ஒருவழியாக நான் வெளியிட்டு உள்ள ”திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை’ புத்தகங்கள் எட்டு அட்டைப்பெட்டிகளில் சென்னையிலிருந்து பெங்களூர் தனியார் பார்சல் ஆபிசுக்கு வந்து அவற்றை என்னுடைய இல்லை. . . இல்லை. . . என்னுடைய மகளுடைய இல்லத்திற்கு கொண்டு வந்து சேர்த்தாயிற்று. இவற்றை எவ்விதம் விற்கப்போகிறேன் என மலைத்து மோட்டுவளையை இல்லை . . . . இல்லை. . . கூரையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். . டெலி ஃபோன் ஒலித்தது.
கோவையிலிருந்து என் நண்பன் திருக்குறளைப்பற்றி ஏகப்பட்ட புத்தகங்கள் வந்தாகி விட்டது. இனி அதில் எழுதுவதற்கு ஒன்றுமில்லை ஆகவே நான் எக்காரணம் கொண்டும் எழுதக்கூடாது என்று என்னை எச்சரித்தவன் அழைத்தான்.
பேச்சு மீண்டும் அதே திசையில். . . நான் கூறினேன் ”நண்பா எனக்குத்தெரிந்தவரை திருக்குறளில் நூற்றுக்கணக்கான குறட்பாக்கள் திருவள்ளுவரின் உள்ளத்தை பிரதிபலிக்கும் வகையில் புரிந்துகொள்ளப்படவில்லை. ஆகவேதான் நான் இப்புத்தகத்தை எழுதினேன் என்றேன்.
இதையே திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டு இரு. . . நண்பன் சலித்துக்கொண்டான்.
எனக்கு சட்டென்று ஓர் யோசனை தோன்றியது. எம்ப்பா உன் கண் எதிரில் திருக்குறள் புத்தகம் இருக்கிறதா என்று கேட்டேன்.
எதிரில் எப்படி இருக்கும்? வேண்டுமானால் அலமாரியிலிருந்து எடுக்கிறேன்.
சரி எடு.. . . எடுத்து கண்ணைமூடிக்கொண்டு ஒரு பக்கத்தை விரல்களால் பிரி . . .
பிரித்தாயிற்று பிறகு என்ன செய்வது?
அது எந்த அதிகாரம்?
மன்னரைச் சேர்ந்து ஒழுகல்.
சரி திரும்பவும் கண்ணைமூடிக்கொண்டு ஒரு குறளின் மீது உன் வலது கை ஆட்காட்டி விரலை வை.
வைத்தாயிற்று . . .
சரி இப்போது கண்ணைத்திற அது என்ன குறள்?
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது 693 .
இக்குறளுக்கு என்ன பொருள்?
யார் கூறி உள்ள பொருள் வேண்டும்? என்னிடம் கலைஞர், பாவாணர் முவ ஆகியோருடைய உரைகள் உள்ளன. இவற்றுள் எவ்வுரை வேண்டும். நண்பன் கொஞ்சம் நக்லாகக் கேட்டதுபோல இருந்தது.
ஒன்றன்பின் ஒன்றாக அம்மூவருடைய உரையையும் கூறு
முதலில் கலைஞர் கூறி உள்ளதைப் படிக்கிறேன்
ஓ தாராளமாகப்படி
தமக்கு மேலேயுள்ளவர்களிடமிருந்து தம்மைக்காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக்கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படிச்செய்துவிட்டால் அதன்பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவதை எளிதான காரியமல்ல.
சரி முவ என்ன சொல்லி இருக்கிறார்?
முவ . . இதோ படிக்கிறேன் கேளு
(அரசனைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால் அரிய தவறுகள் நேராமல் காத்துக்கொள்ளவேண்டும். ஐயுற்றபின் அரசனைத் தெளிதல் எவர்க்கும் முடியாது.
பாவாணர் எழுதிய திருக்குறள் தமிழ் மரபுரை வைத்திருக்கிறாயா?
என்னப்பா இப்படிக் கேட்கிறாய்? நீதானே பிடிவாதமாக வாங்கித்தந்தாய். பத்திரமாக வைத்திருக்கிறேன்.
சரி அவர் என்ன கூறி உள்ளார்?
அமைச்சர் தம்மைக்காக்க விரும்பின் கடும்பிழைகள் தம்மேல் வராமற் காத்துக்கொள்க அவற்றை நிகழ்ந்தனவாக கேள்விப்பட்டு அரசர் ஐயுற்றபின் அவரைத் தெளிவித்தல் எத்துனைச் சிறந்தவர்களுக்கும் அரிதாம்.
சரி நான் இப்போது சொல்வதைப் பொருமையாகக் கேள்
இந்த அதிகாரம் எதைப்பற்றியது?
மன்னருடன் அலுவலகக் காரணங்களுக்காவும் பிர காரணங்களுக்காகவும் ஒருவன் பழகும்விதத்தைப்பற்றிக்கூறும் அதிகாரத்தில் அரசன் அமைச்சனையோ அல்லது பிற அலுவலர்களையோ தண்டிப்பதைப்பற்றி எதற்காகப் பேசவேண்டும்.
நண்பனிடமிருந்து சத்தமே இல்லை.
என்னப்பா பேசமாட்டேன் என்கிறாய் என்றேன்.
நீயே கூறு . . . நண்பனின் பேச்சில் ஒரு அடைப்பு வெளிப்பட்டது.
ஆகா! சற்றே திண்டாடி நிற்கும் அவன் தற்போது நன்றாகக் காதுகொடுத்துக்கேட்பான் . . அதன்பிறகு நான் பேசி முடிக்குவரைக்கும் அவன் ஒன்றுமே பேசவில்லை.
நான் பேசலானேன். . .
மன்னரைச்சேர்ந்து ஒழுகல் என்ற அதிகாரத்தில் வரும் அரசன் ஒரு வித்தியாசமான அரசன். அதனால்தான் அதிகாரமே எழுந்துள்ளது என நிணைக்கிறேன். இகல் வேந்தன் என்பது அவனைப்பற்றிய மிக முக்கியமான வர்ணனை(691) இகல் என்றால் மன மாறுபாடு என்று பொருள் கூறி உள்ளார்கள் அறிஞர் பெருமக்கள். ஆனால் நான் இகலென்றால் சகிப்புத்தன்மை இன்மை எனப்பொருள்கண்டு உள்ளேன். அபொருள் சரியானதென்று என்னுடைய புத்தகத்தில் நிறுவியும் உள்ளேன். ஆகவே சகிப்புத்தன்மை இல்லாத ஒருஅரசனிடம் பணிபுரியநேர்ந்தால் எவ்விதம் பழகவேண்டும் என்பதைக்கூறுவதுதான் அதிகாரத்தின் நோக்கம்.
சகிப்புத்தன்மை அதாவது பிறரை அவர்களது உயர்வை மனதளவில் ஏற்றுக்கொள்ளும் திறன் இல்லாத அரசன் ஒரு பொருளை அல்லது ஒரு விசயத்தை காட்டாக வேட்டையாடுவதில் மிக ஆர்வம் கொண்டவனாகவும் ஓரளவு திறமைகொண்டவனாகவும் இருக்கும் அரசனிடத்தில் பணிபுரியும் அமைச்சன் அரசனை விட வேட்டையாடுவதில் அதிகமான திறமையாளனாக இருக்கிறாரென்று வைத்துக்கொள்வோம் அப்போது அவர் அவ்வாசையை போற்றாது விடுவதென்பது மிகவும் சிரமம் அந்த நிலையிலும் அவர் அவ்வாசையை விடவேண்டும் ஏனெனில் சகிப்புத்தன்மை இல்லாத அரசனால் தன்னைவிட தன்னுடைய அமைச்சன் சிறப்பானவனாக வேட்டையாடுவார் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. ஆகவே அவர் வேட்டையாடக்கூடாதென்றே எதிர்பார்ப்பான் அல்லவா?
சரி கருத்து புதுமையாகவும் அழகாகவும்தான் உள்ளது ஆனால் குறட்பாவில் எந்த சொற்களிலிருந்து இக்கருத்தைப் பெற்றாய்? போற்றின் அரியவை போற்றல் என்றால் என்ன பொருள்? நண்பன் நல்ல ’ஃபார்மில்’ இருப்பது தெரியவந்தது.
போற்றின் அரியவை என்றால் மிக மிக அரிதாக யாராவது அவ்வாறு செய்து இருப்பார்களேயன்றி சாதாரனமாக அவ்விதம் நடைபெறாது என்று பொருள். அதாவது ஒருவன் தன்னுடைய திறமையை மறைத்துவைத்துவிடுவது என்பது மிக மிக அரிதாக நடக்கக்கூடிய செயல் என்று பொருள். அடுத்ததாக போற்றல் என்றால் போற்ற வேண்டாம் அதாவது செயல்படுத்தவேண்டாம் என்று பொருள் அல் என்னும் விகுதி முன்னர் கூறியதை அழித்துவிடும் ஒன்று என்பதறகு 820 வது குறளில் ஓம்பல் என்றால் கடைப்பிடிக்கவேண்டாம் என்ற பொருள் கூறப்பட்டுள்ளதை நினைவுகூர்க என்றேன்.
தலையைச்சுற்றுகிறது. தயவுசெய்து உரையை மட்டும் கூறு விளக்கத்தை எல்லாம் நீயே வைத்துக்கொள்.
அவன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்னதான் பெரிய விளங்கியாக நான் பேசியிருந்தாலும் எனக்கு மண்டையைப்பிய்த்துக் கொண்டது உண்மைதான். அப்பாடா நண்பன் வழிக்கு வந்துவிட்டான் இனி உரையை என்னுடைய புத்தகத்தில் இருந்து கட கடவென்று படித்துவிடவேண்டியதுதான் என்று முடிவு செய்த நான் அவ்வாறே செய்தேன்:
மன்னருக்கும் தனக்கும் விருப்புள்ள ஒன்றில், காட்டாக வேட்டையாடுதலில் அமைச்சர் அது மிகச் சிரமமான காரியம் என்றாலும் ஒரு போதும் ஈடுபடக்கூடாது. ஏனெனில் சகிப்புத் தன்மையற்ற அரசன் அமைச்சரின் செய்கையைக் கண்டு கடுப்படைந்து விட்டால் பிறகு அவனைத் தேற்றல் மிகவும் கடினமான செயலாகும்.
நண்பர்களே இனி மேலே நான் என்ன சொல்வேன் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும். இதுவும் ஒரு கற்பனைதான்.
ஆனால் தின்னை அன்பர்களிடமிருந்து புத்தகம் கேட்டு ஒருவரும் எனக்கு எழுதாத நிலையில் மீண்டும் மீண்டும் நான் இவ்விதம் எழுதுவதன் மூலம் திருக்குறளைப்பற்றி ஒரு புது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்பேன். ஆகையால் இந்த அறுவையிலிருந்து தப்பவேண்டுமெனில் உடனே என்னை கீழே கண்டமுகவரியில் தொடர்பு கொள்ளவும் அல்லது புத்தகம் அனுப்புவதற்கு ஆணையிடவும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.
Dr..R.Venkatachalam A19 Sitarampalya Main road Graphite India Junction
Behind SAP Lab Bangalore 48 560048
புத்தகத்தின் விலை ருபாய் 285/-டிராஃப்ட் அல்லது அட் பார் செக் அல்லது மணியார்டர் அனுப்பவும்.என்னுடைய செலவில் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். விபிபி யில் அனுப்ப இயலாது. ஒருபுத்தகத்திற்கு ஏறக்குறைய ருபாய் 57 ஆகிறது. கட்டுபடியாகாதல்லவா?
- முள்ளாகும் உறவுகள்
- சங்கர் தயாளின் “ சகுனி “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 31
- உமர் கய்யாமின் ருபாய்யத் – தமிழில் தங்க ஜெயராமன்
- நினைவுகளின் சுவட்டில் – 90
- சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்
- எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 19 மனத்தில் வசந்தம்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-7)
- மனநல மருத்துவர்
- முள்வெளி அத்தியாயம் -14
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)
- கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 25)
- பழையபடி மரங்கள் பூக்கும்
- திருக்குறள் விளம்பரக்கட்டுரை
- திருடுப் போன கோடாலி
- குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்
- தப்பித்து வந்தவனின் மரணம்.
- துருக்கி பயணம்-7
- தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !
- மஞ்சள் கயிறு…….!
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18
- நினைவுகள் மிதந்து வழிவதானது
- காசி
- இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- சைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி
- குரோதம்
- நினைவு
- “காலம் தீண்டாத கவிஞன்…….கண்ணதாசன்”
- “செய்வினை, செயப்பாட்டு வினை“
- பஞ்சதந்திரம் தொடர் 49
- நான் ‘அந்த நான்’ இல்லை
- நீட்சி சிறுகதைகள் – பாரவி
- நிதர்சனம் – ஒரு மாயை?
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து
- இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்
- அவனுடைய காதலி
- எனது வலைத்தளம்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58
- கம்மங்கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று ( தெய்வசிகாமணியின் கானல்காடு பற்றிய ஓராய்வு )
- எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம் – 2