துளிதுளியாய்….

author
0 minutes, 1 second Read
This entry is part 27 of 40 in the series 8 ஜனவரி 2012

கோவை புதியவன்

ஏர் பஸ் வெளிச்சத்தில்
இருட்டாகிப் போனது
ஏழையின் பயணம்

அப்பாவின் புகையில்
மூச்சுத் திணறியது
பீடி சுற்றும் மகளின் வாழ்க்கை

கதாநாயகன் கட்-அவுட்டுக்கு
ஊற்றிய பாலில் வழிந்தோடியது
ரசிகனின் முட்டாள்தனம்

வாசலில் பிச்சைக்காரன்
வயிறு நிரம்பியது
கோவில் உண்டியலுக்கு

சாதிக்க மலையேறியபின்
சறுக்கி விழுந்தது
பயம் மட்டுமே.

thendral_venkatguru@yahoo.co.in

Series Navigationமார்கழி காதலிகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *