எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் (பாகிஸ்தான் தினசரி) தலையங்கம்.
ஜூலை 3, 2012
இன்றைக்கு பாகிஸ்தானில் தலையாய விவாத தலைப்பு என்னவாக இருக்குமென்றால், அது நிச்சயமாக தீவிரவாதமாகத்தான் இருக்கும். இது மதரஸாக்களை நடத்தும் உலேமாக்களாக இருந்தாலும் சரி, தாராளவாத குடிமக்களாக இருந்தாலும் சரி, இதுதான் முக்கிய பேச்சாக இருக்கிறது. இதே முஸ்லீம் தீவிரவாதம்தான் உலகத்தின் மற்ற பகுதிகளிலும் தலையாய விவாதமாக இருக்கிறது. ஐரோப்பாவுக்கு செல்லும் முஸ்லீம்களும் அமெரிக்கா வாழ் முஸ்லீம்களும்சந்தேகத்தின் காரணமாக கைது செய்யப்படுகிறார்கள். ஆசியாவிலும் முஸ்லீம் பெரும்பான்மையும் முஸ்லீம் சிறுபான்மையும் தீவிரவாத சிந்தனைகளுக்கே செல்கிறார்கள்.
இந்த தீவிரவாதத்தின் சமீபத்திய செய்தி, யுனெஸ்கோ உலக கலாச்சார சொத்து என்று அறிவித்த புராதன டிம்பக்டூ நகரில் நடந்த கலாச்சார அழிப்பு. அல்குவேதாவின் சலாபிஸ்ட் ஆதரவாளர்கள் எவ்வாறு பாகிஸ்தான் சூபி தர்க்காக்களை அழிக்கிறார்களோ அதே போல மாலி நாட்டின் சூபி துறவிகளின் தர்காக்களை அழித்திருக்கிறார்கள். சென்ற வருடம் எகிப்திலும் லிபியாவிலும் இதே போல சூபி தர்க்காக்கள் அழிக்கப்பட்டன. இவை இரண்டுமே சமீப காலத்தில் ஜனநாயக ஆதரவு அரபு வசந்தத்தின் மூலம் அரசு மாற்றம் கண்டன. யுனெஸ்கோ அந்த தர்க்காக்களை அழிக்கவேண்டாம் என்று கேட்டுகொண்டதற்கு, இந்த தீவிரவாதிகள், “நாங்கள் மதத்துக்குத்தான் கட்டுப்படுவோமே தவிர, உலக கருத்துக்களுக்கு கட்டுப்பட மாட்டோம். கல்லறைகளை கட்டுவது இஸ்லாமுக்கு மாறானது. ஆகவே எங்கள் மதம் எங்களுக்கு ஆணையிட்டதை பின்பற்றி, இந்த தர்க்காக்களை அழிக்கிறோம்” என்றனர். அவர்களது அமைப்பான, அன்ஸார் தினி, மாலி நாட்டினர், அல்ஜீரியர்கள், நைஜீரியர்கள் ஆகிய பல்வேறு நாட்டினரை கொண்டது.
அல்குவேதாவின் இன்னொரு வன்முறை பயங்கரவாத கிளையாக தோன்றியிருப்பது போகோ ஹராம். இது நைஜீரிய கிறிஸ்துவர்கள் மீது பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற வாரம் அல்குவேதாவின் சோமாலிய உருவமான அல் ஷபாப் வடக்கு கென்யாவில் உள்ள சர்ச்சுகள் மீது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலை மேற்கொண்டது. சோமாலியாவுக்கு அருகாமையில் இருக்கும் கென்யா நகர சர்ச்சுகளில் 40 தனித்தனியான தாக்குதல்களில் 14 கிறிஸ்துவர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது படுகாயமடைந்தார்கள். சென்றவருடம் பெப்ருவரியில் அல்ஷபாப் அல்குவேதாவுடன் இணைவதாக அறிவித்தது. கூடவே கிழக்கு ஆப்பிரிக்காவின் முஸ்லீம் இளைஞர் மையம் தானும் அல்குவேதாவில் இணைவதாக அறிவித்தது.
தீவிரவாத தன்மையற்றதாக அறியப்பட்டிருந்த இந்தோனேஷியாவும் இப்போது வன்முறைக்கும் சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கும் இரையாகியுள்ளதாக தெரிகிறது. இந்த வருடம் மே மாதம், ஜகார்த்தாவில் ஒரு சர்ச்சை ஒரு கும்பல் தாக்கியது. அதன் மீது கற்களையும், மூத்திர பைகளையும் வீசியெறிந்தது. அந்த சர்ச்சுக்கு வருபவர்களிடம் கொலை மிரட்டலையும் விடுத்தது. அன்றிலிருந்து சுமத்ராவில் அசே பிரதேசத்தில் அரசாங்கமே , கட்டடம் கட்ட அனுமதி இல்லை என்று பொய்க்காரணம் காட்டி, சுமார் 16 சர்ச்சுகளை மூடியுள்ளது. 2007இல் வெளிவந்த அறிக்கை, அதற்கு முன் 3 வருடங்களில் சுமார் 108 நிகழ்வுகளில் சர்ச்சுகள், இந்து கோவில்கள் மீது தாக்குதலும் அவை மூடப்பட்டதும், சில நேரங்களில் வன்முறை கும்பல்களால் முழுக்க இடித்து தள்ளப்பட்டதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவில் இன மத குழுக்களுக்கு இடையேயான நுண்ணிய சமநிலை கடந்த வருடம் ஏராளமான சர்ச்சுகள் மீது நடந்த தாக்குதல்களால் அதிர்வடைந்தது. இதற்கு காரணம், மலேசிய உச்ச நீதி மன்றம் ஹெரால்ட் என்ற கத்தோலிக்க வாரப்பத்திரிக்கை, கடவுளை குறிக்க அல்லா என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியதுதான். மலேசியாவில் மலாய் முஸ்லீம்களை கிறிஸ்துவர்களாக மதம் மாற்றுவதாக அச்சம் இருக்கிறது. மலாய்கள் நாட்டில் 60 சதவீதத்தினர். அரசியலமைப்பு சட்டத்தின்படி அவர்கள் அனைவருமே முஸ்லீம்களாக மட்டுமே இருக்க முடியும். இந்த தாக்குதல்களால், அச்சமடைந்த உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பை தானே நிறுத்தி வைத்தது.
பாகிஸ்தானிலும் அல்குவேதாவின் தோழர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. டெஹ்ரீக் ஈ தாலிபான், லஷ்கார் ஈ ஜங்வி, ஜுண்டுல்லா (Tehreek-i-Taliban (TTP), the Lashkar-e-Jhangvi (LeJ) and the Jundullah.) ஆகியற்றின் உறுப்பினர்கள் நாடு முழுவதும் பரந்திருக்கிறார்கள். இவர்கள் கராச்சி நகரில் அதிகம்பேர் இருக்கிறார்கள். இவர்கள் சூஃபி கல்லறைகளை தாக்கி அழிக்கிறார்கள். ஜண்டுல்லா அமைப்பு ஈரானுக்குள் ஷியாக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. பலுச்சிஸ்தானத்தில் குவத்தா நகரில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹஜாரா மக்கள் மீது லஷ்கர் ஈ ஜங்வி தாக்குதல் நடத்தி கொல்கிறது. ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆசியாவரைக்கும் எல்லா நாடுகளிலும், முஸ்லீம் பெரும்பான்மைகள் சகிப்புத்தன்மையற்ற திசைக்கும், தீவிர அடிப்படைவாதத்துக்கும் செல்கிறார்கள். பாகிஸ்தான் அதற்கு நல்ல ஒரு உதாரணமாக இருக்கிறது. ஏனெனில் இதுவே அல்குவேதாவின் மையப்புள்ளியாகவும் இருக்கிறது. இது யேமன் நாட்டிலும் ஈராக்கிலும் மிகுந்த செல்வாக்கோடு இருந்து படுகொலைகளை நிகழ்த்துகிறது.
பயங்கரவாதம் மூலமாக உலகம் முழுவதும் ஜிகாத் நடத்த நல்ல உள் வருமானம் உள்ள ஒரு நாட்டை ஆளவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் மட்டுமே இதற்கு தகுதியை பெற்றிருக்கிறது. காரணம் உள்ளே மிகுந்த பலவீனமாக இருக்கிறது. வெளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக உடைந்துபோயிருக்கிறது. அரசியல் கட்சிகளோ ஒருவரது அரசாங்கத்தை மற்றவர் கவிழ்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். பெரும்பாலான பாகிஸ்தானிகளோ, அரசாங்கத்தின் வலிமை குறைந்துகொண்டே போவதை பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறார்கள்.
Published in The Express Tribune, July 3rd, 2012.
http://tribune.com.pk/story/
- அம்மா என்றால்….
- காக்க…. காக்க….
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2
- நினைவுகளின் சுவட்டில் (92)
- ’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’
- ‘துப்பாக்கி நாயுடு’: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர்
- வாழ்வியலில் வரலாற்றில் சிலபக்கங்கள் -20
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 27)
- அம்மாவாகும்வரை……!
- எல்.கே.ஜி சீட் வாங்குவது எப்படி?
- கோவை இலக்கியச் சந்திப்பு
- நிகழ்வுப்பதிவு போரூர் த.மு.எ.ச.வின் குறும்படத் திரையிடல்
- ‘ஒலிம்பிக்ஸ்’ க்கு முன்பே ஓர் ஒப்புதல் வாக்குமூலம்
- முள்வெளி அத்தியாயம் -16
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- தாகூரின் கீதப் பாமாலை – 21 நிரம்பும் நின் நறுமணம்.
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-9)
- உகுயுர் இனக் கதைகள் (சீனா)
- கள்ளக்காதல்
- தமிழக முஸ்லிம்களின் வாழ்வியல் உருவாக்கம்
- மோட்டுவளை
- சேட்டைக்காரக் கறுப்புப் பெண் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
- நேற்றைய நினைவுகள் கதை தான்
- தீவிரவாதம் ஆக்கிரமித்த முஸ்லீம் மனம்
- கங்குல்(நாவல்)
- சிரியாவில் என்ன நடக்கிறது?
- ராஜமௌலியின் “ நான் ஈ “
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 33
- அறிவிருந்தும் கல்லூரியில் சேரமுடியாதவர்களுக்கு….
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1
- கவிதைகள்
- கவிதைகள்
- கவிதைகள்
- ஈழத்து கவிதைப் புலத்தில் ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள் !“கனவுகளுக்கு மரணம் உண்டு” தொகுப்பை முன்வைத்து” !)
- அறைக்குள்ளேயே வெகுதொலைவு-II (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழு
- குறிஞ்சிப் பாடல்
- புள்ளியில் விரியும் வானம்
- சுப்புமணியும் சீஜிலும்
- பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்