முகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை

This entry is part 30 of 38 in the series 20 நவம்பர் 2011

Mr. Mohammed Yoonus explained his meeting with Aringyar Anna in Hong Kong. Hope it interests our readers.

TCA (Tamil Cultural Association, Hong Kong) and Aringyar Anna

Series Navigationவாசிப்பும் வாசகனும்மகா சந்திப்பொன்றில்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    தகவல் பிழைகள் ஏராளம் உள்ள பேச்சு.
    1. 1967-ல் திராவிடர் கழகத்தின் முழு மூச்சான கடும் எதிர்ப்புப் பிரசாரத்தையும், ஈ.வே.ரா.வின் ஆபாச வசைமாரிகளையும் மீறி தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணா முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்கள்.
    2. யேல் பலகலைக் கழகத்தின் கவுரவ சப் ஃபெலோஷிப் அளிக்கப்பட்டதை ஒட்டியே அண்ணா முதல் முறையாக அமெரிக்கா சென்றார்கள். அது டாக்டர் பட்டம் அல்ல.
    3. அயர்லாந்து வங்கிகள் என்பதற்கு பதிலாக ஸ்விஸ் வங்கிகள் என இருக்கலாம். மேலும் பல சிறு நாடுகளிலும் தீவுகளிலும் உள்ள வங்கிகள் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் சேவையைச் செய்து வருகின்றன.
    4. எனது நினைவு சரியாக இருக்குமெனில் அண்ணா அவர்கள் ஜப்பான்வரை சென்றதுண்டு. முதல்வர் பதவியை ஏற்ற பின்னரே அமெரிக்கா சென்றார்கள். கீழைத் தேய கலாசாரங்களின் ஒத்திசைவில் ஆர்வம் மிக்க அண்ணா அவர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் செல்வதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்கள்.
    5. மொரார்ஜி தேசாய் அவர்கள் ஒரு சமரச ஏற்பாடாகத்தான் துணைப் பிரதமராகவும், நிதித்துறைக்குப் பொறுப்பாளராகவும் இருந்தார்கள். காங்கிரஸின் தவறான பொருளாதாரக் கொள்கையையும் வரி விதிப்பு முறைகளையும் மீறி அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. அண்ணாவுக்கும்கூட தெளிவானதும் உறுதியானதுமான பொருளாதாரக் கொள்கை இருந்ததில்லை. பொதுத் துறை என்கிற விஷச் சக்கரத்திலேயே அண்ணாவுக்கும் நம்பிக்கை இருந்தது. வசதியானவர்களுக்கு வரி விதித்து ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது என்கிற கருத்தை அண்ணா வெளியிடுவார், ஆனால் எந்த வரி விதிப்பும் யாருக்கு விதிக்கப்படுகிற வரியும் இறுதியில் அடி மட்டத்தில் உள்ள ஏழைகளின் தலையில்தான் மறைமுகமாகவும் நேரடியாகவும் விழும் என்பதை அண்ணா எண்ணிப் பார்க்கவில்லை. வருமான வரி மிக மிகக் குறைவாக விதிக்கப்பட்டும் வெளியிலிருந்து கொண்டு வரப்படும் பணத்துக்கு அதிகச் சுமை கொடுக்காமலும் இருந்தாலே கறுப்புப் பண சேமிப்பு மிகமிகக் குறைந்துவிடும் என்கிற அடிப்படை விஷயத்தையும் உணராத ஆட்சியாளர்களே நமக்கு வாய்த்துள்ளார்கள்.
    -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *