ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை

2
0 minutes, 0 seconds Read
This entry is part 34 of 44 in the series 22 ஏப்ரல் 2012

 

ரெட்டைச்சடையில்
திராட்சைக்கண்களுடன்
என்னை நீ
திருடிச்சென்ற பிறகு
இந்த பூங்காவே வெறுமை.
பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின.

காத‌லைப்ப‌ற்றி
உருகி உருகிச்சொல்ல‌
காளிதாசனைத் தான்
வாட‌கைக்குக்கு கூப்பிட்டேன்.
எழுத்தாணி துருப்பிடித்துக்கிட‌க்கிற‌து
பாலிஷ் போட‌ வேண்டும் என்றான்.

க‌டித‌ம் எழுதினால்
ஆபாச‌ம் என்பார்க‌ளே.
அத‌னால்
க‌விதை தொகுதி வெளியிட்டேன்.
இப்போது
எல்லோரும் உன்னைத்தான்
வாசித்து வாசித்து
மேய்கிறார்க‌ள்.

இன்ட‌ர்னெட் ப‌ரிணாம‌த்தில்
இப்போது
செவியில் தான் இத‌ய‌ம்.
செல் விட்டு செல் தாவும்
வ‌ண்டுக‌ளுக்கும் ப‌ஞ்ச‌மில்லை.
உன் “ஐ ல‌வு யூ டா”
எங்கெல்லாம்
சிந்தி சித‌றிக்கிட‌க்கிறது பார்!
ப்ரைவெசி கொள்ளை போன‌து.
ம‌யில்ராவ‌ண‌னிட‌ம் சொல்லி
க‌ட‌லுக்குள் தான்
ஒரு கூடு க‌ட்ட‌ வேண்டும்.

நிலாவுக்குள்
இந்த‌ சொற்க‌ளையெல்லாம்
கொட்டி கொட்டி
எத்த‌னை த‌ட‌வை தான்
“த‌ண்ணிய‌டிப்ப‌து”
நாற்ற‌ம் தாங்க‌வில்லை என்று
ம‌யில்சாமி அண்ணாத்துரை
கோபித்துக்கொள்வார்.
க‌ன‌வுக்குள் ம‌ட்டுமே இனி
க‌ருவ‌றை க‌ட்டுவோம்.

அப்பா அம்மாக்க‌ள் என்றாலே
ஜுராஸிக் பார்க் தான்
என்ப‌து ப‌ழைய‌ இல‌க்க‌ண‌ம்.
கொல‌வ‌ரியுக‌த்தில்
அப்பா அம்மாக்கள்  காதுகளிலும்
“நீல‌ப்ப‌ற்க‌ள்” தான்.
க‌டிக்காது.ப‌ய‌ப்ப‌டாதே
சொல்லி விட‌லாம்.

டீன் ஏஜ் ந‌ட‌த்தும்
இந்த‌ “ஹ‌ங்க‌ர் கேம்ஸ்”ல்
வில்லும் அம்பும்
க‌ரும்பில் செய்த‌து தான்.
ஒரு துரும்புக்கும்
இங்கு காய‌மில்லை.
ந‌ம‌க்குள் ம‌ட்டுமே
ஊமைத்தீ.

===================================================ருத்ரா

Series Navigationதூரிகைநிகழ்வு
author

ருத்ரா

Similar Posts

2 Comments

  1. Avatar
    சோமா says:

    ஒரு பத்து வருடம் தள்ளிப் பிறந்திருந்தால் தங்களுக்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும்…..என்ன எங்களுக்கு ஒரு கவிதை கிடைத்திருக்காது….ஹி..ஹி….

  2. Avatar
    ruthraa says:

    அன்புள்ள சோமா அவர்களே

    கவலை வேண்டாம்.இன்றைய இளைய யுகம் விஞ்ஞான யுகம்.நம் டி.என்.ஏ இழைக்குறியீட்டை பையோ சிப்பில் நியூரானாக்கி விண்வெளி மமெரிஃஸ்பேரில் சீடிங்க் (SEEDING) செய்து விட்டால் நாம் காலத்தை வென்று விடலாம்.உங்களைப்போன்ற இளைய தலைமுறைகள் அந்த உயிரியல் துகள் இயற்பியலில் (பையோ பார்டிகிள் ஃபிஸிக்ஸ்)நிறைய சாதிக்க இருக்கிறீர்கள்.சூப்பர் சிம்மட்ரி கோட்பாட்டில் எலக்ட்ரான் ப்ரொட்டான் ஃபோட்டான் குளுவான் துகள் வேறுபாடுகள் மறையும் நாள் வெகு தொலைவில் இல்லை.(நிறையின் உள் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதாவது ஹிக்ஸ் போஸானை இனம் பிரித்து விட்டால்)நாம் குவாண்டம் டெலிபோர்டேஷன் மூலம் எல்லா வயதுகளுக்குள்ளும் போய் வரலாம்.இந்த இளந்தலைமுறை விஞ்ஞானிகளிடம் இந்த கனவு நிறைவேறும் சாத்தியக்கூறு நிச்சயம் உண்டு.

    அன்புடன்
    ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *