கடைசித் திருத்தம்

மாரியம்மன் கோவில்தான் பொன்மலை ரயில்வே காலனிக்குள் இருக்கும் கடைசி பஸ் ஸ்டாப். ஆனால் பஸ்ஸைவிட்டு இறங்கிக் கோவில்பக்கம் நடக்காமல் நேராக வடக்குப் பக்கம் நடந்தால் வரும் மண் ரோட்டில் வலது புறம் திரும்பினால் இருக்கும் நான்கு வீடுகள் கொண்ட ப்ளாக்கில் கோடி…

குதிரை வீரன்

பாட்டன் காலத்தில் ஊரின் மையத்தை தனக்கான இடமாக‌ ஆக்கிரமித்துக் கொண்ட வரலாறில்லாத‌ குதிரைவீர‌ன் இன்றும் முன்கால்கள் தூக்கிய குதிரையின் மீது அமர்ந்திருக்கிறான். கருத்த அவன் தலையை வெள்ளைப்படுத்தும் போட்டியொன்றில் காகமொன்று கண்ணிழந்தும் பருந்தொன்று இறக்கை இழந்தும் அவ‌ன் பாதத்தைச் சிவ‌ப்புப்ப‌டுத்தின. புதிதாய்…

சோபனம்

எங்கெல்லாம் தேடுவீர் நீவிர் கவினை, அம்மங்கையே உம் பாதையாகவும் உம் வழிகாட்டியாகவும் இல்லாதபோழ்து எங்கனம் அவளை கண்டுகொள்ளப் போகிறீர்? உம் பேச்சுக்களின் நெசவாளியாக அவளே இருந்தாலொழிய, எங்கனம் அவளைப்பற்றி பேச இயலும்? “கவின் என்பது அன்பும், சாந்தமுமானது” என்பான், நொந்தவனும், காயப்பட்டவனும்.…

பஞ்சதந்திரம் தொடர் 37 38 – சோமிலகன் என்ற நெசவாளி

ஒரு நகரத்தில் ஒரு நெசவாளி இருந்தான். அவன் பெயர் சோமிலகன். விதவிதமான வர்ணங்களிலே அரசர்களுக்கேற்ற அரிய அழகிய ஆடைகளையே அவன் எப்போதும் நெய்து கொண்டிருந்தான். எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தபோதிலும், உணவுக்கும் துணிக்கும் வேண்டியதற்கு மேலாக அவனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. மோட்டா…

சங்ககிரி ராஜ்குமாரின் ‘ வெங்காயம் ‘

சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, புகழ் நட்சத்திரங்களின் படங்கள் மத்தியில் சிக்கி, நசுங்கி, வெளியேறிய படம். முரணாக, படம் சம்பந்தப்பட்ட அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்த வெங்காயம்! இயக்குனர் சேரன் அதைத் துடைத்து மறு வெளியீடு செய்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள். காவல்…

ஒரு வேண்டுகோள்:உதவிக் கரங்களை எதிர்பார்க்கும் ஞானாலயா

கடந்த மார்ச் மாதப் பிற்பகுதியில் ஏறத்தாழப் பத்து நாட்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் இலக்கம் 6, பழனியப்பா நகரில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்தில் அரிய புத்தகங்கள், பழம் பெரும் இதழ்களுடன் உறவாடி மகிழ்ந்து மிகுந்த பயன் அடைந்தேன். அங்கிருந்து பிரிய மனமின்றிப்…
வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5

வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5

தியானம் என்பது யாது? தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். இது இந்தியாவில் தோன்றிய யோகக்கலையை ஒத்த பயிற்சி ஆகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது. இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும்…

சுணக்கம்

வழக்கம் போல இன்றைக்கும் நான் ஆபீஸுக்கு லேட். என்ன பண்றது?.எனக்கு வாய்ச்ச மகராசி எட்டு மணிக்குத்தான் டிபன் தருவாள்.எட்டரை மணிக்குத்தான் லஞ்ச் பாக்ஸ் ரெடியாகும்.அதுக்கு மேல இந்தக் கூட்ட நெரிசலில் பஸ் பிடிக்கணும்.எங்கே?,கண்ணதாசன் நகரிலிருந்து வேளச்சேரி போவணும். ஆபீஸ் அமைதியாக இருந்தது.டைரக்டர்…

கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்

’நிலம் புகும் சொற்கள்’ கவிஞர் சக்தி ஜோதியின் முதல் படைப்பு. ஒரு பயணத்தை இவ்வளவு அழகாக எல்லோராலும் சொல்லிவிட முடியாது. அய்நிலங்களிலிருந்து எழுந்து வரும் சொற்கள் என்பதாய் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறினாலும்,அகநிலத்துள் புகுந்த சொற்கள் தான் கவிநிலத்தின் வரிகளாய் வெளி வந்திருக்கின்றன.வாசிப்பிற்குள்…