தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்

This entry is part 29 of 41 in the series 10 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நேற்றுக் கடந்த இரவை நான்
மீட்டு வருவ தெப்படி ?
வீணாய் விழிகள்
ஏன் கண்ணீர் துளிகள் சிந்தும் ?
இந்த அங்கியை அணிவாய்
என் நண்பனே !
இந்தப் பூமாலை பாரமாய்த்
தெரியும் !
ஏகாந்தியாய்க் காத்திருக்கேன்
படுக்கையில்,
இம்மாதிரி இரவு
கடந்து செல்லட்டும் !

நான் வந்திப்பது யமுனா
நதிக் கரைக்கு
நண்பனை தேடி !
இன்னும் வந்திலன் அவன் !
இதயத்தில்
வீணாய் நம்பிக்கை கொண்டு
நான் அதிகமாய் நேசித்தேன்
இரவு விடியும் போது
கருகிய முகம், களைத்த பாதம்
கவன மில்லா மனம் !
விருப்ப மற்ற எந்த வீட்டுக்கு நான்
திரும்பவும் போகிறேன் ?

அந்தோ மறப்பது நல்லது
சிந்த வேண்டும் ஏன்
இன்னும்
வீணாய் விழிநீர்த் துளிகளை ?
நான் போக வேண்டும்
அந்தோ !
ஏன் திரும்பி நோக்குது
என் இதயம் ?
காலை வந்தது
ஓலைக் குடில் ஓரத்தில் !
காத்துக் கிடக்கிறேன் நெடு நேரம்
மூடனைப் போல் !
என் வசந்த காலம்
இப்பிறப்பில்
தப்பிச் சென்றது
இச்சமயம் !

+++++++++++++++++++
பாட்டு : 247 தாகூர் தன் 32 ஆம் வயதில் எழுதியது (ஜூன் 29, 1893).
+++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 4, 2012

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -12திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    jayashree shankar says:

    மதிப்பிற்குரிய திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு,

    கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லாமே…
    அருமையாக படைக்கிறீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

    இந்த “விருப்பமற்ற இல்லம்..” அவளின் உள்ள உணர்வுகளை
    அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறீர்களே…தாகூர்

    ///என் வசந்த காலம்
    இப்பிறப்பில்
    தப்பிச் சென்றது///// வரிகளில் வாழ்க்கையே வந்து விட்டது.

    கவிதைகள் அற்புதமான வடிகால்.
    வணக்கத்துடன்,
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புமிக்க ஜெயஸ்ரீ ஷங்கர்,

    நீங்கள் திண்ணையில் எழுதும் சிறுகதை ஒவ்வொன்றும் மெல்லுணர்வில் பெருங் கருத்தைச் சொல்லாமல் சொல்லும். சிறுகதைச் செல்வியான உங்கள் அரிய பாராட்டைப் பெற ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்று நான் பெருமை அடைகிறேன்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *