு நம்முடையது அவள் ஒன்றும் காதல் கல்யாணம் செய்தவிட்டு ஓடவில்லை என்னை விட என் பெண் புத்திசாலி என்பதில் உறுதியாக இருந்தாள்.

மாநகராட்சி பார்க்கு வந்து விட்டேன், என்று சொல்லலாம் என்றால் யாரோ 108-ல் போய் கொண்டுருந்தார்கள். செவிவழி செய்தியாக திருப்பூரில் நிறையபேர் சாணிபவுடர் குடிக்கிறார்கள். ஆகவே அது தடை செய்யப்பட்ட ஒரு பொருளாக உள்ளது.

கோமதி வந்து விட்டால் அவளுடைய குழந்தையுடன் அந்த குழந்தையை பார்த்தவுடன் இவளுக்கு பற்றி எறிந்தது.

இருந்தாலும் இவள் பெண் அல்லவா! கோமதி! வந்திடுட்டாயா? இது என் பையன் பேர் தெரியுமா?

சங்கிருஷ்ணன் ! அங்குலட்சுமி ஏற்கனவே நொந்த நூடுல்ஸ் இவள் வேறு பெயர் எக்காளமாக வைத்து விட்டால் இருந்தாலும் நடிக்க பழகிவிட்டாள் அழகி மாதிரி.

இவள் உன்னுடன் தனியாக பேச வேண்டும் என்று கூப்பிட்டால் உன்னுடைய பையன் கூப்பிட்டு வந்து என்னுடன், எனக்கு நல்ல புருஷன் கிடைத்து விட்டான் என்று பெருமை தேடிக் கொள்கிறாய் என்று எரிச்சல், ஆனாலும் பெண்களுக்கு உண்டான ஓர் அருமை.

ஏண்டி என்ன மேரேஜ் ஆல்பத்த காட்டனா உனக்கு என்ன நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரியல. கோபம் கோமதிக்கு.

அங்கு அங்குலட்சுமிகோ “ஏன் சோக கதையை கேளு தாய் குலமே.!”
என்று இருந்தது.

கோமதிக்கு ஏனோ என்னவோ என ஆனது. இருவரும் கல்லூரி தோழிகள். எதுவாக இருந்தாலும் உளறுவாய் அங்குலட்சுமி, கோமதியிடம் கூறிவிடுவாள். அவள் மௌனம் சாதித்தது ஏனோ கோமதியை உறுத்தியது.

ஏண்டி உனக்கு போட்டோ ஆல்பம் காண்பிக்கவில்லை என்று கோபம், உன்னுடன் பேசவில்லை என்று கோபம், சராசரி பெண்களுக்குண்டான கோபம் உனக்கு. சராசரியாகத்தான் நானும் இருக்கவேண்டும் என்றுதான் இருந்தேன்.

எனக்கு ஒன்றும் அழகான சினிமா ஹீரோ போல வேண்டும் என்று கற்பனையில் என்னுடைய அம்மா அப்பா வளர்க்கவில்லை.

என்னடீ சொல்லவரே…?

அவருக்கு! அம்மா பையன்!!

புரியலடீ…

ஏண்டி உயிர எடுக்கற..?

அவன் அம்மா பையன்டீ..!

புரியும் படியா சொல்லுடி.

பால்குடி மாறலடி!

ஏய் கொஞ்சம் புரியும்படியா சொல்லு?

அவன் ஆத்தா சோறு போட்டாதான், அதாவது அவங்க அம்மா சோறு ஊட்டினாதான் சாப்பிடுவானாம்.

அவனுக்கு அவங்க அம்மாதா குளிச்சு விடுமாண்டி.

சொல்றது புரியலடி.

அறிவுகெட்ட முண்டம் டியூப் லைட். உனக்கு இதுக்கு மேல சொல்லணும். இது சம்மந்தமா என் அம்மா, அப்பன் கிட்ட கூட சொல்ல முடியல!

பைய படுக்கிறத அவங்க அம்மா, அப்பன் பாப்பாங்லாம். அப்பத்தான் அவனுக்கு என்ன நடக்குதுனே தெரியுங்கிறான்.

என்னடி சொல்லவரே?

லூஸ் குடும்பண்டி, இதுல வாழாவெட்டி நாத்தனார் ஒருத்தி உட்கார்ந்து செல் போன்ல லைவ் டெலிகாஸ்ட் வேணுங்கரா..!

இப்படியெல்லாமா இருப்பாங்க!

கருமம் புடுச்சவடி நீ. இதெல்லாம் உன் கிட்ட சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு. இதை உன்னவிட்டா யாருகிட்ட சொல்ல.

கோர்ட்ல போய் சொன்னா ஒவ்வொருத்தனும் ஒருவிதமா பாக்குறானுவ. எனக்கு ஏற்கனவே கொஞ்சம் பெரிசு. ஒவ்வொருத்தனோட கண்ணும் ஒருவிதமா இருக்கு. இப்ப இதுக்கு பயந்துட்டே வெளியூர் போயிட்டேன்.

நான் கொஞ்சம் ஓபிசிட்டி டைப் தான். அது அவங்களுக்கும் தெரியும். ஆனா நான் என்னடி பண்ணினே?

லூஸ் பையன என் தலையில கட்டி வச்சுடானுவ.!

எனக்கு கல்யாணமே ஆகலைனாலும் பரவாயில்லை. அதற்காக இந்த கொடுமையா?

சரி என்னதான் முடிவு பண்ணினே.?

அதுக்குதாண்டி கோர்ட்ல கேஸ்…

என்ன சொல்றாங்க?

எனக்கும் புரியலடி!

அம்மா அப்பா என்ன சொல்றாங்க.

குற்றம் புரிந்தவன் வாழ்கையில் நிம்மதி ஏது என்று பழைய பாட்டு பாடராங்கடீ!

சரி நீ என்ன முடிவு பண்ணிருக்கற?

என் அம்மா, அப்பா வேறு வக்கீல் ஆபீஸ் வந்துவிட்டேன். எங்கே தொலைந்தாய் என்று அலைபேசியில் அழைப்பு. உடனே ஓர் உண்மையை சொன்னேன். கோமதி குழந்தையை பார்த்தேன். அதற்காக அவளுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறி கோமதியிடம் போனை கொடுத்தேன். ஆண்டி நல்ல இருக்கீங்களா? ரொம்ப நாள் ஆயிற்று.

அங்குலட்சுமி யோசித்தாள் எப்படி சாவதென்று.

சாணிப்பவுடர் (அது எளிதாக கிடைப்பதில்லை)

ஆள்அவுட் குடித்து விடுவோமா(அதற்கு கொசுவே சாவதில்லை)

கிருஷ்ணா ஆயில்(அதுவும் தற்சமயம் கிடைப்பதில்லை)

தொங்கலாம் (அதற்கும் சரியான பேனோ சீலையோ கிடைப்பதில்லை)
ஏற்கனவே கல்யாண செலவு செய்து விட்டனர். தற்கொலை முயற்சியும் பயனளிக்கவில்லை. என்ன செய்வது என்று கடற்கரையில் உட்கார்ந்து யோசிக்கிறேன். என்னால் இனிமேல் தற்கொலை முயற்சியும் செய்து தோற்றுவிட்டேன்.

சுனாமி வராதா?

நிலநடுக்கம் வராதா?

அணு ஆயுதப் போராவது வராதா?

ஏதாவது ஒன்று எனக்கு வராதா?

காத்திருக்கிறேன்!

-சாமகோடாங்கி ரவி

Series Navigationகுழந்தைப் பாட்டுநிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
author

சாமக்கோடாங்கி ரவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *