சூல் கொண்டேன்!

This entry is part 37 of 44 in the series 22 ஏப்ரல் 2012


அந்திச்சூரியனும் முழுமதியும் இணையும்
இனியதொரு பொழுதின் ஏக்கமும்
கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும்
சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து
கனிவான கற்கண்டாய் உருமாறி
கவின்மிகு கருவதனைக் கொள்ளவே
தவியாய்த் தவித்து மனம்
பனியாய் உருகிப் பார்த்திருக்க…….
பதமாய் பகட்டாய் பரிதவிப்பாய்
காத்திருந்த கருகூலம் கண்டேன்
மதியொளியும் கருக்கமும் வின்மீன்களும்
கண்டறியாதனக் கண்டேன் என
கட்டிக்கரும்பாய் கனிரசமாய் கவித்துளியாய்
கன்னியவளை கருத்தாய்க் கவரவே
காந்தர்வமாய் கணப்பொழுதில் காட்சிமாறவே
ஆலிங்கனமும் புனைவும் புனிதமாகவே
ஆனந்தமாய் அள்ளிப்பருகிய அற்புதங்கள்
ஆசுவாசமாய் சூல் கொண்டது
சூல் கொண்ட சுடரொளியாய்
மயங்கி தள்ளாடி மூச்சிறைத்து
மனம் நிறைந்து மட்டற்றமகிழ்ச்சியில்
பிரசவ வேதனையையும் பிரியமாக
வரவேற்று கதறாமல் சிதறாமல்
பொன்னாய் பூவாய் முத்தாய்
வைரமாய் புளங்காகிதமாய் புதுமையாய்
பூத்த புதுமலராய் அழியாத மணமும்
நிலையான குணமும் தனியான
சுவையும் கனிவான பார்வையும்
சலியாத மொழியும் இனிமையான
நடையும் இதமான சுகமும்
சுவையாக வழங்கும் வெல்லக்கட்டியாய்
கட்டவிழ்ந்த தருணமதில் பெற்றெடுத்த
கவி மழலையின் இளம்தாயாய்
உளம் நிறைந்த பேதையாய் யாம்!
Series Navigationஉதிரும் சிறகுதூறலுக்குள் இடி இறக்காதீர்
author

பவள சங்கரி

Similar Posts

8 Comments

  1. Avatar
    ஜெயபாரதன் says:

    கவிதையில் சொற்கள் கூட சலங்கை கட்டிப் பரத நாட்டியம் புரிகின்றன.

    பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்.

  2. Avatar
    jayashree says:

    அன்பின் பவள சங்கரி….

    சூல் கொண்டேன்…இந்த அழகான கவிதை….ஒரு கவிஞர் தான் எழுதத் தொடங்கும் முன்னர்
    தனக்குள்ளும்….தன்னைச் சுற்றியும் இருக்கும் ஏகாந்த நிலைமையின் அழகை அப்படியே
    சொல்லி….வார்த்தைகளைத் தாங்கித் தாங்கி…முடிவில் அழகிய கவிக் குழந்தையை ஈன்ற
    பெருமையை சொன்ன விதம் வியப்பு தான்….எழுத்தாளருக்கு….ஒவ்வொரு படைப்பும்
    தலை பிரசவம் தான்…..! நல்ல சிந்தனை…நன்று.

    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  3. Avatar
    சோமா says:

    கவிதகளின் தன்மையைப் பொருத்து அவைகள் வகைப்படுத்தப்படுகின்றன. எதுகை மோனை சந்தம் இல்லாமல் எழுதப்படுகிற புதுக்கவிதை, கருத்துச் செரிந்து வாசித்தலுக்கு நன்றாக இருக்கும். கவி அரங்கத்தில் வாசிப்பதற்கு கவிதைக்குச் சந்தம் வேண்டும். தாங்கள் எழுதியிருக்கும் கவிதை இரு வகைக்கும் பொருந்துவதாக உள்ளது…வார்த்தை நயம் நன்றாக உள்ளது…

    1. Avatar
      பவள சங்கரி. says:

      அன்பின் திரு சோமா,

      ஆழ்ந்த கருத்துகளை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். தங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு ந்ன்றி ஐயா.

      அன்புடன்
      பவள சங்கரி.

  4. Avatar
    ganesan says:

    gud kavithai…the author had a successful delivery of beautiful kavi kuzhandhai without any pain …needs to be read by every young pregnant women so that they love their period of pregnancy and deliver the beautiful baby of their choice…

  5. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் திரு கணேசன்,

    வணக்கம்.தங்களுடைய ஊக்கமான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *