வரலாறும் நமது அடையாளங்களும் – ஜோ டி குருஸ்

author
13
0 minutes, 0 seconds Read
This entry is part 25 of 29 in the series 20 மே 2012

வரலாறும் நமது அடையாளங்களும் பற்றி ஜோ டி குருஸ் உரை

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூறு இரா.முருகன்ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்
author

Similar Posts

13 Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    பரதவர்கள் கடலம்மையின் குழந்தைகள். உடல் உரமேறிய வளர்ந்த குழந்தைகள். ஆனால் உள்ளத்தால் இன்னமும் குழந்தைகள். அவர்களின் குழந்தைமையைப் பயன்படுத்தி, அவர்கள் முகமதியரை எதிர்க்க வேண்டி வந்த போது, அவர்களின் பொருளாதாரக் காரணங்களுக்கு மட்டுமே உதவி கேட்டு வந்த போது அவர்களைக் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியவர்கள் போர்த்துகீசிய கத்தோலிக்கர்கள். ஆன்மிக நோக்கத்துக்காக அல்லாமல் உலகியல் காரணங்களூக்காக மட்டுமே மதம் மாற்றத்திற்குள்ளாக நேர்ந்த நம் குழந்தைகள் பரதவர்கள். ஆனால் மதத்தின் நோக்கம் ஆன்மிகமே எனச் சொல்லத் தேவையில்லை.
    ஜோ. டி. க்ரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு, கொற்கை ஆகிய இரு பெரிய நாவல்களையும் அவை வெளி வந்த போதே படித்து மகிழ்ந்திருக்கிறேன். இரண்டும் என்னிடம் உள்ளன. ஆழி சூழ் உலகு நாவலைத் தமிழினியும் கொற்கையை காலச்சுவடும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நல்ல காரியத்திற்காக அவர்களுக்கு நன்றி. பக்குவப்பட்ட மிகச் சிறந்த எழுத்தாளரான க்ரூஸ், மிகச் சிறந்த பேச்சாளராகவும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. ஹிந்து என்கிற வாழ்வியலை மிகச் சரியாகப்புரிந்துகொண்டிருப்பவர் க்ரூஸ்.
    நான் கர்நாடக மாநிலம் முழுமைக்குமான செய்தியாளனாக ஒரு செய்தி நிறுவனத்தில் பணியாற்றியபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தென் கர்னாடகப் பகுதியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா என்னிடம் சொன்னார்:
    ”நாங்கள் உண்மையில் பிராமணர்கள்தான், தெரியுமா? ஆனால் சேவியர் கொடுத்த அடி உதை சித்ரவதை தாங்காமல் எங்கள் முன்னோர்கள் கிறிஸ்தவராக மதம் மாற நேரிட்டது. ஆனாலும் எங்கள் அடையாளத்தை இழக்க விரும்பாமல் ஆல்வா என்கிற பின்னொட்டை விடாமல் பயன்படுத்தி வருகிறோம்!”
    இந்த மார்கரெட் ஆல்வாதான் மத்தியில் அமைச்சராஅக் இருந்து இப்போது ஆளுநராகவும் ஆகியிருப்பவர்.
    பக்குவப்பட்ட க்ரூஸ் துணிந்து வெளிப்படையாகப் பேசுகிறார். ஏனெனில் அவர் ஓர் எழுத்தாளர். மார்கரெட் ஆல்வா தனிமையில் மட்டுமே உண்மை சொல்லத் துணிவார். ஏனெனில் அவர் அரசியல்வாதி!
    க்ரூஸுக்கு என் பாராட்டுகளுடன்,
    அன்பன்,
    மலர்மன்னன்

  2. Avatar
    Kavya says:

    //பக்குவப்பட்ட க்ரூஸ் துணிந்து வெளிப்படையாகப் பேசுகிறார். ஏனெனில் அவர் ஓர் எழுத்தாளர். மார்கரெட் ஆல்வா தனிமையில் மட்டுமே உண்மை சொல்லத் துணிவார். ஏனெனில் அவர் அரசியல்வாதி!//

    மார்கரெட் ஆல்வா மட்டுமே சொல்லவில்லை. எல்லாக்கிருத்துவர்களுமே இந்துமதத்திலிருந்துதான் கிருத்துவமதத்திற்குச்சென்றவர்கள். அல்லது மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். It is a well known and accepted fact; and no one has denied it. No one has claimed that both Xians and Muslims had Hindu ancestors. கேரள் நம்பூதிரிகளே இன்றைய சிரியன் கத்தோலிக்கர்கள் என்பது ஒரு மஹாபெரிய இரகசியமன்று. அவர்கள் வரலாற்றிலே அவர்களே எழுதிக்கொண்டிருப்பது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட சிஎஸை நாடார்கள் இந்து மதத்தினர், கால்டுவெல்லாம் கிருத்துவர்களாக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் இரகசியங்களா?

    போர்த்துக்கீசியர்கள் வாள் முனையில் கோவாமக்களையும் கோவாக்கருகிலுள்ள பகுதியினரையும் மாற்றினர் என்பது எழுதப்பட்ட வரலாறு. அதிலென்ன மஹா பெரிய ரகசியம்? அதை ஏன் ஆல்வாவிடம் போய் தெரிந்து ஏதோ பெரும் இரகசியத்தை சொல்வது போல பீடிகை என்றெனக்குப்புரியவில்லை. பரதவர்கள் மட்டுமன்று; திண்ணைவாசகர்களும் குழந்தைகளோ?

    பரதவர்கள் கிட்டத்தட்ட ஒரு ட்ரைபல் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். அவர்கள் தெய்வங்கள் இன்று நாம் பார்க்கும் அ-பார்ப்பன தமிழர்களின் தெய்வங்கள்தான். பின்னர்தான் கிருத்துவர்களாக்கப்பட்டார்கள்.

    இதை ஒவ்வொரு பரதவனும் அறிவான். அவர்கள் வரலாறு அவர்களாலேயே எழுதப்பட்டு இருக்கிறது. அஃது இரகசியமாக இல்லை. இதில் எப்படி குரூஸ் வெளிப்படையாகப் பேசுகிறார் என்கிறார் மலர்மன்னன். இதில் என்ன மறைக்கவேண்டியிருக்கு? இதைச்சொன்னால் குரூசை எவரேனும் தாக்கிவிடுவார்களா? எனக்குப் புரியவில்லை.

  3. Avatar
    Kavya says:

    //ஆன்மிக நோக்கத்துக்காக அல்லாமல் உலகியல் காரணங்களூக்காக மட்டுமே மதம் மாற்றத்திற்குள்ளாக நேர்ந்த நம் குழந்தைகள் பரதவர்கள். ஆனால் மதத்தின் நோக்கம் ஆன்மிகமே எனச் சொல்லத் தேவையில்லை.
    //

    பரதவர்களைக் குழந்தைகள் எனச்சித்தரிப்பது அவர்களை அவமானப்படுத்துவதாகும். அவர்கள் வளர்ந்தவர்கள் இப்போது. நீங்கள் மட்டும்தான் சிந்திக்கத் தெரிந்தவர்கள்; அவர்கள் வெகுளிகள் என்பது இன்றைய நோக்கில் ஒரு அவமானப்படுத்தலே.

    அவர்கள் ஒருகாலத்தில் போர்த்துக்கீசிய ஆட்சியாளர்களால் மதமாற்றம் செய்யப்பட்டார்களென்றால் அஃது அப்போது. அன்றைய உலகில் எம்மக்களையும் எவரும் கைப்பாவைகளாக்கிவிடலாம் பரதவர்களை மட்டுமன்று. ராமசாமியும் திராவிடச்சாயலுடைய தமிழறிஞர்களும் சொல்லியதென்ன? பிராமணர்கள் பிறதமிழர்களைத் தங்கள் கைப்பாவைகளாக்கி பிராமணியத்தால் தொல்தமிழ்கலாச்சாரத்தைப் போத்தினார்கள் என்று சொல்லவில்லையா? அதன்படி அனைத்துத்தமிழர்களும் அன்று ‘குழந்தைகள்’ என்றுதானே வருகிறது? இன்றும் அவர்கள் குழந்தைகளா?

    மதத்தின் நோக்கம் ஆன்மிகமே என்று அடித்துச்சொல்ல முடியாது. ஏழைகளுக்கு இறைவன் ரொட்டித்துண்டிலே அவதாரம் செய்கின்றான் என்று காந்தி மட்டுமன்று, அனைத்து நல்லோராலும் ஏற்கப்பட்டவொன்று. மக்கள் சேவையே மகேசன் சேவையென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை அனேக இந்துப்புராணக்கதைகள் தெளியப்படுத்துகின்றன.

    இந்துமதத்திலிருந்து பிராமணர்கள் என்ன எடுத்துக்கொண்டார்கள்? வெறும் ஆன்மிகமா? இல்லை. ஒரு பிரமாதமான கலாச்சாரத்தை உருவாக்கிப்பேணி அதைக்காத்து இன்று அதற்காக திண்ணையிலும் சண்டை போடுவது தெரியவில்லையா? தமிழ்ப்பார்ப்பனர்களுக்கென்று ஒரு தனியான கலாச்சாரமில்லை. அது வைதீக இந்துமதத்தை அடிக்கல்லாக வைத்து மேலே கட்டப்பட்ட ஒன்றே. வைதீக இந்துமதத்தை ஏற்றுக்கொள்ளதவன் தமிழ்ப்பார்ப்பனராக முடியாது. அவர் நாத்திகராக இருக்கலாம். ஆயினும் அக்கலாச்சாரத்தை ஏற்கும் போது தன்னையறியாமலே அம்மதக்கூறுகளையும் அடைப்படைகளையும் ஏற்றவராகிறார். இன்னிலை பிறருக்கு இல்லை.

    அப்படி உங்களுக்கு மதவழிக்கலாச்சாரமிருக்க, ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் பரதவர்களுக்கு மட்டுமே ‘மதம் என்பது ஆன்மிகமட்டுமே’ என்பது ஒரு சூழ்ச்சிப்பிரச்சாரமே. அவர்களுக்கும் மதம் ஒரு மதம் சார்ந்த கலாச்சார வாழ்க்கையை நல்க வேண்டும். பிராமணிய இந்து மதம் அதைத்தர மறுத்தது. அல்லது அதனால் முடியவில்லையென்று கன்யாகுமரி அம்மன் கதையில் தெரிந்தோம். எனவே கிருத்துவ போர்த்துக்கீசியர்கள் மதம், மதத்தோடு இணைந்த கலாச்சாரத்தை பரதவர்களுக்குத் தந்தார்கள். கிட்ட நெருங்க முடியாத அவர்களை மணப்பெண்களாக ஏற்றார்கள். அவர்களின் குழந்தைகள் இன்றும் போர்த்துக்கீசிய பெயரைவைத்துக்கொண்டிருக்கிறார்கள். டி.குரூஸ் என்ற பெயரே போதும் இங்கே ஒரு எ.காவிற்கு. மதம் வெறும் கடவுள் சமாச்சாரமென்று எவராவது சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே.

  4. Avatar
    Kavya says:

    கன்யாகுமரி அம்மனைப்பற்றி நான் எழுதியதை ஆசிரியர் போடமல் தடுத்துவிட்டார். மீண்டும் எழுதுகிறேன். போடவில்லையென்றால் அவர் மலர்மன்னனைத் தன் விருப்பம்போல பேசவிட்டு தவறான அபிப்பிராயங்களை படிப்போர் மனங்களில் உருவாக்க முயற்சி செய்கிறார் என்றே வரும்.

    கடல் மாதாவின் குழந்தைகள் என்கிறார் மலர்மன்னன். உண்மைதான். கன்யாகுமரி அம்மன் கடல் மாதா. குமரிக்கடல் மீனவர்கள் கடலுக்குச் செல்லுமுன் கடல் மாதாவை வணங்குவர். இன்றும் அம்மாவட்டம், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்கள் அம்மாதாவை இயேசுவின் தாயான மேரியாகப் பார்த்து வணங்குகிறார்கள். அம்மாதாவுக்குப் பல பெயர்கள். உவரியில் செல்வ மாதா. தூத்துக்குடியில் சஹாய மாதா. இடிந்தகரையில் அமலோற்பவ மாதா. அனைவரும் மேரிதான்.

    அதே மீனவர்கள் ஆதிகாலத்தில் பலபல கிராம தேவதைகளை வழிபட்டோரே கிருத்துவர்கள் ஆவதற்குமுன். அப்படி குமரி மீனவர்கள் வழிபட்ட கடல் மாதா இன்று நாம் பார்க்கும் கன்யாகுமரி அம்மன். இதற்கெல்லாம் ஆதாரம் கேட்பதா? கடலோரத்தில் உள்ள தெய்வத்தை ஆதிகாலத்தில் எவர் வணங்கினார் என்பதற்கு ஆதாரம் வேண்டுமா? காட்டுக்கோயிலகளில் உறையும் தெய்வத்தை வேடர்களும், க்டலோரத் தேவதைகளை மீனவர்களும் வழிபட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் வேண்டுமா?

    அத்தெய்வம் எப்படி இன்று மீனவர்களால் வணங்கப்படவில்லை? இன்று அவ்வம்மனுக்கு வைதீக முறைப்படியே பூசனைகளை பிராமணப்பூஜாரிகள் செய்கிறார்கள். இன்று மீனவர்களின் தெய்வமாக அந்த அம்மன் இல்லை. இது எப்படி நடந்தது என்று நான் சொன்னதை ஆசிரியர் தடுத்துவிட்டார். அஃதெல்லாம் முன்பே தெரிந்த கதை.

    நான் சொல்லவந்த கருத்தென்னவென்றால், பரதவர்கள் கிருத்தவர்களாக காரணம் போர்த்துக்கீசிய ஆட்சியாளர்கள் மட்டுமன்று. பிராமணீயமும் காரணம் என்பதே. அவர்களின் தெய்வம் பறிக்கப்பட்டது மட்டுமன்றி, அவர்கள் நெருங்கித் தம்மை இணைத்துக்கொள்ளும்படி இந்துமதம் இல்லை என்பதே. அல்லது இல்லாமல் செய்யப்பட்டதென்பதே. பிராம‌ணீய‌ம் சுத்தத்தைப் பேணுவ‌து. அஃதெப்ப‌டி உழைத்து அழுக்கேறிய‌ உட‌ம்புக‌ளைக்கொண்ட‌ மீன‌வ‌ர்க‌ளை அருகில் ஏற்றுக்கொள்ளும் என்றெழுதினால் த‌டை செய்வ‌தா? த‌லித்துக‌ளும், பர‌த‌வ‌ர்க‌ளும் ஏன் பிற‌ம‌த‌ங்க‌ளுக்குத்தாவினார்க‌ள் அல்ல‌து ம‌த‌ மாற்ற‌த்துக்கு இல‌குவாக‌ ஆளாகினார்க‌ள். அத‌ற்கு பிராம‌ணீய‌த்தின் மேட்டிமைத்த‌ன‌மும் கார‌ண‌ம் என்றால் த‌டை செய்வ‌தா?

    அனைத்தையும் எப்ப‌டி போர்த்துக்கீசிய‌ர்க‌ளும் கால்டுவெல்லும் மிசுனோரிக‌ளும் செய்தார்க‌ள் என்று எப்ப‌டி சொல்ல‌ முடியும்? மல‌ர்ம‌ன்ன‌ன் அதைத்தானே திண்ணையில் எழுதி ந‌ம்ப‌வைக்க‌ முயல்கிறார். நான் அது த‌வ‌று அல்ல‌து முழு உண்மைய‌ன்று என்றால் த‌டை செய்வதா?

    எல்லாருக்கும் அவ‌ர‌வ‌ர் ப‌க்க‌ நியாய‌ங்க‌ளை எடுத்துவைக்க‌ இட‌ம் தாருங்க‌ள். இல்லையென்றால் பொய்க‌ள் உண்மைக‌ளாக‌ நாட‌க‌ம்போடும்.

  5. Avatar
    Kavya says:

    “நமது அடையாளங்கள்” எவை என்று கேட்கிறேன்.

    நமக்கு அடையாளங்கள் நிரந்தரவாக கொடுக்கப்பட்டனவா? அப்படி கொடுக்கப்பட்டவைகளை நாம் விரும்பி ஏற்றுக்கொண்டோமா அல்லது நம்மீது திணிக்கப்பட்டனவா? திணிக்கப்பட்டிருந்தால் ஏன் அப்படி செய்யப்பட்டன? உப்புக்குச் சப்பை என்று குழந்தை விளையாட்டில் வரும். அப்படி அடையாளங்கள் திணிக்கப்பட்டால் அவைகளை நமக்குச் சந்தர்ப்பம் வரும்போது தூக்கியெறிவதில் என்ன தவறு? அவை நம் இனமக்களுக்கும் நம் சுய கவரத்திற்கும் பங்கமாகும்போது நம்மைப் பிறரைவிடத் தாழ்ந்தவர்கள் என்று சூழ்ச்சிகரமாக ஆக்கும்போது அவைகளை காறித்துப்பித் தூக்கியெறிவதில் என்ன தவறு? அப்படி நம்மால் முடியாதபோது, இன்னொருவன் வந்து அதை நமக்குச் செய்யச்சொல்வதில் என்ன தவறு?

    அப்படித்தூக்கியெறிந்தால் நம் அடையாளங்களைத்தொலைத்தோம் என்று நகையாடுவதா? மனிதன் நிரந்தரமானவனா? இல்லை அவனின் அடையாளங்களா? ஜாதிப்பிண்டங்களா நீங்கள்? சொல்லுங்கள். அடையாளங்களின் பிண்டங்களா நீர்?

    அடையாளங்கள் நிரந்தரமானவையல்ல என்பது மட்டுமல்ல; அவை போலிகளாகவும், வலிமைமிக்கோர் நம்மை தந்திரமாக சிறைப்படுத்த தந்திரமாகப் போடும் வலைகளாகவும் இருக்கலாமே? அப்படித்தான் என்று தெரிந்த பின் தூக்கியெறிந்தால் அவர்கள் மானமிக்க மக்கள். மானம் மனிதனுக்கு அழகு.

  6. Avatar
    Robert Kunasekaran says:

    சிஸ்டர் காவ்யாவுக்கு தோத்திரம். ஜே.டி. குரூஸ் போன்ற வழி தவறிய ஆடுகளை குறித்து நாம் கவலை கொள்ள தேவையில்லை. தேவனுடைய மகிமையாலே இந்திய தேசம் முழுமையும் தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அதிகாரத்தி அத்தனை பீடங்களிலும் நமக்கு வேண்டியவர்களே அமர்ந்திருக்கிறார்கள். எனவே கவலை வேண்டாம்.

  7. Avatar
    john milton fernando says:

    ஜோ டி குருஸ் சொல்லுவது முற்றிலும் உண்மை. ஜோ டி குருஸ் ஒரு இடத்தில் இன்னும் நான் கத்தோலிக்க கிறிஸ்தவனாக இருக்கிறார் என்ன்று சொல்வது யாருக்கு பயந்து,நான் (ஜான் மில்டன் பர்னாண்டோ சொல்கிறேன்)உண்மை புரிந்து கொண்ட நாட்கள் முதல் நான் தமிழனாக மட்டுமே இருகிறேன் நான் கத்தோலிக்க கிறிஸ்தவனாக அல்ல ஆகவே உண்மையை உரக்க சொலுங்க

  8. Avatar
    Vijay Pandian.A says:

    Very true words.Still Kanyakumari Bhagavathi Amman Temple Flag was given by a Parathavar Family of kanyakumari,They have the first right on the temple.Also 1936 Travancore census states that the temple was built by King Villavarayer of Kanyakumari,approx 800 years ago. And the Tiruchendur Car festival rights of first pull of the rope was with the Jathi Thalaivamore of Korkai,which was later given up by Parathavar Thalaivar under the influence of Christian Missionaries.Almost all the coastal temples were once a Parathavar temple.And also the Pandiyan Deity Meenatchi itself is a Parathavar Deity.Parathavar lost themselves in their conversion to christianity.”Senjotru kadan theerkka seratha idam sernthu vanjathil veeznthu,intru yengal adayangalayum,yengal kula muthalviyayume maataridam koduthuvitu nirkkirom”

  9. Avatar
    patankatti says:

    Dear Kavya,
    Bharathar were treated respectfully when they were hindus. Meenatchi ie (rule of fish) is ‘kula theivam’ for
    Bharathar tribe. Bharathar established the Pandiyan Empire
    Hosted their fish flag and worshiped their ‘kula theivam’
    in Madurai. please read JeyaMohan blogs to more information about this.
    now a days, Nadar say they are pandiayan. thevar and
    devandra kula vellalar say they are pandiyans.
    but any one can say they are the pandiyans only Bharatha Vamsi can proof with records, kalvettu and the letter of communication between the Royal houses.
    Nadars orgin is not tamil, they are Elzavahs of Kerala. Maravars or only foot soldier and one or two jamins are theirs.
    Bharathars first King Kulashekara pandiyan was sworn in and established the first capital in Korkai.
    which is the sea port at the mouth of the Tamirabarani.
    later because of Tsunami like destruction , it was moved
    to Madurai.
    Pandiyan Fish flag , bear two fishes, they name of the fish is ‘kayal’ which is a sea fish not a river or inland waterbody fish.
    Bharathars have a separate entrance in the Meenakshi Temple because of the regal status.
    even after converting to christianity, the Bharathar
    Jati Thalivan has the right to pull rirth the Tiruchendur Car.
    Kavya told, Brahmin were ill treating the Bharathar so they convert to Christianity. but the Jati Thalaivan send a letter to Chief Priest of Trichendur , that he cannot
    pull the car and the Chief Priest send the letter to the
    Pandiyapathy palace ( resident of bharatha king ) after that only Tuticorin Matha Car was built.
    but the Tuticorin car still has the parrot in one side of the car to denote the Royal orgin of Bharatha and the bird of Meenakshi Amman.
    Bharathar never disrepect the hinduism. even today eating the cow is a sin in Bharatha society because still
    they follow the hindu tradition.
    only the christian missionaries to project the xavier as saint, to the european people that he converted people that these are oppressed by the Hindus and he helped them.
    but the truth is Bharathas were fought with Muslims and in the fight Portuguese supplied the guns and materials with the condition to covert to christianity.
    so Bharathas left with no choice but to embrace it.
    so Kavya should read about Bharatha history before make
    any wrong statements about Bharaths.
    it is nothing wrong in calling us Fisherman, but we are the tribe who formed the Pandiyan empire and we have
    records. so we never hated Hinduism and Hindus never illtreated us at any time. that is the fact.

    thanks,
    patankatti

    1. Avatar
      crossway jesul says:

      அழுத்தமான, துணிந்த பதிவு. மறக்கடிக்க படுகின்ற உண்மையும் கூட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *