அருந்ததி ராயின் – The God of Small Things தமிழில்…-> சின்ன விஷயங்களின் கடவுள் <-

This entry is part 15 of 35 in the series 29 ஜூலை 2012

படிக்கிறோம் என்று எழுதுபவர் பலருண்டு… படிப்பார்கள் வேறுவழியில்லை என்று எழுதுபவரும் பலருண்டு…
எழுதுவோம் , படிப்பார்கள் என்ற நிலையிலும் பலர் உண்டு.
ஆனால், எழுத்தை தங்களது எண்ணங்களின் ஊற்றாய், காட்டாறாய், நதியாய், ஆறாய், வாய்க்காலாய் கொண்டு மனங்களில் பெரும் உணர்ச்சி பிரவாகத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு இலக்குகூட இன்றி … ஆனால் அப்பேற்பட்ட அற்புத மனநிலையை பலருக்கு தரக்கூடய எழுத்துக்களை மிக மிக சிலரே எழுதுகிறார்கள்.
தமிழில், கதைக்களம், கதாபாத்திரங்கள் , வர்ணனை, வசனம் தாண்டி மனோத்த்துவ, நிலையிலும் , மனஓட்டங்களில் உள் வெளி முரண்பாடுகளின் வெளிப்பாடுகளுடனும், வந்த கதைகள் மிகச் சிலவே.
எனக்கு தெரிந்து அவற்றில், மரப்பசு, கோபல்லகிராமம், ஒரு புளியமரத்தின் கதை, தாஜ்மகாலுக்குள் சில எலும்புக்கூடுகள், நாய்கள், கடற்புரத்தில், ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், எனக் கொள்ளலாம்…
சமீபகாலங்களில் தமிழில் அந்த வகையறா வந்ததாகத் தெரியவில்லை…. ஆனால், அப்பேற்பட்ட ஆழ்மன நினைவுகளின் வெளிப்பாடு தொடரும் சம்பவங்களில் வெளிப்படும் நிலையுடன் படைக்கப்பட்டுள்ள அற்புத இலக்கியம், அருந்ததி ராயின் , The God of Small Things. தமிழில் அது ,காலச்சுவட்டால் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புச்சாமியால் தமிழ் இலக்கிய உலகில் ஆழமான சுவட்டைப் பதித்துள்ளது.
இன்றைய எழுத்துலகில் படைப்பும் சரி, வாசகர்களை சேர்வதும் சரி இலகுவாகப்பட்டிருக்கிறது.
தாளில் அடித்து அடித்து எழுதியகாலம், பின் தட்டச்சால் மாறிய போதும் அடித்து எழுதுதல் இம்சையாக இருந்தது. பின், கணணியுடன் தமிழில் எழுதும் போது திருத்தல், கூட்டல் கழித்தல் இலகுவானது. அதனால், எழுத்து அதிகமானது. இணையப் சஞ்சிகைகள், பிளாக்குகள் எண்ணங்களும் படைப்புகளும் வெளிவரும் களமாயின.
இதில் பல பிளாக்குகள், பப்ளிக் வாஷ் பேஷினை விட அசுத்துமான வாந்தியெடுக்கும் பாத்திரம் போலானது…
சிலரோ ஐ.டி –யில் வேலை, ஆங்கிலப் புத்தகங்கள் படித்திருந்த அனுபவம் போதுமென்ற நினைப்புடன எழுதிதள்ளுகிறார்கள். மறக்காமல் தங்களை சுஜாதாவுடன் ஒப்பிட்டுக் கொள்வார்கள்.
பக்கம் பக்கமாய் சரளாமாய் எழுதித் தள்ளி விடுவார்கள். நம்பர் ஆஃப் பேஜ் அதிகமென்றால் பெரிய எழுத்தாளர் நாமும் எனும் நினைப்புடன்…
கொஞ்சம் பணம் போட்டு ஆங்கிலத்திலோ, இந்தியிலோ தங்கள் படைப்பு ( !) மொழி பெயர்த்து விடுவார்கள்…
அதிக பட்ச அவர்களின் சாதனையென்பது , சில சினிமாக்களுக்கு கதையோ வசனமோ எழுதியிருப்பார்கள்.
இவர்கள், அக்ரஹாரத்தில் கழுதையோ, உதிரிப்பூக்களோ, கிழக்கே போகும் ரயிலோ, காதல் கொண்டேன், மைனா, நான் கடவுளோ படைத்திருக்க மாட்டார்கள்…
ஆனால், பேச்சு மட்டும் ஆளை விட கிரீடம் அதிகமான ஃபீலிங்குடன்…
இந்த மாதிரி எந்த ஒரு விஷமும் இன்று அருந்ததி ராய் படைத்த புதினம் “சின்ன விஷயங்களின் கடவுள்”
அவரது சொந்த அனுபவமா..? உண்மைச் சம்பவமா..? என்பதெல்லாம் தாண்டி ஆழ் மன இருள் / வெளிச்சம் எப்படி தினச் சம்ப்வங்களின் திசையை மாற்றுகிறது அல்லது ஏறிகிறது… எப்படி ஒரு ஜீவனின் இருத்தல் சுற்றியிருக்கும் ஜீவராசிகள் அத்தனையாலும் உந்தப்படுகிறது என்பது போன்ற நிலையில் கதை சொல்லப்பட்டுள்ளது… இல்லை இல்லை அது என்ன குழாய் தண்ணியா…? காட்டாறு… கதை அப்படியே வந்து கொண்டேயிருக்கிறது.
அசையும் காற்றில் ஆடிடும் உயர் மரக்கிளை போல் அங்குமிங்கும் நம்மை சில சமயம் தூக்கிப் போடுகிறது…
இலக்கிய ரசனை என்னும் சிறகுகள் நம்மில் இருந்தால் அதில் ஊஞ்சலாடலாம்..
இது விமர்சனமல்ல, முன்னூட்டமோ பின்னூட்டமோ இல்லை.
சொல்லப்போனால், எனக்கு பெர்க்மேனின் ஒயில்ட் ஸ்ட்ராபெரிஸ், தி பியூட்டிபுள் மயிண்ட், இன்செப்சன் போன்ற படங்கள், புளியமரத்தின் கதை, பிஞ்சுகள், மரப்பசு போன்றவை என்ன அதிர்வுகளை ஏற்படுத்தியதோ அதே அதிர்வு இந்த புத்தகம் படித்த போது எனக்கு கிடைத்தது… ஜஸ்ட் பகிர்கிறேன்..
நம்ம ஊரில் ஒரு பெண் எழுத்தாளர் கூட இவர் தரம் இல்லாதது ஏன் ..?
சரி, எழுதுகிறார் அருந்ததி…
…………..ஒரு கதையைச் சிதறடிப்பது ரொம்பச் சுலபமான காரியம்.ஒரு சிந்தனைத் தொடரை அறுப்பது, பீங்கான் பொருளை ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு செல்லும் போது தடுக்கி விடுவதைப் போல ஒரு கனவை உடைத்தழிப்பது………
.
…….சர்ச்சுக்குள் நாற்றமடிக்கும் எறும்புகள் இருக்கக் கூடாது… அவற்றிடமிருந்து உயிர் பிரியும் போது மிக லேசான் மொரமொரப்புச் சத்தம் கேட்டது. குட்டிப் பையன்கள் அப்பம் சாப்பிடுகிற மாதிரி அல்லது பிஸ்கட் மெல்லுகிற மாதிரி…
.
………….அவருடைய வாழ்க்கையின் மிகப் பெரிய பின்னடைவு அவர் புதிதாகக் கண்டுபிடித்த ஒரு விட்டல் பூச்சிக்கு அவருடைய பெயர் வைக்கப்படவில்லை என்பது…
………..ஏற்கனவே எஸ்டேட்டில் ஹோலிக்கைக் கவர்ந்திருந்த தேயிலை பறிப்பவர்கள் பலருக்கு வெள்ளைத் தோலோடு கந்தல் உடை குழந்தைகள் இருந்தன. அதிகாரிகள் வட்டத்திற்குள் ஹோலிக் நுழைவது இது தான் முதல் முறை…….
………அவன் குடி வெறியை குழந்தைகள் மீதும் காட்ட ஆரம்பித்த போது பாகிஸ்தான் யுத்தம் ஆரம்பித்தது………..
—அவருடைய உடல் எரியூட்டப்பட்ட போது வங்கத்திலிருந்த எல்லாக் குத்துச் சண்டை வீரர்களும் வந்திருந்தனர். உட்குழிந்த தாடைகளும் உடைந்த மூக்குகளும் கொண்ட துக்கக் கூட்டம்…
…கடல் ரகசியங்களுடன் நகரத்தில் திரியும் மீனவனைப் போல…..
….சுண்டக் காய்ச்சிய பழச்சாற்றில் பெக்டின்னைச் சேர்க்கவும், சில (5) நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்……
……அமெரிக்கப் போலீஸ்காரன் டீன் –ஏஜ் பையனொருவனைக் கையில் விலங்கிட்டுஒரு போலீஸ்காரில் அடைத்துக் கொண்டிருந்தார்கள்……..
…ஒரே நாளில் விஷயங்கள் மாறிவிடக் கூடுமென்று அவர்களுக்குத் தெரியும். அதில் அவர்கள் சரியாக இருந்தனர்……
……………..வாழைப்பழ ஜாம்: பழுத்த வாழைப்பழத்தை மசிய அரைக்கவும்.. கெட்டிய மஸ்லின் துணியால்…………..
……….தீண்டத்தகாதவனின் சாபங்களில் ஒன்று தீண்டுவார்களுக்கென்று எதிர்பார்க்காமலிருப்பது………
……இந்தப் பரவன்களுக்கென்றே ஒரு தனி நாற்றம் இருக்கும்………………

மேலுள்ளவை அதில் வரும் சில வரிகள்.
உங்களை ஆச்சரியப்படுத்தும், மனதை சிலிர்க்க வைக்கும் என பல விடயங்கள் இருக்கின்றன.
படைப்பின் ஆக்கம் படைப்பாளியின் பார்வையில் இருக்கிறது…
படைப்பின் புரிதல் வாசிப்பவனின் அனுபவத்திலும் அவன் கொண்ட தீர்மான வடிவங்களிலும் கலந்து இருக்கிறது.
”சின்ன விஷயங்களின் கடவுள்” ஒரு அற்புத அனுபவத்தை உங்களுக்குத் தரும்.
பிகு:
அருந்ததி ராய் தனக்கு புக்கர் பரிசில் வந்த தொகை , ராயல்டி தொகை அனைத்தையும், நர்மதா விஷய போராட்டத்திற்கு தந்து விட்டார், பார்க்க http://en.wikipedia.org/wiki/Narmada_Bachao_Andolan
……..
இக்கதையில் தனது போட்டியாளப் பத்திரிக்கையில் ஒரு மரணச் செய்தி வருவதாக கதையில் ஒரு சம்பவம் வந்திருக்கும் அதனால், அருந்ததிராய் புத்தகத்தைப் பற்றி நாம் எழுதக்கூடாது என்று நினைக்காமல் செய்தி போட்ட தி ஹிந்து பாராட்டப்பட வேண்டி பத்திரிக்கை.
ஒரு வேலை கதையெழுதிய காலத்தில் டில்லியில் மத்திய அரசில் வேலை பார்த்திருந்தால் இந்த புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்காலம்.
புக்கர் தான் கிடைத்தது… ☺
புத்தகம் விவரத்திற்கு http://www.kalachuvadu.com/
…….

Series Navigationமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36ஜிக்கி
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

2 Comments

  1. Avatar
    ananthan says:

    சொல்ல வந்த எல்லா விஷயங்களையுமே கோவிந்த் கோச்சா சொதப்பி வைத்திருக்கிறார். மட்டுமல்ல, எதைப் பற்றியும் சிறிதளவு புரிதல்கூட இல்லாமல் மிக அற்புதமாக சொதப்பியிருக்கிறார். குறிப்பாக, கடைசி வரியை மட்டும் சொல்கிறேன். சாகித்ய அகாதமி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், புக்கர்தான் கிடைத்தது.

  2. Avatar
    sureshkumar says:

    சின்ன விஷயங்களின் கடவுள் ஏனோ என்னை சிதற செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *