பத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா

author
0 minutes, 3 seconds Read
This entry is part 22 of 32 in the series 1 ஜூலை 2012

ரொறொன்ரோ சுயாதீன கலைத் திரைப்படச் சங்கத்தின் பத்தாவது குறுந்திரைப்பட விழா கடந்த சனிக்கிழமை (23-06-2012) ஸ்காபரோ சிவிக் சென்ரறில் வெற்றிகரமாக நடந்தேறியது. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான விழாவின் முதல் அங்கமாக, இரு விசேட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘பாலை’ ஒரு அரங்கிலும், கனடிய தயாரிப்பான ‘ஸ்ரார் 67’ பிறிதொரு அரங்கிலும் காண்பிக்கப்பட்டன. முடிவில் இவ்விரு திரைப்படங்களையும் பார்வையிட்ட இரசிகர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில், இவை குறித்த கேள்வி-பதில்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.  ‘ஸ்ரார் 67’ திரைப்பட இயக்குநர் கதி செல்வகுமார் நேரிலும் ‘பாலை’ திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் தென்னிந்தியாவிலிருந்து (ளுமலிந) காணொளியாடலிலும் கலந்துகொண்டனர்.
பிற்பகல் 2:30 மணிக்குப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சுமார் 80 குறுந்திரைப்படங்கள் இப்போட்டிக்கென பல்வேறு நாடுகளிலிருந்தும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் 13 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதற்கென நியமிக்கப்பட்ட ஒரு நடுவர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட 10 குறுந்திரைப்படங்களே அங்கு பார்வையாளர்களுக்கென்று திரையிடப்பட்டன.
மாயச்சிறகு (இந்தியா) செயற்கைக் கருச்சேர்க்கை, T.2006 (கனடா) வன்செயலும் நட்பும், றுயவநச (கனடா) தண்ணீரின் அருமை, கண்ணீர் தேசம் (பிரான்ஸ்) ஈழப் போர்க்காலத் துயரச் சம்பவம், ஆரளiஉ கழச நுலநள (பிரான்ஸ்) தாயின் கண்பார்வைக்கென மகன் படும் துன்பம், ஊடல் (பிரான்ஸ்) முதிய தம்பதியினருக்கு இடையிலான ஓர் ஊடல், ஆநவசழ (கனடா) பல்லின மக்கள் மத்தியிலான முரண்பட்ட பார்வை, கருக்காய் (பிரான்ஸ்) பொறுப்பற்ற தந்தை மீதான வெறுப்புணர்வு, நகல் (பிரான்ஸ்) பிள்ளைப் பராமரிப்பாளரின் தாய்மை உணர்வு, போராளிக்கு இட்ட பெயர் (பிரான்ஸ்) இயக்க மோதல்களின் பின்விளைவு என்பனவற்றைக் கருப்பொருட்களாகக் கொண்ட குறுந்திரைப்படங்களே காண்பிக்கப்பட்டன.
பத்தாவது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் பின்வருமாறு:
சிறந்த குறுந்திரைப் படம் – நகல் (பிரான்ஸ்)
சிறந்த இரண்டாம் குறுந்திரைப் படம் – மெட்ரோ (கனடா)
சிறந்த குறுந்திரைப் படம் (விமர்சகர் விருது) – போராளிக்கு இட்ட பெயர்
சிறந்த இயக்குநர் – பொன் தயா (நகல்)

சிறந்த படத்தொகுப்பாளர் – கஜபரன் சோமா (T.2006)
சிறந்த திரைக்கதை – பிரேம் கதிர் (கருக்காய்)
சிறந்த ஒளிப்பதிவு – ஜனேசன் (ஊடல்)
சிறந்த இசை – ஸ்ரெபனொ கைஸ்ட் ளுவநகயழெ புரளைவ (Music for Eyes)
சிறந்த நடிகன் – சதா பிரணவன் (போராளிக்கு இட்ட பெயர்)
சிறந்த நடிகை – பொன். தயா (நகல்)
ஜெனட் வினிதா (மாயச்சிறகு), ப்ரஷன் (நகல்) மற்றும் ‘கருக்காய்’ குறும்படத்தில் நடித்த சிறுவனுக்கும் அவர்களது சிறந்த நடிப்புக்கென விசேட விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவின் ஓர் அங்கமாக, வாழ்நாள் கலை இலக்கியச் சேவைக்கான அஃகேனம் விருது, ‘குறமகள்’ என்று அறியப்படும் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
உலக சினிமா குறித்த, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களது பயன்மிக்க சொற்பொழிவுடன் அன்றைய நிகழ்வுகள் இனிதே நிறைவேறின.
– க. நவம்

 

 

Series Navigationவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறுஅஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *