ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)

This entry is part 26 of 41 in the series 10 ஜூன் 2012


++++++++++++++++++++++
காதலின் முணுமுணுப்பு
++++++++++++++++++++++

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(ஈரேழ் வரிப்பா -23)

+++++++++++++++++++++++++
காதலின் முணுமுணுப்பு
+++++++++++++++++++++++++

போதிய மேடை ஒத்திகை செய்யாத நடிகன் போல்
தன் வசனத்தை மறப்பான் நாடக மேடைப் பயத்தால்
பயிற்சி பெறாதவன் பெரிதாய் உணர்ச்சி வசப்படுவான்
சரளப் பேச்சு தளரும் தன்னுணர்வைக் கூறும் போது
ஆகவே, நம்பிக்கை இன்மையால் சொல்ல ஒளிப்பேன்
காதல் சம்பிர தாயத்தின் பூரண உரிமைத் திருவிழா
காதல் நெருக்கடியில் என் வலிமை பார மாகிறது.
என்னெழுத்து நூல்கள் உனக்கு நேரே எடுத்துரைக்கும்
மௌனத் தூதுவர் என் இதயக் குரலை முழக்குவர்
காதலுக்கு யார் வாதிடுவார் ? வெகுமதி தேடுவார் ?
வாய்ச் சொல்லை மீறித் தன்னைக் காட்டி யுள்ளார் ?
படிக்கக் கற்றுக் கொள் மௌனக் காதல் எழுதியதை
கண்கள் மூலம் கேட்பது காதலின் நளினப் பாடம்.

+++++++++

SONNET 23

As an unperfect actor on the stage
Who with his fear is put besides his part,
Or some fierce thing replete with too much rage,
Whose strength’s abundance weakens his own heart.
So I, for fear of trust, forget to say
The perfect ceremony of love’s rite,
And in mine own love’s strength seem to decay,
O’ercharged with burden of mine own love’s might.
O, let my books be then the eloquence
And dumb presagers of my speaking breast,
Who plead for love and look for recompense
More than that tongue that more hath more express’d.
O, learn to read what silent love hath writ:
To hear with eyes belongs to love’s fine wit.

++++++++++++++

Sonnets 18-25 are often discussed as a group, as they all focus on the poet’s affection for his friend.

Sonnet Summary : 23


Sonnet 23 is by William Shakespeare, and it’s written to his wife. He saw her, but didn’t express his love for her in person as well as he wishes he had, so he now tries to make up for that with a Sonnet to her. ‘Thing’, and its associated words, suggests the visit turned out to be primarily sexual, leaving the Poet worried he was not expressive enough of love in talking to her. It’s a long way from London to Stratford, with visits too few and far between.

It might be advisable for scholars to review the argument that a mark on an official document is necessarily a sign of illiteracy. Maybe so, but maybe not. It’s generally taken that Mrs. Shakespeare couldn’t read, because she signed with a mark. However, this Sonnet is written to her.

Alternatively, the Sonnet can be interpreted as expressing regret that she can’t read, and by writing the Sonnet, the Poet is writing “lines” for himself to read to her on his next visit. That was Shakespeare’s occupation, after all, the writing of lines to be spoken aloud. This Sonnet may be a “speech” for himself as a “player” the next time his wife is his “audience.” The interpretation of it being a “player” Sonnet does not imply any insincerity, by the way. He wrote speeches for players very seriously, as his job, to make money and feed himself and his family.

++++++++++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) Junr 5, 2012
+++++++++++++

Series Navigationநெஞ்சு பொறுக்குதில்லையேபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் திரு ஜெயபாரதன்,

    ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலே அன்று முதல் இன்று வரை ஒரு தனிப்பட்ட கவன ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது..தங்களின் அழகான மொழிபெயர்ப்பு அதற்கு தூபம் போட்டு மணமேற்றுகிறது. நளினப் பாடம் போன்ற அழகான சொற்பிரயோகம் சுவையை மேலும் கூட்டுகிறது… அருமை.

    அன்புடன்
    பவள சங்கரி

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புமிக்க பவள சங்கரி

    உங்கள் வேலைப் பளு நெருக்கத்துக் கிடையே இச்சிறு தமிழாக்கக் கவிதையை இத்தனை நுணுக்கமாக எப்படி திறனாய்வு செய்ய முடிந்தது என்று நான் பெருவியப் படைகிறேன்.

    அன்புடன்
    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *