முற்றும்

This entry is part 22 of 45 in the series 2 அக்டோபர் 2011
முன் பெற்ற காலமொன்றில்

தன் நிலையினை  அளவிடுவதற்கு

தூற்றும் நினைவினை கொண்டு
எடுத்து ஆளும் நிறைவு உண்டு .
முதல் அன்பின் வீச்சு
பார்வையை கூச
செய்த தன்மை
இனி
வருவதற்கில்லை
இயங்கலாமல் போன
காலமொன்றில்
சேகரித்து வைக்கிறேன்
முதலின்
அனைத்தும் .
இங்கு தான்
முதன் முதலாக
நியாயப்படுத்தி கொள்கிறது
பல நிலைகளுடைய
தன் சுய விருப்பங்கள் .
நீள்கின்ற அவைகளை
சுய தொன்மை சுருக்கி விட்டது
பல மாலை பொழுதின்
கண்ணீரோடு .
இன்றளவும்
நினைவின் வடுவும்
உறுதி செய்கிறது
அவையை.
யாரும் பார்த்திராத
துரோக மவுனத்தின்
அணைப்பில்
புகலிடம் எய்தினேன் .
இங்கு தான்
முதல்
அகமகிழ்வையும் ,அகதுயரத்தையும்
கடந்தேன் .
மறுப்பதற்கு மறத்தல்
ஒன்றே
இன்னும்
மன்னித்து கொண்டிருக்கிறது
முன் பெற்ற காலமொன்று .
விலகிய மவுனம்
இன்னும்
கலைந்து விடவில்லை
அதை அப்படியே
உயிர்ப்புடன்
வைத்திருக்கிறேன்
நினைவுகளின் தொகுப்பில் .
கடந்து விட்ட அனைத்தையும்
பழியை நான் சுமக்கிறேன்
அதுவே இன்னும் என்
சுய இயல்பாகிறது .
முற்றும் .
பின் பெற்ற காலமொன்றில்
எனக்கான முதல்
அக நினைவின் விதை
துளிர்க்க
பிரபஞ்சத்தின் செய்கை
இனி நாமாவோம்.
                           வளத்தூர் தி.ராஜேஷ்
Series Navigationமைலாஞ்சிகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 50 பாகம் -1)
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *