அழுகிய ’கேக்’கும் அமெரிக்கத் தமிழ் ஆடியன்ஸும்

This entry is part 25 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

சினிமா தியேட்டருக்குப் போவது கடும் அலர்ஜி தரும் அனுபவமாக எனக்கு முதன் முதலில் ஆனது அன்றைய ஜகன்மோகினி படத்தைப் பார்க்கப்போனபோது. மந்திரவாத மாஜிக் படம் என்று சிறுவர்கள், பெண்கள் பக்கம் கூட்டம் ஒருபக்கம் என்றால், ஜெயமாலினி தரிசனத்திற்காக ஆண்கள் வரிசையில் கைலியை மடித்துக்கட்டி மல்லுக்கட்டும் இளைஞர் கும்பல் இன்னொரு பக்கம் என்று கூட்டம் அலைமோதியது. படம் தொடங்க மணியடிக்கப்போகிறார்கள்,  டிக்கெட் இல்லை என்று சொல்லி விடுவார்கள் என்றெல்லாம் பேச்சு பரவ ஆரம்பித்தது. அப்போதுதான் அது  நிகழ்ந்தது.

 

ஆண்கள் வரிசையில் கடைசியில் நின்ற ஒருவன் சட்டென்று கைலியை அவிழ்த்துத்தலையில் உருமா கட்டு கட்டிக்கொண்டான். கலர் பாட்டில் ஒன்றை சுவரில் அடித்து கண்ணாடிச்சில்லுகள் சிதற உடைத்தான். உடைந்த பாட்டிலை உயர்த்திக்காட்டி, ”டாய்” என்று கத்திக்கொண்டே ஒரே உந்தலில் மதில் மேல் கால்வைத்து முன்னால் நின்ற ஆளின் தோளில் இன்னொரு காலை வைத்தான், அவர் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கையில் ’குத்திக்குடல உருவிப்புடுவேன், டாய்” என்று கத்திக்கொண்டே க்யுவில் முன்னால் நின்றிருந்தவர்கள் தோளில் கால்வைத்து மிதித்து திபுதிபுவென்று ஓடி டிக்கெட் கவுண்டருக்கு அருகில் போய், நொடியில் கீழிறங்கி டிக்கெட் வாங்கி உள்ளே சென்று விட்டான். ”என்னமா பூந்தான் பார்த்தியா” என்று யாரோ சொன்னது என் காதில் விழுந்தது.

 

அதே போன்ற ஒரு அனுபவம் பின்னாளில் சென்னையில் பல்லாவரம் தியேட்டர் ஒன்றில் ’ராஜா சின்ன ரோஜா’ படம் பார்க்கப்போனபோதும் கிடைத்தது. இம்முறை ரகளை தியேட்டருக்கு உள்ளே. இளைஞர் கும்பல் ஒன்று தியேட்டரையே கதிகலங்கச்செய்து கொண்டிருந்தது. ரஜினி வரும்போதெல்லாம் காகிதச்சுக்கல்களை எல்லார் மீதும் வாரி இரைத்தார்கள். பெருங்குரலெடுத்து ஆரவாரித்தார்கள். குரங்கு போல இருக்கைமேல் ஏறிக்குதித்தார்கள். படம் பார்க்க விடுங்கப்பா என்று சொன்ன ஆளை கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார்கள். ”நாங்களும் காசு கொடுத்துதான் வந்திருக்கோம், பொத்திகிட்டு ஒக்காரு பெருசு” என்று கேலி பேசினார்கள்.

 

அமெரிக்காவிற்கு வந்தபின் நம் தமிழ்க்குரங்குகளின் தியேட்டர் குதியாட்டத்தை மீண்டும் பார்ப்பேன் என்று எண்ணிக்கூடப் பார்த்ததில்லை-  ஆகஸ்டு 10 அன்று ”பனி துளி” என்னும் படத்தைப்பார்க்க கலிபோர்னியா வளைகுடாப்பகுதி சான் ஹோசேவில் உள்ள தியேட்டருக்குப்போகும் வரை.

 

திரைக்கதை, லாஜிக் என்று எதுவும் இல்லாமல் ஓட்டை உடைசல் காட்சிகளையும், உளுத்துப்போன கதையமைப்பையும் வைத்து எடுக்கப்பட்ட முழுநீள அபத்தக்களஞ்சியம்தான் ”பனி துளி”.  ஆனால் அதல்ல இங்கே பேசு பொருள். கலிஃபோர்னியாவில் வாழும் தமிழ் முகங்கள் பல ஒன்றிணைந்து பங்களித்து உருவாக்கிய தமிழ்ப்படம் இது. சிலிகன் வேலி சான் ஹோஸேவில் உள்ள தியேட்டர் ஒன்றில் முதல் ஷோ. தெரிந்தவர் கல்யாணத்துக்குப்போவதுபோல் ப்ரிமியர் ஷோவுக்கு தியேட்டர் நிறைந்து கூட்டம் வந்திருந்தது. உற்றார், உறவினர், நட்பு என்று வந்தவர்கள் பெரும்பாலானோர். படத்தில் பணியாற்றிய அமெரிக்கர் பலரும் கூட குடும்பத்தோடு வந்திருந்தனர்.

 

படம் தொடங்க பத்து நிமிடம் இருக்கையில் ”ரசிகர்” கும்பல் ஒன்று உள்ளே நுழைந்தது. பின் இருக்கைகளில் சென்று அமர்ந்து கொண்டது. படம் தொடங்கியவுடன் பெருங்குரலெடுத்து தொண்டை கிழியக் கத்தத்தொடங்கியது- பே ஏரியா நடிகர் ஒருவர் வரும்போதெல்லாம் ஆ, ஊ என்று மாபெரும் ஊளைச்சத்தத்தால் தியேட்டரை நிறைத்தது. குரங்குக்கூட்டம் போல் இளித்தது காகிதத்தைக்கிழித்து சுக்கல் குப்பைகளாக்கி எல்லோர் தலை மேலும் தூக்கி வீசியது. முன்னால் அமர்ந்திருந்தவர்கள் திரும்பிப்பார்த்து முறைத்ததோ, ’அமைதியாக இருங்கள்’ என்று கேட்டுக்கொண்டதோ எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

 

படத்தில் கவர்ச்சியாய் நடித்த ஒரு பெண் வரும் காட்சிகளில் சத்தமாக ஆபாச கமெண்ட் அடித்தார்கள். உரத்த குரலில் கத்தியும், ஆட்டம் போட்டும், குப்பை எறிந்தும் தங்களது அபார ரசிகத்தன்மையைத் தொடர்ந்து படம் முழுக்க நிரூபித்துக்கொண்டே இருந்தார்கள். இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் இந்தக் கும்பலில் பெண்டு பிள்ளைகளுடன் குடும்பத்துடனேயே வந்திருந்தவர்களும் அடக்கம் என்பது.

 

படத்தின் இடைவேளையில் ப்ரிமியர் ஷோவுக்கு வந்திருந்த நடிகர் ஒருவரை நிற்க வைத்து அவரைச்சுற்றி வந்து, கத்தி இளித்து ஆரவாரித்தார்கள். பெரிய பாப்கார்ன் பைகளை வாங்கி உடைத்து, அவர் தலையில் பாப்கார்னைக் கொட்டினார்கள். எம் தமிழரின் குடிமைப்பண்பு தியேட்டர் நடைபாதை முழுதும் பாப்கார்ன் சிதறல்களாய்க் கொட்டிக்கிடந்தது.

 

இவர்களில் பலர் அமெரிக்க தமிழ் அமைப்புகளில் முக்கிய உறுப்பினர்கள். அமெரிக்க அரசியல், பொதுவாழ்க்கை என்கிற கனவுகள் கூட இவர்களில் சிலருக்கு உண்டு. நினைத்தபோது ஊர் செல்ல முடியாததால், தனது தமிழகத்தை அமெரிக்காவில் நிறுவ முயல்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது.

 

படத்தின் தொழில் நுட்ப வடிவமைப்பில் பங்கெடுத்த அமெரிக்கர்கள் பலர், குடும்பத்தோடு வந்திருந்தனர். அவர்கள் நிலை மிகவும் இக்கட்டாக இருந்தது. அவர்கள் அனுமதி இல்லாமலேயே அவர்களுக்கு முன்னால் சென்று அசிங்கமாய் இடுப்பைத் துருத்திக்காட்டி போட்டோ எடுத்துக் கொண்டார்கள் நம் ரசிக சிகாமணிகள். அந்த அமெரிக்கர்கள் முதலில் சகிப்புடனும் பின்னர் அவர்களுக்கே உரிய கனிவான கேலியுடனும் இந்தக்கும்பலின் ஆட்டத்தைச் சகித்துக்கொண்டிருந்தார்கள். கட்டாயம் ஒரு ஆங்கிலப்படம் என்றால் எழுந்து சென்று தியேட்டர்காரர்களிடம் புகார் செய்திருப்பார்கள். தமிழ்ப்படம் ப்ரீமியர் என்பதால் ”இப்படி ரசிப்பது இவர்களின் கலாசாரம் போலிருக்கிறது” என்று சும்மா உட்கார்ந்திருந்தனர் என்றே எனக்குத் தோன்றீயது. நான் உள்பட யாருமே தியேட்டர்காரர்களிடம் புகார் சொல்லவில்லையே- எனவே அவர்கள் அப்படி நினைத்திருந்தால் அதில் ஓரளவாவது உண்மை இருக்கும்தான். புகார் செய்யாததற்கான பிராயச்சித்தம் இந்தக்கட்டுரை என்று நினைத்துக்கொள்கிறேன், வேறென்ன செய்ய?

 

கைலியை மடித்துக்கட்டி டாய் என்று கூவிய ஜகன்மோகினி ரசிகனுக்கும், தியேட்டரில் கலாட்டா செய்த சென்னை ரஜினி ரசிகர்களுக்கும், இதோ இந்த அமெரிக்கத்தமிழர்களுக்கும் கல்வியிலும், சமூக அந்தஸ்திலும், வாழ் நிலையிலும் எவ்வளவு வித்யாசம் இருக்கிறது! ஆனால் பொதுப்பிரக்ஞை, குடிமைப்பண்பு என்று வரும்போது தமிழக ஆவேச சினிமா ரசிகனை நகலெடுத்த அழுக்குப் பிரதியாகத்தானே அமெரிக்கத்தமிழ் ஆவேச சினிமா ரசிகனும் இருக்கிறான்!

 

படம் முடிந்ததும் யாரோ ஒருவர் “டப்பா படம்” என்று கமெண்ட் அடிக்க, ஒருவர் சொன்னார்: ”மனிதர்களுக்குத்தான் இது டப்பா படம். குரங்குகளுக்கு இதுவே அதிகம்தான்”.

 

இதில், படம் சரியில்லை என்பதால் கத்தியதாக விளக்கம் வேறு தரப்பட்டது. படம் நன்றாக இல்லயென்றால் விமர்சிக்கலாம். சில கமெண்டுகள் அவ்வப்போது எழலாம். அவை வேறு, பொது அரங்கொன்றில் குரங்காட்டம் போட்டு கூச்சலிட்டு ஒட்டுமொத்தமாக அனைவரது திரைப்பட அனுபவத்தையும் ரகளை செய்து கெடுப்பது என்பது வேறு. இந்த வித்யாசம் தெரியாதவர்கள் என்ன படித்தாலென்ன? எவ்வளவு பணம் சேர்த்தால்தான் என்ன? குடிமை உணர்வும் பொது இட ஒழுங்கும் இல்லாதவர்களின் படிப்பும் பணமும், நாய் பெற்ற தெங்கம்பழம்.

 

இதைப்பற்றியெல்லாம் சக தமிழர்களுடன் பேச முற்பட்டால் “இதுக்கென்ன இவ்வளவு டென்ஷன் ஆகிறீங்க”, ”இதெல்லாம் ஒரு ஜாலி”, ”இதையெல்லாம் கண்டுக்காம போகணும்” என்று அறிவுரைகள் கழுதை லத்தி மாதிரி வந்து விழுகின்றன.

 

நாஞ்சில் நாடன் இங்கே வந்திருக்கையில் தமிழ் ஊடக ரசனை பற்றி சொல்கையில், “அழுகிய கேக்கின் ஒரு பகுதியை தமிழகத்தில் உள்ள தமிழன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிரான், இன்னொரு பகுதியை அமெரிக்கத்தமிழன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்” என்றார். அது நூறு சதவீதம் உண்மை. ஆனால் இன்னொன்றும் சொன்னார்: ‘இங்கே வாழும் உங்கள் சந்ததிகளைப்பற்றி எனக்குக்கவலையில்லை, அங்கே வாழும் தமிழ்ச்சந்ததிகளை நினைத்தால்தான் எனக்குப் பெரும் கவலையாக இருக்கிறது” என்று.

 

இன்று அவரைப்பார்த்தால் “எங்களுக்காகவும் கொஞ்சம் கவலைப்படுங்கள் சார்” என்பேன்.

 

Series Navigation“கதை சொல்லி” விருதுகள் மாணவ – மாணவியருக்கான போட்டி பரிசு ரூ.5000/-பா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “
author

அருணகிரி

Similar Posts

36 Comments

 1. Avatar
  bala says:

  IF caucasian anglo saxen american supermacists neoconservatists take the extreme form for polluting american culture by this brazen alien vulgarities and exhibit their resentment in violent form on tamilians i think they ask for it

 2. Avatar
  நடராஜன் says:

  இந்த செய்தி கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் ஜகன்மோஹினி படத்தின் போது இவருக்கு ஏற்பட்ட அனுபவம் இங்கே படிப்பறிவில்லாதவர்களாலும் ரவுடித்தனம் செய்பவர்களாலும் மட்டுமே ஏற்படும். ஆனால் அமெரிக்காவில் அடிப்படை படிப்பறிவு இர்ப்பவர்களும் கூட இவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.

  படத்தின் பெயரில் த் விட்டுப்போயிருக்கிறதே, பனித்துளி என்றல்லவா இருக்க வேண்டும்?

 3. Avatar
  அருணகிரி says:

  அன்புள்ள நடராஜன்,

  இவர்கள் படிப்பறிவற்றவர்களோ ரவுடிகளோ கிடையாது. தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு எளிமையானவர்கள் கூட. ஆனால் பொது இட பிரக்ஞை என்பதே இல்லாதவர்கள், என்ஜாய்மெண்ட் என்பதை இப்படி ரகளை செய்வதாக மட்டுமே அவர்கள் அறிந்திருக்கிறார்கள். என்ன செய்ய? இவர்கள்தான் நம் ”யூத்”துகள். ”ஒரு பொது இடத்தில் நாலைந்து யூத்துகள் வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு குரங்குக்கூட்டம் வந்ததைப்போலத்தான்” என்கிறார் ஜெயமோகன். (http://www.jeyamohan.in/?p=29055).

  அன்புடன்,

  அருணகிரி.
  பிகு: படத்தில் பெயரில் ’த்’ கிடையாது (படம் வெற்றி பெற எண் ஜோதிடம் முக்கியம் இல்லையா.

  1. Avatar
   Kavya says:

   அருணகிரி,

   ஜெயமோஹன் ஒரு அறிஞரன்று; மனதத்துவத்திலோ, அல்லது தத்துவத்திலே ஒரு மேதையன்று. அவர் ஒரு தமிழ் எழுத்தாளர் மட்டுமே.

   தமிழ் எழுத்தாளர்கள் ஒரு அமெச்சூர் சிந்தனையாளர்கள். அவர்களது உணர்ச்சிகளின் வடிகால்களே அவர்கள் நூல்கள்.

   சிந்தனையாளர்களோ அல்லது தத்துவ மேதைகளோ அப்படி எதையும் தருவது கிடையாது. நாம் அவர்களைப்படிக்க வேண்டுமென்று புத்தககண்காட்சியில் ஏங்கிக்கொண்டு நிற்பது கிடையாது. அவர்கள் நூலகளை விற்று தம் வயிற்றைக்கழுவார். எழுத்தாளர்கள் புகழுக்கும் பணத்துக்கும் எழுதுவார்.

   எனவே எழுத்தாளர் சொன்னார் என்று சொல்வதைவிட, வால்டேர் சொன்னார்; கொம்டே (augstus comte) சொன்னார்; நீட்சே சொன்னார்; சாத்ரே சொன்னார், கியர்கேகார்டு சொன்னார், அல்லது நீங்கள் படித்த ஒரு தத்துவஞானி சொன்னார் என்று சொல்லுங்கள். சரி.

   அல்லது நீங்களே சொல்லிவிடுங்கள்.

   1. Avatar
    சான்றோன் says:

    எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 4. Avatar
  charusthri says:

  ivvalavu padichuttu indian currenciyil irundhuttu america poyi ennamo akasaththukku pona maadhiri alattuvaangale i ndia vandhakka kadaisiyil ivvalavu anaagarigama che ..che

 5. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  நாம் கற்றவர்களில்லை, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான தொழிற்பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே. (literate and vocationally trained on how to make money)

 6. Avatar
  Mena says:

  At least this was a film show!I had a very bitter experience once. It was such a beautiful dawn at the Grand Canyon. People were waiting for the sunrise in hushed reverence. One of our “educated youth” was talking st the top of his voice about the ‘party’ the previous night. I felt like strangling him and told it to my friend next to me. It was promptly told to that ‘youth’ who started a barrage of vulgar comments. Little did he realise that he was projecting us as a culturally deprived barbarians. Youngsters from other regions never exibit such lack of decorum! shame on the Tamil ‘youth’ who come here only to earn the dollars.

 7. Avatar
  V V Balakrishnan says:

  Why should we talk about the scum.Still in U.S>there are many tamils,who spend their time and money for many noble causes and lead a cultured life.
  In life money or wealth can bring comforts.But not culture and sanskar.Why should we go to see a kachda movie and face this nonsense.Forget it .waste of time talking about these oafs.

 8. Avatar
  மலர்மன்னன் says:

  மனிதனைக் கட்டமைப்பதாக கல்வி இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் சொன்னார். சுமார் 110 ஆண்டுகளுக்கு முன் அவர் அமெரிக்காவில் நம் நாட்டைப்பற்றி அதுகாறும் இருந்து வந்த தவறான எண்ணங்களை மாற்றி நம்மைப் பற்றி அவர்களுக்கு மரியாதை உண்டாகச் செய்தார். அவர் சொன்னதைக் கேட்காததன் விளைவை அனுபவிக்கிறோம். தொழிற் கல்வியிலும் சில வகுப்புகள் இலக்கியம், தத்துவம் போன்றவற்றுக்கு ஒதுக்கலாம் என்றார்கள். ஆனால் அதிலும் இன்று ஆபத்து உள்ளது. இலக்கியம் என்ற பெயரில் கருணாநிதி கதை கட்டுரைகளையும், வைரமுத்து கவிதைகளையும் படிக்கச் சொல்லிவிடும் நிலைமை உள்ளது. தத்துவத்திற்கு இருக்கவே இருக்கிறது பெரியாரியம்!
  -மலர்மன்னன்

  1. Avatar
   Kavya says:

   மனிதனைக்கல்வி கட்டக்கூடாது. அவனின் ஆளுமையின் ஆழத்தை வெளிக்கொணர உதவுவதே கல்வியாக இருக்க வேண்டும்.

   To help him understand himself, to help him extract the maximum potential of his ability, or the ability of his self should be the aim of education. Religion should not cripple his intellectual ability. Rather it should help him realise that potential. At best, it can show the end to which such potential could be put to use. For e.g a nuclear scientist should pursue his research not to annihilate the masses, but to empower them through constructive uses of his discoveries/inventions. Religion can tell him that. More than that, it has no business to do with him.

   Swami Vivekananda is not a great thinker. Because he was a religious man, certain things were beyond his grasp, but within the grasp of non religious men, like Philosophers.

   Malarmannan’s reading is limited to religion and about religion and society laced with such religion etc. Life goes beyond that too.

 9. Avatar
  TruthIsFire says:

  மலர் மன்னனுடன் 100% ஒத்துப் போகிறேன். கலாச்சாரமும் தெரியாது, பொது இடங்களில் எவ்வாறு பழகக் கூடாது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் இது தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல, பொதுவாக இந்தியர்கள் அனைவரும் காந்தி சொல்வது போல “தனியாக” இருக்கும்போது தம் சுயரூபத்தைக் காட்டுபவர்களே. ஆட்டு மந்தையாகவே இருந்து விட்டு இப்போது தான் அடுத்த பரிணாம வளர்ச்சியாம் குரங்காக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மனிதர்களாவதற்கு இன்னும் பல விவேகானந்தர்கள் வர வேண்டும்.

  1. Avatar
   Kavya says:

   நான் மலர்மன்னனின் கருத்துடன் ஒத்துப்போகவில்லையென்பது மட்டுமன்றி, அக்கருத்து சிந்தனையில் தோய்ந்நதெழா மேற்போக்கான கருத்தாகும் என்றும் சொல்கிறேன். மதங்கள் இருவகையாக அனுஷ்டிக்கப்படும். இதை நான் அடிக்கடி திண்ணையில் விளக்கியிருக்கிறேன். 1. கூட்டமாக 2. தனிமனிதனாக.

   இருவகைகளுக்கும் சேர்த்தே மதங்களைத் தோற்றுவித்தோர் மனதில் கொண்டார். முதல் வகையினாலேயே உலகில் கோடானுகோடி பிரச்சினைகள்; கொலைகள்; தீராப்பகைகள். இரண்டாவது வகையினாலே மதம் சிறக்கிறது: நல்லவர்கள்; இறைப்புனிதர்கள் (ஸெயிண்ட்ஸ்) பெயர் தெரியா தனிமனிதர்கள்.

   இரண்டாம் வகை மதத்தைச்சார்ந்தவரல்ல மலர்மன்னன். அவர் கூட்டு மதத்தையே பிரச்சாரம் பண்ணி, அதிலிர்ந்து எழும் அரசியலைப் பேணும் கட்டுரைகளையும் பின்னூட்டத்தையும் இங்கு வைக்கிறார். அவர் எழதப்போகும் நூலகளும் கூட்டு மதத்தையே போற்றும். மாறாக தனிமதத்தைப் பேணினால் அவர் ஒரு நல்ல சாமியாராகிவிடுவார். அவர் எழுத்துக்களில் கோபமும் குரோதமும் இரா. ஒருவரைத் தூக்கி இன்னொருவரைத் தாக்கு எழுதும்போக்கு காணாமல் போகும்.

   இப்போது அவர் இங்கிட்ட கருத்துக்கு வருவோம். மதவழிக்கல்வி கிடைக்கப்பெற்றால், மனிதர்கள் அல்லது சமூகம் ஒட்டு மொத்தமாக மாறிவிடும் எனபது முற்றிலும் தவறு என்பதை நம் அன்றாடம் காணும் வாழ்க்கை காட்டுகிறது. கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. அறுபத்துமூவர் திருவிழாவுக்கு சாலையே அடைக்கப்படுகிறது. கருமாரி அம்மன் கோயிலில் புத்தாண்டுக்கு உள்ளுழையவே முடியாது. வடபழனியிலும் அதே. வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்தில் சீட் கிடைக்காது. அங்கு தங்கவும் இடம் கிடைக்காது. தெற்குமாசிவீதி தர்கா விழாவுக்கு நான்கு தெருக்கள் அடைக்கப்படும். முசுலீம்களைவிட இந்துக்கள் கூட்டம் அடைத்துவிடுமாதலால்.

   ஆனால், சிறைகளில் குற்றவாளிகள் எண்ணிக்கை எப்போதுமே அதிகம். அவர்கள் இம்மூன்று மதங்களிலிருந்தும் வருகிறார்கள். திருடன் பிள்ளையாருக்கும் காணிக்கை போடுகிறான். கொள்ளைலாபம் சம்பாதித்த பணக்காரன் திருப்பதியில் போய் கொட்டி புண்ணியத்தை விலைக்கு வாங்கப்பார்க்கிறான். கொலையும் கொள்ளையும் ஏமாற்றுக்களுக்கும் எத்தி எத்தி வாழ்தலும் மதக்கலவரங்களையும் சாதிக்கலவரங்களையும் உருவாக்கி உயிர்க்கொலைகள் புரிதல்களும் இந்த ஆத்திர்கர்களால் கனஜோராக நடாத்தப்பட்டு வருகின்றன. நாத்திர்கள் எண்ணிக்கை சொற்பம். பூந்தமல்லி ஜெயிலில் எத்தனை கைதிகள் நாத்திகர்கள் என்று கணக்கெடுத்தால் தெரியும். உட‌னே அவ‌ர்க‌ளெல்லாம் போலி ஆத்திக‌ர்க‌ள் என்று வாதிட்டால், அப்போது உண்மை ஆத்திக‌ர்க‌ள் என்று ஒருவ‌ன் கூட‌ தேறுவ‌து அபூர்வ‌மே.

   ஆக‌ விவேகான‌ந்த‌ர் சொன்ன‌தைக் குழ‌ந்தைக‌ளுக்குச் சொல்லிக்கொடுத்தால், விஜ‌ய்யையோ, அஜித்தையையோ ‘கடவுள் அவ‌தார‌ம்’ என்று பெரிய‌வ‌னான‌தும் த‌ட்டி போர்டு வைத்து, முத‌ற்காட்சியில் குடித்துவ‌ந்து கும்மாள‌ம் போட‌மாட்டான் என்று சொல்வ‌து அப‌த்த‌மான‌ க‌ற்ப‌னை. ம‌த‌த்தால் ம‌னித‌னை மாற்ற‌முடியும் என்ப‌து இன்று நிறைவேறாம‌ற்போன‌ ஒரு முய‌ற்சி. ஆசைப்ப‌டுவ‌தில் த‌வ‌றில்லை. என‌வே ம‌த‌த்தை நிறுவியோர் ஆசைப்ப‌ட்டு ந‌ம்மிட‌மே விட்டுவிட்டார். ந‌ம்மை நிர்ப‌ந்திக்க‌முடியாது. கேட்ப‌வ‌ர் கேட்க‌ட்டும். பார்ப்ப‌வ‌ர் பார்க்க‌ட்டுமென்று விட்டார். Those who have ears to hear, let them hear; those who have eyest to see, let them see.

   இந்த‌ ஏசுவைப்போல‌, ம‌ஹ‌ம‌து ந‌பியைப்போல‌, புத்த‌ரைப்போல‌, அல்ல‌து இந்துக்க‌ட‌வுளைப்போல‌, நாம் விட்டுவிட்டு வேடிக்கைப்பார்க்க‌ முடியாது. என‌வெ ச‌ட்ட‌ம் போட்டு உள்ளே த‌ள்ளுகிறோம். ச‌ட்ட‌த்தால் ம‌ட்டுமே கலாச்சார‌ சீர‌ழிவுக‌ளைத் தாற்காலிக‌மாக‌ த‌டுக்க‌முடியும். உருவாவ‌தையையோ, நில‌கொள்வ‌தையோ ந‌ம்மாலும் த‌டுக்க‌முடியாது. மேற்சொன்ன‌ ம‌த‌ஸ்தாப‌ர்க‌ளாலும் முடியாது. விவேகான‌ந்த‌ரால் முடியுமா ம‌ல‌ர்ம‌ன்ன‌ன்?

 10. Avatar
  Kavya says:

  It is akin to the caste feeling a Tamil is born with or brought up with. Wherever he goes, he shows it by instinct, but it is shown only when he is among fellow Tamils. Such Tamils are from the cross sections of Tamils,comprising a variety of castes, yet the same affliation and fanaticism a la TN style is shown. A week ago, Puthia Talaimurai TV telecast a documentary on Mumbai Tamils. Their leader was giving the interview and his table had the photo of his caste leader MR Thevar conspicuously. The daravai slum has a humungous population of dalits from southern districts of TN. He s aware.

  Come to US. Who r these Tamils who made a scene at the cinema hall? If I am not presumtuous, they are the first gen Tamils youth. As the essayist arunagiri has correctly put it, they want to replicate the TN life there.

  Arunagiri may consult a phycologist; so also others who dittoed him. If I am not presumptuous, the psychologist will tell that such a display of raw emotions in the name of mirth s necessary to fill a void in them.

  Jollity, TN style – is all that they r desparately seeking.

  U will understand this if u visit a military camp in far North, say, JK or Assam, where there is a substantial number of Tamil soldiers who r, as u know, generally from the middle to lower classes of Tamil population from interior towns and villages. They long to have the same jollity a la TN style. But impossible confined to barracks as they r. The irresponsible show of mirth will help them drive away the feeling of being alone in far far land. To be with our own ppl, use the same lingo, or avail the same kind of mirth and jollity, at least metaphorically, or imaginatively, is a basic instinct.

  This is the way to look at it. Basic instincts have nothing to do with our education or neo culture.

  Lets not cavil at it.

 11. Avatar
  murali says:

  Born and brought up Indian youths in west behavior is good. But the people who migrated….they are the worst….i have seen them in several places in NZ and Australia…shouting, doing all antics…irritating locals…when they gather in group…my god…

  1. Avatar
   Kavya says:

   Murali

   The qn as to why one group behave despicably (to u, not to me!) requires deep thinking. U have however adumbrated that a little. I shall post a detailed analysis on that. Mine s not the last word on any point under debate here or anywhere else. Just as it occurred to me.

   Meantime, my warning remains still: Dont rush to condemn them chorically.

 12. Avatar
  punaipeyaril says:

  these people are better than killers in batman show…. migrated people wont do this… born and brought people only did such shooting thinge… and who said all those who gone to USA are cultured and intellects…?

 13. Avatar
  annamalai N says:

  Bangalore also same comedy.We will not go to theatres first 10 days.
  When Tamilan is going to come out of Screen(Cinema as well as TV)That day We can grow.The fact is that will not happened

 14. Avatar
  Ayyappan says:

  Kavya,

  I agree 100% with Arunagiri. Inside a theater who gives you the right to holler? Can you do the same while watching any movie outside India? You will be thrown out in seconds. However the movie might be.. one needs to hold their senses and not be an hindrance to others. In fact it is a law to remain silent. BTW did those scholars you mentioned asked you to be hindrance to others inside a theater… really? Where did you learn this from? That shows your upbringing and culture. While you are asking the author and others to consult psychologist, it clearly shows your rabid nature. It doesn’t matter to me if it is US or Tamilnadu.. it is WRONG to make my viewing time uncomfortable. In general the comments these raucous crowd pass are completely B-rated. As I read from the article, they were showering popcorn.. really, it is ok? What’s wrong with you? Don’t you think it is wrong even for a second? I am perplexed with your comment to say it is absolutely fine. You need to fix your brain, buddy! Have a good weekend. Think about it and then reply.

  Thanks,
  Ayyappan.

 15. Avatar
  Ayyappan says:

  Malarmannan 100% I am in agreement with you. Spot on! That too, where you say about Mu.Ka and Periyar.. wow, you did make sense to me!!

  Kavya, you are against “கலாச்சார‌ சீர‌ழிவு.” Ok, why you are not able to see Arunagiri’s point of view where this rabid/raucous crowd as a disgrace to Tamils in general?! You embrace their insane actions as an admissible act? At what juncture in our culture did this get in? Could you please quote a reference from somewhere in our ancient culture that in a public place you can dose milk on an effigy? Really? That’s admissible to you? You seemed to be educated and looking at your quotes and references, I am sure impressed but what good is it. You are not able to see the right as right and wrong as wrong. :(

  1. Avatar
   Kavya says:

   நான் எழுதியது மலர்மன்னன் விவேகானந்தரைப்போதித்தால் எல்லாரும் பண்புடையோராகி விடுவார் என்பதை எதிர்த்தே. எம்மதமும் இளைஞர்களைத் திருத்த முடியாது. அதாவது அவர்கள் எதை மகிழ்ச்சியென்று கருதுகிறார்களோ அதை மாற்ற முடியாது. மிரட்டி கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அழிக்க முடியாது. இதற்கும் கலாச்சாரத்துக்கும் தொடர்பில்லை. கலாச்சாரமென்பது என்ன? ஓரிடத்தில் வாழும் மக்களால் விரும்பப்பட்ட வாழ்க்கையே கலாச்சாரமாகும். எனவே மக்களுக்கு மக்கள் இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு கலாச்சாரம் வேறுபடுகிறது. மதுரையில் ஹீரோக்களின் கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் பண்ணுவது கலாச்சார சீரழிவு கிடையாது. இன்றும் எம் ஜி ஆர் ரசிகர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்றே பழைய படங்களையும் பாடல்களையும் போட்டுவருகிறார்கள். மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். மதுரைக்கலாச்சாரமது. மற்றவர்களுக்குப்பிடிக்காமல் போகலாம். அவர்கள் வாழ்க்கையிலும் இப்படி வேறு விடயங்கள் இருக்கும். அதை மற்றவர்கள் ஏற்காமல் போகலாம். அவரவர் வாழ்க்கை அவரவருக்கு இனிக்கும்.

   தொல்தமிழகத்தைப்பற்றியெல்லாம் பேசுகிறீர்கள். அப்போது இளைஞர்கள் எப்படி !வாழ்ந்தார்க்ள் அவர்களுக்கு கேளிக்கை வாழ்க்கையில்லையா? இருந்திருக்கும். அதுவும் இப்படித்தான் அட்டஹாசமாக இருந்திருக்கும். ஆனால் எவரும் அதைப்பற்றி வரலாறு எழுத வில்லை. எனவே அன்று கலாச்சாரம் உயர்ந்தது என்கிறீர்கள். சோழனுக்கு எத்தனை பொண்டாட்டிகள் என்று எழுதிய தமிழர், அவன் காலத்தில் பாமர மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என எழதவில்லை. அதாவது தெரிஸ் நோ சோஷியல் ஹிஸ்டரி ஆஃப் தமிழ்நாட்.

   வாஸ்து சாஸ்திரத்துக்காகத் தமிழையே கொல்கிறான். அதை விட சினிமாத் தியேட்டரில் குதூகலிப்பது மேல். அவர்கள் த‌மிழக‌ வாழ்க்கையை ஒரு சிறு பொழுதாவது செய்து மகிழலாமா என்பதன் அடையாளமே அது. அருண்கிரி அங்கு போயிருக்கக்கூடாது.

   சினிமா வெளியீட்டாளர்கள் தமிழகத்தில் என்ன செய்வார்கள தெரியுமா? இரசினி, அஜித், கமல், விஜய் போன்ற பவர் ஸ்டார்ஸ்களின் படங்கள் வெளியாகும்போதும்போது, முதலிரண்டு காட்சிகளை இரசிகர்களுக்கென்றே ஒதுக்கிவிடுவர். அப்படியே பொதுமக்களுக்கும் தெரிவிப்பர். அப்போது நாம் போகக்கூடாது. அமெரிக்காவிலும் அப்படிச்செய்ய வேண்டும்.

   இளைஞர்கள் மகிழ்ச்சியைக்கண்டு கிழவர்கள் குமுறுவதைப்பார்க்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

   ‘Our tastes greatly alter. The lad does not care for the child’s rattle, and the old
   man does not care for the young man’s whore !

 16. Avatar
  Ayyappan says:

  @punaipeyaril: Migrated people only kill family members.. remember Santa Clara (rivermark) shooting incident (Devan Kalathat in Apr 2009)?

 17. Avatar
  suvanappiriyan says:

  காவ்யா!

  //நான் எழுதியது மலர்மன்னன் விவேகானந்தரைப்போதித்தால் எல்லாரும் பண்புடையோராகி விடுவார் என்பதை எதிர்த்தே. எம்மதமும் இளைஞர்களைத் திருத்த முடியாது. அதாவது அவர்கள் எதை மகிழ்ச்சியென்று கருதுகிறார்களோ அதை மாற்ற முடியாது. மிரட்டி கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அழிக்க முடியாது. இதற்கும் கலாச்சாரத்துக்கும் தொடர்பில்லை.//

  உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் தவறான நடத்தைகளிலேயே சிந்தனை செல்லும். சிலருக்கு பெண்களைப் பார்த்தால் உடன் தவறான எண்ணம் வரும். சிலருக்கு சாராயக் கடையைப பார்த்தால் யாரும் சொல்லாமலேயே அவரது மனம் அங்கு இழுத்துச் செல்லும். சிலருக்கு சூதாட்டக் கிளப்புகளை கண்டால் கால் தானாக நிற்கும். சிலருக்கு தினம் ஒரு சினிமா பார்க்கவில்லை என்றால் தூக்கமே வராது.

  இவ்வாறு பாதிக்கப்படும் மனிதர்களில் பலர் யாரும் சொல்லாமலேயே தங்கள் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவர். மற்றும் சிலர் தங்களது மனதை கட்டுப்படுத்தத் தெரியாமல் இது போன்ற தவறுகளிலே வீழ்ந்து விடுகின்றனர். இவ்வாறு வீழ்ந்து விடும் மனிதர்களில் பலருக்கு அடைக்கலம் கொடுப்பது மதசம்பந்தமான கருத்துக்களே!

  ‘உன் மனைவியை தவிர்த்து வேறு யாரிடமும் சென்றால் உனக்கு நரகம்: சாராயம் குடித்தால், சூது விளையாடினால், திருடினால், கொலை செய்தால் உனக்கு இந்த தண்டனை இறப்புக்கு பிறகு படைத்த இறைவனால் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை ஒருவன் மனதில் ஆழமாக பதிந்தால் பலஹீன இதயம் கொண்ட மனிதன் மதம் அல்லது மார்க்கத்தின் கருத்துக்களால் மாற்றப்படுகிறான் என்பது எனது எண்ணம்.

  அதேசமயம் ஒவ்வொரு மனிதனின் உள் மனதும் தவறின் மீதே அதிக நாட்டத்தைக் கொண்டிருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை நான் மறுக்கவில்லை..

 18. Avatar
  Ayyappan says:

  If milk dousing is considered part of culture in Madurai.. then showering popcorn is not part of the culture outside India. Then why do it and you stand by it? Ridiculous :(

  1. Avatar
   Kavya says:

   That exactly s the point I also make: “Cultural practices at one place r despicable in another place”

   For e.g marrying one’s Sister’s daughter s a cultural practice among Tamils; but it s despised as incest among Hindi speaking people of North India. Marrying more than one woman s a common norm in tribal societies. For the CM of Arunachal Pradesh has more than 4legal wives. The PM of South Africa too.

   In Madurai, it s an acceptable norm to hero worship, in whichever way. Their relgion makes Gods out of men, if the men had performed courageous acts in public interest in the past: Madurai Veeran is an example of such God.

   To you, the practice of worshipping Tamil heroes is detestable in the form you have cited. To a citizen of Madurai, it s a common practice allowable to young ppl.

   But the psychologists r on my side in saying that icons are necessary for youth; and wild jubiliation over such icons r natural to young minds. They r needed. Sept 11 sees the guru puja of Immaneuel Sekaran, the iconic hero for Pallars; Oct 30 will see the guru puja of M R Thevar, the iconic hero of Thevar community. Both happen in Madurai.

   Instead of saying that nothing s wrong with that, it is wise to say that it is necessary for them to hero worship. Where we dont like such hero worships s when such hero worship turns ugly in group clashes. In themselves, thery r good; and necessary for psychological well being of ppl.

   On behalf of the psychological well being of Tamil youth, I thank Ajith, Vijay, Rajni, Kamal, Jeeva, Vikaram et al. In the past, heroes like MGR and Shivaji.

 19. Avatar
  Kavya says:

  When Swami Vivekananda talked irreverently about the Tibetian practice of one woman marrying more men, his guru Ramakrishna corrected him. “Dont berate cultural practices of other ppl, Narendra!”

  Similar chastisement s necessary here too.

 20. Avatar
  Ayyappan says:

  காவ்யா,

  உங்க‌ பின்னோட்ட‌த்தை ந‌ல்லா ஒரு த‌ட‌வை பாருங்க‌. எப்ப‌டி முன்னுக்குப்பின்னா (முர‌ணா) பேசுறீங்க‌ன்னு தெரியும்.

  த‌மிழ்நாட்டு ம‌க்க‌ள் தாங்க‌ள் வாழ்ந்த‌ வாழ்க்கையை இந்தியாவிற்கு வெளியே வாழ‌ முய‌ற்சி செய்ய‌றாங்க‌.. அதில் என்ன‌ த‌ப்புனு ஒரு இட‌த்தில் சொல்றீங்க‌

  “Jollity, TN style – is all that they r desperately seeking.”

  பிற‌கு இன்னொரு இட‌த்தில்..

  “Cultural practices at one place r despicable in another place”

  யார் ம‌ருத்துவ‌ரை அணுக‌ வேண்டிய‌துனு தெரியுதா? ந‌ன்றி.. இதுக்கு மேல‌ என்னால‌ சொல்ற‌த‌க்கு ஒன்னும் இல்லை!

  1. Avatar
   K A V Y A says:

   That’s a good point from ayyappan referring to 2 statements of mine.
   1. Ppl desiparately want to replicate at least a part of their original culture.
   2 A culture, which is lovable at their own place, may be detestable at another.

   நீங்கள் என்ன சொல்கிறீர்களென்றால், மதுரைக்கலாச்சாரத்தை மதுரையில்தான் வைத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் கூடாது. இல்லையா? ஏனென்றால், மதுரையில் விரும்பப்படும் கலாச்சாரம் அமெரிக்காவில் வெறுக்கப்படும்.
   இதையே சாமி விவகாரத்துக்கும் போட்டுப்பார்க்கலாம். நாம் வணங்கும் முறை அமெரிக்கர்களால் விரும்பப்படாது. யு கேயில் பிணங்களை எரிக்கக்கூடாது. மாடுகளைத் தெருக்களில் கொண்டுவந்து நிறுத்திப் பூஜை பண்ணக்கூடாது. குரங்குகளுக்கு பண்டம் அளிக்கக்கூடாது. தீபாவளியைப் பட்டாசு கொளுத்திக் கொண்டாடக்கூடாது.
   ஆனால், அங்கு வதியும் இந்தியர்களுக்கு நம் வழிப்படி வாழமுடியாதா என்ற ஏக்கம் இருக்கும். அதற்கான வழியை அவர்கள் தொடர்ந்து தேடிக்கொண்டேயிருப்பார். சிலர் சட்டம் மூலமாக. யு கேயில் ஒரு இந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பிணத்தை இந்துக்கள் எரிக்கலாம் என்ற தீர்ப்பை வாங்கி விட்டார். மற்றவர்கள் மற்ற வழிகளைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது என் முதல் வாக்குமூலம் சரியாகிறது. மனிதர்களில் அடிப்படை உணர்வு இது. அதற்காக அவர்களைத் திட்ட முடியாது.
   இனி இரண்டாவது வாக்குமூலத்தை எடுப்போம். இப்படித்தேடிக்கொள்வோர் தாங்கள் ஒன்றாக வாழும் இடத்தில் இந்திய வாழ்க்கை முறை சாத்தியமாகும் எனக்கருதி ஒன்றாக வாழத்தொடங்குவர். சவுத்ஹால் அபபடி. ஆங்கு இந்திய வழக்கங்களின்படி வாழ்க்கை. வெள்ளையர்கள் எவருமே இல்லாததால் எதிர்ப்பு இல்லை. அமெரிக்கவைப்பற்றி எனக்குத் தெரியாது. அங்கு நான் வாழவில்லை எப்போதும்.
   இதைப்போல ஒரு சினிமாக்கொட்டகையில் மதுரையில் செய்வதைப்போல செய்ய ஆசைப்பட்ட தமிழருக்கு அதையும் சாத்தியாமாகும்படி செய்ய வேண்டும் என்பதே என் கருத்து. அவர்களுக்கென தனிக்காட்சிகள் போடப்படவேண்டும், கொட்டகை நிறுவனத்தினர் அவர்கள் கேளிக்கையை அனுமதித்தால், அப்படிக் காட்சிகள் போடப்பட்டால், என இரண்டாவது வாக்குமூலம் சரியாகும்.
   முதலும் இரண்டும் ஒன்று சேருமிங்கே. எப்படி? அவர்கள் இடத்தில் அவர்களுக்குள்ளாகவே விரும்பும்வண்ணம் கலாச்சார வாழ்க்கை. இது பிறர் வெறுப்பார் என்ற வாதத்துக்கேயிடமில்லை. அப்பிறரில்லாதமிடல்லவா இது! நாடு மாறினாலும் பிறநாட்டுக்குள்ளே ஒரு குட்டி நம்நாடு. சைனீஸ் டவுன் என்று கல்கத்தாவில் இருப்பது போல.
   எங்கெங்கு சென்றாலும் தமிழர்கள கூட வேண்டும். தமிழ்நாட்டு வாழ்க்கையில் சிறு பகுதியாவது அவர்கள் அனுபவிக்க அக்கூடல்கள் ஏதுவாக வேண்டும். ஒப்பாரி வைத்து இழவு வீடுகளில் அழுவது தமிழ்க்கலாச்சாரம், அதைக்கூட வெறுப்பாரென்றால் எவ்வளவு ஏக்க்மிருக்கும்.
   மதுரைவீரனுக்கு சிங்கப்பூரில் கோயிலுண்டு. பிஜித்தீவில் மாரியம்மன் கோயில் கொடையில் கிடா வெட்டுகிறார்கள், இப்படிச்செய்யாமல் வாழவேண்டுமானால், அது அருணகிரி சொல்லும் சினிமா கொட்டகையில் கேளிக்கை செய்தோரின் மூன்றாவது தலைமுறை அமெரிக்காவில் வாழ்ந்தால் அது நாம் கேட்காமலே எல்லாவற்றையும் மறந்து ‘அட என்ன கேவலமான கலாச்சாரம் இந்த தமிழர்களது!” என்று வியக்கும்; அல்லது பேசும்’ அப்போது நான், இதுவும் மனோதத்துவ முறைப்படி பார்த்தால் சரியே என்பேன்.

  1. Avatar
   K A V Y A says:

   The above reply to ayyappan can be put simply thus:

   A culture with which we r born wont go away even if v migrate to other climes with other cultures. It takes at least 2 generations to completely rid ourselves of it.

   As long as we r with it, an outlet needs to be found out for the overflow of the longing to live at least a part of that original culture.

   If some ppl succeeds in getting that – with PRIOR SANCTION FROM ALL CONCERNED – lets allow it.

   A man or a group has his psychological needs to fu their legitimate desires. Society shd come to his/their help. If not, they will do it on their own, as happened in the cinema hall.

 21. Avatar
  K A V Y A says:

  இக்கட்டுரையில் நாம் கவனிக்கத்தவறிய ஒன்று என்னவென்றால் அருணகிரி தன் தமிழ்நாட்டு அனுபவத்தையும் சொல்கிறார். அங்கு இரசிகர்கள் முதற்காட்சியில் நடந்துகொள்ளும் முறை அவரால் தாங்கிக்கொள்ளமுடியாத ஒன்று. இங்கேயே தாங்கிக்கொள்ளமுடியவில்லை. அமெரிக்காவிலா முடியும் அவரால். அதைக்கட்டுரையில் காட்டுகிறார்.

  ஆக, அடிப்படை பிரச்சினை அவரின் மனதில். ஒருவர் விருப்பு வெறுப்புக்கள் அவர் வளர்க்கப்பட்ட விதத்திலே. அவர் ஒரு சேரியில் அக்காலத்தில் வளர்க்கப்பட்டிருந்தால், அச்சேரிச்சிறுவர்கள், அல்லது வாலிபர்களோடு அவர்கள் ஹீரோவின் படத்துக்கு வெகுநாளாக எதிர்பார்த்து, (கோச்சடையானுக்காக மதுரை மட்டுமன்றி, பெங்களூரும் காத்திருக்கிறது!) பினனர் வெளிவரும் நாளுக்கு முதல் நாளிரவில் கொட்டகையில காத்திருந்து, மறுநாள் கூட்ட நெரிசலில், முந்தாநாள் ஆசுபத்திரியில் குருதி ஒரு பொட்டில் கொடுத்து வாங்கிய 50 உருபாவை வைத்து, நுழைவுச்சீட்டு வாங்கி, உள்ளே அமர்ந்து, முதலில் திரையில, தன் ஆதர்ச கதாநாயகன் திரையில் தோன்றும்போது அடிக்கும் விசில் சத்தத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி அவருக்குக் கிடைத்திருக்கும். மனோதத்த்துவ மருத்துவரிடம் சென்றால், அவர் சொல்வார்: மகிழ்ச்சி பலர் பலவிதமாக அடைவது வாழ்க்கையில் கட்டாயங்களில் ஒன்று மிஸ்டர் அருணகிரி. புரிந்து கொண்டு வாழப்பழகிக்கொள்ளுங்கள்.

 22. Avatar
  பூவண்ணன் says:

  திரு நாஞ்சில் நாடனோ ,அருணகிரியோ கவலைப்படுவது சாதிகளை கடந்த நட்பு,உறவுகள்,கொண்டாட்டங்கள் உருவாவதை பார்த்து தான்
  பத்து வயது சிறுமிகளுக்கு திருமணம் நடப்பதை பார்த்து அதில் பங்கு கொண்டிருந்த இளைஞர்கள்,விதவைகளை தூசி போல நடத்துவதை கண்டும் காணாமல் இருந்த இளைஞர்கள்,சாதி கொடுமைகளை கடவுளின் தண்டனை என்று சிறிது கூட வருத்தம் இல்லாமல் கடந்து போன இளைஞர்கள்
  காதலை பெரிய தவறாக பார்த்த இளைஞர்களுக்கு,பெண்களுக்கு சொத்துரிமை தருவது குடும்பங்களை அழித்து விடும்,பெண்கள் வேலைக்கு போவது அவசியமில்லாத ஒன்று,பெண் தான் ஆணின் வீட்டில் வாழ வேண்டும் ,மாறாக ஆண் பெண்ணின் வீட்டில் வாழ்வதை விட கேவலம் எதுவுமில்லை போன்ற கருத்துக்களை கொண்டவர்களுக்கு இப்போது இருப்பவர்களை பார்த்து வருத்தம் ,கவலை வருவதில் ஆச்சரியம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *