நீயும் நானும் தனிமையில் !

This entry is part 33 of 42 in the series 1 ஜனவரி 2012
நீயும் நானும் தனிமையில் !

மூலம் : நோரா ரவி ஷங்கர் ஜோன்ஸ்
தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

வேனிற் கால நாட்கள்
விரைந்து ஓடின
வெண்ணிலவை நோக்கிச் சுடு !
ஆயினும்
குறி தவறிப் போகும்
முற்றிலும் !
இருண்ட வாழ்வே
எதிர்ப் படும்
இப்போ துனக்கு !

ஒரு காலத்தில் உன் கரம்
பறித்த பூக்களின்
நறுமணம் பரவிய
காலி அறை
கண்ணில் படும் உனக்கு !
காரணம் நீ அறிவாய்
தனிமையில்
நீயும் நானும் ஏன்
வருந்த வேண்டும் ?
பருவக் காலம் காரணமா ?

இலையுதிர் காலம் மீண்டும்
இங்கு
வந்து விட்டதே,
முதலாகச்
சிக்கிக் கொள்ள நீ
முனையாதே !
முடிந்து விட்டது எல்லாம்
நமக்குள் !

மலை மீதிருந்து உதிந்து
பனிப் பொழிவு
சரியும் போது
உருண்டு வருகிறாய்
ஒரு புதிய காதல னோடு !
எனை நம்பிச் சொன்ன வ்ற்றை
நினைத்துப் பார்ப்பாயா
காரணம் அறிவாய் நீ
தனிமையாய்
நமக்குள் நாமேன்
தவிக்க வேண்டும்
பருவக் காலம் காரணமா ?

+++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  December 25, 2011

Series Navigationசங்கத்தில் பாடாத கவிதைகம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *