தாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்

This entry is part 27 of 31 in the series 4 நவம்பர் 2012

 

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

என் மனதில் ஒலி எழுப்பும் பாடல்
உன் காதில் கேட்கிறதா
எனது விழிகளுக்கு
உனது வருகையைச் சமிக்கை மூலம்
அனுப்பும் போது ?
பனித் துளி ஒன்றை மலர் மார்பி லிருந்து
பரிதிக் கதிர்கள்
உறிஞ்சிக் கொள்வது போல்
என் ஆத்மாவின் கீதத்தையும் நீ
ஈர்த்துக் கொள் வாயா ?

 

விலகிச் செல்லும் என் இதயம்
வெளியே வரும் போது
தன்னைக்
கவர்ந்து கொள்ள விட்டுவிடும்
புவனம் எங்கும் !
புதிய இலை ஒன்று உரையாடும்
முதல் நாள் விடிவின் போது
பரிதி ஒளிக்கதிர் என்ன வென்று !
என் உள்ளத்தின் தனிப்பட்ட உணர்வு
என்ன வென்றும்
முன்னெ டுத்துக் காட்டும்.

 

+++++++++++++++++++++++++
பாட்டு : 2 1921 இல் தாகூர் 60 வயதினராய் இருந்த போது , பைரவி ராகத்தில் பாடச் சாந்திநிகேதனத்தில் எழுதியது. இப்பாடல் பிரபஹினி பாடல் சேமிப்பில் சேர்க்கப் பட்டுள்ளது.
+++++++++++++++++++++++++

Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] October 30 , 2012

Series Navigationவாழ நினைத்தால்… வீழலாம்…!திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *