கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்

This entry is part 3 of 44 in the series 30 அக்டோபர் 2011

கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில் நடந்தப்பட்டது. அக்;டோபர் 27 முதல் 31 வரை நடத்தப்படுகிறது. 29 சனிக்கிழமையன்று பக்தர்களின் வேண்டுகோள்ளின்படி விசேட பூஜை 5 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெற விழைந்தனர்.

சிறியவர் பெரியவர் முருகனின் பாடல்கள் பாடிக்கொண்டிருக்க, முதலில் முருகன் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. வந்திருந்திருந்த அனைவரும் சிலைக்கு பாலைப் பொழிந்து வேண்டிக்கொண்டனர். பின்னர் சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி, பன்னிர் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்னர், முருகனுக்கும் விநாயகருக்கும் கவசங்கள் சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

கந்த சஷ்டி பாடப்பட்டது. திருப்புகழ், கந்தர் அநுபூதியை அனைவரும் மனமுருகப் பாடி கடவுளை வழிபட்டனர். சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட கந்த சஷ்டி விழா மலரிலிருந்த பாடல்கள் பலவும் பாடப்பட்டன. முருகனின் பல பெயர்களைக் கூறி போற்றித் துதித்தனர். பிறகு தீபாராதனை காட்டப்பட்டு ப+ஜை 9 மணியளவில் இனிதே முடிந்தது.

பிறகு பஞ்சாமிர்தம், பால், இனிப்புகள் தரப்பட்டன. வந்திருந்த பக்தர்கள் அனைவரும் உணவு செய்து எடுத்து வந்திருந்தனர். இட்லி, உப்புமா, சட்னி, சாம்பார், வடை என்று அனைத்தையும் ஒன்று சேர்த்து இரவு உணவாகவும் பிரசாதமும் தரப்பட்டன.

இந்த விழா ஹாங்காங்கில் வாழும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் விழாவாகவும் இருந்தது. 2012 ஆண்டு பஞ்சாங்கம் அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. விழாவினை ஆண்டுதோறும் இனிதே நடத்திக் கொடுக்கும் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Series Navigationபடிமங்கள்பயணக்குறிப்புகள்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

  1. Avatar
    பா. ரெங்கதுரை says:

    வேலை வணங்குவதையே முதன்மையான வேலையாகக் கொண்டு ஆங்காங்கிலும் இந்து தர்மத்தை வளர்க்கும் உங்கள் தொண்டு வாழ்க, வளர்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *