எம் சூர்யோதயம்

This entry is part 13 of 29 in the series 20 மே 2012

நாம் துவங்கிய தருணமதில்
திட்டம் ஏதும் தீட்டாமலே
இச்சை கொண்டேன் உம்மீது
ஆயினும் காதல் இல்லை
உம்மீது என்பதே சத்தியம்.
உமக்குள்ளே ஊடுறுவி
நுழைந்துவிட்டேன் இக்கணம்.

எம் மனமேடையிலிருந்து
முற்றிலும் சரிந்தேவிட்டானவன்.
உம்மைத்தவிர யாதொன்றும்
எம் சிந்தையுள் கொண்டிலேம்.
உம்மைப்பற்றிய எம்மொழியே
எம்மை கலங்கச்செய்கிறது.
பொய்மை ஏதுமில்லாத
வாய்மையே அனைத்தும்
உய்த்துணராத ஒப்புதலாகக்
கொண்டு விலகி விடாதே
ஆம், ஆம்
நீர் எம்மோடே இருக்க,
வேண்டி நிற்கிறேன் யான்
துப்பு ஒன்றும் உமக்குத்
தப்பாமல் தருகிறேன்
உரைப்பேன் உமக்கோர் இரகசியமே
உமக்காக வீழ்ந்தேன் யான்
செல்லமே?
விரும்புகிறேன் உம்மையே.

நீவிரே எம் சூர்யோதயம்!
பிராண்டி பீ

My SunShine

When we began

I had no plan

I did like you

This is true

But i didn’t love you

through and through

Now iv moved on

and from my mind

hes totally gone

Iv thought and thought

about nothing but you

I’v embraced and placed

these words in my mind

that i speak of you

Its nothing of a lie

It is all true

don’t take for granted

Dont run away

Yes, Yes

I’m requesting you to stay

now let me give u a clue

as i whisper to you

‘I’m falling for you’

And baby?

I L o v e Y o u

Y o u a r e m y S u n s h i n e
Brandy Bee

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம்வளவ. துரையனின் நேர்காணல்
author

பவள சங்கரி

Similar Posts

4 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    கவிதையின் ஆத்மா வாய் திறக்காமல் நம்மோடு பேசுகிறது. பாராட்டுகள் அழகிய தமிழாக்கத்திற்குப் பவள சங்கரி.

    சி. ஜெயபாரதன்.

  2. Avatar
    ganesan says:

    The tough job of translation has been done very nicely without affecting original kavidhai nayam…fantastic job!keep it up..

    1. Avatar
      பவள சங்கரி. says:

      அன்பின் திரு கணேசன்,

      தங்களுடைய ஊக்கமான வார்த்தைகளுக்கு நனிந்ன்றி.

      ந்புடன்
      ப்வ்ள் சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *