தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்

This entry is part 2 of 44 in the series 22 ஏப்ரல் 2012

1990இல் தங்கத்தின் விலை என்ன தெரியுமா?

2560 ரூபாய்.

2012 இல் அதன் விலை என்ன தெரியுமா?

21500 ரூபாய் வரை வந்தது.

சென்ற வருடத்தைய விலை ஏற்றத்தை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒரு வாரத்திலேயே ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்கும். இப்போது வெள்ளைத் தங்கம் என்று சொல்லப்பட்ட மிக அதிக விலை கொண்ட பிளாடினத்தின் விலையை விடவும் தங்க விலை அதிகம்.

தற்போது பல்வேறு வங்கிகளும் தங்கக் கணக்கில் சேமிக்குமாறு தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சொல்லி வருகிறார்கள். இது பயனுள்ளதா?

2010 செப்டம்பர் மாதம், நானும் வங்கிக் கணக்கிலேயே தங்கத்தை வாங்கவும் விற்கவும் ஆரம்பித்தேன். நான் வாங்கும் போதெல்லாம் குறைந்து விடும். பிறகு சிறிது காலம் பொறுத்து நான் வாங்கிய விலைக்கு சற்றே மேலே தங்கம் விலை வந்ததுமே, பயந்து கொண்டே விற்பேன். ஆனால் அதற்குப் பிறகு திடீரென்று ஒரேயடியாக விலை கூடிவிடும். என்னுடைய ராசி அப்படி இருந்தது. அதிக லாபம் பார்க்க வெகு நாட்கள் காக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

நீங்களும் தங்கத்தை வாங்கி விற்க முயலலாம். இன்றைய நிலைமையில் கணிசமான லாபத்தை நிச்சயம் சம்பாதிக்கலாம். ஆனால் தங்கத்தைப் பற்றி பேசும் பொருளாதார வல்லுநர்கள், இந்தக் காகிதத் தங்கத்தை விடவும், தங்கத்தை உலோகப் பொருளாக வைப்பதே உசிதம் என்று கூறி வருவதை அறிந்த காரணத்தால், தங்கத்தை கடைகளில் சென்று வாங்கிச் சேமிப்பது அதிக லாபத்தைத் தரும் என்று நான் எண்ணுகிறேன்.

சரி இத்தகைய தங்கத்தில் எக்கத்தப்பான விலை ஏற்றத்தின் முக்கிய காரணகர்த்தை யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அது சீனர்கள் தாம்.

2007இல் சீனா மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்தி தங்க உற்பத்தியில் முதலிடம் பெற்றது. அன்றிலிருந்து தங்கம் வாங்குவதிலும், தங்கத்தில் முதலீடு செய்வதிலும் அவர்கள் தயக்கமே காட்டவில்லை. சீன மக்களின் தங்கத்தின் மேலுள்ள அதிக விருப்பமே, தற்போதைய தங்கத்தின் ராக்கெட் வேக விலை உயர்விற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் கடன் விகிதம் கூடக் கூட, பணத்தின் மேல் இருக்கும் மதிப்புக் குறைந்து, தங்கம், வெள்ளி, பிளாடினம் போன்ற உலோகங்களின் மேல் நம்பிக்கை அதிகமாகிவிட்டது. தங்களுடைய பணத்தைச் சேமிக்க, தங்கம் வாங்கிச் சேமிக்கும் முறையை பலரும் மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்தது. அதனால் விலையும் அதிகரித்து விட்டது.

சீனாவின் சென்ற ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் உற்பத்தி 3.67 சதவீதம் அதிகரித்து, 132.02 டன்கள் ஆகியுள்ளது என்று சீன தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புள்ளிவிவரத்தைத் தருகிறது.

சீனாவில் இருக்கும் சொத்து நிர்வாகிகள் பலரும், தங்கத்திலும் இதர மதிப்புற்ற உலோகங்களிலும் முதலீடு செய்யும் நிதி நிறுவனங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர். பத்திரமாக சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். சீனாவில் மட்டும் ஐந்து நிறுவனங்கள் இதைச் செய்ய உரிமங்களைப் பெற்றுள்ளன. இதனால் 2011 முதல் காலாண்டில், சீனா உலகின் தங்க முதலீட்டில் முதலாவதாக ஆனது. லையன் பண்டு மேனேஜ்மென்ட் கம்பெனி முதன்முதலில் வெளிநாட்டுத் தங்க எக்சேன்ஜ் டிரேடட் பண்டு என்று கூறப்படும் பரிமாற்ற வணிக நிதியில் 495 மில்லியன் (10 இலட்சம் – 1 மில்லியன்) அமெரிக்க டாலர்களை; செய்தது. இதற்கு முன் சீனாவில் இத்தகைய நிதிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டுத் தேவை இந்தச் சமயத்தில் இரட்டிப்பு ஆகி 90.9 மெட்ரிக் டன் ஆனது.

நாணயங்கள் தங்கக் கட்டிகள் விற்பனையில் இந்தியாவையும் சீனா முந்தியது என்று உலகத் தங்கக் குழுமம் வெளியிட்டது. 2010இல் மட்டும் தங்க நுகர்வு 141.9 டன் உயர்ந்து, முந்தைய ஆண்டை விட 94 சதவீதம் கூடியது.

2010இல் உலக அளவில் 3.8 சதவீத உயர்வோடு தங்க உற்பத்தி 2689 டன் ஆனது. பண வீக்கத்திலிருந்து தப்பிக்க இந்தத் தங்க முதலீடு உதவும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.
சீனாவில் தங்கத்தை அடகு வைத்தவர்கள், அதை திருப்ப மிகவும் ஆவலுடன் செல்கின்றனர். தங்கத்தின் விலை ஏற ஏற, அவர்கள் கடனுக்கு வைத்திருந்த விலையை ஒப்பீடு செய்தால், லாபம் கிட்டும் என்ற நோக்கில் தங்கத்தை திருப்ப முயல்வதாக அடகுக் கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.

தங்கத்தின் தூய்மையை கேரட் என்று சொல்வர். 24 கேரட் சொக்கத் தங்கம். சீனாவிலும் ஹாங்காங்கிலும் சொக்கத் தங்கத்திலான நகைகள் கிடைக்கின்றன. 18 கேரட் என்பது 1000இல் 24கில் 18 பங்கு – 750 மென்மைத்தன்மை கொண்டது.

அதில் 999.9 அல்லது 995 மென்மைத்தன்மைகளும் உண்டு.

தற்போது சீனாவில் 99.99 சொக்கத் தங்கத் தர நிர்ணயம் உள்ளது. இதற்கு அடுத்து மேலும் சொக்கத் தங்கம் 99.999ஐ சீனா புகுத்தியுள்ளது. மிகவும் சுத்தமான தங்கம் மிகவும் நவீன தொழில்களில், விமானத் தொழிலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது அது சாதாரண மக்களுக்கும் கிடைக்கும். நடக்கவுள்ள ஷென்சென் நகைப் பொருட்காட்சியில் 99.999 தங்கக் கட்டியைப் பார்வைக்கு வைக்க உள்ளனர்.
சீனாவிடம் உள்ள தங்கத்தில் 53 சதவீதம் தங்க நகைகள்.

சீனாவின் யுவான் மதிப்பில் தங்க விலை அதிகம் இருப்பதால், சீனர்கள் பலரும் ஹாங்காங் வந்து தங்க நகைகளையும் தங்கக் கட்டிகளையும் வாங்கிச் செல்கின்றனர்.
இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளில் ஏற்படும் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளின் காரணமாகவும், தங்க விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாக வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை இப்படி ராக்கெட் வேகத்தில் ஏறிய காரணத்தால் இன்று தங்கத்தை துணைப் பிணையமாக (கொலட்டரல் செக்கியூரிட்டி) உலகத்தின் பல வங்கிகள் அங்கரித்துள்ளன.

பரிமாற்ற வணிக நிதியம் (புழடன நுவுகு – நுஒஉhயபெந வசயனநன கரனெ) என்ற வைப்பு நிதிகள் பல வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் போட்டிப் போட்டிக் கொண்டு காகிதத் தங்கத்தை வாங்கி வருகின்றனர்.

Series Navigationபுதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *