மணலும் நுரையும்-2

This entry is part 16 of 31 in the series 4 நவம்பர் 2012

 

பவள சங்கரி

    Sand and foam – Khalil Gibran (2)

 

மணலும், நுரையும் (2)

 

வெகு நேரம், அந்த, பருவ மாற்றங்களும்  அறியாமல், அமைதியாக, எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான்.

பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை உயிர்த்தெழச் செய்ததால், யான் எழுந்து அந்த நைல் நதிக்கரையோரம் பகலோடு பாடிக்கொண்டும், நிசியோடு சுவனம் கொண்டும் நடந்தேன்.

மேலும் தற்போது அந்த பகலவனோ, தம் ஓராயிரம் பாதக்கிரணங்கள் கொண்டு எம்மை ஏறி மிதித்துச் சென்றதனால் யான் மீண்டும் அதே எகிப்தியப் புழுதியில் கிடக்க நேரலாம்.

ஆயினும் இங்கோர் அற்புதமான புதிர்! எம்மைக் கூட்டிய அப்பருதியினால் எம்மைச் சிதறடிக்க இயலாது.

இப்போதும் கூட நிமிர்ந்தே இருக்கிறேன் யான், மேலும் அந்த நைல் நதிக் கரையோரம் அழுத்தமான எம் பாதச் சுவடுகளைப் பதிகிறேன் யான்.

 

நினைவில் கொள்ளுதலென்பது கூடியிருத்தலினோர் வடிவம்.

 

மறதியென்பது விடுதலையினோர் வடிவம்.

 

நாம் எண்ணற்ற கதிரவன்களின் அசைவுகளைக் கொண்டு காலத்தைக் கணக்கிடுகிறோம்: ம்ற்றும் அவர்கள் தங்களுடைய சிறிய பைகளில் உள்ள சிறிய இயந்திரங்களைக் கொண்டு காலத்தைக் கணிக்கிறார்கள்.

கூறுங்கள் இப்போது, நாம் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் எங்கனம் சந்திக்க இயலும்?

 

பால் வீதியின் சாளரத்திலிருந்து கீழேக் காணும் ஒருவருக்கு, விண்வெளி என்பது இடவம் (உலகம்), மற்றும் நிதாகரனுக்கும் (சூரியனுக்கும்) இடையில் உள்ள இடமன்று..

மனிதாபிமானம் என்பது, அநித்தியத்திலிருந்து  நித்தியத்திற்கு ஓடும் ஒளி வெள்ளம்..

அடுத்தவரினுள் உறையும் அந்த ஆவிகள் மானுடனவனின் வேதனைகளைக் கண்டு அவ்வியம்  கொளவதில்லையா?

 

புனித நகருக்கான எம் பாதையினில் யாம் சந்தித்த மற்றுமொரு யாத்திரிகரிடம்,

“உண்மையிலேயே இதுதான் புனித நகருக்கான பாதையா?” என்று வினவினேன்.

அதற்கு அவர் சொன்னார், “எம்மைத் தொடர்ந்தால் ஓர் பகல் மற்றுமோர் நிசையில் நீவிர் புனித நகரம் சென்றடையலாம்”

மேலும் பின்தொடர்ந்தேன் அவரை யானும். மற்றும் நாங்கள் பல பகற்பொழுதுகளும், பல நிசீதங்களும்  நடந்தும், அப்புனித நகரைச் சென்றடையவில்லை.

மேலும் எம் ஆச்சரியம் ஏதெனில், அவரே தவறான பாதையில் வழிநடாத்தியதால் எம்முடனே கனற்சியும் (சினம்) கொண்டார்.

 

ஓ, எம் இறையே, ஒன்று அந்தச் சிம்மத்திற்கு எம்மை இரையாக்கும் அன்றி நீவிரே அந்த முயலையேனும் எமக்கு உணவாக்கிவிடும்.

 

எவரொருவரும் அந்த நிசையின் நீட்சியினுள் இல்லாவிடில் நிசாந்தமதைச் சென்றடையப் போவதில்லை.

 

எம் இல்லம் எம்மிடம், “எம்மை விட்டுச் செல்லாதே, ஏனென்றால் உம் இறந்த காலம் உறைவது இங்குதான்” என்றது.

மற்றும் அந்தச் சாலையோ, “வாரும், எம்மைத் தொடர்ந்து வாரும், காரணம் யாமே உம் எதிர்காலம்” என்றது எம்மிடம்.

மேலும் யான் எம் இல்லம் மற்றும் சாலையிடம், “எமக்கு இறந்த காலமும் இல்லை ஓர் எதிர்காலமும் இல்லை. யான் இங்கு தங்குவேனாயின், எம் தங்கலிலும் ஒரு வெளியேற்றம் உளது: மற்றும் யான் அங்கு செல்வேனாயின் எம் செல்லுதலிலும் ஒரு தங்கல் உளது. அன்பும், நிமிலனமும் மட்டுமே அனைத்தையும் மாற்ற வல்லது” என்றேன்.

 

சிறகுகளின் மீது உறங்குபவர்களின் சொப்பனங்கள், அம்புவியின் மீது உறங்குபவர்களின் சொப்பனங்களைக் காட்டிலும் சௌந்தரியமானது எனும்போது வாழ்க்கை நியதியில் எங்கனம் நம்பிக்கை இழப்பேன் யான்?

 

சில இன்பங்களுக்கான இச்சையே, எம் வேதனைகளின் ஓர் பகுதி என்பதே ஆச்சரியம்.

 

தொடரும்

Sand and Foam – by Khalil Gibran

 

Long did I lie in the dust of Egypt, silent and unaware of the seasons.

Then the sun gave me birth, and I rose and walked upon the banks of the Nile,

Singing with the days and dreaming with the nights.

And now the sun threads upon me with a thousand feet that I may lie again in the dust of Egypt.

But behold a marvel and a riddle!

The very sun that gathered me cannot scatter me.

Still erect am I, and sure of foot do I walk upon the banks of the Nile.

 

Remembrance is a form of meeting.

 

Forgetfulness is a form of freedom.

 

We measure time according to the movement of countless suns; and they measure time by little machines in their little pockets.

Now tell me, how could we ever meet at the same place and the same time?

 

Space is not space between the earth and the sun to one who looks down from the windows of the Milky Way.

 

Humanity is a river of light running from the ex-eternity to eternity.

 

Do not the spirits who dwell in the ether envy man his pain?

 

On my way to the Holy City I met another pilgrim and I asked him, “Is this indeed the way to the Holy City?”

And he said, “Follow me, and you will reach the Holy City in a day and a night.”

And I followed him. And we walked many days and many nights, yet we did not reach the Holy City.

And what was to my surprise he became angry with me because he had misled me.

 

Make me, oh God, the prey of the lion, ere You make the rabbit my prey.

 

One may not reach the dawn save by the path of the night.

 

My house says to me, “Do not leave me, for here dwells your past.”

And the road says to me, “Come and follow me, for I am your future.”

And I say to both my house and the road, “I have no past, nor have I a future. If I stay here, there is a going in my staying; and if I go there is a staying in my going. Only love and death will change all things.”

 

How can I lose faith in the justice of life, when the dreams of those who sleep upon feathers are not more beautiful than the dreams of those who sleep upon the earth? Strange, the desire for certain pleasures is a part of my pain.

 

To be contd.

Series Navigationவீழ்தலின் நிழல்நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.
author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *