ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்

This entry is part 14 of 29 in the series 18 நவம்பர் 2012

“பல்லேலக்கா பல்லேலக்கா , சேலத்துக்கா மாதிரிக்கா” என்று அதிரடி பாடலோடு தொடங்குகிறது படம்.ஹிஹி அதே மாதிரி பாட்டோட “துப்பாக்கி” சுடத்துவங்குகிறதுன்னு சொல்லவந்தேன்  அநாவசியக்காட்சிகள் இல்லை,முக்கியமாக ஏகத்துக்கு ஆச்சரியம்
Hero Worship இல்லை. Cliches இல்லை,Punch Dialogues இல்லை, திணிக்கப்பட்ட பாடல் காட்சிகளோ பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சிகளோ இல்லை..என்ன இது விஜய் படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா என்று எனக்கே ஆச்சரியம். முருகதாஸுக்குத்தான் நன்றி சொல்லணும்.

‘கில்லி’க்குப்பிறகு , சொல்லிக்கொள்ளுமாறு வெற்றி பெற்றது ‘போக்கிரி’ தவிர வேறு எந்தப்படமும் இல்லை விஜய்க்கு. ஃபாஸில் போல ஒரு நல்ல இயக்குநர் கிடைத்தால் விஜயாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்று.Very Nice Screenplay , எந்த இடத்திலும் தொய்வே இல்லை, கஜினிக்குப்பிறகு , ஏழாம் அறிவில் சொதப்பியதை ‘துப்பாக்கி’யால் சுட்டு சரி செய்துவிட்டார் இயக்குநர். அதெல்லாம் சரி ,விஜய்க்கு பெயர் ஏன் “ஜக்தீஷ்” , ஒரு நல்ல தமிழ்ப்பெயர் கூடவா கிடைக்கவில்லை ?! விஜயோட Body Language ரொம்பவே மெருகேறி இருக்கிறது. B Grade Movies ல வர்ற மாதிரி (திருப்பாச்சி) பண்ணாம கொஞ்சம் முன்னேறி வந்துருக்கார் , Thanks to Murugadas 

காஜலை விட்டால் வேறு ஹீரோயின்களே கிடையாதா என்று கேட்குமளவுக்கு தொடர்ந்து அவரே ரவுண்டு கட்டி அடிக்கிறார் , இப்போதான் சூர்யாவுடன் மாற்றானில் ரஷ்யாவுக் கெல்லாம் போய் டூயட் பாடினார், இங்க பாம்பேல விஜய் கூடவும் ஆட வந்துட்டார். Hero Oriented Movies ல வழக்கமா Heroines என்ன பண்ணுவாங்களோ அதையே தான் செய்திருக்கார். “கூகிள் கூளில்” பாட்டில( Crazy Frog Song தான் அது ) அவர் போட்டிருக்கும் உடை மட்டுமே உற்றுப்பார்க்கவைத்தது  என்னை . நான் கூட அந்தக்கருப்புப்பட்டி மட்டுந்தான் இருக்கோன்னு ஒரு நப்பாசைல தொடர்ந்து “உற்று” நோக்கிக்கொண்டிருந்தேன் அவர் “Performance” ஐப்பார்க்க ( நம்புங்க  ), ஆனாலும் அந்த வெள்ளைப்பட்டியும் கூடவே அவர் உடுப்புல சேர்ந்துதான் இருக்கு,,,ஹ்ம்..ச்ச ஏமாத்திட்டானுங்கப்பா  ஜோக்கர் ஜெயராமுடன் , விஜயும் , காஜலும் அந்த காஃபி ஷாப்பில் சந்திக்கும் காட்சி அப்படியே “ நான் மகான் அல்ல” மாதிரியே இருக்கு, காஜலும் அதே மாதிரி நடிச்சு இன்னும் வலுவா அதை ‘ஞாபகப்’படுத்து’றார்  இருப்பினும் ஒரு ‘மேட்டருக்கு’க்கூட ஒன்னயப் புடிக்கலையேன்னு அவர் விஜயைக்கலாய்ப்பது அருமை 

இந்த சத்யன் ஏன் எப்பவுமே “சத்யராஜ்” மாதிரி பேசியே நம்மளக்கொல்றார்னு புரியல.Same body language, Dialogue delivery எல்லாமே அப்படியே சத்யராஜ் தான், ‘என் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டேங்க்றீங்களே’ன்னு மட்டுந்தான் சொல்லல.மத்தபடி எல்லாமே அவரையே மாதிரிதான் இருக்கு படம் முழுக்க.

இசை பற்றி எழுத ஒன்றுமே இல்லை, ஹாரிஸ் தன்னோட Style ஐ Maintain  பண்ணியே தீருவேன்னு அடம்புடிக்கிற மாதிரி முழுக்க முழுக்க Run Of the Mill , and Mostly Plagiarized Songs of his own தான்  கொஞ்சம் வெளிய வாங்க ஹாரிஸ், ராஜா , ரஹ்மானெல்லாம் இப்ப மாறிட்டங்க , இன்னும் நீங்க அதே “உள்ளம் துள்ளுமா”ன்னு பாட்டயே போட்டுக்கிட்டு இருந்தா எப்படி ? Spice Girls ன் Wannabe இசைக்கிறது காஜல் வரும் காட்சிகளிலெல்லாம், அப்புறம் விஜயும் காஜலும் முட்டிக்கொள்ளும் இடங்களில் Mozart’s  Serenade No 13 ஐ பாதில நிறுத்தி நிறுத்தி வாசிச்சும் தொல்ல பண்றார் (எங்க முழுசா வாசிச்சா கண்டுபுடிச்சிருவோம்னு பயத்துல  ).”முதல் மழை எனை நனைத்ததே”,”சுட்டும் விழிச்சுடரே”ன்னு இசைத்த மெலடிகளை ஹாரீஸிடம் இப்போதெல்லாம் கண்டுபிடிக்க முடிவதேயில்லை. காஜலைப்பெண் பார்க்கும் படலத்தில் “சாமி மாமி”யின் “இதுதானா” என்று கஞ்சிராவும் எட்டிப்பார்க்கிறது. கற்பனை வளம் குறைகிறது ஹாரிஸ்.புதுசா எதுனா செய்யுங்க  அதோட Chasing Scenes ல அதிவேகமாக இசைக்கப்படும் பின்னணி இசை “Double O seven “ படங்களில் எப்போதும் வரும் கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன காலகாலமாக இசைக்கப்படும் இசை மட்டுமே 

“Minority Report” படத்தில Pre Crime ன்னு ஒரு Concept , Tom Cuiseஐ வெச்சிக்கிட்டு ,குற்றம் நடக்குமுன்னரே அவரின் மனநிலையறிந்து அதைத்தடுப்பது, அதிரடியாக நுழைந்து அவரைக்கைது செய்வதுங்கறத காட்டியிருப்பார் Speilberg. அதயே நம்ம முருகதாஸ் கொஞ்சம் தமிழுக்காக மெருகூட்டி , பாட்டு, காஜலின் உடம்பில் கருப்புப்பட்டி உடை( ஹிஹி), கொஞ்சம் நாட்டுப்பற்றுங்கற இன்னபிற “விஜய்காந்த்” வஸ்துகளையெல்லாம் கோர்த்து நம்ம தலைல கட்டி விட்ருக்கார்  கூடவே “ரமணா” Concept தான் இது, அங்க விஜய்காந்துக்கு அவர் கிட்ட படிச்ச Students எல்லாரும் Sleepers ஆ வேலை பார்ப்பாங்க , நாட்டுக்கு நல்லது பண்றதுக்குத்தான் இங்க Real Sleepers , பக்கத்து நாடுகள்லருந்து இங்க வந்து இறையாண்மையை சீர்குலைக்கிறது. புதுசா ஒண்ணும் இல்ல. ஆனாலும் திரைக்கதை வலுவா இருக்கிறதால வெற்றி  ஆனாலும் படம் முடியும்போது விஜய் Sleeper ல தான் போறார்..ஹிஹி.. Sleeper Coach லங்க. 

கத்தி வெச்ச கழுத்துக்கு இதமா , கொய்யாப்பழ ஜூஸ் குடுக்குறார் பாருங்க விஜய் , அவர் தங்கைக்கு, அங்கதான், எந்த நிலையிலும் மன உறுதி முக்கியம்னு இருக்கற கேரக்டர் அழகா சொல்லப்பட்டிருக்கு. இவ்வளவு ஹிந்தி பேசுவார் விஜய்னு இப்பதான் தெரியுது  , இப்ப கடந்த 10-15 வருஷமா படிக்கிற பசங்கல்லாம் Convent-லயே ஹிந்திய படிச்சு வெச்சுக்கிட்டு நம்ம உயிர வாங்குறாய்ங்க  , இருந்தாலும் தமிழனோட Accent  வாடை அடிக்கத்தான் செய்யுது விஜய் ஹிந்தி பேசும் போது, அதுல தப்பிக்கிறது நடிகர் “மாதவன்” மட்டுந்தான், அவர் பேசினா மட்டும்தான் உ.பி.காரன் பேசற மாதிரியே இருக்கும்  விஜயின் தங்கை ஃபோனை எடுத்தவர்கிட்ட “ஹிந்தி”ல பேசுறார், ஆனா அவர் இங்கிலீஷ்ல பதில் சொல்றார், எங்கயோ இடிக்குதே முருகதாஸ் ?! 

Perfect Villain , அங்க ஏழாம் அறிவுல Dong Lee , இங்க வித்யுத் ஜம்வால், பில்லா 2 வில நடிச்சதவிட இங்க அருமையா பண்ணிருக்கார். Lip Sync பிரமாதம்.அதிக வசனங்கள் இல்லாம இருந்தாலும்.அதோட அந்த உச்சக்கட்ட காட்சில கப்பலின் மேல்தளத்தில ,கிட்டத்தட்ட பில்லா-2 வில ரஷ்யாவில கோட்சூட் போட்டுக்கிட்டு இருக்குறவங்க கூட அவர் போடுவது போலான சண்டை Perfect.

சரி படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்தவுடனே சட்டையைக்கழட்டி ஹேங்கர்ல் போடலாம்னு Cup Board ஐத்திறந்தால் உள்ள “வாயக்கட்டி வெச்ச” Terrorist கால மடக்கி ஒக்காந்துக்கிட்டு இருக்குறா மாதிரி ஒரு Feeling. Nice Idea Murugadas  அதோட விட்றாரா விஜய் , கூடவே ரெண்டு மணிநேரத்துக்கு எந்திரிக்க மாட்டான்னு ஒரு மயக்க ஊசி வேற போட்டுட்டு அவர் பாட்டுக்கு சர்ச்ல கல்யாணத்துக்கு வேற போயிட்றார். சத்யனவிட நமக்குதான் இங்க “பதக் பதக்”ங்குது 
ஐந்து தங்கைகளைக்கடத்தி வைத்துக்கொண்டு வில்லன் மிரட்டும் காட்சிகள் , தொடக்கத்தில் இருந்து முடியும் வரை ஏற்கனவே இப்படித்தான் நடக்கும்னு நமக்கு உள்ளூரத் தெரிஞ்சாலும் விறுவிறுப்புக்கு குறைவில்லை 

‘ஆயிரம் பேரக்கொல்ல நினைக்கிறவனே தன்னை மாய்த்துக்கொள்ள தயாரா இருக்கும்போது அதே ஆயிரம் பேரக்காப்பாத்த நினைக்கிறவன் தன் உயிரைக்கொடுக்க தயாராத்தான் இருக்கணும்’ங்கற வசனம் நல்லாத்தான் இருக்கு, ஆனாலும் அதையே ரெண்டு தடவ விஜய் சொல்றதால சலிப்புதான் வருது 

படத்தில் இத்தனை நிறைகள் இருப்பினும் ஒரு வலுவான கருத்தைப்பதிய விரும்புகிறேன் இங்கு. ஐரோம் ஷர்மிளாவின் காலவரையற்ற உண்ணாநோன்பைப்பற்றியும் , பக்கத்து நாட்டில் போய், கடலை எண்ணை வைத்து காய்த்துக்குடித்தது போக, அங்கு செய்துவைத்து விட்டு வந்தவைகளைப்பற்றியும், இன்னமும் அந்த சோகங்களில் வாடும் குடும்பங்களைப்பற்றியும் இந்த விஜய் ஜக்தீஷும், முருகதாஸும் அறியமாட்டார்களா ? அதென்ன பிரச்னையில் தமக்குப்பிடித்த ஒரு பக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு வியாபார நோக்கில் ஒரு படத்தை சுட்டுத்தள்ளிவிட்டால் போதும் என்று இவர்களின் நினைப்பு என்பதுதான் எனக்குப்புரியவில்லை.

தமிழில் நாட்டுப்பற்று பாடலை பாடினார் “ஜெயம் ரவி” என்பதற்காக “பேராண்மை” படத்தில் அந்தக்காட்சிகளை அடியோடு நீக்கச்சொன்னது இந்தியத் திரைப்படத் தணிக்கைக்குழு. இங்கு முழுக்க முழுக்க ஹிந்தி புகுந்து விளையாடுகிறது படம் முழுக்க (பாம்பே பின்னணி என்ற சாக்கில்) , பல சமயங்களில் நான் என்ன தமிழ்ப்படந்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனா இல்லை ஹிந்திப்படமா என்று கூட சந்தேகப்படும்படி அத்தனை ஹிந்தி வசனங்கள், என்ன நடக்கிறது ? விஜய் ராணுவ உடுப்பில் இருந்துகொண்டு பெண் பார்க்கும் படலக்காட்சியில், இந்த உடுப்புக்கு “ஜன கன மன” தான் பாடமுடியும் என்று வேறு ஒரு வசனம் , ஏன் “நீராரும் கடலொடுத்த” என்று வசனம் வைத்திருந்தால் ஆகாதா ? ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தீவிரவாதிகளாக இருக்கிறார்கள் என்பதையும் , அது போலான காட்சிகளில் பின்னணி இசை அதை உறுதிப்படுத்துவதையும் தவிர்த்திருக்கலாம்.

இது போல அடிப்படைக்குறைகளை ,,ஹ்ம்..நீக்கிவிட்டுப்பார்த்தால் , வலுவான தொய்வில்லாத திரைக்கதை, சரியான இடங்களில் வரும் பாடல்கள் (பாட்டு ஒண்ணும் சரியில்லை என்பது வேறு விஷயம்), Tight Closeupல வந்து பேசாத Punch Dialogues , இவையனைத்தும் வெகு நாட்களாகக் காத்துக்கிடந்த விஜயையும், ஏழாம் அறிவு கொடுத்து சொதப்பிய முருகதஸையும் வெற்றி பெற வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

– சின்னப்பயல் (Chinnappayal@gmail.com)

Series Navigationஎனது குடும்பம்கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *