தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !

This entry is part 12 of 32 in the series 1 ஜூலை 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என் இதயக் கூட்டை விட்டு
எழுந்து நிற்பது எது ?
இனிய சோக மொடு,
ஏங்கும் சுதியில் பாடுது
இரங்கத் தக்க
தனிப் பறவை ஒன்று !

அடர்ந்த நிழல்கள் ஊடே
படர்ந்த மயக்கம் வசப்படுத்தும் !
நெருக்கிய இலைக் காடுகள்
நடமாட்ட மின்றி
புறக்கணிக் கப்படும் !
மௌனச் சூழ்வெளியில்
பந்தல் கொடிக் கப்பால்
தன்னந் தனியாய் யாரோ
வந்து நிற்கிறார் !

இரவு திணர வைக்கும்
முகில் திரண்டு
ஆழ் உறக்கத்தில் !
முதிர்ந்த மரத்தின் கிளைகள்
ஆழ் தூக்கத்தில்
கண் மைத் திட்டுகளை
தாறு மாறாக்கும் !

முகிலில் மறைந்து  உள்ளன
நட்சத் திரங்கள் !
மங்கிப் போன வானமும்
தூங்கி விழுகிறது !
சந்திரனும் களைத்துப் போய்
காணப் படுகிறது !
திசை தெரியாமல் எனக்கு
திக்குமுக் காடுது !
முடங்கி விழி ஒன்று தூக்கத்தில்
மூழ்கப் போகுது !

+++++++++++++++++++
பாட்டு : 299 தாகூர் தன் 34 ஆம் வயதில் எழுதியது (நவம்பர் 1895).
+++++++++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 26, 2012

Series Navigationசூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடுபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-8)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *