தமிழ் ஸ்டுடியோவில் அம்ஷன் குமார் அவர்களின் விரிவான நேர்காணல்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 2 of 36 in the series 12 ஆகஸ்ட் 2012

படைப்பாளிகள் –  அம்ஷன் குமார்

கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

 

வணிகம் சில நேரம் தன் கொடூர ரூபத்தை வெளிப்படுத்தி சில படைப்புகளையும் படைப்பாளிகளையும் மறைத்துவிடுகிறது. ஆனால் காலம், தன் பெருவெளியில் அவர்களை மீண்டும் கொண்டு வந்து இச்சமூகத்தின் முன் நிறுத்திவிடுகிறது. மக்களுக்கான படைப்புகளை மறைப்பது தன்னாலும் சாத்தியமில்லை என்று காலம் உணர்ந்தே இருக்கிறது.

ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்திருக்கிறான். தன் படைப்புகளை பற்றி மற்றவர்கள் பேச வரும்போது, அவன் குதூகலிக்கிறான். இயக்குநர் அம்ஷன் குமாரை நான் சந்திக்க சென்ற போது, அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே ‘என் படங்கள் ஏதேனும் பார்த்திருக்கிறீர்களா’ என்பதுதான். ‘பார்த்திருக்கிறேன்’ என்று நான் சொன்னவுடன் பெருமகிழ்ச்சியுடன் கேள்விகளை எதிர்கொண்டார். ஒருவரின் பதில்களின் மூலமே அவர்களது ஆளுமையை உணர முடியும். நான் உணர்ந்த அம்ஷன் குமாரின் ஆளுமையை நீங்களும் உணருங்கள்…
முதன்முதலில் எப்போது சினிமாவை நோக்கி ஈர்க்கப்பட்டீர்கள் ?

திருச்சியில் நேஷனல் கல்லூரியில் வணிகவியல் படித்தேன். கல்லூரி படிக்கும் போதே இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. இலக்கியத்தைத் தாண்டி, திரைப்படங்கள் மேலும் அப்போது ஆர்வம் எழுந்தது. ஆனால் இலக்கியம் மற்றும் திரைப்படங்கள் குறித்த ஒரு குழு கல்லூரியில் அமையவில்லை. கல்லூரிக்கு வெளியே ஒத்த வயதுடைய ஒத்த ஆர்வமுடைய 10 நண்பர்கள் அனைவரும் இணைந்து, ‘திருச்சி வாசகர் அரங்கு’ என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தினோம். அந்த அரங்கில் அப்போது வரும் சிறுபத்திரிக்கைகளான கனையாழி, ஞானரதம் போன்றவற்றில் வரும் சிறுகதைகளை பற்றிய விவாதங்கள் நடைபெறும். ஒரு எழுத்தாளரின் சிறுகதை புரியவில்லையென்றால், அதையே மீண்டும் மீண்டும் படித்து விவாதிக்கும் பழக்கம் அங்கே இருந்தது. அதே போல், ஒரே எழுத்தாளரின் கதைகளை தொடர்ந்து நான்கைந்து வாரங்களும் படிப்போம், விவாதிப்போம். இந்த காலகட்டங்களில் எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் படிப்போம். புதுமைப்பித்தன், ஜானகிராமன், அசோகமித்திரன் என்று அனைவரின் எழுத்துக்களையும் படிப்போம். அப்போதிருந்தே அசோகமித்திரன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது.
பின்பு நாங்களே ‘இன்று’ என்று ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து அதில் கதைகளை எழுதினேன். அதன் பின், தினமலரில் என் கதைகளை வெளிவர ஆரம்பித்தன. பின் ஒரு நாள் அசோகமித்திரனை சந்தித்த போது அவர், ‘எழுத்து வேண்டாம். என் புத்தகங்களே வாங்குவதற்கு ஆள் இல்லாமல் எலி கடித்துக்கொண்டிருக்கின்றன. நீ சீக்கிரம் எழுதுறத விட்ருவ பாரு’ என்றார்.

பின்பு ‘திருச்சி சினி ஃபோரம்’ என்ற அமைப்பு துவங்கினோம். ‘மெட்ராஸ் பிலிம் சொசைட்டி’க்கு பிறகு, தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது திரை அமைப்பு இதுதான்.

இதன் மூலம் உலகின் பல மூலைகளில் எடுக்கப்பட்ட படங்களை பார்ப்போம். ஒவ்வோர் படங்களை பற்றியும் நான் ஒரு தாளில் குறிப்பு எழுதி வைத்துக் கொள்வேன். பின்பு நண்பர்கள் அந்த படங்களைப் பற்றியும் விவாதிப்போம். பின்பு இது போன்ற நல்ல திரைப்படங்களை விலைக்கு வாங்கி, திருச்சி ஜீபிடர் தியேட்டரில் திரையிட்டோம். டிக்கெட்டுகளை எல்லாம் நாங்களே மக்களிடம் கொண்டு சென்று விற்று, சில காலம் இது போன்ற நல்ல படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம். ஆனால், மக்களிடம் இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை.

அதன் பிறகு நண்பர்கள் கூடி ஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுவோம். அப்போது, திரைப்படங்களைப் பற்றியோ, முக்கியமாக திரைப்பட ரசனை பற்றியோ புத்தகங்கள் நிறைய வராது. நாங்களே திரைப்பட ரசனை குறித்து விவாதிப்போம்.

கல்லூரி காலத்திற்கு பிறகும் இது போன்ற முயற்சிகள் நடந்தனவா ?

ஆம். இதற்கிடையில் ஆங்கில இலக்கியம் பயின்று, கோவையில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கும் நண்பர்களோடு இணைந்து ‘தர்ஷனா பிலிம் சொசைட்டி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். அங்கும் நல்ல படங்களை திரையிடுதல், விவாதித்தல் தொடர்ந்து நடைபெற்றது. அதன் பின் சென்னை வந்து எழுத ஆரம்பித்தேன். சினிமா மேல் இருந்த ஆர்வம் முதலில் எழுதுவதில்லை இல்லை.

மேலும் படிக்க: http://thamizhstudio.com/creators_31.php

 

Series Navigationமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா இலக்கியப் போட்டிகள்நினைவுகளின் சுவட்டில் – 97
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *