வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …

This entry is part 6 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

இரவின் நிழல்கள் கோலமிடுகின்றன

அவைகளின்,
 விரல் பிடித்தே வெளிச்சங்கள்
கதிர்களின் கிரகணங்கள் படர
மீண்டு வரா தொலைவில்
புதைந்தன கனவுகளின் வாத்சல்யம்
நிழலின் படங்கள் ஒருபோதும்
கலைவதோ அல்ல கலைக்க படுவதோ  இல்லை …
எங்காகிலும் ஒளிந்து ஒவ்வொரு
நிகழ்விலும் தலைப்படும்
அவை …
தர்கிக்கும்  ..
உருகி நிற்கும் தருணங்கள்
உறையும் நிகழ்வுகள்
இவைகள்  கிரகண பொழுதில்
ஒளிகள் அற்று இன்னும் சுற்றி
 சூர்யனை தகர்க்கும் …
துகள்கள் சிதறி வளியின்
அடர்வு அதிகப்படும்
புரியாத காலங்களில்
வாத்சல்யம் அற்று மீண்டும்
இருளை கை பிடித்து அழைத்து
செல்கின்றன கற்றையாய்
நின்ற கிரகங்கள் …
ஷம்மி முத்துவேல்
Series Navigationவீணையடி நான் எனக்கு…!பிராணன்
author

ஷம்மி முத்துவேல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *