சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்

This entry is part 8 of 45 in the series 9 அக்டோபர் 2011

இந்தநாள் இனிய நாள் என்ற உற்சாகக் குரலுக்குச் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். எளிமையான வார்த்தைகளில் தினம் ஒரு தகவல் பகிரும் இவரின் புத்தகம் சிறகை விரிப்போம். SIXTH SENSE PUBLICATIONS. வெளியீடு. விலை ரூ 100.

தினமணியில் (வானொலி, தொலைக்காட்சி, பத்ரிக்கை ஆகியவற்றில்) வந்த தொடர் இது. சிகரம் தொடக்காத்திருக்கும் வாசகர்களின் சிறகுகளைத் தடவிக் கொடுத்து வானமே எல்லை என அவர்களைத் தயார்ப்படுத்துகிறது நூல். மதச்சார்பற்று எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கொள்கைகளைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார். தனக்கேயுரிய ஒரு மென்மையான, அழுத்தமான நகைச்சுவை உணர்ச்சியோடு ஒரு நிகழ்ச்சியையும், ஒரு கதையையும் சொல்லி விளக்கும் உத்தி சிறப்பு.

நம் எல்லாருக்கும் அன்பின் விரிவாக்கம் தேவை. மனநோய்க்கு அறிகுறி உறக்கமின்மை, மன உளைச்சல், மன இறுக்கம். இவை தூக்கம் வராமல் செய்யும் காரணிகள். மனதைத் தளரவிடாமல் இருத்தலும் வாழ்வை நேசிப்பதும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அறிகுறி.மனித நேயம் ஒரு மருந்து. தொண்டு செய்வதே சொர்க்கத்தில் வாழ்வது போல. நன்றி, நல்லெண்ணம், நல்வாழ்த்து இருந்தால் வெற்றியடையலாம். மகிழ்ச்சியாக இருக்கலாம். தினம் ஒரு நல்ல காரியமாவது செய்ய வேண்டும். மன நிறைவோடு வாழ வேண்டும். பணத்தினால் கிடைக்காத மகிழ்வும், ஊக்கமும் பரிவினால் கிடைக்கும்.

இளைஞர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை நல்லவிதமாகப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மனிதனும் நன்மை, தீமையை அடக்கியாள கற்கவேண்டும். நல் நட்பு, தீயநட்பு பிரிக்கத் தெரிய வேண்டும். சந்தர்ப்பம் திசைமாற செய்யாமல் கவனமாக இருக்கவேண்டும். படித்தால் மட்டும் போதாது. பண்பாடும் தேவை. மிகப்பெரிய ஆளுமைகள் பற்றிய அரிய தகவல்கள் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்நூலை இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும். தலைமைப் பொறுப்பேற்க முன்மாதிரியாய் இருக்க வேண்டும். மனக்கதவுகளைத் திறக்கவேண்டும், காற்றை உள்வாங்கிக் கொள்ள.வேலைகளை நேசிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். வாய்மையே வெல்லும். பதற்றமும், அவசரமும் பெரும்பதவிகளை வகிப்பவனுக்கு இருக்கக்கூடாத குணங்கள். பொறுமையும் நிதானமும் தேவை.நேர்மையாய் இருப்பது மன அமைதி தரும். நன்மை தீமைக்கும் நாமே காரணம். அதுபோலதான் சட்டமும் என அம்பேத்கார் சொல்லி இருக்கிறாராம், கையாள்பவரைப் பொறுத்து நன்மையும் மோசமும் என்று.

THE ATMOSPHERE CAN BEAR NEGATIVE THOUGHTS ONLY TO A CERTAIN EXTENT AND FINALLY BURST INTO CRISIS, RIOTS AND WARS.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல நல்ல எண்ணங்கள் பிரபஞ்சம் முழுமைக்கும் நல்ல எண்ணங்களை உருவாக்கும்.ஒரு மனிதனின் மாற்றம் முன்னேற்றத்தில் இருக்க வேண்டும். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சிறகை விரிக்க ஆசைப்படும் மனிதர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பதற்கான கைடு இந்நூல்.

உலகை நாம் பார்க்கும் பார்வை மாறவேண்டும். நம் உள்ளுணர்வின் வெளிப்பாடே இவ்வுலகம். ஒன்று நடந்தபிறகும் அதை அனுபவிப்பதே ஆனந்தம். அது ஆழமான உள்ளுணர்வு. அதை அடைய சிறிது சிரமப்படவேண்டும்.அருளானந்தர்கள் எப்போதும் ஆனந்தமாக இருப்பார்கள். நமக்கு வேண்டிய நன்மை தீமைகளை நாமே நிர்ணயம் செய்து கொள்கிறோம். நல்ல வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மனம் திறந்து சொல்லும் பாராட்டுக்கும் பலன் உண்டு. யாருமே பரிசுத்தமானவர் அல்ல. கணவன், மனைவி ஒருவர் குற்றத்தை மற்றவர் பார்க்காமல் இருப்பதே பூலோக கைலாசம் என யஜுர் வேதம் சொல்கிறதாம். இன்னா செய்தாரையும் அவர் நாண நன்னயம் செய்துவிடல் வேண்டும்.அன்பு ஒன்றுதான் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது. பரஸ்பரம் அன்பு செலுத்தும் இடமே புனிதமான இடம்., இறைவனின் இருப்பிடம்.

ஸ்ரீஸ்ரீ ஆச்சார்யா, வேதநாயகம் பிள்ளை இருந்த மாளிகையில் பாரதியார் டாக்டர் சஞ்சீவியிடம் ஒரு பாடல் பாடிக் காண்பித்தபோது உங்கள் பாடல் வசீகரிக்கிறது என பாராட்டினாராம். அப்போது பாரதி ,”உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்றாராம்.

கடவுளைப் பின்பற்றுவதாக நினைத்து சாமியார்களைப் பின்பற்றுதலை சாடி இருக்கிறார். தர்மம் செய்பவருக்கு கர்வம் இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு அசௌகர்யம் ஏற்படுத்தாத வகையில் வாழவேண்டும். மது மயக்கத்திலிருந்து விடுபடவேண்டும். தாய் தந்தை கவனமாக இருந்தால் பிள்ளைகள் பொய், சூதில் ஈடுபடமாட்டார்கள். தவறான விஷயத்தை முதலிலேயே கெல்லி எறிய வேண்டும். மனித மனதின் பலகீனங்களை வெல்லவேண்டும். அகங்காரம் கொண்டவனும் சித்த சுவாதீனம் இல்லாதவனும் ஒன்று.

விலங்குகளிடம் இருந்தும் நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.தோல்வியைக் கண்டு பயப்படுதல் துவளுதல், புலம்புதல் கூடாது. எதற்கும் பயமின்மை. குழந்தைகளை முறையாக வளர்த்தல். எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதில்லை. தான் வாழ்ந்து அடுத்தவரையும் வாழவிடல்.

முக்கியமாக தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மனசையும் உடம்பையும் ஆரோக்கியமா வைத்துக் கொள்ளுங்கள். சிறகை விரித்து சிகரத்தைத் தொட தேர்ந்தெடுக்கும் வழிமுறையும் சரியானவையா இருக்க வேண்டும். வாழ்வுதான் முக்கியம். சட்டதிட்டங்கள் அல்ல. நல்ல செயல்கள் நமக்குப் பின்னாலும் வந்து நம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கும். பணம். சொந்தம், நற்செயல்கள் வாழ்வுக்கு அத்யாவசியத் தேவை. உறவுகளை வளர்க்கு திறனும் பலப்படுத்தும் திறனும் தேவை. இன்றைய காலகட்டத்தில் உறவுகள் அருகி வரும் நாளில் இந்த புத்தகம் உறவுகளைப் பேணுங்கள் என்று கூறியதற்காகவே இதன் மற்றைய நல்ல அம்சங்களையும் பகிர்ந்தேன்.

நன்னயம் நல்லது செய்யும், இதில் சுவாமிநாதன் அவர்கள் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு, தம்பதிகளுக்கு என எல்லாருக்குமான INTER PERSONAL SKILLS ஐ வளர்த்துக் கொள்வது பற்றி தெளிவாக கூறி இருக்கிறார். படிக்கும்போதே அவர் குரலில் கேட்பதூ போலே இருந்தது. எனவே சிறகை விரித்துப் பறக்க நினைப்பவர்கள்,நட்புக்களைப் பேணுவது போல உறவுகளையும் பேணிப்பாதுகாக்கும் திறனோடு இ்ருங்கள். உங்கள் உயர்வில் மகிழ்பவர்கள் அவர்கள்தான். உங்களோடு என்றும் இருக்கப் போகிறவர்களும் அவர்கள்தான்.
.

Series Navigationமனித நேயர்காலமாகாத கனவுகள்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *