வடிவேலு…நகைச்சுவை நாயகன்..!
அவரது உடலசைவும் முக பாவனையுமே போதும்…!
தமிழ் அகராதியில் அவர் சேர்த்த வார்த்தைகள்…அலங்காரங்கள் தான் மேல்தட்டு வகுப்பிலிருந்து அனைவரும் ஒரு முறையாவது அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பார்கள் அல்லது நினைத்தாவது பார்த்திருப்பார்கள். சார்லி சாப்ளின் போல் தன்னை மட்டும் பழித்து வேடிக்கை காட்டும் வித்தகன் வடிவேலு .
அவரது அத்தனை படத்திலும் இதுவரை அவர் மற்றவரைப் பழித்தோ, இழிவான வார்த்தைகள் பேசியோ..நம்மை சிரிக்க வைத்ததில்லை. ஆனால் கவுண்டமணி முதல் விவேக் வரை சந்தானம் வரை….மற்றவர்களை விமரிசித்துத் தான் நமக்கு சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்வார்கள். வடிவேலு இதற்கு விதிவிலக்கு. மேலும் தற்போது
நகைச்சுவை நடிகரை மிளிரிக் கொண்டு இருக்கும் பாஸ்கர் அவர்களும் வடிவேலு போல் தான்.
சிரிக்க வைப்பது என்பது மிகப் பெரிய வரம். இன்றைய இயந்திர காலகட்டத்தில் மனிதன் மனம் சிறிதாவது இளகி சிரிக்க வேண்டும்.ரத்த அழுத்தம்….அதிகப் படியான கவலை,.,இதயக்கோளாறு இவையனைத்தும் கட்டுக்குள் கொண்டுவரும் ஒரே மருந்து சிரிப்பு தான்.
அனைவரையும் தனது அசட்டுத் தனத்தால் , நடிப்பால், சேஷ்ட்டகைகளால்…சிரிக்க வைத்த மாபெரும் கலைஞனை இன்னுமாத தள்ளி வைப்பது.?
தமிழ் சினிமாவில் வடிவேலுவோடு நடிக்காத நடிகர்களே இல்லை….யாருக்குமே தோன்றவில்லையா? திரையுலக ஹீரோக்களில் நிஜ ஹீரோ ஒருவர் கூடவா…இல்லை…நண்பா…நீ வா என்று சொல்ல..?
அவர் இருக்கும் போதே அவரை நாம் இழக்கலாமா? யாருடைய சுய நலத்திற்க்காக இந்தப் பொதுநலம் புறக்கணிக்கப் படுகிறது. காலத்தால் அழியாதது அவர் நடிப்பு.
இப்போதே மற்ற மாநிலத்தவறேல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அமீர்கான் கூட சொன்னாராம்….ஏன்..இப்போது வடிவேலுவைக் காணவில்லை என்று..? அவருக்கு பாஷையே தேவையில்லை..வேறு மாநிலத்தில் கூட பணியாற்றலாம் என்று திறமையை எங்கு கண்டாலும் அதைத் தட்டிக் கொடுத்து மிளிரச் செய்தவர் எம்.ஜி.ஆர்..அவர்கள்.இன்று எம்.ஜி.ஆர். வழில் ஒருவர் கூட இல்லையா? கட்சிகளின் சுயநலத்திற்காக ஒரு கலைஞனைத் தள்ளி வைப்பது மிகப் பெரிய குற்றம்
அதத் தமிழ் நாடு செய்வது மாபெரும் கேவலம்.
சசிகலாவை ஜெயலலிதா மன்னிக்கலாம்..வடிவேலுவை மன்னிக்கக் கூடாதா?
ஒன்று திரளுங்கள்….என்னைப் போல் பலரும் மறுபடியும் அவரின் விஸ்வரூபம் காண ஆவலோடு இருக்கிறார்கள்.
-டாக்டர்.சுபா.
- ரங்கராட்டினம்
- சே.ரா.கோபாலனின் “ மை “
- தாகூரின் கீதப் பாமாலை – 10 குழம்பிப் போன பயணி !
- ”கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார்”
- குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
- முள்வெளி அத்தியாயம் -6
- சாதி மூன்றொழிய வேறில்லை
- பணம்
- வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 21
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 17) எழில் இனப் பெருக்கம்
- 2-ஜி அலைக் கற்றை ஊழலும் இந்திய ஜனநாயகமும்
- ரோஜா ரோஜாவல்ல….
- வேறோர் பரிமாணம்…
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –10
- விவேக் ராஜகோபாலின் “ குறுக்கு வழியில் ஒரு டிராபிக் ஜாம் “
- தங்கம் 4 – நகை கண்காட்சி
- பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23
- கடவுளும் கடவுளும்
- நூபுர கங்கை
- அக்கினி புத்திரி
- மறு முகம்
- ‘ மதில்களுக்கு அப்பால்……ஒரு நந்தக்குமாரன் ’
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தேழு
- முன்னால் வந்தவன்
- பள்ளிப்படை
- நியாயப் படுத்தாத தண்டனைகள்..!