கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !

This entry is part 28 of 40 in the series 8 ஜனவரி 2012
vver-layout

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

செர்நோபிள் ஒரு விதி விலக்கு ! நிபுணருக்கும், மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு !

சி. ஜெயபாரதன்


 

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை.  அணுசக்தி நிலையத்தையும், உப்பு நீக்கி இராசயனச் சாலையையும் கூடங்குளத்தில் அமைக்க வேண்டா மென்று நிறுத்தக் கையில் செருப்புடனும், தடியுடனும் முன்கூட்டியே வர அசுரப் பட்டாளத்தை ஏற்பாடு செய்தது, விடுதலைப் பூமியில் ஓர் அநாகரீகப் போராட்டமே ! ஆக்கப்பணி புரியும் அரசாங்கப் பணியாளரை அவமானப் படுத்தி நாச வேலைகள் புரிகின்றன அழிவுப்பணி புரியும் ஆவேச எதிர்க்கட்சிகள்.  அணு உலைகளில் விபத்துக்கள் நேரா என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது.  அமெரிக்காவில் 9/11 விமானத் தற்கொலைத் தாக்கல்களுக்குப் பிறகு விமானப் பயணம், இரயில் பயணம், கப்பல் பயணம், அணு உலைகள், தொழிற்சாலைகள் அனைத்திலும் மனிதப் பாதுகாப்பு என்பதே கனவாகி, கதையாகி, கற்பனை யாகிப் போனது.  மில்லியன் கணக்கில் தினமும் பயணம் செய்யும் மொம்பை மின்சார இரயில்களில் எவரெல்லாம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறார் ?  21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத்துக்குப் பயன்படுத்தும் இரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகையாகிப் பெருகி விட்டன !

 

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன.  அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.  ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.  இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%  இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள்.  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

அணுமின்சக்தி  தேவையான தீங்கு  என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி  வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்க முடியாத, மீள  இயலாத நிலைக்கு நாம் வந்து விட்டோம்.   அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக்  கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருத்து.  வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள் எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின்  சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும்.

அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.  மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்த நிர்ப்பந்த விதி இதுதான்:  பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.  வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.  செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை.  பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.  செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

கடலும், கடற்சார்ந்த பகுதிகளுக்கு நீர் முடக்கம் ஏற்பட்டால், கடல் வெள்ளத்தின் உப்பை நீக்கிக் குடிநீராக்கு வது ஒன்றும் புதிய விஞ்ஞான முறை யில்லை.  ஜப்பான் போன்ற தீவுகளிலும் மற்றும் அரேபிய நாடுகளிலும் உப்பு நீக்கி இரசாயனச் சாலைகள் எண்ணற்றவை சிறந்த முறையில் இயங்கி வருகின்றன.  அனுதினமும் ஆயிரக் கணக்கான டன்னளவில் குடிநீர் கடலிலிருந்து சுவைநீராகத் தயாரிக்கப் படுகிறது.  உப்பு கலந்த எச்சநீர் மீண்டும் கடலில்தான் பாய்ச்சப் படுகிறது.  இவற்றிலிருந்து வெளியாகும் இராசயனப் பொருட்களால் மீனினம் சேதாரம் அடையலாம் என்றோர் அச்சம் சிலரிடம் உள்ளது.  ஆனால் நமக்குக் குடிக்க, புழங்க கடற்பகுதிகளில் குடிநீர் பேரளவு தேவைப்படும் போது இந்த வழியைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதேனும் உள்ளனவா ?  செத்துப் போன மீன்களை விட்டுவிட்டுச் சற்று தூரம் சென்று உயிருள்ள நல்ல மீன்களை பிடித்துக் கொள்ள மீனவருக்குச் சொல்லித் தர வேண்டுமா ?  நமக்கு முதலில் வேண்டியது நீர்வளம்.  அதற்கு அடுத்தபடிதான் மீனினம்.  அப்படி வேறு வழிகள் இருப்பினும் நீர் வெள்ளத்தைக் கொண்டு வரச் சிக்கனச் செலவில் சாதிக்க முடியுமா என்றும் கணக்குப் பார்க்க வேண்டும்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் பலரிடம் பீடக் கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும் நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ள போது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை.  சூழ்வெளி, உயிரினப் பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான்.  அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் ஹௌஸ் வாயுக்கள் [CO2, SO2, & Nitrous Gases] வெளியாவ தில்லை.  அவை கூடங்குளத்தில் தேவையில்லை என்று பாமர மக்களின் கைகளில் செருப்பை மாட்டி, சுற்றுச் சூழல் ஆய்வலசல் பற்றி உரையாட வந்த விஞ்ஞானிகளின் வாயை மூடியது நாகரீகச் செயலில்லை.  அரசியல் மூர்க்க வர்க்க எதேச்சவாதிகளின் பிற்போக்குத் தன்மை அது.

 

 

அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் வால் முளைக்குது,  ஏழாம் விரல் முளைக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ?  அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ?  அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர்,  மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை.  அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும்.  அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் புகாரிடலாம்.   உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டு விடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும்.  நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடை யாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன்.  இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்க வில்லை.  ஆகவே அசுரன் போன்ற அணுசக்திப் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

 

 

பாரதத்தில் அணுசக்தி எச்சக் கழிவுகள் மீளியக்க முறையில் பயன்படுத்தப்பட்டு புளுடோனியம் பிரித்தெடுக்கப் படுகிறது.  அந்தப் புளுடோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப்பெருக்கி அணு உலைகளுக்கும் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் கதிர்க்கழிவு புதைப்பு விபரங்களை << தேசீயப் பாதுகாப்பு இரகசியமாக >> [National Security Secret] வைத்துள்ளது.  தெருவில் போவோனுக்குத் << தேசீயப் பாதுகாப்பு >> என்று சொன்னால் என்ன புரியும் ? ஆனால் எப்படி கதிரியக்கக் கழிவுகள் பாதுகாப்பாக புதைபட வேண்டும் என்ற விஞ்ஞானப் பொறி நுணுக்கங்கள் இந்திய அணுசக்தித் துறையகத்திடம் உள்ளன.  பொதுநபருக்கு வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் அரசியல் அமைச்சர்களின் மூலமாக முயன்றால் விபரங்கள் கிடைக்கலாம் என்பது என் கருத்து.  பிரம்மாண்டமான அணு உலைகள் கட்டும் போது, பாதுகாப்பாக வேலை செய்தாலும் மனித அல்லது யந்திரத் தவறுகளால் மனிதருக்கோ, கட்டுமானச் சாதனங்களுக்கோ விபத்துகள் நேர பல வாய்ப்புகள் உள்ளன.  அவற்றால் விளையும் விளைவுகளால் மரணம் ஏற்படாத வரை அவற்றை அரசு மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத குற்றமில்லை.  அரசியல் கட்சிகளுக்குள் அனுதினமும் நிகழும் கைச் சண்டைகள், வாய்ச்சண்டைகள் எல்லாம் வெளிப்படையாக எவரெல்லாம் முரசடித்து வருகிறார்கள்?

 

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=html அசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

மேற்காணும் கட்டுரையில் உள்ள சில அநாகரீகத் தற்கொலை மிரட்டல்கள், தாக்கல்கள்

+++++++++

<< கோட்டாறைச் சேர்ந்த பரமார்த்தலிங்கம் பேசுகையில், “அணுமின் திட்டத்தை நிறுத்தாவிட்டால் தினமும் 3 பேர் வீதம் தீக்குளிப்போம்!” என்றார். உடனே “அணு உலை வேண்டாம்’, “அணு உலை வேண்டாம்’ என அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே திட்டத்தை ஆதரித்து இந்திய கலாசார நட்புறவுக் கழகத் தலைவர் ராமையா பேசுகையில், அணு உலையால் ஆபத்து வராது என்றும் இதனால் பல நன்மைகள் உண்டும் என்றும் தெரிவித்தார். ஆதரவாகப் பேசிய இராமையாவை அடிக்க பெண்கள் செருப்புகளுடன் பாய்ந்தனர். >>

<< இடிந்தகரையைச் சேர்ந்த என். சுரேஷ் என்பவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆன்டன் கோமஸ் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே, அரங்கிற்குள் இருந்தவர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்துப் பேசியவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு குறிப்பெடுத்த இளைஞர் ஒருவருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த இளைஞரைத் தாக்கினர். போலீஸார் அந்த இளைஞரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். ஆதரவாகப் பேசிய இளைஞருக்கு பெண்களின் செருப்படியும் அடி, உதைகளும தாராளமாகக் கிடைத்ததன. >>

<< இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் விஞ்ஞானி லால்மோகன் பேசுகையில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் பேசுகையில், “அணு உலைக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்றும், விபத்து நடக்காது என்பதற்கான உத்தரவாதம் இல்லை!” என்றும் தெரிவித்தார். >>

<< அதற்குப் பதிலளித்து இந்திய அணுமின் கழகத் திட்ட இயக்குநர் (மும்பை) எஸ்.கே. அகர்வால் பேசுகையில், கழிவுப் பொருள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார். அப்போது எதிர்ப்பாளர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு அவ்வப்போது எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்ததால் அரங்கில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் திடீரென்று கூட்டம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இவ்வாறு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அரைகுறையாக நடந்து முடிந்தது.  இப்படியாக பல இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்த இந்த மக்கள் கருத்தாய்வானது வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நடந்து முடிந்தது >>

+++++++++

நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்கனலைப் பயன் படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.

“இன்றுள்ள [2004] உலக ஜனத்தொகை 6 பில்லியனில் 3 பில்லியன் மக்கள் கட்டுப்பாடுள்ள அல்லது பற்றியும் பற்றாத நீர் வசதியுடன் வாழ்கின்றனர்!  உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார்! 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது!  இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை!  ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை! இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு வழிகளைக் காண நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும்”.

நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.  கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்புநீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனியிழந்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப்படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன்படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெருநிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”

 

கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளிவரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளளவாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.

2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்!

 

Russian VVER & Chernobyl Reactors

சென்னைப் நீர்ப்பஞ்சத்தைத் தீர்க்கத் தற்போது இந்தியாவின் கைவசம் இருக்கும் ஒரே ஒரு வழி, கடல் வெள்ளத்தில் கனல்சக்தி மூலம் உப்பை நீக்கிச் சுவை நீராக்கும் முறை ஒன்றுதான்! பரிதிக்கனல் வெப்பத்தைப் பயன்படுத்தியோ, கனல் மின்சார நிலையம் அல்லது அணு மின்சார நிலையத்தின் டர்பைன் வெளிக்கழிவு வெப்பத்தை உபயோகித்தோ, கடல்நீரைக் குடிநீராக்கும் மாபெரும் உப்புநீக்கி நிலையங்கள் மூன்று அல்லது நான்கு சென்னையின் நீண்ட கடற்கரையில் உடனே நிறுவப்பட வேண்டும்.

பாரதத்தில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப் பஞ்சத்தைக் குறைக்க ஜீவ நதிகள் செத்த நதிகளுடன் சேர்க்கப் பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஓடும் நதிகளின் நீரை, அண்டை மாநிலத்தில் ஓடாத நதிகளுக்குப் பங்கீடு செய்ய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.  கடற்கரைப் பகுதிகளில் உப்புநீக்கி துறையகங்கள் அணுமின் சக்தி நிலையங்களுடனும், அனல் மின்சக்தி நிலையங்களுடன் கூடவே கட்டப்பட வேண்டும். இந்த இமாலயத் திட்டங்கள் நிறைவேற மத்திய அரசும், மாநில அரசுகளும் மெய்வருந்திப் பணிபுரிய முன்வர வேண்டும்.

 

தகவல்:

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=html அசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

1.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG
(Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409022&format=html [ உப்பு நீக்கி நிலையங்கள் Desalination Plants – கடல் நீரிலிருந்து குடிநீர் – திண்ணைக் கட்டுரை]

8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]

10 Picture Credit: The Hindu

11.  http://www.npcil.nic.in/  (Nuclear Power Corporation of India Website  (Kudungulam Update & Reports)

12  http://npcil.nic.in/main/AboutUs.aspx  (Indian Nuclear Power Program)

13. http://www.npcil.nic.in/main/ConstructionDetail.aspx?ReactorID=77  (Kudungulam Reactor Status)

 

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 6, 2012)  (Revised -1)

சி. ஜெயபாரதன்
Jan 6 (1 day ago)
to me, editor

Cover image

+++++++++++++++++++

2012/1/6 சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com>

Series Navigationதுளிதுளியாய்….ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

50 Comments

  1. Avatar
    punai peyaril says:

    இதை கிறிஸ்துவ மதத்தினரும், சர்ச்சுகளும் குறிப்பாக எதிர்ப்பது ஏன்,என்ற அரசியல் விடை தான் தற்போதைய தேவை.. விஞ்ஞான விளக்கம் தாண்டிய பிரச்சனையாக இது ஆகி விட்டது….

  2. Avatar
    ஜெயபாரதன் says:

    ranga சொல்கிறார்:

    கடைசியாக…..
    1.அணுசக்தி துறை சட்டத்தின் கீழ் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.இது உண்மையா?அந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதா?
    2.முதலில் ஒப்பந்தம் செய்யும்போது அணுக்கழிவை ரஷ்யா கொண்டு செல்வதாக இருந்து பின்னர் ஏன் அக்கழிவை இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யலாம் என்று சொல்லப்பட்டது?இது பொய்யா?
    3. கல்பாக்கத்தை சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை ?என்று கேட்கப்படுகிறது.இது பொய்யா?
    4. கல்பாக்கத்தை சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை ?என்று கேட்கப்படுகிறது.இது பொய்யா?
    5.மாற்று வழி மின்சாரம் இயற்கையிலேயே கிடையாதா?.
    6.அணு மின்சாரத்தின் உண்மையான விலை என்ன?
    தயவு செய்து கூறுங்கள் ஸார்

  3. Avatar
    ஜெயபாரதன் says:

    சி. ஜெயபாரதன் சொல்கிறார்:

    ////1.அணுசக்தி துறை சட்டத்தின் கீழ் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.இது உண்மையா?அந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதா?////

    “கூடங்குளம் அணுமின்னுலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !” இப்படிக் கூட்டங்கள் கலகத்தில் முடிந்தன. தமிழர் நாகரீகமானவரா பொறுமையாக கேட்க.

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், விஞ்ஞானிகள் கூடங்குளம் பற்றிப் பேசினார்கள்.
    +++++++++++++++++

    /////2.முதலில் ஒப்பந்தம் செய்யும்போது அணுக்கழிவை ரஷ்யா கொண்டு செல்வதாக இருந்து பின்னர் ஏன் அக்கழிவை இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யலாம் என்று சொல்லப்பட்டது?இது பொய்யா?////

    இதில் இந்தியாவுக்குத்தான் அனுகூலம் உள்ளது. மீள் சுழற்சியில் எரியாத எரு யுரேனியம், புளுடோனியம் கிடைக்கும். கடல் கடந்து அனுப்புவதில் இரு நாட்டுக்கும் வீண் செலவுகள், தடுப்பு வாய்ப்புகள், அபாயங்கள் ஏற்படும்.
    +++++++++++++++++++

    /////3. கல்பாக்கத்தை சுற்றிலும் முறையான ஆய்வை சுதந்திரமான விஞ்ஞானிகள், மருத்துவர்களைக் கொண்டு நடத்த அரசும் அணுசக்தி நிர்வாகமும் ஏன் அனுமதிப்பதில்லை ?என்று கேட்கப்படுகிறது.இது பொய்யா?/////

    டாக்டர் புகழேந்தி 20 வருடம் அங்கு வேலை செய்கிறார் பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டு. மீனவருக்கு ஆறாவது விரல் முளைக்குது, கான்சர் வருகுது என்று பயமுறுத்தி வருகிறார். அவருக்குப் புற்று நோய் வரும், ஆறாவது விரல் முளைக்கும் என்று ஏன் பயமில்லை ?

    இந்தியாவில் அணு உலை நிலையத்துக்குள் வேலை செய்தோருக்கு அப்படி நிகழவில்லை, கடந்த 50 வருடங்கள்.

    ++++++++++++++++++++++

    /////5.மாற்று வழி மின்சாரம் இயற்கையிலேயே கிடையாதா?.///

    இந்தியத் தொழிற்சாலைகட்குத் தொடர்ந்து பேரளவு மின்சக்தி அனுப்ப இப்போது இந்தியாவிடம் கடந்த 60 வருடம் விருத்தி செய்த அணுமின் சக்தி முறைதான் உள்ளது.

    சூரியசக்தி, காற்றாடி, சாணி மின்சக்தி தொடர்ந்து பேரளவில் அனுப்ப முடியாது.
    ++++++++++++++++++++++

    ///6.அணு மின்சாரத்தின் உண்மையான விலை என்ன?
    தயவு செய்து கூறுங்கள் சார்////

    கார் வாகன உற்பத்திக்கு நூற்றுக் கணக்கான சாதனங்கள் செய்யப் பல்வேறு தொழிற்சாலைகள் தேவை. அது போல் 1000 மெகா வாட் அணுமின் நிலையத்தை 30 வருடங்கள் இயக்க ஆயிரக் கணக்கான உதவித் தொழிற் சாலைகள் தேவை. அவை பல்லாயிரக் கணக்கான பேருக்குப் பல்லாண்டுகள் வேலை தரும்.

    ஆகவே மொத்தமாகப் பார்த்தால் ஓர் அணுமின் நிலையத்தால் பல லட்சம் பேருக்கு 30-40 வருடங்களுக்கு ஊதியம் கிடைக்கிறது. இப்போது நீங்கள் சொல்லுங்கள் அணுமின்சாரத்தின் விலை என்ன வென்று ? குறுகிய கண்ணோட்டம் இன்றி நீட்சிக் கண்ணோட்டம் தேவை. படங்களைப் பாருங்கள்.

    ஜெயபாரதன்

    +++++++++++++++++++
    Posted on 12:52 மாலை இல் ஜனவரி 8, 2012 e
    பதில்
    5
    சி. ஜெயபாரதன் சொல்கிறார்:

    /////அமெரிக்காவில் 9/11 விமானத் தற்கொலைத் தாக்கல் களுக்குப் பிறகு விமானப் பயணம், இரயில் பயணம், கப்பல் பயணம், அணு உலைகள், தொழிற்சாலைகள் அனைத்திலும் மனிதப் பாதுகாப்பு என்பதே கனவாகி, கதையாகி, கற்பனை யாகிப் போனது. மில்லியன் கணக்கில் தினமும் பயணம் செய்யும் மொம்பை மின்சார இரயில் களில் எவரெல்லாம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி நிம்மதியாக உட்கார்ந்தி ருக்கிறார் ? 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத் துக்குப் பயன்படுத்தும் இரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகை யாகிப் பெருகி விட்டன ////////

    ///1.ரயில் விபத்து,சாலை விபத்து நடந்தால் ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் பாதிப்பு.அதற்கு வழிமுறைகள் எளிதானது விபத்திலிருந்து காத்துக் கொள்ள…அணு உலை விபத்து பல தலைமுறைகளை ஊனப் படுத்தும் என்ற பயம் நியாமானதுதானே!!அப்படி இல்லையென்றால் பல தலைமுறைகளை பாதிக்காது எனறு நிச்சயமாக சொல்ல முடியுமா? /////

    கடந்த 50 ஆண்டுகளில் அடுத்தடுத்து இயங்கிவரும் 30 இந்திய அணுமின் உலைகளில் ஒருவர் கூடக் கதிரடியிலோ அல்லது புற்று நோயிலோ மரிக்க வில்லை. செர்நோபில், ஜப்பன் புகுஷிமா போன்ற கோர அணுமின் உலை விபத்துக்கள் மாறுபட்ட இந்திய அணுமின் உலைகளில் ஒருபோதும் நிகழா.

    தினம் உலக நாடுகளில் மொத்தம் 20,000 ஜம்போ ஜெட் விமானங் கள் ஒவ்வொன்றிலும் 300 பயணிகள் வீதம் மொத்தம் சுமார் 6,000,000 (6 லட்சம்) பேர் அஞ்சாமல் பறக்கிறார். விமானக் குழுவினரும் பயப்படாமல் ஓட்டுகிறார். யந்திர யுகத்தில் பயம் இருந்தாலும் விமானங்கள் பறக்கும். அணுமின் உலைகள் தேவையான தீங்கு நிலையங்கள். பயம் இருப்பதால் அணு உலைப் பாதுகாப்புகள் ஆழ்ந்து கண்காணிக்கப் படுகின்றன. செர்நோபில், புகுஷிமா போன்ற கோர விபத்துக்களுக்குப் பிறகும் உலகில் 430 அணுமின் நிலையங்கள் 30 நாடுகளில் பயமின்றி இயங்கி வருகின்றன.

    ++++++++++++++++++

    /////2.மனித தவறுகள் திருத்தப்பட வேண்டியதுதான்..அதாவது மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணி நெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற் சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அப்படி இருக்க பல தலைமுறைகளை பாதிக்கும் பயம் சாதாரணமாக எல்லோருக்கும் வரத்தானே செய்யும்.இந்த பயம் தேவையற்றது என்று சொல்கிறீர்களா? உண்மையிலே பல தலைமுறைகளை பாதிக்காதா? /////

    பயம் இருக்கும். சிறு கதிரடி விபத்துக்கள் நேரலாம். ஆனால் பெரு விபத்து நேராமல் கண்காணிக்கவும், விபத்து நேர்ந்தால் அணு உலைகள் தானாக நிறுத்தம் அடைவதாலும் பாதிப்புகள் தீவிர மாகா. புகுஷிமா விபத்துகளில் ஜப்பானியர் (சுனாமியால் தவிர) யாரும் சாக வில்லை. கதிரடியில் சிலர் பாதிப்பானார். அவற்றால் நேரும் நீண்ட கால விளைவுகள் குறைவு.

    ///3.கல்பாக்கதில் போதுமான கண்காணிப்பு யாரால் செய்யப்ப்டுகிறது?

    4.அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இவ்வளவு கதிர்வீச்சு வாங்கி இருக்கிறார் என்று நீங்கள் புள்ளி விபரங்களோடு தெரிவிக்கலாமே? நிரந்தரமான (அ) தற்காலிக ஊழியர்களா? எந்தெந்த ஊரிலிருந்து வருகிறாரகள் என்ற விபரம் இருக்கிறதா? ////

    எல்லாத் திறத்தாரும் பணி செய்கிறார். கண்காணிக்கப் படுகிறார்.

    முதலில் ஒவ்வொரு ஊழியர் கதிரடிப் பதிவு செய்யும் ஹெல்த் பிசிக்ஸ் குழு கண்காணிப்பு. இரண்டாவது இந்திய அணுவியல் பாதுகாப்புக் குழு. மூன்றாவது IAEA & WNA (International Atomic Energy Agency & World Nuclear Asdsociation)

    5.//////// உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டு விடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும். ////////####

    நஸ்ட ஈட்டுக்கு ஆன ஒப்பந்தம் கூடங்குளம் எப்படி போடப்பட்டு இருக்கிறது?

    நஸ்ட ஈட்டிலிருந்து அணுவுலை கம்பேனி தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கின்றது என்று எதிர்ப்பாளர்கள் சொல்வது பொய்யா? உண்மை யெனில் ஏன் அங்குள்ள மக்கள் நிலத்தை விட்டு கொடுக்க வேன்டும்? உயிருக்கு பயப்படுவது நியாயம் தானே? பணம் பெரிதா உயிர் பெரிதா என்று இருக்கும் போது உயிர் பெரிது என்று நீங்களே சொல்வீர்களே?அது போலதான் அவர்கள் சொல்கிறார்கள்?////

    கூடங்குள அணுமின் உலை நிறுவனம் ஆகப் பல அடுக்குப் பொறுப்புக்கள் ரஷ்யா / இந்தியா இரண்டுக்கும் உள்ளன. முதலில் டிசைன் & ஸ்பெசிபிகேசன், டிராயிங், சாதனங்கள் உற்பத்தி, பாக்கிங் & டெலிவரி, கட்டுதல், சோதிப்பு, இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு, அபாய விளைவுக் கையாட்சி போன்ற முக்கிய பணிகள்.

    ரஷ்யாவின் காப்பீடுப் பொறுப்பு சாதனங்கள் கடல் வழியாகக் கூடங்குளம் வரையில் வருவது. பிறகு கட்டுமானம் முதல் அபாயப் பாதுகாப்பு வரைக் காப்பீடு பொறுப்பு இந்தியாவுக்குச் சேர்ந்தது.

    +++++++++++++++++

    /////////// தெருவில் போவோனுக்குத் என்று சொன்னால் என்ன புரியும் ? ஆனால் எப்படி கதிரியக்கக் கழிவுகள் பாதுகாப்பாக புதைபட வேண்டும் என்ற விஞ்ஞானப் பொறி நுணுக்கங்கள் இந்திய அணுசக்தித் துறையகத்திடம் உள்ளன. பொதுநபருக்கு வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் அரசியல் அமைச்சர்களின் மூலமாக முயன்றால் விபரங்கள் கிடைக்கலாம் என்பது என் கருத்து. பிரம்மாண்ட மான அணு உலைகள் கட்டும் போது, பாதுகாப்பாக வேலை செய்தாலும் மனித அல்லது யந்திரத் தவறுகளால் மனிதருக்கோ, கட்டுமானச் சாதனங்களுக்கோ விபத்துகள் நேர பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றால் விளையும் விளைவுகளால் மரணம் ஏற்படாத வரை அவற்றை அரசு மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத குற்றமில்லை. அரசியல் கட்சிகளுக்குள் அனுதினமும் நிகழும் கைச் சண்டைகள், வாய்ச்சண்டைகள் எல்லாம் வெளிப்படையாக எவரெல்லாம் முரசடித்து வருகிறார்கள்?//////////

    ////6.இந்த மாதிரி இருக்க நிஜமாக பயம் வருவது நியாயம் இல்லையா? ////

    பயம் இருப்பது வேறு. அவற்றைக் கையாளுவது வேறு. பயந்து மட்டும் வாழா திருந்தால் எதுவும் யந்திர யுகத்தில் சாதிக்க முடியாது. மீண்டும் மாட்டு வண்டி யுகத்துப் போகலாம், பயமின்றி வாழ. ரயில், விமானம், கப்பல், ராக்கெட், அணு உலை இல்லாமல் மக்கள் வாழலாம் பயத்தை ஒழிக்க.

    ///7.அணுக்கழிவுக்கான மேலாண்மை என்ன?அதற்கென்று தனிக்கட்டுரை இருக்கிறதா? அதற்கான தொழில்னுட்பம் உண்மையிலே ரகசியமா? ////

    என் வலைப் பக்கத்தில் உள்ளன : http://jayabarathan.wordpress.com

    ////இதுவரை கேட்டது படித்தது .என் அறிவுக்கு எட்டிய கேள்விகள்.தவறு இருந்தால் மன்னிக்கவும்..///

    வினாக்கள் கேளுங்கள். பதில் கிடைக்கும் என்னிடமிருந்து.

    சி. ஜெயபாரதன்.

  4. Avatar
    ஜெயபாரதன் says:

    langovan N ✆ nelango5@gmail.com

    5:23 AM (6 hours ago)

    to tamilmanram
    2012/1/9 சி. ஜெயபாரதன்

    நண்பர் இளங்கோ,

    இந்தியா ஆசியாக் கண்டத்தில் சிறப்ப்பாக இருப்பதற்கு அதிகார வர்க்க அரசியல் காரணிகள் நேருவும், அப்துல் கலாமும் என்பதை நீங்கள் மறுக்க வில்லையே. மிக்க நன்றி.

    எப்போதும் உயர்வு நவிற்சியில் எழுதுவது உங்கள் கைத்திறம. இருபுறமும் நியாயம் கூறும் நெறி உங்களுக்குக் கிடையாது.

    அன்பின் ஐயா,

    நான் பெரிய ஞாயவான் இல்லை. ஆனால் அதனை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
    நான் அணு உலை ஆதரவாளர்களை இழித்தோ பழித்தோ பேசவில்லை. மண்மோகனும், கலாமும் சொல்லடி படுவதற்குக் காரணம், நீங்கள் மறுப்பாளர்கள் அனைவரையும் ஒரே அடியாக தவறாகப் பேசுவதால் மட்டுமே. மேலும், தங்களின் நுட்பக் கட்டுரைகளையோ, ஆற்றலையோ குறைத்துப் பேசியதே இல்லை. எனக்குக் கூடாது என்று படும் ஒன்றைத் தொடர்ந்து மறுக்கிறேன். அவ்வளவுதான்.

    மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

    நீங்கள் உங்கள் கட்டுரையில் கூறியன இரண்டு:
    1) அணு உலைகள் “நாட்டுக்குத் தேவையான தீங்கு”.
    2) அணு உலைகள் நிலத்தடியில் நிறுவப்படுதலே சரியானது/பாதுகாப்பனது.

    இவை உங்கள் கூற்றுக்கள். இவற்றின் பால் எனக்குப் பெரும் மரியாதை உண்டு.
    இதனை வழக்காட்டத் துவக்கத்திலேயே பல முறை சொல்லியிருக்கிறேன்.
    அப்துல்கலாமிடம் இந்தக் கருத்து நேர்மை காணப்படவில்லை. அவர் மந்திரவாதி மாதிரி
    எல்லாம் சரியாயிருக்கிறது என்று சொல்லிவிட்டார்.

    இப்படி நீங்கள் எழுதிவிட்டு, ஏன் அணு உலைக்கு ஆதரவாக இவ்வளவு சண்டை போடவேண்டும்?

    சண்டை போட்டாலும், புளுகு, ஏமாற்று, கூலிப்பட்டாளம், தேசப்பற்றற்றவர் என்று தேவையற்ற
    வகையில் ஏன் வழக்காடவேண்டும்?

    உச்சமாக, சிறுபான்மை பெரும்பான்மை என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள்.
    சிறுபான்மை பெரும்பான்மை என்பதெல்லாம் ஏதோ ஒரு வகையில் காலஓட்டத்தில் எல்லாருக்கும் ஏற்படுவதுதான். பெரும்பான்மை ஏற்படும்போதெல்லாம் சிறுபான்மையை அழித்துவிடுவதைக் கொள்கையாகக் கொண்டால் குமுகம் என்ன ஆகும்?

    இதே நீங்கள் வாழும் கனடாவில், 20000 மக்கள் சூழற்கேடு என்று எதிர்ப்பு தெரிவித்தால்
    உடனே தேசத்துரோகம் என்று சொல்லி துப்பாக்கியைத் தூக்கிவிடுவார்களா? ஓர்ந்து பாருங்கள்.

    கனடாவின் பரந்த சுதந்திரத்தைப் புரிந்த நீங்கள், இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும்
    அதே அளவு பரந்த எண்ணத்தைக் காட்டுவதுதானே சிறப்பாக இருக்க முடியும்?

    சாதாரண மக்கள் என்பதால் தங்கள் பார்வையில் அவர்கள் எல்லாம் நசுக்கப் படவேண்டும்,
    அடக்கப் படவேண்டும் என்று சொல்வது எந்த வகையில் சரி?

  5. Avatar
    ஜெயபாரதன் says:

    சி. ஜெயபாரதன் ✆

    10:34 AM (1 hour ago)

    to tamilmanram, தமிழமுதம், anbudan, vannan, thanthaiperiyar, S.Krishnamurthy, கூடங்குளம், N, Ganesan, mylswamy Annadurai

    நண்பர் நாக. இளங்கோ,

    அணுவியல் விஞ்ஞானப் பேரறிஞர் ஞாநி, டாக்டர். புகழேந்தி போன்றோர் கல்பாக்கத்துச் சூழலில் வசிக்கும் மீனவருக்கு ஆறாவது விரல் முளைக்குது, புற்று நோயில் செத்து மடிகிறார் என்று பொய் சொல்லிப் பயங்காட்டி வருகிறார்கள். அவரை நிரூபிக்கச் சொன்னேன், கதிரடியால் அவை விளைந்தனவா என்று. 20 வருடம் அங்கே வாழ்ந்து வரும் புகழேந்திக்கோ அவரது குடும்பத்து நபருக்கோ ஆறாவது விரல் முளைக்கும், புற்று நோய் வரும் என்ற பயம் சிறிது கூட ஏனில்லை ?

    நானும் அந்த அணுமின் உலைகளில் நான்கு ஆண்டு பணி செய்தேன். என்னைப் போல் ஆயிரக்கணக்கான இந்தியர் (தமிழர் உட்பட) சுமார் 40 வருடம் அந்தச் சூழலில் பணி செய்து உண்டு, உறங்கி வருகிறார். என் புதல்வியர் இருவரும் கனடா அணுமின் உலையில் வேலை செய்தவர். ஒருத்தி கடந்த 15 வருடமாய் இன்றும் அணுமின் உலையில் வேலை பார்த்து வருகிறாள். கடந்த 45 ஆண்டுகளாய் நாங்கள் நால்வரும் மற்ற அணு மின்உலை ஊழியர் போல் அந்தச் சூழலில் உண்டு, உறங்கி வருகிறோம் எந்தக் கதிரடிவிளைவும் தாக்காமல்.

    அப்படியானால் ஞாநியும், புகழேந்தியும் பொய், புரட்டு கூறிப் பொது மக்களை ஏமாற்றி வருகிறார் என்று ஏன் சொல்லக் கூடாது ?

    டாக்டர் அப்துல் கலாம் ராக்கெட் விஞ்ஞானி. அவர் அணுவியல் துறையில் ஆழ்ந்த பயிற்சியோ, அனுபவமோ உள்ளவர் அல்லர். ஜ்னாதிபதி என்ற முறையில் பொதுப் பாதுகாப்புப் பற்றி பேசியிருக்கிறார்.

    கனடாவில் 5 மில்லியன் ஜனத்தொகை உள்ள மிகப் பெருநகர் டொரோன்டோ அருகில் ஒரே இடத்தில் 8 அணுமின் நிலையங்கள் (8 X 750 MWe = 6000 MWe) பாதுகாப்பாய் 40 வருடங்கள் இயங்கி வருகின்றன. சமீபத்தில் 40 வயதான் இரண்டு அணு உலைகள் நிறுத்தம் ஆயின. கூடங்குளத்தில் அணுமின்னுலை எதிர்ப்பு பெரும்பானமை அரசியில் ஆவேச எதிர்ப்பு தவிர விஞ்ஞானக் காரணமில்லை. அங்கே எரிமலை கூட வரலாம் என்று சிலர் பயங்காட்டி வருகிறார்.

    இந்த யந்திர யுகத்தில் பயமுற்றுப் பயங்காட்டி வாழ முடியாது. பயந்தால் ரயில், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட், அணு உலை எதுவும் இயங்க முடியாது. மாட்டு வண்டியில் மக்கள் போவதில் பயமில்லை.

    கடந்த 50 ஆண்டுகளாய் 20 அணுமின்னுலைகளைப் பாதுகாப்பாய் இயக்கிவரும் இந்திய அரசாங்கம் இந்தக் கூடங்குள எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளாது. இந்திய அரசாங்கம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்.

    நாட்டுக்குக் காவல் வாரியம், காவற் படைகள் தேவையில்லை என்பது உங்கள் கருத்தா ?

    அன்புடன்
    ஜெயபாரதன்

    +++++++++++++

  6. Avatar
    punai peyaril says:

    ஜெயபாரதன் இதில் பிரச்சனையே, கொஞ்சம் கதை, கவிதை, சினிமா , பட்டிமன்றம், பங்காற்றும் விஷயம் இருந்தால், அவர்கள் தான் தமிழகத்தின் மிகப்பெரிய பொறுப்பான அறிவாளிகள் என்று நினைப்பு இங்கு ஓடுகிறது. முறைப்படி படித்து விஞ்ஞானி ஆனாலும் அவன் கருத்துக்கு இங்கு இடமில்லை… தவறான பாதையில் தமிழகம் பல துறைகளிலும் நாசமாகிக் கொண்டிருக்கிறது. கண்டதே காட்சி , கொண்டதே கோலம் என்று வாழ்பவர்கள் கற்பையும், குடி கூத்து கும்மாளம் புரிபவர்கள் கவுன்சிலிங் நிகழ்ச்சிகள் நடத்துவ்தும், கொள்ளையர்கள் மந்திரிகளாக இருப்பதும், ஒழுக்கமின்றி சம்பாதித்தவர்கள் கல்வி தாளாளர்களாக இருக்கும் வெட்கக்கேடும் தமிழகத்தில் சகஜம்… கேவல்மாக இருக்கு… சூழல்….

  7. Avatar
    ஜெயபாரதன் says:

    அணுமின் நிலைய தீவிர எதிர்ப்பாளியின் குரல்:

    Muthukrishnan ✆

    7:23 PM (12 hours ago)

    to me, கூடங்குளம்,

    ஆவேச அரசியல் இல்லை, தொடர்ந்து மூடர்கள் போல் இந்தியாவில் சில் அரசியல் வாதிகள் பேச, அதை கண்டு இங்குள்ள விஞ்ஞானிகள் துதிபாட,

    அதை பார்த்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும் இனி….

    அடுத்து ஐஸ்வரியா ராய், அமீர் கான் கோகோ கோலா வில் பூச்சி கொல்லிகள் இல்லை தைரியமாக நம்பிக்கையுடன் குடியுங்கள் என்று விளம்பரத்திற்கு வருவது போல்,

    நம் அப்துல் கலாம் வருகிறார் 40 நிமிடங்கள் எல்லா ஆய்வுகளையும் செய்து எல்லாம் சுபம், எல்லாரும் போய் வேலையை பாருங்கள் என்கிறார், முழுக்க முழுக்க பொய்யும் புரட்டும் நிறைந்து இரண்டு பக்க கட்டுரையை நாளிதழில் எழுதுகிறார்.

    அதை பார்த்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும் இனி….

    இந்தியாவில் இது வரை ஒழுங்காக சாக்கடை கட்ட கூட உதவியதில்லை விஞ்ஞானிகளும் பொறியாளர்களும்

    இவர்கள் மேற்கை காப்பி அடித்து இந்தியாவை வளர்த்துவிட கனவுகானுகிறார்கள்

    அது ஒருபோது நடக்காது, மக்கள் வரிப் பணம் தான் வீணடிக்கபடும்.

  8. Avatar
    ஜெயபாரதன் says:

    மக்கள் வரிப் பணத்தை யார் இப்போது வீணடிக்கிறார் ? 15,000 கோடிச் செல்வில் கட்டப் பட்ட கூடங்குளத்தை இயக்கப் போகும் ஆளும் கட்சியா அல்லது தடுக்கும் எதிர்ப்புக் கட்சிகளா ?

    1000 மெகாவாட் அணுமின்சார முடக்கத்தால் ஒரு நாளைக்கு குறைந்தது 100,000 டாலர் நிதியிழப்பை (5 ல்ட்சம் ரூ) இந்தியருக்கு எதிர்ப்புக் கட்சிகள் உண்டாக்குகின்றன.

    சி.. ஜெயபாரதன்

    சி. ஜெயபாரதன்

  9. Avatar
    Anthony says:

    ஜெயபரதன் உங்களுக்குகாகத்தான் இந்த பச்சைத் தமிழனின் குரல்!
    ஐயா வணக்கம்,
    தாங்கள் இப்பொழுது கனடாவில் குடியிருக்கின்றீர்கள். கூடங்குளம் அனுவுலையை பற்றிய தங்களின் பதிவை கீழ்காணும் தளத்தில் படித்தேன். http://puthu.thinnai.com/?p=7740 ஒரு சிறு பகுதியே படித்த எனக்கு முழுவதையும் படிக்க நேரம் போதவில்லை. நீங்கள் முதலில் கனடாவில் தங்களின் விசாவை ரத்து செய்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வாருங்கள். கூடங்குளத்தில் ஒரு வீட்டைக் கட்டி அந்த வீட்டில் குடியேறுங்கள். அதற்கு பிறகு அனுவுலைக்கு ஆதரவான தங்களின் பதிவுகளை வெளியிடுங்கள். கூடங்குளத்தில் யார் யாரெல்லாம் போராடுகின்றார்கள் என்பதை தெரிந்து விட்டு உங்களின் பதிவுகளை இடுங்கள்!

  10. Avatar
    Anthony says:

    ரூபாய் 1,70,000 கோடி திருடித் தின்றவனை உங்களின் கண்களுக்கு தெரியவில்லை அப்படித்தானே? திரு. ஜெயபாரதன். அந்த பணமெல்லாம் யாருடையது? திருடியவனின் அப்பாக்கள் சம்பாதித்ததா? இல்லை உங்க அப்பா சம்பாதித்து அந்த புறம்போக்குகளுக்கு கொடுத்ததா? உண்மையிலேயே நீங்கள் உணர்வுள்ள மனிதனாக(குடிமகனாக & தமிழனாக) இருந்தால் இந்த பதிவை நீக்காமல் என்னுடைய இந்த மின்னஞ்சல் முகவரியில் உரையாட வரலாம்? avsesu1986@gmail.com , anthonytamizhan@facebook.com

  11. Avatar
    punai peyaril says:

    இந்தியாவில் இது வரை ஒழுங்காக சாக்கடை கட்ட கூட உதவியதில்லை — லூசுத்தனமா இருக்கு… விஞ்ஞானிகளும், பொறியியாளர்களும் இங்கு அரசாளவில்லை.. ஒழுங்கா ஓட்டு போடுங்கய்யா… தட்டிக் கேளுங்க ஆள்பவரை…. விஞ்ஞானிகளும் பொறியியாளரும் தயார்…..

  12. Avatar
    punai peyaril says:

    உதயகுமார், அந்த ஊர்மக்கள் தான் நிதி தருகிறார் என்க்கிறார். அமெரிக்காவில் இருக்கிறதா வாஷிங்கட்ன் டி.சி இல்லை கூடங்குளத்திற்கு பக்கத்தில் இருக்கிறது. அதுவும் கிறிஸ்துவர்கள் மிக முனைப்புடன் இவருக்கு உதவுவது கண்கூடு…

  13. Avatar
    ஜெயபாரதன் says:

    The wealthy anti-nuke rebels are pro-American pro-catholic & anti_Russian groups. They are pumping dollar money this time to oppose Kudungulam. The poor MeenavarkaL do not have this kind of money to organize 20,000 people to walk through the street, travel on several trucks & sleep on the road with empty stomach & without income.

    The Dancing Queen of Tamil Nadu has been acting for most of her life for money. Why does she care for the economic suicide of Tamil as long as she wins the election.

    What vision has she to run a great province with wisdom & direction ?

    S. Jayabarathan.

  14. Avatar
    punai peyaril says:

    The Dancing Queen of Tamil Nadu —இங்கே தான் நீங்களும் வழுக்குகிறீர்கள்… நமக்கு பிடிக்குதோ இல்லையோ அவர் தற்போது தமிழகத்தின் முதல்வர். தனி மனித துவேஷம், தாக்குதல் இன்றி அறிவார்ந்த கருத்து மட்டுமே யாரையும் யோசிக்க வைக்கும். ஜெயபாரதன், நீங்களுமா…?

  15. Avatar
    punai peyaril says:

    அந்தோணி, பெருமாபோருக்கு வீடு மும்பை அணு உலை அருகில் தான். கல்பாக்கம் வெடித்தால் ஜெ, கரு, ரஜினி, கமல், கொலவெறி த்னூஷ், எல்லோரும் தான் காணாமல் போவார்கள். கூடங்குளத்தில் மட்டும் மக்கள் இல்லை. இப்போதைய குற்றச்சாட்டே அந்தோணிகளுக்கு இதை வரவிடாமல் தடுக்கும் அதீத ஆர்வம் பற்றியே… தினமும் பிரியாணியும், மாத சம்பளமும் கொடுத்து நடத்தப்படுவது மக்கள் போராட்டம் அல்ல… நிச்சயம் அங்கு அணு உலை ஓடும்…

  16. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    அன்புள்ள ஜெயபாரதன்,

    ஒரு பிராந்திய மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக போராடுவதை “அசுரப்படை”, “அநாகரீகம்” என்றெல்லாம் விளித்து வர்ணிப்பது கொச்சைத்தனமானது.

    டாக்டர் புகழேந்தியோ விமர்சகர் ஞாநி-யோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர், ஆனாலும் பொதுவாழ்வில் அவர்களது நேர்மை ஐயப்பாட்டுக்குரியதல்ல என்றே நம்புகிறேன். உங்களது ‘ஆறாவது விரல்’ குற்றச்சாட்டு தவிர மற்ற குற்றச்சாட்டுகள் சற்று வலுவற்றவை போலவே தெரிகிறது. மேலும் விமான/ரயில்/கப்பல்/தொழிற்சாலை விபத்துக்களால் ஏற்படும் பாதிப்பும் அணு உலை விபத்தால் (ஏற்படும் கதிரியக்கத்தால்) விளையும் பாதிப்பும் ஒன்றேதான் என்று சொல்கிறீர்களா ?

    ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு தரப்பும் வலுவாகவே இருக்கிறது. ஆயினும் அணு உலையை எதிர்ப்போரின் தரப்பில் வைக்கப்படும் பின்வரும் வாதங்களுக்கும் இன்றுவரை ஒப்புக்கொள்ளும் அளவில் அரசு தரப்பில் இருந்து (மட்டுமல்ல, ஆதரிப்போர் தரப்பிலிருந்தும) எந்த விளக்கமோ வாதமோ வரவில்லை.

    ஒன்று :

    இந்தியாவில் மின்பரிமாற்ற இழப்பு (transmission loss) மத்திய அரசின் அறிக்கை படியே 30%. (உண்மை நிலவரம் அதிகமாகவே இருக்கும் என்பது என் ஊகம்) பெரும்பாலான நாடுகளில் இது 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாகவும் (சீனாவில் 8%) சொல்கிறார்கள். இவ்விழப்பை சர்வதேச அளவுக்கு குறைத்தாலே கிட்டத்தட்ட 30 GW-க்கும் மேலாகவே மின்சாரம் சேமிக்க இயலும் என்றும் தெரிகிறது.

    இந்திய அரசு நிறுவனமான மத்திய மின்சார ஆணையத்தின் (Central Electricity Authority) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2010-11-க்கான ஒட்டுமொத்த இந்திய தேவை 122,287 MW. (122 GW) இது peak demand என்று அழைக்கப்படும் உச்ச தேவை. உற்பத்தியானது 110,256 MW. (110 GW) பற்றாக்குறை 12,031 MW.. (12 GW) [ இதுவே, 2011-12-ல் தேவை 136 GW ஆகவும், உற்பத்தி 119 GW ஆகவும் பற்றாக்குறை 17.5 GW ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது)

    நாம் இந்த மின்னிழப்பை பாதியாக குறைத்திருந்தாலே (15%) இடைவெளியை ஈடுகட்டியிருந்திருக்க இயலும் (அதாவது சேமிக்க இயலும் என்று சொல்லப்படும் 30 GW-ல் பாதியை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால்.) 2011-12-லும் கூட கிட்டத்தட்ட இதேதான் நிலைமை. தேவை மற்றும் உற்பத்தி உயர்வு தற்போதைய சராசரி அளவான 8% என்று வைத்துக்கொண்டால்கூட , )

    இதற்கான தொழில்நுட்பத்துக்காகும் செலவும் காலமும் அணு உலைகளுக்கான செலவைவிட குறைவாகவே இருக்கும் (என்பதும் எனது ஊகம்)

    ஆனால் அரசு என்ன சொல்கிறது ? இந்த இழப்பையே இந்த ஆண்டுதான் 22%-க்கே குறைக்க ஆவன செய்யப்போகிறதாம். இதை 16% ஆக குறைக்க 2021-22-ல்தான் திட்டமிட்டுள்ளதாம். இழப்பை 10 சதம் குறைக்க 10 ஆண்டுகள். ஆஹா … மக்கள் நலம் நாடும் அரசு.

    சிறு கணக்கு போட்டுப்பார்த்தேன். அரசு அறிக்கைபடியே, தேவையும் உற்பத்தியும் ஆண்டுதோறும் இதே 8% அளவில் உயர்ந்துகொண்டே போனால், 2019-20-ல்தான் பற்றாக்குறையானது, மின்னிழப்பை குறைப்பதன்மூலம் சேமிக்க இயலும் 30 GW-ஐவிட அதிகமாக இருக்கிறது. அதுவரை பற்றாக்குறை 30 GW-ஐவிட குறைவுதான். இதையே தேவை மற்றும் உற்பத்தி உயர்வானது 15% என்று கொண்டால் (கிட்டத்தட்ட இப்போதிருப்பதுபோல இரண்டு மடங்கு) 2015-16-லேயே பற்றாக்குறை 30 GW-ஐவிட அதிகமாகிப்போகிறது.

    இதன்மூலம் தெரிவது என்ன ? மின்னிழப்பை கிட்டத்தட்ட 10% அளவுக்கு குறைப்பதன் மூலமாக மிச்சப்படும் மின்சாரமே கிட்டத்தட்ட இன்னும் நான்கிலிருந்து எட்டாண்டுகள் வரை பற்றாக்குறையை ஈடுகட்ட போதுமானது.

    இரண்டு :

    மாற்று எரிபொருளுக்கான நிதி ஒதுக்கீடு ஒப்பீட்டளவில் மிக மிக குறைவே. மேலும் அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் ஒப்பீட்டளவில் மிக மிக குறைவான சதவீதமே. 2010-ல் உற்பத்தியான 110 GW-ல் நாடு முழுதுமுள்ள 20 அணு உலைகளிலிருந்து பெற்ற மொத்த மின்சாரம் வெறும் 4.78 GW (4,780 MW). கிட்டத்தட்ட 4 சதவிகிதம் மட்டுமே.

    இந்த 4 சதவிகித மின்சாரத்திற்கு இதுவரை ஆன செலவுகள் எத்தனை ஆயிரம் கோடிகள் ?

    NPCIL-ஐ மேற்கோள் காட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியொன்றில் (Oct -11-2010) மைய அரசு 2032-ல் 63 GW (63000 MW) அணு மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் இது கூட 2032 வாக்கில் தேவைப்படும் 600 GW-க்கும் மேலான மின் தேவையில் (ஆண்டுதோறும் 8% தேவை உயர்வு என்ற கணக்கில்) கிட்டத்தட்ட 10% மட்டுமே. ஒருவேளை இந்த மின் தேவை அப்போது 300 GW-க்குள் இருந்தால் மட்டுமே இது கிட்டத்தட்ட 20%-க்கும் மேலாக இருக்கும்.

    ஆனால், இதைவிட குறைவான செலவில் இப்போதே, அணுமின்சாரத்தைவிட அதிகமாக (5%) காற்றாலைகளும் சூரியசக்தியும் தருவதாக குறிப்பிட்டுள்ளார் ஞாநி. (ஆதாரம், அவரது http://www.gnani.net இணைய தளத்தில் உள்ள “தயவுசெய்து பிடிவாதமாக இருங்கள் – ஜெயலலிதாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்” கட்டுரை)

    மூன்று :

    மையப்படுத்தப்பட்ட மின்னுற்பத்தி ஒரு பக்கம் இருக்க, ஏன் பிராந்திய அளவில் சிறு அளவில் மாற்று சக்தி மூலம் மின்னுற்பத்தி செய்ய முனையக்கூடாது ? ஒரு குறிப்பிட்ட நகரத்தின்/தாலுகாவின்/பஞ்சாயத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு 5 முதல் 10 MW மின்னுற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்கக்கூடாது ? சொல்லப்போனால் பிராந்திய அளவில் என்பதால் மின்னிழப்பும் மிக மிக குறைவாகவே இருக்கும் சாத்தியமும் உள்ளதே ?

    மின்னுற்பத்திக்கு செலவிடும் தொகையில் சிறு சதவிகிதம் மாற்று சக்தி பக்கமும் கொஞ்சம் திருப்பலாமே, ஏன் இந்த பிடிவாதமான பாராமுகம், கண்கட்டிவிடப்பட்ட குதிரைபோல ?

    நான்கு :

    இது எல்லாவற்றையும்விட இறுதியாக மிக முக்கியமான விஷயம். விபத்து நேர்ந்தால் அதன் பின்விளைவுகளை எப்படி சமாளிப்போம் ? எல்லாம் பாதுகாப்போடு இயங்கும், விபத்தே ஏற்படாது என்றெல்லாம் ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்கலாம். இதுவரை விபத்தே நிகழவில்லை (நிஜமாகவேவா ?) என்பதாலேயே இனி எதிர்காலத்திலும் நிகழாது என்பது அபத்த ஊகம் மட்டுமே. (எல்லா எச்சரிக்கைகளையும் மீறி நிகழ்வதால்தானே அது விபத்து எனப்படுகிறது) நிதர்சனத்தில் ?

    இங்குதான் உங்களதும் மற்ற அனைத்து அணுமின் ஆதரவாளர்களும் சொல்லும் ரயில்/விமான/கப்பல் விபத்து ஒப்பீடு வருகிறது.

    ஒரு ரயில்/விமான/கப்பல் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பும் பொருளிழப்பும் (அது 9/11 போலல்லாமல் இருக்கும்வரை) கட்டுக்குள்ளேயே இருக்கும். கால தூரம் தாண்டி பரவுவதும் இல்லை. ஆனால் கதிர்வீச்சால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அணு உலைகளில் பணியாற்றிய உங்களுக்குத்தெரியாததல்ல.

    அதைவிட முக்கியமான ஒன்று : விபத்துக்கான காப்பீடு இந்த அணு உலைகளை நம் தலையில் கட்டிய அயல்நாட்டு நிறுவனங்களின் பொறுப்பல்ல, நமது அரசின் பொறுப்பு மட்டுமே. இது அரசியல் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் அதுதான் நமக்கு மிகப்பெரிய சவாலே. போபால் விபத்துக்குப்பின் யூனியன் கார்பைடு சேர்மன் வாரன் ஆண்டர்சன்-னை அரசு பாதுகாப்போடு அவரது சொந்த தேசத்துக்கு அனுப்பிவைத்த மகத்தான் முன்னுதாரணம் நம்முன் உள்ளது. இப்படிப்பட்ட அரசு, ஒருவேளை அணு உலை விபத்து நேர்ந்தால் என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள் ? கிராமங்களை அழித்து நவீன நாகரிக நகரங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்திய மைய / மாநில அரசுகள் கூடங்குளம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு என்ன செய்துவிடும் என்று நாம் எதிர்பார்க்க இயலும் ?

    இறுதியாக …. இதோ புயலால் தாக்குண்ட கடலூரே சின்னாபின்னமாகிக்கிடக்கிறது. முந்திரி / பலா விவசாயம் பாழாய்ப்போனது. மின்சாரம் கொடுக்க இன்னும் ஒரு மாதம் ஆகுமாம். புயலுக்கே இப்படி என்றால் ?

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

  17. Avatar
    ஜெயபாரதன் says:

    சி. ஜெயபாரதன் ✆

    மதிப்புக்குரிய இராமகி ஐயா,

    உங்கள் இந்தியா டுடே மடல் போல் நிரூபிக்கப் படாத மடல்கள் பல திண்ணையில் ஞாநி, காலஞ் சென்ற அசுரன், டாக்டர் புகழேந்தி, உதயக் குமார் கல்பாக்கத்தில் நிகழும் புற்று நோய்களைப் பற்றி எழுதி வந்திருக்கிறார்.

    கதிரடியால் புற்று நோய் வரலாம் என்பது வேறு, கல்பாக்கத்தில் புற்று நோயில் மடிவோர் அணு உலைக் கதிரடியால் சாகிறார் என்பது வேறு. உங்கள் மடல்களைக் கல்பாக்க விஞ்ஞான அறிஞருக்குச் சரிபார்க்க அனுப்பி இருக்கிறேன்.

    கல்பாக்க அணுத்துறைக் கூடத்தில் என்னைப் போல் பல ஆயிரம் பேர் ஊழியம் செய்தார் / செய்து வருகிறார். கல்பாக்கக் காலனியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் 40 வருடங்களாய் வசிக்கிறார்.

    1. உங்கள் இந்தியா டுடே செய்தி பார்த்து, அஞ்சி எத்தனை பேர் ஊரை விட்டு, வேலையை விட்டு ஓடுகிறார் என்று பாருங்கள். கேளுங்கள்.

    2. கல்பாக்கப் பகுதியில் புற்று நோய் கண்டு இறந்தவர் கதிரடி பட்டு இறந்தார் என்று டாக்டர் புகழேந்தி ஒருவரைத் தவிர வேறு யாரும் இதுவரைப் புகார் செய்ய வில்லை.

    கல்பாக்கத்தில் உள்ள மருத்துவ பெரிய மனையில் பல டாக்டர்கள் பணிபுரிந்து வருகிறார். அவரிடம் விளக்கம் கேளுங்கள்.

    3. டாக்டர் புகழேந்தியும், அவரது குடும்பமும் அதே நீரை அருந்தி அதே காற்றைச் சுவாசித்து, உண்டு, உறங்கி 20 ஆண்டுகளாய்ப் புற்று நோயிக்கு அஞ்சாமல் எப்படி வாழ்கிறார் என்று கேளுங்கள்.

    4. டாக்டர் புகழேந்தி ஆறாவது விரல் கல்பாக்க நபருக்கு முளைக்குது என்று பரப்புவதை இந்தியா டுடே ஏன் வெளியாக்க வில்லை.

    5. இதுவரைக் கல்பாக்கத்தில் நேர்ந்த ஆறாவது விரல் முளைப்பு, புற்று நோய் மரிப்பு கதிரடியால் விளைந்தவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப் படாதவை.

    6. அணுமின் உலைகளுக்கு அருகில் வாழ்வோர் கதிரடியால் புற்று நோய் வந்து மடிகிறார் என்பது உலகில் அணுமின் உலையுள்ள எந்த நாட்டிலும் கூறப்பட வில்லை. 30 நாடுகளில் 430 அணுமின் உலைகள் இன்னும் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.

    7. அகில நாட்டு அணுத்துறை ஆணையகம், உலக அணுவியல் குழுவகம் (IAEA & WNA) (International Atomic Energy Agency and World Nuclear Association) இரண்டும் இதுவரை அவ்விதம் அறிவித்ததில்லை.

    http://www-ns.iaea.org/home/nis.asp?s=2&l=16

    International Nuclear Radiation Events Watch Dog

    IAEA International Infra-structure for Radiation Safety

    1. http://www-ns.iaea.org/tech-areas/safety-infrastructure/default.asp?s=0&l=94

    2. http://www-ns.iaea.org/tech-areas/operational-safety/default.asp?s=2&l=12#safety_culture

    3. http://www-ns.iaea.org/tech-areas/operational-safety/default.asp?s=2&l=12#osart

    அன்புடன்
    ஜெயபாரதன்

    ++++++++++++++++++

  18. Avatar
    ஜெயபாரதன் says:

    மின்வெட்டில் சாகும் மக்களை காக்க கூடங்குள ஆலையை திறக்க கோரிக்கை

    தூத்துக்குடி:
    “”முதல்வர் ஜெ.,நினைத்தால், கூடங்குளத்தில் மின்உற்பத்தியை உடனடியாக துவங்கிவிடலாம்”என, தூத்துக்குடி உண்ணாவிரதத்தில், அணுமின்நிலைய ஆதரவாளர்கள் பேசினர். கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தியை உடனே துவங்க வலியுறுத்தி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின்உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டி சார்பில், தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன், உண்ணாவிரதம் நடந்தது. சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமை வகித்தார். தேவர் பேரவை தலைவர் சேதுராமன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன், யாதவர் பேரவை தலைவர் காந்தையா, பார்கவ குல சங்க தலைவர் ராஜன், அணுசக்தி ஆராய்ச்சியாளர் பெரியசாமி, சமுதாய தலைவர்கள், அணுஉலை ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    மக்களை திசைதிருப்ப முயற்சி: இதில், சந்திரன் ஜெயபால் பேசியதாவது: முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகஉள்ளது. அதனால் ஆபத்துஎன, கேரளமுதல்வர் உம்மன்சாண்டி கூறுகிறார். அதுபோல, கூடங்குளம் அணுமின்நிலையத்தால் பேராபத்து எனக்கூறி மக்களை திசைதிருப்ப இங்குள்ள உம்மன்சாண்டி நினைக்கிறார். மக்களுக்கு மின்சாரம் மிக அவசியம். ஆனால், இந்த அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோர், மக்களை இருண்ட காலத்திற்கு அழைத்துச்செல்கின்றனர்.

    ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒருபகுதிமக்களின் அச்சம் தீரும்வரை, இங்கு அணுமின் உற்பத்தியை துவங்கக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.ஆனால், இந்த அணுமின்நிலையத்தில் மின்உற்பத்தி துவங்கப்படுமா? என தற்போது பெரும்பாலான மக்களிடையே தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மீண்டும் சட்டசபையைக்கூடி, மக்கள் அச்சம் தீர்ந்துவிட்டதால், இந்த அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றவேண்டும். முதல்வர் ஜெ.,நினைத்தால் இந்த அணுமின்நிலையத்தில் உடனடியாக மின்உற்பத்தியை துவங்கிவிடலாம். அவ்வாறே பொதுமக்களும் கருதுகின்றனர். அதை அவர் உடனடியாக செய்யவேண்டும். ஏனெனில், தொழில்வளர்ச்சி, விவசாயம், எதிர்கால சந்ததியினருக்கு மின்சாரம் அவசியம். மின்சாரம் இல்லையென்றால் தமிழகம் இருளில்மூழ்கிவிடும். காமராஜர் ஆட்சிகாலத்தில் கல்பாக்கம் அணுமின்நிலையம், தூத்துக்குடி துறைமுகம் அமைக்கப்பட்டு பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. அன்று அதற்கு கிளம்பிய எதிர்ப்பை பார்த்து அவர் பின்வாங்கியிருந்தால், இந்த அற்புத திட்டங்கள் நமக்கு கிடைத்திருக்காது.
    யாருக்குமே திருமணம் நடக்காது: அணுமின்நிலையம் குறித்த சந்தேகம் என்ற பெயரில் நாட்டின்பாதுகாப்பு, தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளை போராட்டக்குழுவினர் கேட்கின்றனர். அணுமின்நிலையத்தால் எந்தபாதிப்புமில்லை என முன்னாள் ஜனாதிபதி கலாம் கூறியதையும் ஏற்கமறுக்கின்றனர். பிரசவத்தின்போது இறப்போம் என பெண்கள் பயப்பட்டால், இவ்வுலகில் யாருக்குமே திருமணம் நடக்காது. அணுமின்நிலைய எதிர்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து 54 கோடி ரூபாய் வந்தது குறித்த குற்றச்சாட்டை இதுவரை அவர்கள் மறுக்காதது ஏன்? போராட்டக்காரர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, அவர்களிடம் உரியவிசாரணை நடத்தவேண்டும். இந்த
    அணுமின்நிலையத்தில் உற்பத்தியை துவங்க மத்திய,மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், பேசிய அனைவருமே இதே கருத்தை வலியுறுத்தினர்.

    தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தீர்மானம் : கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடுவோரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென அணுஉலை ஆதரவு உண்ணாவிரதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    * கூடங்குளம் அணுமின் உற்பத்தியை தடுத்து, அன்னிய நாட்டு நிதியுதவியுடன்

    4 மாதத்திற்குமேல் போராட்டம் என்ற போர்வையில் அப்பாவிமக்களை பகடைக்காயாக்கி, தூண்டி, நாட்டின்பாதுகாப்பு ரகசியங்களையும், அணுஉலை வரைபடம் மற்றும் செயல்திட்டங்களைக்கேட்டு, இந்தியாவுக்கு அச்சத்தை கொடுப்பவர்களை நாட்டின்பாதுகாப்புகருதி, தேசிய பாதுகாப்புசட்டத்தை பயன்படுத்தி, கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை கோருகிறோம்.

    * கூடங்குளம் பகுதிமக்களின் அடிப்படை வாழ்வாதாரம் உயர மீனவர்களுக்காக புதிய மீன்பிடித்துறைமுகம், மத்திய அரசின்

    நேரடிகட்டுப்பாட்டுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த மீன்வளர்ச்சித்துறை சார்ந்த கல்லூரியும், மக்கள் அனைவரும் பயன்பெற கல்விநிலையங்களும், உயர் தொழில்நுட்ப கல்லூரியும், மருத்துவக்கல்லூரியும் அமைக்க கோருகிறோம்.
    * தென்தமிழகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அனைத்து தொழில் வளர்ச்சிக்கும், மிகுந்த துணைநிற்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 60 சதவீத வேலைவாய்ப்பு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட மத்திய அரசை கோருகிறோம்.
    * அணுசக்தித்துறை முழுக்க முழுக்க பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்நிலையில், கூடங்குளம் அணுமின் உற்பத்தி தாமதத்தால் அணுசக்தியின் ஆக்க வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் பாதுகாப்பு கட்டுப்பாட்டை
    அணுசக்தித்துறை இழந்து நிற்பது போன்ற தோற்றம் மக்களிடையே எழுகின்றது. நாட்டின்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித்திட்டத்தில் முக்கிய பங்காற்றும் அணுசக்திதுறையின் செயல்திறன் கேள்விக்குறியாக போகும்முன், இந்திய ஜனாதிபதி உடனடியாக பார்லி.,யை கூட்டி முடிவெடுக்க கோருகிறோம்.

    *மத்திய, மாநில அரசுகளின் இணக்கமற்ற போக்கே, கூடங்குளம் அணுமின்நிலைய உற்பத்தி தடங்கலுக்கு காரணம் என பாமரர்களும் பேசும்நிலை, தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மக்களின் அச்சமெல்லாம் மின்வெட்டைப்பற்றியதுதான். விவசாயிகள், நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் அனைத்துதரப்பு மக்களும், இளைஞர்களும் அச்சப்படுவது உயிர்பயத்திற்காக அல்ல. மேற்கண்ட தொழில்கள் அனைத்தும் மின்வெட்டால் முடங்கிவிட்டால், அத்தொழில்களின் உற்பத்தி மட்டுமல்ல, அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் குடும்பமும் வருமான இழப்பால் கடன்தொல்லை ஏற்பட்டு மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என நடுங்கிக் கொண்டிருக்கிற மக்களின் அச்சத்தைப்போக்க, மத்திய, மாநில அரசுகள் விட்டுக்கொடுத்து, உருவாக்கப்பட்ட போலி உயிர்பயத்தில் இருக்கிற மக்களையும் மீட்டு, உண்மையான வாழ்க்கை பயத்தில் இருக்கிற அனைத்து மக்களையும் காக்க கோருகிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

  19. Avatar
    punai peyaril says:

    உதயகுமார் வெளிநாட்டில் , குறிப்பிட்ட மதம் & நாடு சேர்ந்தவர்களிடம் வசூல் வேட்டை செய்வதை என்னால் நிரூபிக்க முடியும்… நண்பர்களின் மெயிலை ஃபார்வேர்ட் செய்ய முடியும்… அவர் ஒரு குறிப்பிட்ட குழுவின் கைக்கூலி.. உண்மையான அக்கறையெனில் கல்பாக்கத்திலும் போராடலாம்… அவரது எண்ணம் கூடங்குள முதலீடு நஷ்டமடைய வேண்டும் என்பதே… அரசு தான் முட்டாள்தனம் செய்கிறது.. .அவரை அப்புறப்படுத்த வேண்டும்…

  20. Avatar
    punai peyaril says:

    A for Apple B for boy… if u continue ,for one Alphabet u will say a famous name…. thats the name of the person who is in east coast and raising fund to support udayakumar…

  21. Avatar
    punai peyaril says:

    my view is slightly diff. there is nothing wrong in getting support or money from other like minded people in an open , non violence agitation. till date udaykumar stick to non violence agitation. India should be like USA in handling such issues. it should be open like USA while handling such issues… In USA we all know how effective 911 Emergency ope. works, India should have such an effective police-fire-ambulance co-ordination b4 talking about anything…

  22. Avatar
    punai peyaril says:

    Anti-Nuke culprits –> this is not the way to discuss. if someone has a diff. point of view, u have no rights to call them as culprits. Do you have guts to condemn popular terrorists in this open manner…? , So put you points- we read it, & they are interesting and very useful.. does’nt mean that we all have to accept it.

  23. Avatar
    ஜெயபாரதன் says:

    Dear Friend,

    The cost of building Kudungulaum 1000 MWe twin unit is about 15000 crore Rupees. One day non-production of electricity is loss of minimumum 100,000 dollar revenue to the Govt & tax-payers.
    These anti-nukes will never be convinced by any living scientists nor politicians. Their only aim is to stop it permanently & get it rusted.
    So they are real culprits in my view & they should be put in Jail. This is right direction for the Govt to take at this moment.

    Regards,
    S. Jayabarathan

  24. Avatar
    ஜெயபாரதன் says:

    nandhitha kaapiyan ✆ nandhithak@yahoo.com

    பெருமதிப்புக்குரிய ஐயா அவர்கட்கு

    வணக்கம்

    இன்று நான் கல்பாக்கம் அருகில் உள்ள சதுரங்கப் பட்டணம் என்ற கிராமத்திற்குச் சென்றேன். அங்கு அணு உலையினால் என்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன், எல்லோரும் நலமாக இருக்கின்றனர் என்றனர். அப்பொழுது தங்களைப் பற்றிய பேச்சு வந்தது, அங்கு தங்களுடன் வேலை பார்த்ததாக ஒரு பெரியவர் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார், (என் புத்திக் குறைவினால் அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன்) அவர் தங்களைப் பற்றியும் தங்கள் இரு பெண் மகவுகளைப் பற்றியும் கூறினார், (ஒருவர் பெயர் திருமதி அஜந்தா என்றும் மற்றவர் பெயர் திருமதி சுனந்தா என்றும்) கூறினார். தங்களுடன் தான் வேலை பார்த்ததை தான் பெற்ற பாக்கியமாகக் கூறினார், தங்கள் அன்புள்ளத்தைப் பற்றியும் தங்களின் மென்மையான குணத்தைப் பற்றியும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார், கன தண்ணீர் (Heavy water) பற்றிய விவரங்கள் குறித்துத் தாங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த புலமையைப் பற்றியும் பேசினார், இன்று கல்பாக்கம் அணு உலை நல்ல நிலையில் இருப்பது தங்கள் கைராசி தான் என்றும் கூறினார், எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை, தங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கவும் சொன்னார், அடுத்த முறை போகும் போது அவர் பெயர் அவருடைய விலாசம் முதலியவற்றை வாங்கி அனுப்புகிறேன்.

    தங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற்றதும், தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலின் முன் நிற்கும் சிற்றெரும்பு போல என்னை உணர்ந்தேன், இது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை, இதயத்திலிருந்து பீறிடும் சத்தியமான உணர்வு

    தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வணக்கங்கள்

    என்றும் மாறா அன்புடன்

    நந்திதா

  25. Avatar
    ஜெயபாரதன் says:

    http://en.wikipedia.org/wiki/Kudankulam_Nuclear_Power_Plant (Jan 30, 2012)

    Regarding people’s fears Former Chairman of Atomic Energy Commission of India Dr. M.R. Srinivasan said that one should never compare the Fukushima plant with Kudankulam and added “The Fukushima plant was built on a beachfront, but the Kudankulam was constructed on a solid terrain and that too keeping all the safety aspects in mind. Also, we are not in a tsunami prone area. The plants in Kudankulam have a double contaminant system which can withstand high pressure. At least Rs 14,000 crore has been spent. If we don’t operate the plant immediately, it will affect the economic stability of our country”.

  26. Avatar
    ஜெயபாரதன் says:

    nandhitha kaapiyan ✆ nandhithak@yahoo.com

    to me

    பெருமதிப்புக்குரிய ஐயா

    வணக்கம்

    அணு உலையை எதிர்ப்பவர்கள் மாற்று வழி என்ன சொல்லி இருக்கிறார்கள்?, காற்றாலை ஒரு கனவு, நீர் மூலம் மின்சாரம் என்பது கற்பனை. குடிப்பதற்குக் கூட விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம், தெர்மல் பவர் என்பது உலக வெப்பமயமாக்கலுக்கு உற்ற தோழன், மணல் கொள்ளையினால் ஆறுகள் ஆழமாகி விட்டன, இனிமேல் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் மின் மோட்டார் இல்லாமல் விவசாயம் என்பதை எண்ணிப் பார்க்க முடியாது, இருட்டில் தமிழகத்தைத் தள்ளப் பார்க்கும் இவர்கள் வருங்கால சந்ததியினர் பற்றி எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை, ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கொடுத்தால் கூட்டத்தைக் கூட்ட முடியும். அந்த இழி நிலைக்கு நாடு சென்று விட்டது,

    நாட்டுப் பற்று தான் என்னைச் சதுரங்கப் பட்டணம் செல்லத் தூண்டியது, தங்களின் ஆணித்தரமான வாதங்களைப் படித்துத் தான் நேரில் சென்று பார்த்து விடலாம் என்று எண்ணினேன், இந்த நிலையில் கூடங்குளம் செல்வது கூடாது என்று நண்பர்கள் தடுத்ததால் சதுரங்கப் பட்டணம் சென்றேன்.

    நந்திதா

  27. Avatar
    ஜெயபாரதன் says:

    http://www.dinamalar.com/News_detail.asp?Id=402137

    8 மணிநேர மின்வெட்டால் அம்மிக்கல்,ஆட்டாங்கல்லுக்கு வந்தது மவுசு

    இல்லத்தரசிகள் பயந்து கொண்டே இருந்தது நடந்தே விட்டது. இனிமேல், 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பால், மிக்சி, கிரைண்டர்கள் ஓடாமல், சமையல் பணி பாதிக்கும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் இனிமேல், ஆட்டுரல், அம்மிக்கல் ஆகியவற்றின் துணையை நாட தயாராகி விட்டனர்.

    விஞ்ஞான வளர்ச்சியால், நவீன இயந்திரங்கள் அதிகரித்து, மனிதனின் பணிகளை குறைத்து விட்டது. அதே சமயம், இயந்திர உற்பத்தி அதிகரிப்பால், மனிதனை சோம்பேறி ஆக்கி விட்டது என்பதும் நிதர்சனமான உண்மை.

    வீசியெறியப்பட்ட அம்மி, ஆட்டு உரல்:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடுகள் தோறும் அம்மிக்கல், ஆட்டுரல் இடம் பெற்றிருக்கும். சமையலுக்கு மசாலா பொருட்களை அரைக்க, அம்மிக் கல்லையும், மாவு அரைக்க, ஆட்டு உரல்களையும் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட, கிரைண்டர், மிக்சி வரத்து துவங்கியதும், பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக் கல்லும், ஆட்டுரலும், பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், கணவர்களையும், குழந்தைகளையும், வேலை, பள்ளிக்கு அனுப்பும் இல்லத்தரசிகளுக்கும், மிக்சியும், கிரைண்டரும், பெரும் உபயோகமாக இருந்தது. சமையல் பணியை விரைந்து முடிக்க இவை உதவின.

    மின்வெட்டு ஆபத்து:கடந்த ஆட்சியில் மின்சார தேவைக்கு ஏற்ப, உற்பத்தியை பெருக்காததன் விளைவு, இந்த ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. ஆட்சி மாறியும், மின்தடை நேரம் குறையவில்லை. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம் என இருந்த மின்தடை, தற்போது, 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. அதிகாரப் பூர்வமாகவும் இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு இன்னும் கிராம பகுதிகளில் நிலவுகின்றன.

    மிக்சி, கிரைண்டர் ஓடாது:மின்தடை செய்யப்படும் நேரங்கள், பெரும்பாலும் சமையல் செய்யும் காலை நேரத்திலும், இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் மாலை நேரத்திலும் தான். இதனால், பெண்களுக்கு சமையல் பணிகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மிக்சி, கிரைண்டர் இயங்காததால், இனிமேல் அவர்கள், பழைய முறைப்படி, ஆட்டுக்கல், அம்மிக் கல்லை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    விற்பனைக்கு தயார்:தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து கருப்பு கல்லை வாங்கி வந்து, சாலையோரம் “டெண்ட்’ அமைத்து, அம்மிக்கல், ஆட்டுரல்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    திருவள்ளூர், ஜெ.என்.,சாலையில் ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்யும், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பானம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 27, கூறியதாவது:எனது பரம்பரையே, ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்வது தான். நான், எங்களது கிராமத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை வாங்கி, இங்கு கொண்டு வந்து அம்மிக்கல், ஆட்டு உரல்களை செய்து விற்பனை செய்கிறேன். ஒரு டன் கல், 20 ஆயிரம் ரூபாய். அவற்றை லாரியில் ஏற்றி, இங்கு கொண்டு வர, 4,000 ரூபாய் வரை வாடகை செலுத்துகிறேன்.பின், அவற்றை பல்வேறு அளவுகளில், அம்மிக்கல், ஆட்டு உரல்களாகத் தயாரித்து விற்பனை செய்கிறேன். சில நாட்களில், வியாபாரமே இருக்காது; சில நாட்களில், இரண்டு, மூன்று உரல்கள் விற்பனையாகும்.சராசரியாக நாளொன்றுக்கு, 400 ரூபாய் கிடைக்கிறது. கிரைண்டர், மிக்சி வந்த பின், எங்களது விற்பனை படுத்துவிட்டது. மின்தடை காரணமாக, இனிமேல் அம்மிக் கல், ஆட்டுரல் விற்பனை அதிகரிக்கும்.இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

    அம்மிக்கல் சிறியது 300 ரூபாய் பெரியது 500 ரூபாய் முதல்
    ஆட்டுரல் சிறியது 200 ரூபாய் பெரியது 600 ரூபாய் முதல்

  28. Avatar
    ஜெயபாரதன் says:

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=401401

    கோவை :கோவையில் மின்வெட்டை கண்டித்து, வரும் 10ம் தேதி கறுப்புக்கொடியேற்றி, ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தை, தொழில்அமைப்புகள் நடத்த முடிவுசெய்துள்ளன.

    கோவையில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டினால், தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீரான மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரி, கோவையில் உள்ள 30க்கும் மேற்பட்ட தொழிலமைப்புகள் இணைந்து நேற்று விவாதித்தன.
    கோவையில், எட்டு மணி நேர மின்வெட்டை, ஒரே நேரத்தில், ஒரே சீராக, இடைவிடாது, எட்டு மணி நேரம் அமல்படுத்த வேண்டும்.

    குறிப்பிட்ட பகுதிகளில் வாரத்தில் ஒரு நாளோ, இரு நாளோ சீரான மின்வெட்டை அமல்படுத்தலாம்.அதை தவிர்த்த பகுதிகளில், தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக இயங்க, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என, வலியுறுத்த தொழிலமைப்புகள் முடிவு செய்துள்ளன.

    கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத் தலைவர் கந்தசாமி, டேக்ட் அமைப்பு மாவட்டத் தலைவர் ஜேம்ஸ்,

    டேப்மா சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கூறியதாவது:புதிய அரசு, பதவியேற்று ஆறு மாதங்களில், மின்வெட்டை அகற்றுவதாக அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு மாறாக, தற்போது கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில், 5000க்கும் மேற்பட்ட தொழில்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

    சென்னையில், ஒரு மணி நேரம் மட்டுமே, மின்வெட்டு அமலில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில், பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதை சீராக்க வேண்டும். மின்வெட்டை கண்டித்து இரண்டு முறை, உண்ணாவிரதம் இருக்க, அனுமதி கேட்டோம்; அனுமதி மறுக்கப்பட்டது.

    எனவே, வரும் 10ம்தேதி அனைத்து தொழிற்சாலைகளையும் மூடி, கறுப்புக்கொடி ஏற்றி, தொழிலாளர்களுடன் கறுப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்திபுரம், தமிழ்நாடு ஓட்டல் முன், காலை 10.00 மணிக்கு, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    இதில், மின்வெட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களும், தொழில் அமைப்புகள், தொழில் வர்த்தக அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் பங்கேற்கலாம்.
    இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    கூடவே இவர்கள் கூடங்குள ஆலையையும் எதிர்த்து போராடவேண்டும்.

    – Tamils Against Powercut(TAP)

  29. Avatar
    ஜெயபாரதன் says:

    கோவை: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து கோவையில் 40,000 தொழிற்சாலைகள் வரும் 10ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளன என்று அம்மாவட்ட சிறுதொழில் சங்க (கொடிசியா) தலைவர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

    கோவை கொடிசியா வளாகத்தில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது மாவட்ட சிறுதொழில் சங்க (கொடிசியா) தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

    கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிக்கிறது. கடந்த ஆண்டில் இருந்து இது வரை 5,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. மேலும் 5,000 தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது.

    கடந்த 6 மாதமாக மின் தடை நேரம் அதிகரித்துள்ளது. சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. ஆனால் கோவையில் மட்டும் தினமும் 8 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற பின்பு மின்தடை பிரச்சனை தீர்க்கப்படவில்லை. மின்வெட்டினால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் மாவட்ட அளவில் ரூ. 250 கோடிக்கு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

    தொழிற்சாலைகளை வெகுநேரம் மூடி வைப்பதால் உற்பத்தி குறைவு ஏற்படுகின்றது. இதனால் தொழிற்சாலை நிர்வாகங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. மின்வெட்டு பிரச்சனை குறித்து தமிழக அரசுக்கு பல முறை தெரிவித்தும், மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, மின்தடையை கண்டித்து அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் வரும் 10ம் தேதி கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அன்று கோவை மாவட்டத்தில் உள்ள 40,000 தொழிற்சாலைகள் மூடப்படும். இந்த ஆர்பாட்த்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றார்.

    http://tamil.oneindia.in/news/2012/02/08/business-powercut-40-000-industries-coimbatore-aid0176.html

  30. Avatar
    ஜெயபாரதன் says:

    தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு… வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!
    http://tamil.oneindia.in/news/2012/02/08/tamilnadu-tn-people-struggle-with-more-than-8-hours-aid0136.html

    சென்னை: தலைநகர் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது.

    கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

    திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.

    ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிர, அதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது.

    சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டு என்று சொன்னாலும், அறிவிக்கப்படாமல் கூடுதலாக அரை மணி அல்லது 1 மணிநேரத்துக்கு மின் வெட்டு நிலவுகிறது. எப்போது கேட்டாலும் பராமரிப்பு என காரணம் கூறுகிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.

    8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை…

    கிராமப் புறங்களின் நிலைமைதான் சொல்லத் தரமற்றுப் போயுள்ளது. சில பகுதிகளில் 6 மணி நேரம், சில மாவடங்களில் 8 மணி நேரம், வேலூர் போன்ற வட மாவட்டங்களில் சில நாட்களில் 12 மணி நேரம் கூட மின்வெட்டு நிலவுகிறது.

    பொங்கல் பண்டிகை சமயத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது.

    முன்பெல்லாம் என்னதான் மின் தட்டுப்பாடு இருந்தாலும், மழைக்காலத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது. கடந்த திமுக ஆட்சி முழுவதுமே, மழைக் காலங்களில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் இந்த ஆண்டோ, ‘மழையாவது வெயிலாவது… கட் பண்ணு கரண்டை’ என்கிற ரீதியில் நிலைமை உள்ளது. மழை வெளுத்தெடுத்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூட சென்னையில் 2 மணி நேரமும், பிற பகுதிகளில் 6 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது.

    குறிப்பாக மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்கும் இந்தத் தருணத்தில் மின்சாரம் அடியோடு இல்லாமல், மக்கள் லாந்தர்கள், மெழுகுவர்த்திகள், சிம்னி விளக்குகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டை சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகரம், கிராமம் என்ற பேதமின்றி இந்த 8 மணி நேர மின்வெட்டு இருக்கும்.

    மின்வெட்டு நேரங்கள்:

    காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.

    சில பகுதிகளில் காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9 முதல், 10 என, 8 மணி நேரம்.

    சென்னையில் மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக மின்வெட்டு நீடிக்கும் எனத் தெரிகிறது.

    தொழில்துறை முடங்கும் நிலை

    இந்த மின் வெட்டு காரணமாக தொழில்துறை அடியோடு முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கோவையில் 40000 தொழிற்சாலைகளில் 80 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு தொழில்கள், விசைத் தறிகள் இயக்கம் முடங்கியுள்ளது. ஈரோட்டிலும் நிலைமை மோசமாகியுள்ளது.

    அதேநேரம் பெரும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி மின்சாரத்தை தனி வழியில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது!

    திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டுள்ள 4 புதிய மின் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர 2013 அல்லது 2014 ஆகலாம். அந்தத் திட்டங்கள் வந்தால் மட்டுமே தமிழக மக்களின் இருட்டுக்கு ஓரளவு விடிவு பிறக்கும். அதுவரை?

    மின்வெட்டால் வேலை இழந்தவர்கள், சீரியல் பார்க்க முடியாத குடும்ப தலைவிகள் ஆகியோர் எங்கள் இயக்கத்தில் சேர்ந்து கூடங்குள அணு உலைக்கு எதிராக போராடலாம். அனைவருக்கும் பொழுது போன மாதிரியும் இருக்கும், போராடின மாதிரியும் இருக்கும் – Tamils for Powercut

  31. Avatar
    ஜெயபாரதன் says:

    நெல்லையில் 8 மணிநேர மின்தடை: மின்வாரிய அலுவலகம் முற்றுகை

    http://tamil.oneindia.in/news/2012/02/10/tamilnadu-8-hr-powercut-tirunelveli-people-seige-eboffice-aid0175.html

    நெல்லை: நெல்லையில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் கே.டி.சி. நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    நெல்லையில் அதிகாரப்பூர்வமாக 2 மணிநேரம் மின்வெட்டை மின்சார வாரியம் அறிவித்தது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கடந்த 2 நாட்களாக சுமார் 8 மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரங்களிலும் மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகளால் படிக்க முடியவில்லை என பெற்றோர்கள் தரப்பிலும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு கே.டி.சி. நகர் மக்கள் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் அங்குள்ள அலுவலரிடம் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை தெரிவிக்கும்படி கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பாளை இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே கே.டி.சி. நகர் அனைத்து பகுதிக்கும் ஒரே மாதிரியான மின்வெட்டு அமல்படுத்தப்படும் என மின்வாரிய உயர் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது குறித்து ராகுல் காந்தி ரத்ததான கழக தலைவர் பிரம்மா கூறுகையில், கே.டி.சி. நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மின்தடை ஏற்பட்டது. எப்போது, எத்தனை மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என்பதை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவியுங்கள். அதற்கு தகுந்தாற்போல் நாங்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்வோம். கே.டி.சி. நகர் பகுதியில் ஒரே மாதிரியான மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை என்பதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இனிமேல் இந்த பகுதி முழுவதும் ஒரே மாதிரியான மின்வெட்டு அமல்படுத்தப்படும் என அதிகாரி எங்களிடம் உறுதியளித்துள்ளார். இனியும் இதுபோல் நடந்தால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு துவங்கியுள்ளது. இத்தேர்வுகள் வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையில் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 4 மணி நேரமும், கிராமப்புற பகுதிகளில் 8 மணி நேரமும் மின் தடை ஏற்படுகிறது. இதனை தவிர அவ்வப்போதும் மின் தடை செய்யப்படுகிறது. இந்த தொடர் மின் தடையின் காரணமாக மாவட்டத்தில் செய்முறைத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கடந்த ஆண்டுகளில் மின்வாரியத் துறையிடம் வேண்டுகோள் விடுத்ததன்பேரில் செய்முறைத் தேர்வு, பொது தேர்வுகளின் போது மின்தடை குறைபாடு சரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பெயிலானால் மின்வெட்டு தான் காரணம் என சொல்லி மாணவர்கள் திட்டுவாங்காமல் எஸ்கேப் ஆகிடலாம் அல்லவா? பெயிலாகும் மாணவ கண்மணிகள் இதை நினைவில் கொள்ள வேண்டும்.- Tamils for powercut

  32. Avatar
    ஜெயபாரதன் says:

    கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் – போலீஸ் தடியடி!
    http://tamil.oneindia.in/news/2012/02/11/tamilnadu-protests-against-power-cuts-turns-violent-aid0136.html

    11-riot.jpeg

    கோவை: கோவையில் 8 மணி நேர மின்வெட்டைக் கண்டித்து 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. 3 லட்சம் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    11 மணிநேர மின்வெட்டு

    கோவையில் தினசரி குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல், அதிக பட்சமாக 11 மணிநேரம் வரை மின் தடைநீடிப்பதால் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். மின் தடையைக் கண்டித்து கோவையில் உள்ள 36 தொழில் அமைப்பினர் கூட்டாக இணைந்து வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கோவையில் உள்ள வேலாண்டிபாளையம், ஆவாரம்பாளையம் பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, சின்ன வேடம்பட்டி, சிகோ, அரசூர், மலுமிச்சம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் என்ஜினீயரிங், குறுந்தொழில் கூடங்கள், வார்ப்பட தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சில தொழிற்சாலைகளில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

    இது தவிர கோவையில் உள்ள காட்டூர், பழையூர், இடையர்பாளையம், ஒண்டிப்புதூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் பம்பு, உதிரிபாகங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டு கிடந்தன.

    ஆர்ப்பாட்டம்- கஞ்சித்தொட்டி

    இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 10.30 மணிக்கு கோவை தமிழ்நாடு ஓட்டல் முன்பு தொழில் அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கொடிசியா தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழில் அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி, பலர் கைகளில் கறுப்பு கொடிகள், சிம்னி விளக்குகளை பிடித்தபடி கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் தடையில்லாமல் மின்சாரம் வழங்கு, பாரபட்சம் இல்லாமல் மின்சாரம் வழங்கு, உடலுக்கு தேவை உயிரோட்டம், தொழிலுக்கு தேவை மின்னூட்டம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கஞ்சி தொட்டிகளை திறந்து, தொழிலாளர்களுக்கு இலவச கஞ்சி வழங்கினர்.

    ரூ.250 கோடி உற்பத்தி இழப்பு

    இது குறித்து போராட்டக்குழுவினர் சிலர் கூறுகையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொடிசியா, சிமா, இந்திய தொழில் வர்த்தக சபை, தமிழ்நாடு பம்பு உற்பத்தியாளர் சங்கம், சிஸ்பா, காட்மா, டேக்ட் ஆகிய குறுந்தொழில் சங்கங்கள், கோவை சிறுமின் விசை பம்பு உற்பத்தியாளர் சங்கம், கோவை மாவட்ட வார்ப்பட சங்கம், சிறு வார்ப்பட ஆலை உரிமையாளர் சங்கம், கோப்மா, உள்ளிட்ட 36 தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர்.

    கோவையில் ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ரூ.250 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்றனர்.

    மறியல்- தடியடி

    சில அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்து கிளம்பி, கோவை டவுன் பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னல் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை.

    ஆவேசத்துடன் அவர்கள் கோஷம் போட்டவாறு அங்கிருந்து செல்லாமல் அடம் பிடித்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் நாலா புறமும் கலைந்து ஓடினர்.

    வாகனங்களில் வந்த பலரும் பீதியடைந்து ஓடினார்கள். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண், மற்றும் ஓட்டல் தொழிலாளியான முருகன் ஆகியோர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் காயம் அடைந்த முருகனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயத்துடன் அந்த பெண், அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினார்.

    இதைத் தொடர்ந்து போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய சில தொழிலாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

  33. Avatar
    ஜெயபாரதன் says:

    அறிவிக்கப்படாத மின்வெட்டு- பிளஸ் 2 மாணவர்களின் செய்முறைத் தேர்வு பாதிப்பு

    http://tamil.oneindia.in/news/2012/02/11/tamilnadu-power-cut-hits-schools-during-exam-time-aid0216.html

    கோவை: அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப் படாத தொடர் மின்வெட்டால் சென்னை தவிர்த்த அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கு வதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 8-ந் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கின. பிப்ரவரி 21-ந் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் செய்முறைத் தேர்வுகளை மின்சாரம் இன்றி எப்படி நடத்துவது என அதிகாரிகளும் ஆசிரியர்களும் கை பிசைந்த நிலையில் தவித்து வருகின்றனர்.

    பெரும்பாலான அரசு பள்ளிகளில் யூபிஎஸ்ஸூம் இல்லாததால் எப்படி தேர்வுகளை நடத்துவது என குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    இதனால் மின்வெட்டு நேரத்தை தேர்வு நேரத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைக்குமாறு அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலகங்களில் பள்ளி நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

    தேர்வுக்குத் தயாராவதற்குமே மின்சாரம் இல்லாதது பெரும் துயரமாக இருக்கிறது என்பது மாணவர்களின் கருத்து. நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியுமா? முடியாதா? என்ற குழப்பத்தில் இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

    பெரும்பாலான பள்ளி மாணவர்களின் வீடுகளில் கம்ப்யூட்டர்கள் இல்லாத நிலையில் கம்ப்யூட்டர் அறிவியல் போன்ற செய்முறைத் தேர்வுகளுக்கு பள்ளிக் கூடங்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. மின்வெட்டு அமலில் இருப்பதால் கம்ப்யூட்டர் அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு எப்படி தயாராவது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்கின்றனர் மாணவர்கள்.

    “மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல.. மற்ற வகுப்பு மாணவர்களும் கம்ப்யூட்டர் மற்றும் மல்டிமீடியா போன்ற வகுப்புகளை கற்பதில் பிரச்சனை உள்ளது. பள்ளிக் கூடங்கள் இயங்கும் நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதால் அவர்களால் பாடம் படிக்க இயலவில்லை என்கிறார் பாப்பநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ.பள்ளி முதல்வர் எஸ். அய்யாசாமி.

    8 முதல் 11 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும் மின்வெட்டால் தங்களது குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிகளுக்கு அனுப்ப இயலவில்லை என்பது பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.

    தங்கள் இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் இப்படியொரு மோசமான மின்வெட்டைச் சந்தித்ததில்லை என பல பள்ளிகள், குறிப்பாக அரசுப் பள்ளிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    ‘அட பாழாப் போன கரண்டு மக்களுக்குதான் இல்லன்னு ஆகிப்போச்சு… இந்த பசங்களோட பரீட்சைக்காவது எந்த நேரத்தில் இருக்கும்னு சொல்லித் தொலைங்கய்யா… அந்த நேரத்தில் பிராக்டிகலை வைத்துக் கொள்கிறோம்,’ என்று கடுப்புடன் கூறும் நிலைக்கு பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன!

    படிக்காமல் போனால் ஒரு தலைமுறை தான் பாழாகும். அணு உலை வந்தால் ஏழு தலைமுறை பாழாகும். இந்த தலைமுறையை அழித்தேனும் அடுத்த தலைமுறையை காப்போம்.- Tamils for powercut

  34. Avatar
    ஜெயபாரதன் says:

    வாழ்வை பாழாக்கும் மின்வெட்டால் வேலை நேரம் அதிகரிப்பு

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=404163

    அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், ஆட்டோ மொபைல், டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் கம்பெனி, இரும்பு கம்பெனி என, 1,500 கம்பெனிகள் இயங்குகின்றன. அதுமட்டுமின்றி 1,600 கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் இயங்குகின்றன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

    வெளிமாநிலங்களிலிருந்து இங்கு வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். தொழில் நுட்ப நிறுவனங்களில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, குறுந்தொழில் கம்பெனிகள் ஈடுபடுவோர் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோருமாக, 15 கி.மீ., சுற்றளவு உள்ள அம்பத்தூர் எஸ்டேட்டில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில், மின்சார தட்டுப்பாட்டால் கடும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மின்சார தட்டுப்பாடு
    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காலை, மதியம், மாலை என்ற அளவில் மூன்று ஷிப்டுகளாக இயங்கி வந்த தொழிற்சாலைகள், கடும் மின்சார தட்டுப்பாட்டால் ஒரு ஷிப்டாக குறைந்துள்ளது. மூன்று மடங்கு உற்பத்தி ஒரு மடங்காக குறைந்ததால், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மட்டுமின்றி, தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    உலகின் பல்வேறு நாடுகளுக்கும், உதிரி பாகங்களை உற்பத்தி செய்து அனுப்பும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில், தற்போது உள்ளூர் கம்பெனிகளுக்கு போதுமான உதிரி பாகங்களை அனுப்ப இயலாத நிலை உருவாகியுள்ளது. மின்வெட்டால் அம்பத்தூரில் பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன.

    கட்டுப்படியாகாத ஜெனரேட்டர் கட்டணம்
    மின்தடையால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பல்வேறு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஜெனரேட்டர்களை வாடகைக்கு அமர்த்தி, அதன் மூலம் இடைக்கால மின்சாரம் பெறுகின்றனர்.

    ஜெனரேட்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ஜெனரேட்டர்களை இயக்குபவர்கள், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், நாள் முழுவதும் ஜெனரேட்டர்களுக்கு வாடகை கொடுக்க வேண்டியுள்ளது.

    இதனால், தாங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் உதிரி பாகங்களினால் கிடைக்கும் லாபத்தை விட, ஜெனரேட்டர்களுக்கு கொடுக்கும் வாடகை பணத்தின் அளவு அதிகரிக்கிறது.

    எனவே, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் உதிரி பாகங்களின் உற்பத்தியால் வரும் லாபத்தை ஜெனரேட்டர்களுக்கு வாடகை கொடுத்து விட்டு, தொடர்ந்து தொழில் நடத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    வேலை நேரம் அதிகரிப்பு
    மின்தடை ஏற்படுவதால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக வேலை நடத்த இயலாத சூழ்நிலையில் உள்ளனர். காலை, மதியம், மாலை என்ற கால அளவின் அடிப்படையில் தொழில் செய்பவர்கள், மின்தடையால் முறையை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால், குறிப்பிட்ட கால அளவுக்கு வேலைக்கு வர வேண்டிய தொழிலாளர்கள் அடிக்கடி நேரத்தை மாற்ற வேண்டிய நிலை உள்ளது.

    அழியும் நிலையில் குறுந்தொழில்
    குறுந்தொழில் நிறுவனங்கள் பெரிய கம்பெனிகளில் இருந்து மூலப்பொருட்களை பெற்று, உதிரி பாகங்களை செய்து கொடுத்த இரண்டு மாதங்களுக்கு பின் அதற்கான கட்டணத்தை பெறுகின்றன. ஆனால், தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டால், அம்பத்தூர் தொழிற்பேட்டையில், தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதனால், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்து தர முடிவதில்லை. ஆர்டர்கள் கைவிட்டுப் போகும் போது வட்டிக்கு கடன்கள் வாங்கி தொழில் நடத்துகின்றனர். தொடர் மின்வெட்டால், உற்பத்தி பொருட்களை வழங்க முடியாமல், பல்வேறு குறுந்தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன. கடனுக்கான வட்டி அதிகரிப்பதால் தொடர்ந்து நிறுவனங்களை நடத்த முடியாமல் நிறுவனத்தை மூடுகின்றனர்.

    சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள்
    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வெளிமாவட்டங்களில் இருந்து தொழில் செய்கிறவர்கள் அதிகம். தொடர் மின்வெட்டுப் பிரச்னையால் கடந்தாண்டு 500க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் நட்டத்தை சமாளிக்க முடியாமல் இழுத்து மூடினர். இதனால், அங்கு வேலை பார்த்த தொழிலாளர்கள் திண்டாடி வந்தனர்.
    கம்பெனிகள் இழுத்து மூடப்படுவதால், வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். வேறு வழியின்றி மீண்டும் சொந்த ஊருக்கே செல்கின்றனர். மின்வெட்டு பிரச்னையை தீர்ப்பது மட்டும் தான் இந்த பிரச்னை தீர ஒரே வழி.

    காணாமல் போகும் உற்பத்தி
    ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின் தடையும், பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடையும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிலவுவதால், கைத்தொழில், குறுந்தொழில், சிறுந்தொழில் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் செய்து கொடுக்க வேண்டிய பணிகள் கடுமையான மின்தடையால் அறவே பாதிக்கப்பட்டுள்ளது. டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் உள்ளிட்ட கம்பெனிகளில் 50 சதவீத உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

    அரசு கவனம் செலுத்த வேண்டும்
    அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அய்யப்பன்: அம்பத்தூரில் தினமும் ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை ஏற்படுகிறது. இதனால், கட்டாயம் ஜெனரேட்டர் இயக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி வருகிறோம். தெற்கு ஆசியாவில் மிகப்பெரும் தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் கடுமையாக உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. பெரிய நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவுக்கு ஜெனரேட்டர்களை இயக்கி, மின்வெட்டை சமாளித்து வருகின்றன.
    ஆனால், அம்பத்தூரில் உள்ள குறு மற்றும் சிறு தொழில்கள் பெரும் பிரச்னைகளுக்கு உள்ளாகி வருகிறது. உதிரி பாகங்களை சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுத்தால் தான், பெரிய நிறுவனங்கள் செயல்பட முடியும். கடும் மின்வெட்டினால் இந்நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளது.
    குறுந்தொழில்கள் வணிகத்தின் அடிப்படை. அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் கட்டடம் ஆட்டம் கண்டு விடும். அதுபோலத் தான் தற்போதைய சூழ்நிலை உள்ளது. எனவே, அரசு மின்வெட்டு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.

    கண்டுகொள்ள யாருமே இல்லை
    தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் ஏ.எஸ்.கண்ணன்:மின்வெட்டால் கம்பெனிகள் நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது. கைத்தொழில்கள் செய்வதற்கு குறைந்த அளவு முதலீடு போதும். ஆனால், அதைக் கூட சொந்த செலவில் செய்ய இயலாத ஏழை மக்கள் தங்களால் முடிந்த அளவு கைப்பணத்தை செலவழித்து மற்றவற்றை வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.
    மின்சாரம் மட்டுமே கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்களுக்கு பிரதானம். தினமும் அம்பத்தூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல நேரமாக தொடர்வதால், அவர்களால் கம்பெனிகளை தொடர்ந்து நடத்த முடிவதில்லை.
    வேறு வழியில்லாமல் ஜெனரேட்டர்களை வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இதனால், பெரிய அளவில் நட்டம் ஏற்படுகிறது.
    சிறிய அளவில் நிறுவனம் நடத்தும் முதலீட்டாளர்களுக்கு ஜெனரேட்டர்களுக்கு கொடுக்கும் வாடகை கட்டணம் பெரும் இடியாக விழுகிறது. அதனால், அவர்களுடைய முதலீட்டில் பெரிய சரிவு ஏற்படுகிறது.
    அந்த சரிவை சீர் செய்ய இயலாமல் தள்ளாட்டம் அடைகிறது. இதனால், தொடர்ந்து தொழில் நடத்த இயலாத நிலைக்கு அவர்கள் ஆளாகின்றனர். அம்பத்தூரில் ஒவ்வொரு நாளும் பல குறுந்தொழில் மற்றும் கைத்தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன.

    கழுத்தை நெரிக்கும் கடன்
    தமிழக கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க பொதுச் செயலர் மூர்த்தி: அம்பத்தூரில் கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை நடத்துவோர் பெரிய பணக்காரர்களோ, முதலாளிகளோ அல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அவர்களே முதலாளி; அவர்களே தொழிலாளி. குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் பெரிய தொழிற்சாலைகளுக்கு அச்சாரமாக அமைகிறது.
    இங்கு உற்பத்தி செய்து அனுப்பப்படும் உதிரி பாகங்களை வைத்து பெரிய நிறுவனங்கள், தங்கள் தேவையை பூர்த்தி செய்கின்றன.

    தற்போது அம்பத்தூரில் ஒரு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடையாகவும், பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டாகவும் தொடர்கிறது. இதனால், கடும் உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது.
    தொழில் துவங்குவதற்கு கையில் பணம் இன்றி, தொழில் முனைவோர் பிற இடங்களில் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். பெரிய கம்பெனிகளிடம் இருந்தும் ஜாப் ஆர்டர்களை பெற்று தொழில் செய்து வருகின்றனர்.
    ஜாப் ஆர்டர்களை பெற்ற குறுந்தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் உதிரி உற்பத்திப் பொருட்களை செய்து கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது.
    இதனால், கிடைக்கிற ஜாப் ஆர்டர்களை பெரிய நிறுவனங்கள் திரும்ப பெற்றுக் கொள்கின்றன. குறுந்தொழில்களுக்கு வேலை கிடைக்காமல் கடனில் மூழ்குகின்ற துர்நிலைக்கு ஆளாகின்றன. கடன் கொடுத்தவர்கள் வட்டியும், முதலுமாக திரும்ப கேட்கும் போது குறுந்தொழில் முதலீட்டாளர்களால் கொடுக்க முடிவதில்லை. வாங்கிய கடனுக்கு வட்டி அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
    ஒரு கட்டத்தில் கொடுத்த கடனுக்கான வட்டி முதலீட்டை விட அதிகமாகிறது. அதனால் தொடர்ந்து தொழில் நடத்த முடியாமல் தொழில் முனைவோர் திண்டாடுகின்றனர்.
    வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் கடன் திரும்ப வாங்க முடியாது என்ற நிலை வரும் போது கம்பெனியை இழுத்து மூடி விட்டு, அங்கிருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
    இதனால், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்ற சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.

    – அ.ப.இராசா –

  35. Avatar
    ஜெயபாரதன் says:

    மாணவர்கள் கவலை: லட்சியத்துக்கு வேட்டு வைக்கும் மின்வெட்டு

    http://www.dinamalar.com/News_detail.asp?Id=404785

    கோவை:தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொடர் மின்வெட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு தயார் ஆகி வரும் மாணவ மாணவியருக்கு கவலை அளித்துள்ளது. தேர்வு முடியும் வரையிலாவது இரவு நேர மின்வெட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதமும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரலிலும் நடைபெறவுள்ளன. பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இயற்பியல் செயல்முறை தேர்வுகள் நடத்துவது பள்ளிகளுக்கு பெரும் சவால் ஆக இருந்து வருகிறது. இதனால் மின்வெட்டு இல்லாத நேரத்தில் செய்முறை தேர்வுகளை நடத்துமாறு, பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு இடர்களுக்கு மத்தியில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கத்துடன் மாணவ, மாணவியர் இரவும், பகலும் தீவிரமாக படித்து வருகின்றனர்.

    மாணவ மாணவியரின் முயற்சியை குலைக்கும் விதமாக உள்ளது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு. பகல் பொழுதை பள்ளி மற்றும் டியூஷன் வகுப்புகளில் கழிக்க வேண்டிய நிலையில் உள்ள மாணவ மாணவியர், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில்தான் அமைதியாக தேர்வுக்கு படிக்க முடிகிறது. ஆனால் இரவில் ஏற்படும் மின்தடையால் படிக்க முடியாமல் மாணவ மாணவியர் திணறுகின்றனர். கடந்த சில நாட்களாக இரவில் ஒரு மணி நேரம் விட்டு, ஒரு மணி நேரம் மின் வினியோகம் துண்டிக்கப்படுகிறது.

    கோவை சித்தாபுதூரை சேர்ந்த மாணவி தன்யா கூறுகையில், “”எப்போது கரன்ட் போகும், எப்போது வரும் என தெரியாததால், பாடங்களை திட்டமிட்டு படிக்க முடியவில்லை. தேர்வுகள் முடியும் வரை இரவு மட்டும் கரன்ட் “கட்’ ஆகாமல் இருந்தால் நன்றாக இருக்கும். எங்கள் நலனுக்காக, முதல்வர் இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும்,” என்றார்.

    இப்போதெல்லாம் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய முக்கிய சப்ஜெக்ட் பாடங்களில் “சென்டம்’ பெறுவது சர்வசாதாரணமாகி விட்டது. ஆகவே, மொழிப் பாடங்கள் உட்பட மொத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால்தான் சிறந்த உயர்கல்வியை தேர்வு செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது. பிள்ளைகளின் லட்சியம் நிறைவேற பல வீடுகளில் கேபிள் “டிவி’ இணைப்பை பெற்றோர் துண்டித்து விட்டனர். பின்னிரவு வரை காத்திருந்து பிள்ளைகளுக்கு டீ வைத்து கொடுப்பது, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது போன்ற செயல்களில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகளிலும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஆனால், மாணவர்களின் லட்சியத்துக்கு தடை போடும் விதமாக மின்சார வெட்டு இருப்பதால், அதிக மதிப்பெண் பெற முடியாமல் போய் விடுமோ என்ற கவலை, பயத்தில் மாணவ மாணவியர் மூழ்கியுள்ளனர். மாணவ மாணவியரின் மன உளைச்சலை போக்கும் விதமாக, தேர்வு முடியும் வரையாவது இரவு நேர மின்வெட்டுக்கு தடை விதிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  36. Avatar
    ஜெயபாரதன் says:

    கடும் மின்வெட்டைக் கண்டித்து சிவகாசியில் 2000 தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்
    http://tamil.oneindia.in/news/2012/02/14/tamilnadu-power-cut-industrial-units-strike-aid0091.html

    சிவகாசி: தமிழக அரசின் பல மணி நேர மின்வெட்டைக் கண்டித்து சிவகாசியில் 2000க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்று மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    8 மணி நேர மின்வெட்டு என்ற தமிழக அரசின் அறிவிப்பால் தமிழக மக்கள் குறிப்பாக சென்னையைத் தவிர்த்த தமிழக மக்கள் மிகப் பெரும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் மூழ்கியுள்ளனர். எங்குமே கரண்ட்டைக் காண முடியவில்லை. எங்கு போனாலும் இருட்டாக உள்ளது. இப்படி ஒரு அவல நிலை தமிழகத்தில் இதுவரை ஏற்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மிகக் கேவலமாக உள்ளது.

    தொழில்துறையினர் நிலைமைதான் மிகக் கொடுமையாக மாறியுள்ளது. எந்தத் தொழிலையும் மேற்கொள்ள முடியாமல் தொழில்துறையினர் முற்றிலும் முடங்கிப் போயுள்ளனர். ஒட்டுமொத்த மாநில வளர்ச்சியும் ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது.

    தொழிற்சாலைகள் இயங்காததால் அதில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மாணவர்கள் படிக்க முடியாமல் திணறுகின்றனர். வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் போன்றவற்றை இயக்க முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

    தொழில் நகரங்கள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. தென்னிந்திய மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், மின் தடையால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.

    திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. விசைத்தறி மற்றும் நூற்பாலைகள் இயங்கவில்லை. மின்வெட்டை கண்டித்து மக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர்.

    இந்த நிலையில் குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியிலும் தொழில்துறை கடும் அடியை சந்தித்து வருகிறது. இங்கு, ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அச்சகங்கள், பாலி பிரின்டிங், கட்டிங், ஸ்கோரிங் தொழில்கள் மின்தடையால் தற்போது ஸ்தம்பித்து விட்டன. இங்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள், வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    பகலில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என்று பல நிறுவனங்கள் தங்கள் வேலை நேரத்தை இரவுக்கு மாற்றின. ஆனால் தற்போது இரவிலும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொடர் மின்வெட்டை கண்டித்து சிவகாசி சிறு, குறு தொழில் கூட்டமைப்பினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    பாலிதீன் பை தயாரிக்கும் நிறுவனங்கள், அச்சகங்கள் என 2000க்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் நேற்று காலை 10 மணிக்கு சிவகாசி – திருத்தங்கல் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது மின்வாரியத்தை கண்டித்து கடுமையான கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  37. Avatar
    ஜெயபாரதன் says:

    எங்கெங்கும் இல்லை கரண்ட்-தொழிற்சாலைகள் முடக்கம்: எங்கு பார்த்தாலும் போராட்டம்!

    http://tamil.oneindia.in/news/2012/02/15/tamilnadu-agitations-erupt-over-tamil-nadu-as-power-cut-aid0091.html

    சென்னை: சென்னையைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கடும் மின்வெட்டால் தொழிற்சாலைகள் கிட்டத்தட்ட முழுமையாக ஸ்தம்பித்துப் போயுள்ளன. அனைத்து வகையான தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. மக்களும், தொழிலாளர்களும் சாலைகளுக்கு வந்து போராடுவது கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் – சென்னை மற்றும் புறநகர்களைத் தவிர்த்து- பல மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 8 மணி நேரம் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் அதையும் தாண்டி மின்தடை அமலில் உள்ளது.

    இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், மக்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

    மிக்ஸியைப் போட முடியவில்லை, கிரைண்டரைப் பயன்படுத்த முடியவில்லை, பேன் ஓடவில்லை, தொழிற்சாலைகள் இயங்கவில்லை என எங்கு பார்த்தாலும் ஒரே குமுறலாக உள்ளது. மாணவர்கள் குறிப்பாக பத்து மற்றும் பிளஸ்டூ படித்து வரும் மாணவர்களின் நிலை பெரும் கவலை தருவதாக உள்ளது.

    இந்த தொடர் மின்வெட்டைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அத்தனை மாவட்டங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    திருப்பூர் மாவட்டத்தில், 300 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில், பாத்திரங்கள் உற்பத்தி செய்து, விற்பனைக்காக, தமிழகம் தவிர வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இத்தொழிலை நம்பி, 7,000 தொழிலாளர்கள் உள்ளனர். நாளொன்றுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு, பாத்திரங்கள் உற்பத்தியாகின்றன.

    பாத்திரங்களை இணைப்பதற்கான வெல்டிங், பாத்திரங்களை வடிவமைக்க, பாலிஷ் செய்ய, உற்பத்தி செய்த பாத்திரத்தில் டிசைன் செய்ய, என, அனைத்து பணிகளுக்கும், மின்சாரம் அவசியம்.

    தற்போதைய தொடர் மின்வெட்டால் இவை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பாத்திர உற்பத்தி 10 சதவீதம் மட்டுமே நடக்கிறது. தொழில் நடத்த முடியாமல் பலர், பட்டறையை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு வேலையில்லா நிலை ஏற்பட்டுள்ளது.

    மின்வெட்டை கண்டித்தும், தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரியும், பாத்திர உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், தொழிற்சங்கத்தினர் அடங்கிய கூட்டமைப்பினர், நேற்று, பாத்திர உற்பத்தி நிறுத்தம், கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

    ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இங்கு பிடிக்கப்படும், நண்டு, கனவாய், இறால், வாவல் போன்ற மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மற்ற வகை மீன்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

    வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் மீன்கள், ஐஸ் மூலம் பதப்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. தொடர் மின்தடையால், முழுமையாக ஐஸ் தயாரிக்க முடிவதில்லை. ஜெனரேட்டர் இயக்கினால் அதிக செலவாவதால், ஐஸ் கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

    ஐஸ் இல்லாததால், மீன்கள் பதப்படுத்த முடியாமல் அழுகி வீணாகின்றன. தினமும் 70 முதல் 80 டன் மீன்கள் அனுப்பப்பட்டன. தற்போது 40 முதல் 50 டன் மட்டுமே அனுப்பப்படுகின்றன.

    தமிழகத்தில் தொடர் மின்வெட்டால், சரக்கு லாரி போக்குவரத்து தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மதுரை லாரிஉரிமையாளர் சங்கத்தினர் குமுறுகின்றனர். மின்வெட்டால் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகளில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், லாரி மூலம் கொண்டு வரப்படவில்லை.

    இதனாலும், மின்வெட்டாலும், அனைத்து தொழிற்சாலைகளும் மூடும் அபாயம் உள்ளது. சரக்கு போக்குவரத்தில் 50 சதவீதம், தொழிற்சாலைகளை நம்பி உள்ளது. பொருட்களின் உற்பத்தி குறைவால், லாரி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மீதான கடனுக்கு, முறையான தவணை தொகைகளை கட்ட இயலவில்லை. பொருளாதார அடிப்படையிலும் தவிக்கிறோம் என்கிறார்கள் அவர்கள்.

    ராஜபாளையம் சத்திரப்பட்டி பகுதிகளில் பேண்டேஜ் துணி தொழிலில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாக, சத்திரப்பட்டியில் தினம் எட்டு முதல் பத்து மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. தொழிலாளர்கள் வேலை இல்லாமலும், குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமலும் உற்பத்தியாளர்கள் சிரமப்படுகின்றனர்.

    நேற்று ஓசூர் பகுதியில் அனைத்துத் தொழிற்சாலைகளையும் மூடி தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் செய்தனர்.

    போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கும் சூழ்நிலையில் இதுகுறித்து விரைவான ஒரு முடிவுக்கும், நடவடிக்கைக்கும் தமிழக அரசு வர வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

  38. Avatar
    punai peyaril says:

    திட்டமிடாமல் உழைக்காமல் வாழ்க்கையில் வாழ வழியிருக்கா, சொல்லுங்கள் .. நாங்கள் தமிழ் உணர்வாளர்கள்

  39. Avatar
    ஜெயபாரதன் says:

    தமிழக மின்வெட்டு நிலையும் மானம்கெட்ட நமது அரசின் கையாலாகாத தன்மையும்!!!

    அபி அப்பா

    தமிழகத்தின் ஒரு சாராதரண நகரம் மயிலாடுதுறை. அதன் இன்றைய மின்வெட்டு நிலவரம் என்பது காலை 6 முதல் 9 வரை, மதியம் 12 முதல் 3 வரை, மாலை 6.30 முதல் 7.30 வரை, இரவு 9 முதல் 10 வரை. ஆக அறிவிக்கப்பட்ட மின்வெட்டு எட்டு மணி நேரம் கணக்கு சரியாகிவிட்டது. ஆனால் அதன் பின்னர் நடப்பதை கூட எந்த பத்திரிக்கையும் எழுதுவதில்லை. யாரும் அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. அதை இதோ சொல்கிறேன். இரவு 10 மணிக்கு வரும் மின்சாரம் 11 மணிக்கு போய்விடும். இது எந்த கணக்கில் வரும். மேலே சொல்கிறேன் கேட்கவும். இரவு 11 முதல் 12 வரை இருக்காது. பின்னர் 12. 30 முதல் 1 மணி வரை, பின்னர் 2 முதல் விடியல்காலை 3 வரை, பின்னர் 4 முதல் 5 வரை இருக்காது. ஆக இரவில் மூன்றரை மணி நேரம். ஆக மொத்தம் 11.30 மணி நேரம். இது தவிர போனஸ் நேரமாக அப்பப்போ பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை. அது ஒரு முப்பது நிமிடம். ஆக ஒரு முழு நாளில் இருக்கும் 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் மின்சாரம் இல்லை. இல்லாத மின்சாரத்துக்கு மாதம் ஒரு முறை முழு மின்வெட்டு. அது பராமரிப்புக்காகவாம்.

    நாம் எந்த காலத்தில் இருக்கின்றோம்? கிட்டத்தட்ட எல்லோருமே மின்சார வாழ்கைக்கு பழகியாகிவிட்டது. இன்வர்டர் வைத்து கொள்ளும் வசதி இந்த தமிழகத்தின் ஒன்னரை முதல் இரண்டு கோடி குடும்பத்தில் எத்தனை ஆயிரம் பேரிடம் இருக்மும்? சுமாராக பத்தாயிரம் முதல் இருபத்தி ஐந்து ஆயிரம் குடும்பங்கள்? வேண்டாம் … நாம் அது ஒரு பத்து லட்சம் குடும்பங்களிடம் இருப்பதாகவே கொள்வோம். சரி அப்படியே இன்வர்டர் வைத்து கொண்டாலும் ஒரு லைட், ஒரு ஃபேன் என ஒட்டு மொத்த குடும்பமே அதில் தான் உழண்டு கிடக்க வேண்டும். இதிலே படிக்கும் மாணவர்களுக்கு அந்த ஒரு லைட் வசதியை கொடுப்பதா? அல்லது குடும்ப தலைவிக்கு சமைக்க வெளிச்சம் கொடுப்பதா? அப்படி பார்த்தாலும் இன்வர்டர்களுக்கு ஃபீடிங் அதாவது அது வாழ தேவையான மின்சாரம் மீதி நேரம் கிடைக்கின்றதா என்றால் அதும் இல்லை.சரி இன்வர்டர் வைத்து கொள்பவர்களின் நிலை இது என்றால் இல்லாத மீதி ஒன்னேமுக்கால் கோடி குடும்பத்தின் நிலை என்ன?

    இங்கே எங்கள் பகுதியில் முக்கிய வாழ்வாதாரமே விவசாயம் மட்டுமே. இங்கே முப்போகம் விளைந்தால் மட்டுமே தமிழகம் முழுவதும் , ஏன் தமிழகம் தாண்டியும் சுபிட்சம் இருக்கும். முப்போகம் விளைய நாங்கள் காவிரியை மட்டும் நம்பி இருக்க முடியாது. போர்செட் இல்லாமல் எதுவும் நடக்காது. 24 மணி நேரம் மின்சாரம் கண்டிப்பாக வேண்டும். இப்போது என்ன நடக்கின்றது? விவசாயம் நசிந்து விட்டது. விவசாயிகள் நடுத்தெருவில் நிற்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அடுத்த ஆறு மாதத்தில் இவன் விளைவிக்காமல் போன நெல்லால் அரிசி பஞ்சம் வருமே, அரிசி விலை ஏறுமே அது எந்த கணக்கில் வரும். இவன் விளைவிக்காமல் போன கரும்பு காரணமாக ஜீனி கிடைக்காதே, அப்படியெனில் வரும்காலம் கருப்பட்டி காப்பி தானா தமிழகத்தில். நான் மீண்டும் பழங்காலம் நோக்கி பயனிக்கட்தான் வேண்டுமா? இது தான் ஒரு ஆளும் கட்சி ஆளும் அரசு தனக்காக ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யும் நன்றியா?

    நசவுத்தொழில் அந்த காலம் போல காலை கையை ஆட்டி தறி போடுவது என்பது எல்லாம் போயே போச். இப்போது எல்லாமே மின் மோட்டார் சகிதம் தான், எல்லாமே விசைத்தறி தான். கூறைநாடு, திருபுவனம், கும்பகோணம் இங்கெல்லாம் பட்டு தொழிலை நம்பி இருக்கும் மக்கள் வயிற்றில் மண். அதே போல துகிலி, கஞ்சனூர் எல்லாம் கைத்தறி நசவாளர்கள் கோவிந்தா கோவிந்தா. சிறு மற்றும் குறுந்தொழில்கள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன.

    அத்தனை ஏன்? மீன்பிடி தொழில்….. எங்கள் மாவட்டத்தை எடுத்து கொண்டால் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பித்து பூம்புகார், சின்னங்குடி, தரங்கம்பாடி, பொறையாறு பின்னே காரைக்காலை விடுத்து அடுத்து அக்கரைப்பேட்டை, நாகை, வேதாரண்யம், பின்னர் அடுத்த மாவட்ட பகுதிகள் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் எல்லாம் மீன் பிடித்தொழில் மட்டுமே பிரதானம். மீன் பிடிக்க மின்சாரம் எதுக்கு எனகேட்கும் மக்களே, மீனை பிடித்து கொண்டு வந்து எங்கே கொட்டுவாங்க. நான் மேலே சொன்ன எல்லா ஊர்களிலும் ஐஸ் பேக்டரி… அது இயங்காவிட்டால்… மீன் கரைக்கு வந்து என்ன பிரயோசனம்? ஐஸ் தயாரிக்க 12 மணி நேர மின்சாரம் பத்தாது. பத்தவே பத்தாது. ஜெனரேட்டர் வைத்து கொள்ளும் வசதி படைத்த ஐஸ் கம்பனிகள் மட்டும் ஐஸ் உற்பத்தி செய்கின்றது. ஆக சின்ன சின்ன ஐஸ் கம்பனிகள் அவுட். அந்த பெரிய கம்பனிகள் வைத்தது தான் விலை. அதை வாங்கும் மீனவர்கள் அந்த விலை ஏற்றத்தை மீன் தலையில் வைக்க ஒட்டு மொத்த மீன் விலையும் கொடிகட்டி பறக்கின்றது. அப்படியே ஆகினும் அந்த கம்பனிகளால் ஓரளவுக்கு மேல் ஐஸ் சப்ளை செய்ய இயலவில்லை. அதனால் மீன் பிடிக்க போகும் முன்னே ஐஸ்க்கு பதிவு செய்து கொண்டு போனவர்களுக்கு மட்டும் தான் ஐஸ். எனவே மற்ற மீனவர்கள் கடலுக்கு போவதில்லை. அவர்கள் வயிற்றில் ஈரத்துணி.மீன் வரத்து குறைந்து போய் அவர்களும் தாங்கள் பிடித்த மத்தி மீன்களை கேரளத்துக்கு மட்டும் அனுப்பி விட்டு இங்கே அசைவ ஹோட்டல்கள் எல்லாம் அதீத விலையேற்றம். அனுபவித்து பார்தவர்களுக்கு வலி புரியும்.

    ஆக விவசாயம், நசவு, மீன்பிடி, சிறு மற்றும் குறுந்தொழில் எல்லாம் போயாச்சு. சரி கடைத்தெரு என எடுத்து கொண்டால் ஒரு ஜெராக்ஸ் (போட்டோகாப்பி) கடை, டைலர் கடை,அச்சகம், ஜூஸ்கடை என எதை தொட்டாலும் மின்சாரம் தேவைப்படுது. அவர்கள் வாழ்கை தொலைந்து போய்விட்டது.

    சரி மாணவர்கள் நிலை? யாரும் படிக்க இயலவில்லை. +2 படிப்பவன் அவன் பெற்றோர் எல்லாம் இப்போது என்ன செய்வது என கையை பிசைந்து கொண்டிருக்க, அதை விட கொடுமை இப்போது செய்முறை தேர்வும் நடந்து கொண்டிருக்க இயற்பியல், வேதியல், கம்பியூட்டர் சயின்ஸ் என எதை தொட்டாலும் மின்சாரம் தேவை. அவர்கள் பழகி பார்க்க மின் தட்டுப்பாடு காரணமாக நேரிடையாக தேர்வுக்கு சென்று ….. இந்த கஷ்டம் எல்லாம் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், அதிலே படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் தான். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்த காரணத்தால் அங்கே ஜெனெரேட்டர் வசதி இருக்கு. (அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது) . ஆக இந்த மே மாதம் ரிசல்ட் பார்த்தால் கிராமப்புற மாணவர்கள் நகர மாணவர்களின் தேர்சி சதத்தைவிட குறைவாக இருப்பர். பத்தாவது மாணவர்கள் கதி அதோகதி ஆகிவிட்டது. ஏற்கனவே அவர்களுக்கு மூன்று மாதம் புத்தகம் இல்லாமல் செய்துவிட்டது இந்த அரசு. இப்போது இந்த கொடுமையும் சேர்ந்து விட்டது.

    போகட்டும், அரசு மருத்துவமனை எல்லாம் என்ன லட்சனத்தில் இருக்கின்றது? மெழுகுவத்தி வைத்து கொண்டு குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெறுவதாக பத்திரிக்கை செய்தி.பகலிலேயே பசுமாடு தெரியாது. இதிலே இருட்டிலே எப்படி எருமை மாடு தெரியும்? விளங்கிடும்…. எதை நறுக்கி தொலைக்க போகின்றனரோ?

    எல்லாம் போகட்டும்…. எல்லாம் போகட்டும்….. இந்த கட்டுரையில் என் கேள்வி என்பதே இங்கே தான் தொடங்குகின்றது. இப்படி தமிழகத்தில் ஒட்டு மொத்த பொருளாதாரத்தை காணடிக்க செய்யும் அளவு பூதாகரமாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது. மின்சாரம் தயாரிப்பது என்பது மத்திரத்தில் மாங்காய் காய்க்க வைக்கும் நிகழ்வு அல்ல. ஆனால் நம் தமிழகத்தின் ஒட்டு மொத்த மின் தேவை என்பது எத்தனை மெகாவாட் ஒரு மாதத்துக்கு? தற்போதைய உற்பத்தி எத்தனை மெகாவாட்?பற்றாக்குறை எவ்வளவு? அதை சரி கட்ட என்ன செய்தோம்,அல்லது மின்சிக்கனம் செய்ய என்ன செய்யக்கூடாது? என்றெல்லாம் இந்த தமிழக அரசு யோசித்து பார்த்ததா என்றால் ஒரே பதில் இல்லை என்பது மட்டுமே.

    கடந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமரவைக்க நினைத்த பத்திரிக்கைகள் தேர்தலின் போது ஒட்டு மொத்தமாக கூப்பாடு போட்டது மின்வெட்டு பிரச்சனைக்காக தான். அப்போது தமிழகத்தில் மின்வெட்டு என்பது மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே. அதும் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரே நேரத்தில் போகாது. மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் அறிவிப்பு செய்துவிட்டு நிறுத்தம் செய்யப்பட்டது. தவிர சென்னைக்கு மின்வெட்டு கிடையாது. கிடையாது என்றால் கிடையவே கிடையாது. ஏப்ரல் 13ம் தேதி 2011 அன்று தேர்தல் முடியும் வரை சென்னைக்கு மின்வெட்டு இல்லை. அதன் பின்னர் தேர்தல் முடிவு வெளியான மே 13 2011 வரை தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே சென்னைக்கு மின்வெட்டு. சென்னைக்கு மட்டும் ஏன் மின்வெட்டு இல்லை என காரணம் கேட்ட போது “தமிழகத்தின் ஒட்டு மொத்த அரசின் மற்ற மற்ற பிரிவுகளின் தலைமையகமும் இங்கே தான் இருக்கின்றது. தவிர தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டவர்கள் இங்கே மின்வெட்டால் பாதிக்க கூடாது” என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. ஆனாலும் ஊடகங்கள் “தமிழக மந்திரிகள் எல்லோரும் சென்னையில் இருப்பதால் மின்வெட்டு இல்லை” என கூவின.

    ஆனால் இப்போது… தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்பது எட்டு மணி நேரம். அறிவிக்காமல் ஒரு நான்கு மணி நேரம். சென்னையில் இன்றுவரை ஒரு மணி நேரம். நாளை முதல் அதை அதிகப்படுத்தப்போவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் எந்த ஒரு பத்திரிக்கையும் இது பற்றி வாயை திறந்தது போல தெரியவில்லை. மாறாக வாய்கூசாமல் திமுக ஆட்சியில் மின்சார உற்பத்திக்கு எதும் செய்யவில்லை என கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளன.

    ஆனால் உண்மை நிலவரம் என்ன என்று பார்த்தால் 2001 முதல் 2006 வரை ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சிகாலத்தில் எவ்வித மின் உற்பத்தி திட்டமும் ஆரம்பிக்கவில்லை. ஒரு சிறு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. ஆனால் 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதாவது 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில் வருங்கால மின் தேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை பார்ப்போம்.

    1) எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு முலமாக 600 மெகவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று 8-12-2006 யில் 3 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் தொடங்கும்

    2) மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3 ஆயிரத்து 100 கோடி மதிப்பீட்டில், 600மெகவாட் மின்சாரம் தயாரிக்ககூடிய ஒரு திட்டம் 2-5-2007ல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி விரைவில் இயக்கத்திற்கு வரும்.

    3) வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகவாட் மின்சாரம் தயாரிக்ககூடிய வகையில் 2 ஆயிரத்து 475 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டம் 26-6-2007 ல் தொடங்கப்பட்டது; அதன் உற்பத்தி விரைவில் நடைமுறைக்கு வரும்

    4) உடன்குடியில் பி எச் ஈ எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின் கீழ்; ஒவ்வொன்றும் 800 மெகவாட் மின் உற்பத்தி செய்யகூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007 ல் 8 ஆயிரத்து 362 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. இதில் ஓர் அலகு 2013 ஆம் ஆண்டு மார்ச் திங்களிலும்; மற்றொரு அலகு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நடைமுறைக்கு வந்து உற்பத்தியை தொடங்கும்

    5) வடசென்னை அனல் மின் நிலையத்திலேயே மேலும் 600மெகவாட் மின்சாரம் தயாரிக்க கூடிய ஒரு திட்டம் 2 ஆயிரத்து 475 கோடி மதிப்பீட்டில் 14-7-2008 ல் தொடங்கப்பட்டது.

    6) ஆயிரத்து 126 கோடி செலவில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆளைகளில்ருந்து 183 மெகவாட் இணை மின்சாரம் தயாரிக்ககூடிய திட்டம், 14-12-2009 ல் தொடங்கப்பட்டது.

    7) மொத்தம் 4183 மெகவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி மு கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன.

    8) 2006 யில் தி மு கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்கால தேவையை கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக

    2010-2011யில் 1400 மெகவாட் மின்சாரமும்
    2011-2012யில் 3316 மெகவாட் மின்சாரமும்
    2012-2013யில் 1222 மெகவாட் மின்சாரமும்
    2013-2014யில் 1860 மெகவாட் மின்சாரமும்

    ஆக மொத்தம் 7798 மெகவாட் மின்சாரமும் பல்வேறு மின் திட்டங்களின் முலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
    ஆக இதை எல்லாம் மூடி மறைத்து ஊடகங்கள் திமுக ஆட்சியை கீழே தள்ள வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக மின்வெட்டு என்பதை ஊதிப்பெரிதாக்கி அதிமுகவை ஆட்சியில் அமர வைத்தது. இலவச வண்ண தொலைக்காட்சியால் மின்சாரம் எல்லாம் போய்விட்டது என சொன்ன அதே பத்திரிக்கைகள் இன்று மிக்சி, கிரைண்டர், ஃபேன் ஆகியவைகள் என்னவோ சூரியசக்தியில் இயங்குவதாக நினைத்து கொண்டு வாய்மூடி கிடக்கின்றன.இது தான் பத்திரிக்கை தர்மமா?

    ஆனால் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசோ, தமிழகத்தின் எதிர்கால மின் தேவைகளுக்காக இன்றைய தேதி வரை எத்தனை மின் திட்டங்கள் கொண்டு வந்தன என்பதை பட்டியலிட முடியுமா? போகட்டும் 2001 – 2006 வரை எதும் செய்யவில்லை. போகட்டும். ஆனால் 2011 சட்டமற்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முக்கிய பிரச்சாரமாக மின்வெட்டு பிரச்சனையை பயன் படுத்திக்கொண்டதே அந்த நன்றிக்காகவாவது இந்த எட்டு மாதத்தில் ஒரே ஒரு மின் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததா என்றால் அதுவும் இல்லை.

    ஆனால் ஊடகங்களோ அதிமுக ஆட்சிக்கு வந்ததும் “குஜராத்தில் இருந்து குதித்து வரும் மின்சாரம்” என தலைப்பிட்டு தன் அதிமுக பாசத்தை அறிவித்து கொண்டன. இன்றளவும் அந்த புழுகுமூட்டை பத்திரிக்கைகள் அதிமுக அரசின் மின் வெட்டு பிரச்சனை பற்றி வாயை திறந்தது உண்டா? இல்லை. அவர்களுக்கு தேவை திமுக அரசு வீட்டுக்கு போக வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளேயன்றி மக்களுக்காக அரசிடம் இடித்துரைத்து திட்டங்கள் பெற்றுக்கொடுப்பது இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகின்றது.

    அதிமுக அரசுக்கு நிர்வாக திறன் என்பது ஒரு சதம் கூட இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் எனினும் இங்கே சிலவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஏனவில் இப்போது சில அடிமட்ட அதிமுக பேச்சாளர்களும், அவர்களுக்கான பிரச்சார ஊடகங்களும் “திமுக ஆட்சியில் எல்லோருக்கும் தொலைக்காட்சி பெட்டி கொடுத்து எல்லாரும் அதை பயன்படுத்தி மின்சாரம் விரயமாகி போய்விட்டது” என்று வழக்கம் போல பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே போல அந்த பத்திரிக்கைகள் அப்போது திமுக ஆட்சியில் இலவசங்கள் அதிகம் கொடுத்து கொடுத்து பணம் இல்லாமல் செய்து விட்டனர். அதனால் தனியாரிடம் இருந்து கூட மின்சாரம் வாங்க காசு இல்லை” என சொன்னது.

    திமுக ஆட்சியில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கான திட்ட மதிப்பீட்டு தொகை 4500 கோடி ரூபாய். அதும் நன்கு திட்டமிடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் பகிர்ந்து ஐந்தாம் ஆண்டு முடிவில் எல்லோருக்கும் தொலைக்கட்சி பெட்டி போய் சேரும் அளவிலான திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி வருடம் 900 கோடி மட்டுமே அதற்கான செலவு.

    ஆனால் அதிமுக ஆட்சியில், ஒன்றரை வருடங்களில் 1.85 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் மூன்றும் தர வேண்டும். இதற்கான தேவை 9880 கோடி ரூபாய். வருடத்திற்கு 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மடிக்கணினி இலவசமாக வழங்க வேண்டும், ஒரு ரூபாய் அரிசியை இலவசமாக தருவதால் ஏற்பட்ட கூடுதல் செலவாக மட்டும் 6000 கோடி ரூபாய்கள். அதாவது இதுவரை அறிவித்துள்ள புதிய இலவச திட்டங்களுக்காகவே இந்த வருடம் கிட்டத்தட்ட 17500 கோடி ரூபாய்கள் வரையிலும் துண்டுவிழும்.

    அது என்ன கணக்கு? அதாவது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கொடுக்கவேண்டுமாம். என்னே ஒரு கரிசனம் தமிழக மக்கள் மீது! தேர்தல் வெற்றிக்காக மட்டுமே ஆட்சி இங்கே. ஆனால் அங்கே 4500 கோடி ரூபாய்க்கான இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிக்கு வருடத்துக்கு ஆகும் செலவே 900 கோடி மட்டுமே. இப்போது போல விலையில்லா அரிசி இல்லை. கிலோ ஒரு ரூபாய். அதனால் அப்போது அரசுக்கு அதிக இழப்பு இல்லாமல் போனது .அதாவது மாதம் 500 கோடி , வருடத்துக்கு 6000 கோடி ரூபாய். எதை வேண்டுமானாலும் விலை இல்லாமல் கொடுக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவன் சாப்பிடும் அரிசியை விலையில்லாமல் கொடுத்தால் அது அவன் வயிற்றுக்கு சோறு போடும் பிச்சை. அந்த அளவு மாதம் 20 இந்திய ரூபாய் சம்பாதிக்க வக்கில்லாதவன் அல்ல நம் நாட்டு மக்கள் என்பதை திமுக அரசு உணர்ந்தது. அதனால் ஒரு ரூபாய் விலை என நிர்ணயம் செய்தது. அதனால் இப்போது தமிழக அரசுக்கு மாதம் தோறும் ஏற்படும் 500 கோடி இழப்பு அப்போது திமுக அரசுக்கு இல்லை.

    இப்படியாக ஒரு இலவச திட்டம் அறிவித்தால் கூட அதை ஐந்து வருடத்துக்குமாக பேலன்ஸ் செய்து கைப்பிடிப்பு இல்லாமல் பட்ஜெட் போட்டு செலவு செய்து , மின்சாரம் தனியாரிடம் விலைக்கு வாங்கி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேர மின்வெட்டு என்கிற நிலையில் வைத்து இருந்த திமுக அரசு நிர்வாக திறமை வாய்ந்த அரசா அல்லது மேலே இருக்கும் பாராவில் இருப்பது போல தான்தோன்றித்தனமாக செயல்படும் அதிமுக அரசு நிர்வாகத்தில் சிறந்த அரசா?

    இப்போது ஒரு புதுக்கதை விட்டுக்கொண்டு இருக்கின்றனர் அதிமுகவினரும் அவர்களின் அச்சு ஊடகங்களும். அது என்ன தெரியுமா? கூடங்குளம் மின் திட்டம் செயல்பட்டால் ஒட்டு மொத்த நமது மின் தேவையும் தீர்த்து விடுமாம். அதை அந்த பகுதி மக்கள் செயல்படுத்த விடாமையால் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமாம். இது என்ன கூத்து என்று தெரியவில்லை. அப்படியே கூடங்குளம் திட்டத்தால் கிடைக்கும் மின்சாரம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கே என மத்திய அரசு கூறினால் கூட இப்போது இருக்கும் 12 மணி நேரம் மின்வெட்டு என்பது 11.30 மணி நேரமாக மட்டுமே ஆகும் என்பதை யாராவது அதிமுக அரசுக்கு காதில் போடுவார்களா? ஆனால் மத்திய அரசு முழு மின்சாரத்தையும் தமிழகத்துக்கு மட்டுமே கொடுக்கவே கொடுக்காது. மத்திய அரசோடு ஒத்து போகும் திமுக அரசு இருந்தால் ஒருவேளை இது சாத்தியம். ஆனால் அதிமுக அரசு என்பது எல்லோரிடமும் சண்டைக்கோழி. அதன் தலைமைக்கு விட்டுக்கொடுக்கும் தன்மை என்பது எப்போதும் கிடையவே கிடையாது.

    சரி, அந்த மக்கள் அங்கே கூடங்குளம் மின் திட்டம் செயல்படுவதில் பயம் கொள்கின்றனர் என்பது தானே அங்கே பிரச்சனை. உடனே தமிழக அரசு என்ன செய்து இருக்க வேண்டும். தன் நிலைப்பாட்டை சொல்லி இருக்க வேண்டும். “கூடங்குளம் வேண்டும் அல்லது வேண்டாம்” இதை சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இதில் மத்திய அரசு மாத்திரம் மக்களுடன் போராடி கொண்டு இருக்கும் போது நீங்கள் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு காலம் தாழ்த்திக்கொண்டு இருப்பது ஏன்? கூடங்குளம் மின்சாரம் மட்டும் வந்தால் பிரச்சனை எல்லாம் தீரும் என நீங்கள் சொல்லும் போது கூடம்குளம் மின் திட்டம் வருவதில் உங்களுக்கு எதிர்ப்பு இல்லை என்று தானே பொருள். அப்படி என்றால் நீங்கள் என்ன செய்து இருக்க வேண்டும்?

    அந்த மக்களின் பிரச்சனையை அதாவது பயத்தை நீக்கும் பொருட்டு “தமிழக சட்டமன்றம் இனி குளிர்கால கூட்ட்த்தொடர் அங்கே ஒரு கட்டிடம் கட்டி அதிலே நடத்தப்படும். அந்த காலங்களில் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் அங்கேயே தங்கி பணிபுரிவர், இனி தமிழ்நாட்டுக்கு வரும் முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள் எல்லாருக்கும் ஒரு பத்து நாட்கள் தங்குவது போல இருந்தால் கூடங்குளம் பகுதியில் தமிழக அரசு விருந்தினர் மாளிகை கட்டி அங்கே தங்க வைக்கப்படுவர், தமிழக அளவிலான மாநில விளையாட்டுப்போட்டிகள் கூடங்குளத்தில் நடத்தப்படும், அத்தனை ஏன் தமிழக முதல்வர் இனி ஓய்வெடுக்க கொடநாட்டுக்கு போகாமல் கூடங்குளம் மட்டுமெ போவார்” என சொல்லிப்பாருங்கள். அந்த மக்கள் தெளிவடைந்து உங்களுக்கு மின்சாரம் உற்பத்திக்கு வழி விடுகின்றார்களா என பார்ப்போம். அதை செய்ய தமிழக அரசு தயாரா?
    இதே நேரத்தில் இந்த கட்டுரை மின்சார தட்டுப்பாடு என்பதால் மத்திய அரசுக்கும் அதே வேண்டுகோள் தான் விடுக்கின்றோம். மக்களுக்கு அவேர்னஸ் கொடுக்கின்றோம் என்கிற பெயரில் கோடி ரூபாய் கொட்டி தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுப்பதற்கு பதிலாக இப்படி சொல்லிப் பாருங்களேன்,
    1. ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள், பிரதமர்களுக்கு இனி அரசாங்க சார்பாக கொடுக்கப்படும் வீடுகள் இனி கூடங்குளம் பகுதியில் கொடுக்கப்படும். அதற்கு முன்னோடியாக நாளை முதல் திரு அப்துல்கலாம் அங்கே வசிக்க ஆரம்பிப்பார்.

    2. இனி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் மேட்சுகள் குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போட்டிகள் கூடங்குளத்தில் ஒரு அருமையான மைதானம் கட்டி அதிலே நடத்தப்படும்.

    3. குடியரசு தின , சுதந்திர தின வெளிநாட்டு விருந்தினர்களுக்கு ஜனாதிபதி கூடங்குளத்தில் விருந்தளிப்பார்.

    4. வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க வரும் தொழிலதிபர்கள் சந்திப்புகள் இனி கூடங்குளத்தில் மட்டுமே நடைபெறும்.

    5. கூடங்குளம் பிரச்சனைக்காக உழைத்த மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும், முன்னாள் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கும் கூடங்குளம் மின் உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தின் உள்ளேயே அருமையாக நட்சத்திர அந்தஸ்து கூடிய வீடு ஒதுக்கப்படும்….

    6.ஊட்டியில், கொடைக்கானலில் நம் தமிழக ஆளுனருக்கு “ராஜ்பவன்” இருப்பது போல ஆளுனருக்கும் கூடங்குளத்தில் ஆளுனர் மாளிகை கட்டப்படும். அதில் அவர் வருடத்துக்கு 3 மாதமாவது தங்கி தன் பணிகளை கவனிப்பார்.

    இப்படி எல்லாம் சொல்லிப்பாருங்கள். அந்த பகுதி மக்களை சமாதானம் செய்துவிட்டு விரைவில் உற்பத்தி செய்யுங்கள். நீங்கள் சொன்னது போல ஒட்டு மொத்த தமிழக மின் தேவைகளை கூடங்குளம் தீர்த்துவிடுகின்றதா என பார்ப்போம். எங்களுக்கு தேவை மின்சாரம் மட்டுமே…..

    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வசித்து கொண்டு எங்களை எல்லாம் எல்லா தேவைக்கும் மின்சாரத்துக்கு பழக்கிவிட்டு இப்போது பாதி நேரம் மின்சாரம் இல்லை என்று சொல்ல அரசே உங்களுக்கு வெட்கம் இல்லையா? அதற்கு துணை போகும் அதிமுக அரசின் ஆதரவு பத்திரிக்கைகளே இந்த பிழைப்பு தேவையா உங்களுக்கு???

  40. Avatar
    paramasivam says:

    Excellent.All the media who support the ruling party in this critical issue should be boycotted by the TN people.As written by Mr.Jayabharathan,the then CM in his eighties,has inagurated one new power project almost every year between 2006 to 2011.The first one at Ennore was inagurated on 8-12-2006 ie within 7 months after assuming office in May,2006.But what is happening now after 9 months rule.Dinamani writes that power projects can not yield power immediately.But when DMK was telling that power shortage would not be there in 2012-2013,it was ridiculing that party.TN would get relief in 2013 only because of the projects initiated by DMK government.Ruling party just cannot run the show by blaming previous regime.What it has done for the past 9 months?

  41. Avatar
    ஜெயபாரதன் says:

    தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தர சென்னை ‘கரண்ட்’டில் கூடுதலாக கை வைக்க முடிவு!

    http://tamil.oneindia.in/news/2012/02/16/tamilnadu-chennai-go-dark-one-more-hour-give-more-power-aid0091.html

    சென்னை: தமிழகம் முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக்கும் நிலையில் வெறும் ஒரு மணி நேர மின்வெட்டோடு எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கும் சென்னைவாசிகளுக்கு ஒரு சோகச் செய்தி. உங்களுக்கான மின்வெட்டின் அளவைக் கூடுதலாக்கத் திட்டமிட்டுள்ளனராம். இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு அனுப்ப மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகம் வெர்சஸ் சென்னை என்ற நிலை தற்போது ஏற்பட்டு விட்டது. மின்சாரத் தடை என்பது சென்னையில் அதிகாரப்பூர்வமாக ஒரு மணி நேரம்தான். இருந்தாலும் அவ்வப்போது கரண்ட் போகும், வரும். அது கணக்கிலேயே கிடையாது. இருந்தாலும் அதிகபட்சம் ஒரு மணி நேர மின்சாரத் தட்டுப்பாட்டோடு சென்னை நகரமும், அதையொட்டியுள்ள புறநகர்களும் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கின்றன.

    ஆனால் சென்னைக்கு வெளியே உள்ள தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 மணி நேர அளவுக்கு மின்தடை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் பயங்கர கடுப்பில் உள்ளனர். சென்னைக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் தருவது, எங்களை மட்டும் தாளித்தெடுப்பதா என்று மக்களிடையே குமுறல் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து தற்போது சென்னை மின்தடை நேரத்தையும் அதிகரிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாம்.

    தற்போது தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கோடை மின் பற்றாக்குறையை சமாளிக்க முடிவு செய்துள்ளது. இது தவிர தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகத்தை குறைத்து வெளிமாவட்ட தேவையை நிவர்த்தி செய்யவும் ஆலோசித்து வருகிறது.

    சென்னையில் தற்போது அமலில் உள்ள ஒரு மணி நேர மின்வெட்டை 2 மணி நேரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் எத்தனை மணி நேரம் மின் வெட்டு செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு வெளி மாவட்டங்களுக்கு வழங்கினால் அங்கு மின் தடை நேரம் எவ்வளவு குறையும் என்று அதிகாரிகள் கணக்கீடு செய்கிறார்கள்.

    சென்னையில் மின் வெட்டு அதிகரிக்கும் பட்சத்தில் இங்குள்ள அரசுப் பணிகள் பாதிக்கக்கூடாது. அனைத்து துறைகளின் தலைமை அலுவலகமும் சென்னையில் செயல்படுவதால் பணிகள் பாதிக்காத வகையில் எத்தனை மணி நேரம் மின்வெட்டை அதிகரிக்கலாம் என்று ஆய்வு செய்யப்படுகிறது.

    எப்படி இருப்பினும் குறைந்தது 2 மணி நேரம் சென்னையில் மின்தடை அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  42. Avatar
    ஜெயபாரதன் says:

    கடந்த ஆண்டை விட 900 மெகாவாட் தேவை அதிகரிப்பு:அதிக மின்வெட்டுக்கு இதுவும் காரணமாம்

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=409825

    கடந்த ஆண்டை விட, 900 மெகாவாட் அளவுக்கு, இவ்வாண்டு மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. மின்வெட்டு அளவு அதிகரித்துள்ளதற்கு அதுவும் முக்கியக் காரணம் என , மின்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

    10 சதவீதம் அதிகம்:இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக, தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 8 சதவீத அளவுக்கு மின்சார பயன்பாடு அதிகரிக்கும். இதைக்கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியை அதிகரிக்க, மின்துறை நடவடிக்கை எடுக்கும்.

    ஆனால், இந்த முறை, ஏற்கனவே வரவேண்டிய புதிய மின் உற்பத்தி திட்டங்கள், எதிர்பாராத அளவுக்கு காலதாமதம் ஆகிவிட்டதால், மின்சார உற்பத்தியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அனல்மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள் ஆகியவற்றில், உற்பத்தி குறைந்து விட்டது.நிதி நெருக்கடியால், வெளிச்சந்தையிலும், தனியார் மின் நிலையங்களிலும், மின்சாரம் கொள்முதல் செய்வது பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், வழக்கமாக கிடைக்கும் மின்சாரத்தை விட, குறைந்த மின்சாரமே தமிழகத்திற்கு கிடைக்கிறது.அதேசமயம், மின்சார பயன்பாடு, கடந்த ஆண்டை விட 10 சதவீத அளவுக்கு, அதிகரித்துள்ளது. அதனால் தான், இந்த அளவுக்கு மோசமான மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    342 மெகாவாட் குறைவு:மின்துறையின் புள்ளி விவரக்கணக்கில், கடந்த 18ம் தேதி நிலவரப்படி, முந்தைய ஆண்டு தேவையை விட, இந்த ஆண்டு மின் தேவை அதிகரித்துள்ளது தெளிவாக தெரிய வருகிறது.கடந்த 2011, பிப்., 18ம் தேதி, 9,140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது; 22.14 கோடி யூனிட் மின்சாரம் பயன்பட்டுள்ளது; 2.10 கோடியே, 63 ஆயிரம் யூனிட் மின்சாரம், மின்வெட்டு மூலம் சமாளிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டு, ஒரு நாளில், 24.24 கோடியே, 63 ஆயிரம் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த ஆண்டு, பிப்ரவரி 18ம் தேதி, 8,798 மெகாவாட் தான் உற்பத்தியாகி உள்ளது. 19.37 கோடியே, 52 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது; 6.65 கோடியே, 53 ஆயிரம் யூனிட் மின்சாரம், மின்வெட்டால் சமாளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தமாக, 26.03 கோடியே, ஐந்தாயிரம் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மின்சார தேவை, 900 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மின் உற்பத்தியோ, கடந்த ஆண்டை விட, 342 மெகாவாட் குறைவாகவே உள்ளது. அதனால்தான், இந்த அதிகப்படியான மின்வெட்டு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    – நமது சிறப்பு நிருபர் –

  43. Avatar
    ஜெயபாரதன் says:

    மின்வெட்டால் நார் உற்பத்தி கடும் பாதிப்பு: கூடங்குளம் திட்டம் கொண்டு வர வலியுறுத்தல்

    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=410001

    பொள்ளாச்சி :மின்வெட்டு காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2,400 கோடி ரூபாய் மதிப்புள்ள நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், வேலை நேரம், ஆட்கள் குறைக்கப்பட்டுள்ளதாலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
    நார் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் அதிகளவில் கிடைப்பதால் கோவை மாவட்டத்தில் நார் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    தென்னை நாரில் இருந்து, நார் கயிறு, கல்டு காயர் (முறுக்கு ஏற்றப்பட்ட நார்), தரைவிரிப்புகள், மிதியடிகள், வீட்டு உபயோக பொருட்கள், நார் துகள், நார் துகள் கட்டிகள் உள்ளிட்ட ஏற்றுமதி பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
    தமிழகத்தில் மொத்தம் 1,200 நார் தொழிற்சாலைகள் உள்ளன. அதில், கோவை மாவட்டத்தில் மட்டும் நான்கில் ஒரு பங்கு நார் தொழிற்சாலைகள் உள்ளன. நார் தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்சம் 100 எச்.பி., முதல் அதிகபட்சமாக 140 எச்.பி., வரையிலும் மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
    நார் தொழிற்சாலைகள் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 வரை பகல் “ஷிப்ட்’ ஆகவும், இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை “நைட் ஷிப்ட்டாகவும்’ இயக்கப்படுகின்றன.

    சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதால் நார் தொழில் பாதித்துள்ளது. மின்வெட்டால் நார் உற்பத்தி பாதித்து, தொழில் நசிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    தற்போது பகலில் ஆறு மணி நேரமும் இரவில் ஆறு மணி நேரமும் மின் வெட்டு ஏற்படுவதால் தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மின்வெட்டால் தொழிலாளர்கள் வேலை இழப்பதுடன் ஏற்றுமதி வாய்ப்புகளும் பாதிக்கிறது.
    ஒரு நார் தொழிற்சாலையில் ஒரு ஷிப்டுக்கு குறைந்தபட்சம் 20 ஆட்கள் வேலை செய்கின்றனர். மின்வெட்டால், தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
    சராசரி நார் உற்பத்தியில் 60 சதவீதம் பாதித்துள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் 2,400 கோடி ரூபாய்க்கான உற்பத்தி இழந்துள்ளதாகவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
    இந்நிலையில், மின்வெட்டை போக்க உடனடி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது, கூடங்குளம் அணுமின் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது நார் தொழிற்சாலை உரிமையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

    நார் உற்பத்தியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயராமச்சந்திரன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் 350 நார் தொழிற்சாலைகள் உள்ளன.
    பெரும்பாலான தொழிற்சாலைகளில் நார் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
    ஒருசிலர் சீனாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதுதவிர நார் துகள் கட்டிகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    ஒரு ஷிப்டுக்கு 2.75 டன் நார் உற்பத்தி செய்ய முடியும். மின்வெட்டு காரணமாக தற்போது ஒரு டன் நார் கூட உற்பத்தி செய்ய முடிவதில்லை. மூன்று மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் கட்டாயம் வழங்க வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியான நிலையால் பல நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
    நார் தொழிலுக்கு பிப்., முதல் ஜூன் வரை தான் சீசன். இந்த நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது நார் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொழிலாளர்கள் வேலை இழப்பு, நார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு பிரச்னைக்கு அரசு போர்க்கால அடிப்படையில் தீர்வு கண்டால் தான் நார் தொழிலை பாதுகாக்க முடியும்.
    இவ்வாறு, ஜெயராமச்சந்திரன் கூறினார்.

    கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்க செயலாளர் இளங்கோ கூறியதாவது:
    கோவை மாவட்டத்தில் 350 நார் தொழிற்சாலைகள் மூலம் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் டன் அளவுக்கு நார் பொருட்கள் தினமும் உற்பத்தி செய்யப்பட்டது. கோவை மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நார் தொழிலுக்கு மின்தடை மிகப்பெரிய சவாலாக உள்ளது.
    தினமும் பகலில் ஆறு மணி நேரமும், இரவில் ஆறு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுவதால் தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை. மின்வெட்டால், 60 சதவீத உற்பத்தி பாதித்துள்ளது. தினமும் 600 டன் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. மின்வெட்டால் தினமும் 80 லட்சம் ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் 2,400 கோடி ரூபாய்க்கான நார் உற்பத்தி பாதித்துள்ளது.
    மின்வெட்டால் நார் உற்பத்தி மட்டுமின்றி வர்த்தகம், ஏற்றுமதி பாதிக்கிறது. மின்வெட்டு நீங்கினால் தான் நார் தொழில் சிறப்பாக நடக்கும். மின்வெட்டு பிரச்னையை சமாளிக்க வாரம் இரண்டு நாள் மின்விடுமுறை திட்டத்தை அரசு பரிசீலனை செய்யலாம். தொழிலாளர்களுக்கு வாரம் ஒரு நாளுக்கு பதிலாக இரண்டு நாள் விடுப்பு கொடுத்து, ஐந்து நாட்கள் தொழிற்சாலையை இயக்க முடியும்.
    மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண, கூடங்குளம் அணுமின் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அணு ஆய்வு குறித்து முழுமையாக அறிந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்
    கலாம், அணுமின் திட்டத்தை ஆய்வு செய்து, “பல அடுக்கு பாதுகாப்புடன் அணுமின் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை அனுமதிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
    இவ்வாறு, இளங்கோ கூறினார்.

  44. Avatar
    punai peyaril says:

    பூட்டி சாவியை எடுக்கும் வரை போராட்டாம் ஓயாது என்று உதயகுமார் சொல்கிறார். இவருக்கு யார் சாவி கொடுக்கிறார்களோ அந்த சாவியை புடுங்கி இவருக்கு உதை கொடுக்கும் நாள் தூரத்தில் இல்லை. கருணாநிதி திட்டங்கள் போடுவது கமிஷன் அடிக்கவே… ஜெயலலிதா எப்போதுமே பெட்டர். கருணாநிதி ஆட்சி காலத்தில் உலகளாவிய இந்தியா முழுதும் புதுத்திட்டங்கள் வந்தன… அதில் கருணாநிதி அடித்த கொள்ளையில் பல பட்ஜெட் போடலாம்… இந்த பகுதியில் அரசியல் வேண்டாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *