This entry is part 23 of 45 in the series 9 அக்டோபர் 2011

பழக்கப்பட்ட உடல்களைப்
போலிருந்தன அவை
செய்கையும் செய்நேர்த்தியும்
எத்தனை சிற்பியோ..
விரிந்தும் குறுகியும்
அகண்டும் பருத்தும்
ஆதிமூர்க்கங்களின் விலாசங்கள்
அறிகுறிகளின் கையெழுத்தோடு.
நிராசையோ.,
நிரந்தரச் சுவையோ.,
நேர் நேர் தேமாவென
ஒற்றைச் சாளரம் வழி
வழிந்து பெருகியது காற்றில்
ஓரிதழ் தாமரையென.
ஒன்றிணைந்து மிதந்து
கொண்டிருந்தன..
நிறை நேர் புளிமாவிலிருந்து
முற்றிலும் ஒதுங்கி.

Series Navigationஷாம்பூஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்