தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?

This entry is part 17 of 36 in the series 18 மார்ச் 2012

 மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

என்னை நினைத்திருப் பாயா
இன்னும் நீ ?
உன்னை விட்டு வெகுதூரம்
ஓடிப் போகினும்
என்னை நினைப் பாயா ?
என் பழைய காதல்
சிலந்தி வலையால் மறைந்து
புதிய காதல் படர்ந்தாலும்
நீ நினைப் பாயா ?
நெருங்கி நான்
நிழல் போலிருந்த சமயம்
இருப்பதோ இல்லாததோ உனக்குத்
தெரியாத போதினும்
நீ நினைப் பாயா ?
நினைத் திருப்பாய் என்னை !

 

கண்ணிமைக் குழிகள் நிரம்பி
நீர் பொங்கிய போதினும்
நினைப் பாயா ?
சில சமயம் நமது ஊடல்
தேனிரவில் நின்று போயினும்
நினைப் பாயா நீ ?
இலையுதிர் பருவத்துக்
காலைப் பொழுதின் பசுமைக்
கதிரொளியில்
நாம் செய்யும் வேலைகளில்
தடு மாறினும்
நீ நினைப் பாயா ?
நினைத் திருப்பாய் என்னை !

 

நினைத் திருந்த போதும்
நின் ஓரக் கண்ணில்
ஈரத் துளி ஒன்று
மின்னு வதில்லை !
ஆயினும்
நீ நினைப் பாயா ?
நினைத் திருப்பாய் என்னை !

 

+++++++++++++++++++
பாட்டு : 151 தாகூர் தன் 26 ஆம் வயதில் எழுதியது (1887)
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 14, 2012

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 4-நீலமலையின் நினைவலைகள்ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *