மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உனக்குப் பகை நீதான் !
முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 144 ஈரேழு வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஏரேழு வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டன.
ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழு வரிப்பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின் நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சியான நண்பனைத் திருமணம் செய்ய வேண்டி தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் ஷேக்ஸ்பியருக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறார். நண்பன் அந்தக் கவிஞரின் ஆசை நாயகி தன்னை மோகித்து மயக்குவதாகவும் கூறுகிறான். ஆனால் இந்த ஆசை நாயகி பளிங்கு மனம் கொண்டவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் 137 ஆம் ஈரேழு வரிப்பாவில் “மனிதர் எல்லாம் சவாரி செய்யும் வளைகுடா (The Bay where all men ride) ” – என்று கூறி இகழ்கிறார்.
அவரது 20 ஆவது ஈரேழு வரிப்பா மூலம் அந்தக் காதலர் தமது ஐக்கியத்தில் பாலுறவில்லை என்பது தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்றமும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழு வரிப்பாக்கள் ஒரு நண்பனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாகம் முக்கோண உறவுக் காதலர் பற்றி என்பதை 144 ஆவது பாவில் எடுத்துச் சொல்லப் படுகிறது. ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்களில் சிறப்பானவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள் என்று கருதப் படுகின்றன.
ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பையும், ஓட்டத்தையும் அவை பின்பற்ற வில்லை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூடப் பொதுவாகத்தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழு வரிப் பாக்கள். இவற்றில் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது செல்வீக நண்பனை திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்துகிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழு வரிப்பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Snnets) என்று கூறப் படுகின்றன.
****************
உனக்குப் பகை நீதான் !
(ஈரேழு வரிப்பா – 1)
நளினப் பிறவிகளிட மிருந்து நாம்
விழைவது எழில்வழி இனப் பெருக்கம் !
தோன்றிய அழகு என்றும் அழியாது
காலப் போக்கில் பெற்றவர் மரிப்பினும் !
வாலிப வாரிசு காட்ட வேண்டும்
எழில் தந்த அந்த நினைவுகளை !
நீ கட்டுப்பாடு செய் ஆயினும்
நின் கண்ணொளிக் காட்சிக்கு !
உன் தீபத் தீயிக்கு எரி எண்ணை
நீயே சுயமாய் நிரப்புகிறாய் !
ஏற்படும் அதனால் பஞ்சம்
பேரளவு செழிப் புள்ள போதும் !
நீயே உனக்குப் பகைவன் !
இனிய தன்னலம் மிகக் கொடியது !
புத்தம் புதிய உலக ஆபரணம்
இப்போது நீ !
ஒற்றைத் தூதான உன்
வசந்த வனப்பு மங்கிப் போவது !
உனது மொட்டுக்குள் புதையும்
மன நிறைவு எல்லாம்.
பரிதாபப் படு புவி மீது
இன விருத்தியைத் தொடர் !
இல்லை யேல்
இந்தப் பெருந்தீனி மனிதன்
விழுங்கு வான் இடுகுழிக் கருகில்
உலகுக் குரியவை எல்லாம் !
***********************
(Shakespeare’s Sonnets : 1)
From fairest creatures we desire increase,
That thereby beauty’s rose might never die,
But as the riper should by time decease,
His tender heir might bear his memory:
But thou, contracted to thine own bright eyes,
Feed’st thy light’st flame with self-substantial fuel,
Making a famine where abundance lies,
Thyself thy foe, to thy sweet self too cruel.
Thou that art now the world’s fresh ornament
And only herald to the gaudy spring,
Within thine own bud buriest thy content
And, tender churl, makest waste in niggarding.
Pity the world, or else this glutton be,
To eat the world’s due, by the grave and thee.
************************
தகவல் :
1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 5, 2012)
- அள்ளும் பொம்மைகள்
- சில்லறை நோட்டு
- அகநானூறு உணர்த்தும் வாழ்வியல் அறன்கள்
- காதறுந்த ஊசி
- ஜென் ஒரு புரிதல் -26
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –
- ஜெயமோகனுக்கு “முகம் “ விருது
- இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை
- மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் (துருக்கி நாட்டுச் சிறுகதை)
- சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் பதிப்பக நூல்கள்
- ஏன்?
- கிறுக்கல்கள்
- சிற்றிதழ் அறிமுகம் : சங்கு
- சாந்தகுமாரின் ‘மௌனகுரு’
- தீட்டுறிஞ்சி
- நன்றி உரை
- முனைவர் பட்ட பொது வாய்மொழித்தேர்வு அறிவிப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (கவிதை – 52 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)
- கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ
- புத்தகச் சந்தை 2012 – ஸ்கூப் சுவாரஸ்யங்கள்
- ………..மீண்டும் …………..
- பாசாங்குப் பசி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 5
- பஞ்சரத்னம்
- மார்கழி காதலி
- துளிதுளியாய்….
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
- ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)
- ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 1) எழில் இனப் பெருக்கம்
- சிலை
- மண் சுவர்
- அழகின் சிரிப்பு
- பூபாளம்
- Learn Hindu Vedic Astrology
- கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா
- பஞ்சதந்திரம் தொடர் 25 முட்டாளுக்குச் செய்த உபதேசம்
- முன்னணியின் பின்னணிகள் – 21 சாமர்செட் மாம்
- முடிச்சு
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 4