தமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு

author
0 minutes, 9 seconds Read
This entry is part 38 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் இலக்கியப் பரிசுப்போட்டி நடத்தப்படுகின்றது, 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதன் விவரம் வருமாறு:

அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம்,விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர் சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து  – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர்டி.செல்வராஜ், நூலின் பெயர்-தோல், வெளியீடு-NCBH

புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ். நூலின் பெயர்-தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.

குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான  பரிசு பெறுபவர் முனைவர் மு.இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்

அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு-எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.

தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர்-அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.

அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்- சாக்பீஸ் சாம்பலில்

குறும்பட ஆவணப்பட பரிசு

பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,

குறும்படங்கள்-

விண்ட்-இயக்குநர் மணிகண்டன்
அதிகாலை-இயக்குநர் கவின் ஆண்டனி

ஆவணப்படங்க்ள்-

அக்றிணைகள்-இயக்குநர் இளங்கோவன்
புலி யாருக்கு?-இயக்குநர் ஆன்ட்டோ

தமுஎகச தலைவர் அருணன் மற்றும் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் அகியோர் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

 

தகவல்:

நா.முத்துநிலவன்,

மாநிலத் துணைத்தலைவர் -த.மு.எ.க.ச.,

புதுக்கோட்டை-622004

தொலைபேசி: 94431 93293

வலைப்பக்கம்  www.valarumkavithai.blogspot.com

Series Navigationதங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் !இந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *