கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (இசை மேதை) (கவிதை -48)

This entry is part 30 of 37 in the series 18 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

காதலரை நேசிக்கும்
உன்னை
வரவேற் கிறேன்
இது தான் உன்னில்லம் !
செதுக்கும் முறையில்
காதல்
இப்படி வடிவம் அமைக்கும் :
காதலை உருக்கிக் கதவை
ஆக்கும் !
இல்லத் துக்கு
ஆத்மா தலை வாசல் !

+++++++++
சாளரக் கதவின் இடை ஒளியில்
தூசிகள் நடனம் ஆடும் !
நமது நடனம் அதுவே
உள்ளத்துள் எழும் ஓசையை நாம்
ஊன்றிக் கேட்ப தில்லை !
ஆயினும் அதற்கு மட்டும்
ஆடுவோம் நடனம் !
கற்றுக் கொடுப்பவன் ஆடச்
சுட்டிக் காட்டுவான் !
இசை மேதை நமது
சூரியனின் பூரணக் களிப்பு !

+++++++++++++
உன்னருகில் நான் இருந்தால்
உறங்கா திருப்போம்
இரவு பூராவும் ! நீ
இங்கில் லாத போது
எனக்கோ தூக்கம் வருவ தில்லை !
இறைவனைப் போற்றுவீர்
உறக்கம் வாராத
இருவ ருக்கும் ! இவரது
முரண் பாடு கட்கும் !

++++++++++++
என் முதல் காதல் கதை
செவியில் பட்டதும்
தேடிச் சென்றேன் உன்னை
போகு மிடம்
இருளில் இருப்பதை
அறியாமல் !
இறுதி யாகக் காதலர்
எங்கும் சந்திக்க மாட்டார்,
இருவரும் எப்போதும்
ஒருவருள் ஒருவர் இருப்பதால் !

+++++++++++
கண்ணாடியும் ஆவோம்
உள்ளிருக்கும் முகமும் ஆவோம் !
நித்தியக் காதலின் இன்பத்தை
அனுப விப்போம்
இந்த நிமிடம் ! ஆயினும்
நம்மால் நமக்குத் துயர்தான் !
நம்மிருவர் துயரைத் தீர்ப்ப தெப்படி ?
நாமே இனிக்கும் பனிநீர்
நாமே ஊற்றும்
குவளையாய் இருப்பதால் !

++++++++++++++
விழைகிறேன் உன் மேனியை
வீணை போல்
அணைத்துக் கொள்ள !
காதல் இசையை நாம்
ஓசையாய் மீட்டுக் கொள்ள !
கண்ணாடி மேல் விரும்பிக்
கற்களை வீசு வாயா ?
கண்ணாடி நான் தான் !
கற்களும் என்னருகே !

***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 13, 2011)

Series Navigationஇரைகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -5)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *