தாகூரின் கீதப் பாமாலை – 36 யார் ஊக்குவது என்னை ?

This entry is part 18 of 21 in the series 21 அக்டோபர் 2012

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என் குரலைப் பாடலாக்க  எவர்
என்னை ஊக்கு விப்பது ?
எனது உள்ளத்தின் மௌ னத்தில்
கூடு கட்டிக் குடியிருக்கும்
அந்த ஒன்று தான் !
முகில் மூடி மங்கிய நாட்களில்
நறுமணத் தோடு மல்லிகப் பூக்கள்
பெரு மூச்சு விடும் போது,
அதன் இறக்கை நிழல் பட்டெனது
ஆத்மாவைத் தட்டி எழுப்பும்
அந்த ஒன்று தான் !
உவப்புடன் வெடிக்கும்
சிவூளிப்* பூக்களால்
இலையுதிர் காலம் நடுங்கும் போது
பொங்கி வழியும் என் விழிகளில்
ஒளிந்தி ருக்கும் பாடலின் தடங்கள் !
அரை விழிப்பில் என் நடை தளர்ந்து
அந்திம நள்ளிரவில்
எந்த இன்னிசை  யானது
என் கனவில் தோன்றி
எந்தச் சீரொலிக்கு நெளிகிறது ?
+++++++++++++++++++++++++
சிவூளிப்* பூக்கள் –> Shiuly Flowers
+++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++
பாட்டு : 13  தாகூர்  60 வயதினராய் இருந்த போது  1921 ஆகஸ்டில் தனது சாந்திநிகேதன் அச்சக வெளியீட்டில் பதிவு செய்தது.   அந்த அச்சக யந்திரம் அமெரிக்காவின் லிங்கன் நகரக் கல்விக் கூடத்திலிருந்து அன்பளிப்பாய் வந்தது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press,
Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  October 15 , 2012

 

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 42) காதற் களவுஅக்னிப்பிரவேசம் – 6
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *