தாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்

This entry is part 32 of 44 in the series 15 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நேரம் போகுது கண்மணி !
நீ சிரித்து விளையாடு கிறாய்
நீடித்த இன்பம் அளிக்குமா அது ?
நீடிக்க இச்சைதான்
காதலிக்க வேட்கை உளது
ஏன் அவை விழித்து
ஆத்மாவில்
எழுவ தில்லை ?
எப்போது வரும் வாழ்விலே
கண்ணும் கண்ணும் கலந்து
கவிழ்ந்திடும் ஐக்கியம் ?
இனிய தீப்பொறியில்
இனிக்கும் உடல் அக்கினியில்
புதியதாய் நம் பிறப்பு !

கண்களின் குழி நிரம்பி
கண்ணீர்த் துளிகள் பொங்கி யோடும் !
பரிவு மிகுந்து
கண்ணீர் மயச் சோகத்தால்
மின்னல் புன்முறுவல்
பளிச்செனத் தோன்றி மறையும்
மெதுவாய் !
நிம்மதி இல்லாப் பெருமூச்சு
நம்பிக்கை
அல்லது ஏமாற் றத்தை
ஆவலாய்
எதிர்பார்த்து முறியும்
இதயம் ! வெட்கம் வரையும்
வண்ணத்தில்
ஆத்மா
மின்னிடும் சுடராய்க்
கன்னத்தில் !

++++++++++++++++

+++++++++++++++++++
பாட்டு : 312 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888).
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press,

Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 9, 2012
*********************

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்“ பி சி று…”
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *