கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)

This entry is part 20 of 39 in the series 4 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

இறைவன் திருநாம உச்சரிப்பு

நிர்வாண மனிதன் ஆற்று
நீரிலே குதித்தான்
வண்டுகள் தலைக்கு மேல் சுற்றி
ரீங்காரம் செய்யும் போது !
நதியின் தூய
நீரோட்டம் தான் கடவுளை
நினைக்க வைப்பது !
இறைவன் தவிர
வேறெந்த மெய்ப்பாடும் இல்லை
இவ்வுலகில் !
இறைவன் ஒருவனே !

மனிதனின் காம இச்சையை
நினைவூட்டும், தலையை
வலம்வரும் வண்டுகள் !
மனிதனுக்கு
வனிதை இவளா
அல்லது
வனிதை அவளா என்று
வினா எழும் ?
பெண் என்றால்
எழும் கேள்வி
இந்த ஆடவனா இல்லை
அந்த ஆடவனா ?
சிந்திக்க மூளை முன்வரும்
வண்டுகள்
சிரசைக் கொட்டும் போது !

நீரை மூச்செடுப்பாய் நீ !
நீரில் மூழ்கி விடு
பூரணமாய்
தலை முதல் கால்வரை !
அப்போது
உன்னை விட்டு வண்டுகள்
ஒழிந்து போகும் !
நீருக்குத் தூரத்தில்
நீ நிற்பினும்
நின்னை வண்டுகள்
நெருங்கா திப்போது !

தொடு வானில் பரிதி
அத்தமனம் ஆகும் போது
எவரும் வானோக்கி
விண்மீன் களைப் பாரார் !
இறைவனுடன் கலந்து விட்டவன்
மறைந்து போவ தில்லை !
இறைமைப் பண்பில்
இரண்டறப் பின்னியவர்க்கு
குர்ரான்
பொன்மொழி ஒன்று நான்
கூறவா ? எல்லாம்
கொண்டு வரப் படட்டும் எமது
கண்காணிப் புக்குள்ளே !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 29, 2011)

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம் முடிவு) அங்கம் -2 பாகம் – 18கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -2)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *