கவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)

author
0 minutes, 14 seconds Read
This entry is part 19 of 40 in the series 8 ஜனவரி 2012

(1207 -1273)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நேற்றிரவு

என் குருநாதர் போதித்த

அறிவுரை இது :

வறுமைப் பாடத்தைப்

பற்றியது

எதுவுமே ஒருவருக் கில்லாமை !

எதன் மீதும்

இச்சை கொள்ளாமை !

நான் அமணமாய்

நிற்கிறேன்

ரூபிக் கற்கள்

நிரம்பிய

சுரங்கத்தின் உள்ளே

செந்திறப் பட்டு உடுத்தி !

மினு மினுப்பு

மழுங்கிப் போனது

கடலைக் காண்கிறேன்

இப்போது !

ஓரே கணத்தில் நேரும்

நகர்ச்சிகள்

கோடிக் கணக்கில்

எழுந்திடும்

என் உள்ளத்தின் உள்ளே !

மௌன மாந்தர்கள்

வாழ்ந்திடும்

நளின வட்டாரம்

என் கை விரல் மோதிரம்

போன்றது !

பொழிந்திடும் இடி மழையும்

புயல் அடிப்பும்

நமக்கு எதிரே வருகுது !

இடிமழை போல்

எனக்கொரு குரு நாதர்

இருக்கிறார் !

***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 28, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (கவிதை – 52 பாகம் -2)கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *