கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -5)

This entry is part 20 of 38 in the series 20 நவம்பர் 2011


மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“இனிய தோழனே ! கணப்பு அடுப்பருகில் (Fire Place) அமர்ந்து தீ அணைந்து போய்ச் செத்த சாம்பலை ஊதி தீ மூட்ட வீணாய் முயலும் மனிதனைப் போல் இருக்காதே ! நம்பிக்கை நழுவிச் செல்ல விடாதே. கடந்த தவறில் நேர்ந்த மன இழப்புக்கு ஆளாகாதே !

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

திருமணப் பாதையில் !

திருமணம் என்பது வாழ்வில்
இருமனங்களின் தெய்வீக ஐக்கியம்
மூன்றாம் பிறவி ஒன்று
பூமியில்
தோன்று வதற்கு !
தனிமையைத் தவிர்த்திட
இரண்டு ஆத்மாக்களின் பிணைப்பு
காதல் பந்தத்தில் !
ஆன்மாக் களுக்குள் உள்ளே
ஐக்கியப் படுத்தும்
உன்னத இணைப்பு !

பொன் மோதிரம் அது
பின்னிய சங்கிலிப் பிணைப்பில் !
முதல் நோக்கு ஆரம்பம்,
முடிவு உறவு
நித்தியப் பிணைப்பில் !
கருமேகம் கலையாத வானிருந்து
பெய்யும்
தூய மழைப் பொழிவு போல்
காய் கனி பெருக்க
ஆசீர் வதிக்கும் இயற்கையின்
தெய்வீகப் பந்தம் !

காதலரின்
முதல் ஓரக்கண் நோக்கு
இதய நிலத்தில் மானிடம்
விதைத்த
வித்து போன்றது !
காதலர் முதல் முத்தம்
வாழ்வு மரக்கிளை
முனை யிலே
முளைத்த
முதல் பூ மலர்ச்சி !
திருமணத்தில்
காதலர் ஐக்கிய உறவு
விதையில் பூத்த
முதல் மலர் போன்றது !

(முற்றும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 17, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -1)இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *