ஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் ?

This entry is part 21 of 41 in the series 13 நவம்பர் 2011

சந்திரபாபு நாயுடு முதல்வர்களுக்கெல்லாம் ரோல் மாடல் என பத்திரிக்கைகள் பாராட்டின. ஹைதராபாத்தை சைபராபாத் ( cyberabad ) ஆக, கணினி மயமாக்கி ஆந்திராவை வளர்த்து விட்ட்தாக அறிவு ஜீவிகள் பாராட்டினார்கள்.  நான் முதல்வர் அல்லன். முதன்மை செயல் அலுவலன் என கார்ப்பரேட் அதிகாரி போல அவர் பேட்டி கொடுத்தார். அவர் முதல்வராக இருந்த்து போதும். பிரதமராக வேண்டும் என அறிவு ஜீவுகள் கெஞ்சினார்கள்.

ஆனால் தேர்தல் வந்தபோது , தோல்வி அடைந்து வெளியேறிய அவர் , இன்று வரை தோல்வியில் இருந்து மீள முடியவில்லை.
ஏன் தோற்றார் என அறிவு ஜீவுகளுக்கு புரியவே இல்லை. அவருக்கு ஆலோசகர்களான அதிகாரிகளுக்கும் புரியவில்லை. பத்திரிக்கைகளிலோ, இண்டர்னெட்டிலோ கருத்து சொல்லாத நலிந்த , கிராமத்து மக்கள் அமைதி புரட்சி நட்த்தி விட்டு , தம் வேலைகளை கவனிக்க சென்று விட்டனர்.
அவர்களிடன் கேட்டு இருந்தால் சொல்லி இருப்பார்கள். ஹைதராபாத்தில் கண் கவர் கட்டிடங்கள் கட்டினால் மட்டும் போதாது. கிராமங்களையும் கவனிக்க வேண்டும். ஏழைகளையும் மேம்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களையும் உயர்த்த வேண்டும். அதுதான் அரசின் வேலை என சொல்லி கொடுத்து இருப்பார்கள். ஆனால் நாயுடுவுக்கு இதை கேட்க நேரம் இல்லாமல் போய் விட்ட்து.
ஆனால் எம் ஜி ஆர் இந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார். அவர் வள்ளுவர் கோட்டம் போன்ற கட்ட்டங்கள் கட்டியது இல்லை. பிரமாண்ட சிலைகள் அமைத்த்து இல்லை. ஆனாலும் அவர் மக்களால் நேசிக்கப்பட்டார். ஏன்?
சினிமாவில் செய்த்தையே , நிஜ வாழ்விலும் செய்தார். வசதியானவர்களை மேலும் வசதியாக்காமல், நலிந்தவர்கள் மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும் என பார்த்தார். சத்துணவு திட்டம், இலவசங்கள் மூலம் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன என்ற விமர்சனங்க்ளை அவர் கண்டு கொள்ளவே இல்லை. எனவேதான் அவரை நலிந்த மக்கள் கடைசி வரை கைவிடவில்லை. இன்றும் கூட கிராமங்கள்தான் அதிமுகவின் கோட்டைகளாக உள்ளன. சிம்பிள் ஃபார்முலா.. வசதியானவனிடம் இருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடு.
இதற்கு நேர் எதிரான ஃபார்முலாவை சென்ற ஆட்சி கடைபிடித்த்து.  நலிவுற்றவர்களிடம் இருந்து எடுத்து வசதியானவனுக்கு கொடு என்பது அவர்கள் ஃபார்முலா.
தமிழ் நாட்டில் கல்வி அறிவில் பின் தங்கிய மாவட்டங்கள் பல உண்டு. படிக்க வாய்ப்பில்லாத தாழ்த்தப்பட்டோர் வாழும் ஊர்கள் உண்டு. பெயருக்கு சில நூலகங்கள் இருந்தாலும், தேவையான வசதிகள் இல்லாத கிராமங்கள் உண்டு.

அதற்கெல்லாம் நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டிய அரசு, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்து, ஏற்கனவே படிப்பறிவில் வலுவாக உள்ள , அண்ணா பல்கலைகழகம் அருகே ஆடம்பரமாக ஒரு நூலகம் அமைத்த்து.
இது மனித நியாயங்களின்படி தவறு என்பதைக்கூட விட்டு விடலாம்.  சட்டப்படியேகூட இது தவ்று. ஒரு மாவட்ட்த்தின் நூலக நிதியை , அந்த மாவட்ட்த்துக்குத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் , இதை மீறி, பின் தங்கிய மாவட்டங்களின் நிதியை எடுத்து, ஆடம்பர கட்ட்டம் கட்டினார்கள்.
அவர்கள்தான் அப்படி என்றால் இதை கண்டிக்க வேண்டிய அறிவுலகம், கிடைக்கவிருக்கும் சில எலும்புத்துண்டுகளை மனதில் கொண்டு வாலாட்டி கொண்டு மவுனம் சாதித்த்து. ஞானி ஒருவர் மட்டுமே அதை கண்டித்து அன்று எழுதினார்.
இன்று ஏதோ சில காரணங்களால் நூலகத்தை இடம் மாற்ற முடிவு செய்துள்ளனர். காரணம் என்னவாக இருந்தாலும், கன்னிமராவுக்கு அருகே மாற்றப்படுவது நல்லதுதான் என்பது வேலை தேடும் இளைஞர்களின் கருத்து.  நூலகங்கள் ஒரே இட்த்தில் இருந்தால், தேர்வுகளுக்கு படிக்க வசதியாக இருக்கும் என நினைக்கிறார்கள் அவர்கள்.
ஆனால்  நூலகங்கள் சென்றே இராத பலரும் , போராளிகளாக காட்டிக்கொள்ள இட மாற்றத்தை எதிர்க்கிறார்கள். அறிவு ஜீவுகளும் இந்த ஆட்டு மந்தை கூட்ட்த்தில் சேர்ந்து கூச்சலிட்டு கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்து நிற்கிறார்கள். சாரு நிவேதிதா மட்டுமே தெளிவான நிலை எடுத்து இருக்கும் ஒரே இலக்கியவாதி.
இந்த நிலையில் , புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு என்ற செய்தி வெளிவந்த்து. அறிவு ஜீவிகள் இனிமேலாவது தம் நிலையை மாற்றி கொள்வார்களா என தமிழகம் எதிர்பார்த்த்து.
ஆனால் அவர்கள் தாம் எப்பேற்பட்ட சுயனலவாதிகள் என காட்டினர்.
” முறைகேடு நடந்தால் என்ன.. நூலகம் வசதியாக இருக்கிறது. அப்படியே இருந்து விட்டு போகட்டுமே “
என்று மேம்போக்காக பேசும் இவர்களுக்கு மக்களின் நலனே விட கட்ட்ட்த்தின் நலனே பெரிதாக தெரிவது கொடுமை.
அந்த கட்ட்ட்த்தில் மருத்துவமனை கட்டினால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடுமா என முட்டாள்தனமாக அடுத்த கேள்வி.
ஒரே இட்த்தில் 200 கோடி செலவில் நூல்கம் கட்டினால் பலர் வந்து பயன்படுத்த முடியாது. அதற்குபதிலால , இந்த நிதியை பிரித்து மாவட்ட நூலகங்களை மேம்படித்தி இருக்க வேண்டும்.
ஏனென்றால் தொலை தூரத்தில் இருந்து அன்றாடாம் கோட்டுர்புரம் வர இயலாது.
ஆனால் மருத்துவமனை என்பது எப்போதாவது தேவைப்படும் ஒன்று. அது கோட்டூர்புரத்தில் இருக்கலாம்.
அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நூலகம், கன்னிமராவுக்கு அருகே வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்
மக்களுக்கு நெருக்கமான எம் ஜி ஆர் ஃபார்முலா.. அறிவு ஜீவிகளுக்கு நெருக்கமான  நாயுடு ஃபார்முலாவா?
ஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் என எளிய மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

Series Navigationவட கிழக்குப் பருவம்கவிதை
author

பிச்சைக்காரன்

Similar Posts

10 Comments

 1. Avatar
  paramasivan says:

  We will not do any good things.We will undo good things done by others.When many thousands of people are already benifitted,what is the need to shift the library?No one actual user has complained about it”s location.Some people are good only at postmortem.

 2. Avatar
  Sathyan says:

  பிச்சைக்காரன் என்ன சொல்ல வருகிறார்? ஜெயலலிதா இருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்க மாற்ற இருப்பது குறித்து தமிழக சாமானிய மக்களிடன் எந்த எதிர்ப்பும் இல்லையென சொல்கிறாரா? இதில் சம்பந்தமே இல்லாத எம்.ஜி.ஆரை எதற்கு இழுக்கிறார் என்று தெரியவில்லை? எம்.ஜி.ஆர் மாணவ மணிகளை பள்ளியில் தட்டேந்த வைத்தார் அதுவும் பிள்ளை பிராயத்திலேயே. கலைஞர் கருணாநிதி அதில் முட்டை போட்டார். நடிகை ஜெயலலிதாவோ அதற்கு ஒரு படி மேலே சென்று மாணவிகளுக்கும், மாதருக்கும் மாதவிடாய் பஞ்சுகள் வழங்கப்போகிறார் இலவசமாக. சாமானியர்கள் என்று பார்க்கப்படும் பொதுமக்கள் இதையெல்லாம் மற்ற வளர்ந்துவரும் நாடுகளிலெல்லாம் கேட்கவில்லை. அந்த அரசாங்கங்களும் அதனை செய்வதில்லை. இதில் கேவலமான கலாச்சார சிந்தனைகள் கொண்ட தமிழகத்தில்தான் நடக்கும். அப்படிப்பார்த்தால் தமிழக சாமானிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் விதிமுறைகள், தேர்தல் வாக்குறுதிகள், சென்ற ஆட்சியாளரின் சாதனை வேதனை பட்டியல்கள் அனைத்தையும் ஆராய்ந்துதான் வாக்களிக்கின்றனரா? தேர்தல் சமயத்தில் வெளிவருவது அனைத்தும் என்ன? சாதிவாரியாக வாக்களிக்கும் மந்தைமனப்பான்மையும், கூட்டல் கழித்தல்களும், கூட்டணி சந்தர்பவாதத்திற்கு துணைபோகும் சுயநலமும்தானே! அதனால்தானே பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், குற்றவாளிகளும், வாரிசு அரசியல் கொள்கையின் மூலம் 60% அதிகமாக பிரதிநிதிகள் இந்தியாவில் குவிந்துள்ளனர்?. இந்த விஷயத்தில் அறிவுஜீவிகளுக்கு மட்டுமல்ல, அன்றாடங்காய்ச்சிகளுக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களில் உங்களை போலவே தெளிவில்லை என்றுதான் தெரிகின்றது. பெரிய நகரங்களில்தான் பெரிய, நவீனவடிவில் அமைக்கப்பட்ட உள்கட்டுமான வசதிகள் கொண்ட மருத்துவமனைகளும், நூலகங்களும், போக்குவரத்து ஸ்தாபனங்களும் இருக்கும். ஏனென்றால் இந்த இடங்களில் அதன் உபயோகிக்கும் அளவும் அதிகம், உபயோகிக்கும் பயனாளிகளும் அதிகம். இது உலக பொதுவான விஷயம். இதுகூட தெரியாமல், தெளிவில்லாமல் ஒரு நாலாந்தர நடிகையின் அகங்கார நடவடிக்கைகளுக்கு உப்புசப்பில்லாத காரணங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு துணைபோகாதீர்.

  உண்மையுடன் மற்றும் நட்புடன்,

  சத்யன்
  டொரான்டோ, கனடா

 3. Avatar
  அக்னிப்புத்திரன் says:

  பிச்சைக்காரனுக்கு அறிவிலும் பிச்சை இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒரு வளர்ச்சியடையும் நாடுகளின் அடையாளமே அந்நாடுகளின் அடிப்படை கட்டமைப்புகள் கட்டடங்களின் நிலையே சுட்டுகிறது. அவ்வகையில் பிரமாண்டமான நூலகம் அமைத்து மற்ற நாடுகளுக்கு எங்கள் நாடும் தரத்தில் குறைந்தது இல்லை என்பதை நிலைநிறுத்த வேண்டியது ஒரு நல்லரசின் கடப்பாடு ஆகும். பிச்சைக்காரன் போல ஆட்கள் இருக்கும் வரை தாழ்ந்த மனநிலையில் மக்கள் வாழத்தான் வேண்டி வரும். அவ்வப்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்பதால்தான் இந்த அளவிற்காவது தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்ம் கண்டுவருகிறது. எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா ஆட்சிகளில் தமிழகம் எழ்த முன்னேற்றமும் கண்டதில்லை என்பது வரலாற்று உண்மை.பிச்சைக்கார உன் மேதாவிதனத்தை அறிவுவளர்ச்சி தரும் நூலகவிஷயத்திலாவது அடக்கி வாசிப்பா!

 4. Avatar
  paramasivan says:

  A maternity hospital building was constructed at a cost of Rs1 crore at C.P.Ramasamy Road,Alwarpet.It has been kept idle since the completion of the building in Aug,2011 for want of funds to appoint 3 doctors and 5 nurses and to buy equipments.The new councillor,who has to take up the matter,has occupied redesigned room.The staff who were in the portion occupied by the councillor were accommadated in the hospital building.Thus,an building built for a hospital is now housing Engineering Deppt of the ward.Let us pray that ACL is used for the specific purpose.

 5. Avatar
  GovindGocha says:

  முதல்தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தர நடிகைகள் எப்படியிருப்பர் என்று சத்யன் விளக்கலாம். அதுவும் போக கோட்டூர்புரத்தை பற்றிக் கனடா கவலைப்படத் தேவையில்லை.

 6. Avatar
  THANIKASALAM ARUMUGAM says:

  this is entirely wrong message. see friend, during MGR period, In TN people are uneducated and agriculture workers and they are addicted to MGR films, during DMK period only Tamil Nadu well established in road, IT development (TIDEL park) Automobile Industry, developed Infrastructure (Panchayat) etc. during 1996 AIADMK was throw out from ruling and 2004 MP ELECTION AIADMK SECURE 00 OUT OF 40. dmk has ALWAYS SMOOTH RELATIONSHIP WITH CENTRE AND GETTING MONEY AND WELFARE SCHME TO tAMIL NADU.You do not blindly support AIADMK.

 7. Avatar
  paandiyan says:

  ஆரோக்கியசாமி என்று பேரு வைத்து இருமி இருமி கொண்டுயருபது போல ஒரு ஜோக் வரும். அதுமாத்ரி பிச்சைக்காரன்க்கு நாட அரசாங்கத்திடம் பிட்சை எடுக்கவேண்டும் என்று ஒரு எண்ணம வந்துவிட்டது போல. சந்திரபாபு நாய்டு தோற்றதால் அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. அதற்க்கு பின் வந்த காங்கிரஸ் ஆட்சியில் பாலும் தேனும் சாபிட்டர்களா என்ன? ஒரு குடும்பம் விவசாயி நிலங்களை உருவிட்டது அங்க. மக்கள் தங்கள் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது அங்க அதற்க்கு நாயுடு ஒன்றும் காரணமில்லை .

 8. Avatar
  pichaikaaran says:

  கனடா , அமெரிக்கா நாடுகளில் வசிக்கும் வசதியானவர்கள் குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாரா அல்லது தமிழ் நாட்டில் பிச்சை எடுத்து கஷ்டப்படும் எளியவர்களுக்கு முக்கியத்துவம் தரப்போகிறாரா ?

 9. Avatar
  pichaikaaran says:

  “எம்.ஜி.ஆர் மாணவ மணிகளை பள்ளியில் தட்டேந்த வைத்தார்”

  அடுத்த வேளை உணவு கிடைக்குமா இல்லையா என்ற அவல நிலையில் வாழந்த மக்களுக்கு , தட்டேந்தினால் சோறு கிடைக்கும் ,,கூடவே கல்வியும் கிடைக்கும் என்பது பெரிய விஷ்யம். அப்படி தடேந்தி படித்த பலர் இன்று கம்யூட்டரில் சாஃப்ட்வேர் தட்டச்சுகிறார்கள்.. ஏழைகளை பணக்காரன் ஆக்குவது ஒரு விதம். பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்குவது ஒரு விதம். பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்கினால் , இண்டனெட்டிலும் , பத்திரிக்கைகளிலும் ஆதரவு கிடைக்கும் .,ஆனால் நலிந்த மக்கள் ஆதரவு கிடைக்காது. அதிமுக அரசு யார் பக்கம் நிற்க போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

 10. Avatar
  well wisher says:

  கன்னிமாரா அருகில் கொண்டு சென்றால்……
  1. அதிக போக்குவரத்து பிரச்சினை. ஏற்கனவே அங்கே ஒருவழிப்பாதை உள்ளது. சாலையின் அகலம் மிகவும் குறுகலாக உள்ளது. அதிகமாக அரசு மற்றும் தனியார் அலுவலகள் மரு​த்துவமனை கல்லூரி உள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது ஐயா. வேண்டுமானால் ​​அலுவலக நாட்களில் ஒரு முறை மட்டும் சென்று வந்து பிறகு கூறுங்கள்

  2. அங்கே ஏற்கனவே ஒரு நூலகம் உள்ளது. எனவே அநூநூ=த்தை கோட்டூர் புரத்திலே விட்டு விடலாம். கன்னிமாரா அருகில் தற்போது இருக்கும் கடும் போக்குவரத்து நெரிசல் கோட்டூர்புரத்தில் வர இன்னும் பத்தாண்டு காலம் ஆகலாம்.

  இந்த நூலகத்தினை தேசிய நூலகமாக மாற்ற மத்திய அரசிடம் மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் ஒப்படைத்து விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *