ஜோதிர்லதா கிரிஜா
விரட்டி விரட்டித் தன்னைக் காதலித்த ஓர் இளைஞனை ஒரு பெண் மறுதலித்தாள். அதன் பிறகும் அவன் தொல்லை தாங்க முடியாத எல்லையைத் தொட்டதால் தன் தந்தையிடம் அவனைப்பற்றி அவள் கூற நேர்ந்தது. அவள் அப்பா அவனை எச்சரித்த பிறகும் அவனுடைய தொந்தரவு தொடரவே, காவல் துறையினரிடம் அவனைப் பற்றி அவள் தந்தை புகார் கொடுக்கும்படி ஆயிற்று. காவல்துறை அதிகாரி அவனை யழைத்து எச்சரித்த பிறகு, அவனது நச்சரிப்பு அப்போதைக்கு நின்று போனது. ஆனால் அவனது எரிச்சலும் ஏமாற்றமும் மேலும் அதிகரித்தன. தன்னை நிராகரித்த அவளைப் பழி தீர்க்க அவன் காத்துக்கொண்டிருந்தான்.
அவளுக்கு வேற்றூர் ஒன்றில் வேலை கிடைத்தது. தந்தையின் துணயுடன் அவள் ரெயில் ஏற நடந்துகொண்டிருந்த போது அந்தக் கயவன் அமிலத்தை அவள் மீது ஊற்றி அவள் முகத்தை உருத்தெரியாதபடி சேதப் படுத்திவிட்டான். அவளுக்குக் கண்களின் பார்வையும் போய்விட்டது. கஷ்டப்பட்டு அவளைப் படிக்கவைத்து அவளை நம்பியும் இருந்த அவள் ஏழைத்தகப்பன் இப்போது அழுது மாய்ந்துகொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணோ, ‘அப்பா! கண் பார்வையை இழந்து உங்களுக்குச் சுமையாகிவிட்ட என்னைக் கொன்றுவிடுங்கள்!” என்று கதறிக்கொண்டிருக்கிறாளாம். இத்தகைய கயவர்களுக்கு அதேபோன்ற அமிலத்தை ஊற்றிக் கண்களை அவிப்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.
காதல் என்பதைப் பெரும்பாலான இளைஞர்கள் தப்பாகப் புரிந்துகொண்டிருப்பதோடு, பெண் என்பவள் தனக்கு உடன்பட்டே தீர வேண்டியவள் எனும் அதிகாரக் கருத்துக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து, அவள் அழகால் கவரப்பட்டு, அவளை யடைய உடலில் எழும் கிளர்ச்சியையே காதல் என்பதாய்த் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
காதல் மனித வாழ்வில் இயல்பானதுதான். இன்றியமையாததுதான். எனவே, எல்லா ஊடகங்களுமே காதலைப் பற்றியே மிக அதிக அளவில் பேசவும், எழுதவும், ஒளிபரப்பவும் செய்கின்றனவே எனும் குற்றச்சாட்டு மிகவும் தவறானது. காதலை இவை தப்புத் தப்பாய்ச் சித்திரித்து இளைஞர்களைத் தவறான பாதையில் வழி நடத்திக்கொண்டிருக்கின்றன என்பதே சரியான குற்றச்சாட்டாக இருக்கும்.. மனத்தின்பாற்பட்ட உயர்ந்த காதலை இளைஞர்கள் புரிந்துகொள்ளூம் முறையில் ஊடகங்கள் செயல்பட்டால் இது போன்ற கொடூரங்கள் அறவே போகாவிட்டாலும், பெருமளவு குறைய வாய்ப்பு உண்டு. உடலுக்கும் உடல் சார்ந்த மிருகத்தனமான எழுச்சிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நம் ஊடகங்கள் இளைஞர்களைத் தவறான பாதையில் வழிநடத்திக்கொண்டிருக்கின்றன.
இந்த உலகம் இப்படிச் சீரழிந்துகொண்டிருக்கிறதே என்று (போலிக்) கண்ணீர் சிந்தி, தங்களைப் பெரிதும் சமுதாயப் பொறுப்பு உள்ளவர்கள் போல் மக்களிடம் காட்டிக்கொள்ளுவதற்கு ஒரு வார இதழையும், மதம், பக்தி ஆகிய இரு அபினிகளாலும் மக்களை மயக்கித் தங்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்ள ஓர் இதழையும், நடிகைகளின் முக்கால் நிர்வாணப் படங்களை வெளியிட்டு இளைஞர்களிடம் உடல் வெறியைத் தூண்டிவிட்டு அவர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி, அதன் விளைவாகப் பெண்களையும், ஆபத்துக்குட்படுத்தி, இவற்றின் மூலம் காசு பண்ண ஓர் இதழையும், ஆபாசப்படங்களை வெளியிடும் இதழ்களால் விளையும் தீங்குகளைப் பட்டியலிட்டு அங்கலாய்த்து முதலைக் கண்ணீர் உகுக்க மற்றும் ஓர் இதழையும் வெளியிட்டு ஒரே முதலாளி போடும் வேடங்கள்தான் என்னே!
சரிகா ஷா போன்று ‘அடக்கமாக’ உடுக்கும் பெண்கள் பெண்சீண்டலால் உயிரிழக்க நேரும்போது தங்கள் பத்திரிகையில் ஒரு நீலிக்கண்ணீர்த் தலையங்கம், அதற்கு அடுத்த பக்கத்திலேயே பெண்சீண்டலைத் தூண்டும் வகையில் பெண்களின் ஆபாச முக்கால் நிர்வாணப் புகைப்படங்கள் / ஆபாச எழுத்துகள் என்று இவை போடும் இரட்டை வேடத்தை நாம் எப்போது கண்டிக்கப் போகிறோம்? தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முன்போ, பாராளு மன்றத்தின் முன்போ கூச்சலிடும் மக்கள் ஏன் பெண் சீண்டலுக்கும், கற்பழிப்புக்கும் காரணமாகும் இவற்றின் அலுவலகங்கள் முன்போ, திரைப்படக் கொட்டகைகள் முன்போ ஆர்ப்பாட்டம் செய்வதில்லை?
பத்திரிகைகள், சினிமாப் படல்கள் – posters – ஆகியவற்றில் ஆபாசம் தலை காட்டக்கூடாது என்பதற்கான சட்டங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. காவல்துறை அவற்றைச் செயல்படுத்த மறந்தே போய்விட்டது என்பதே உணமையாகும். அல்லது, கண்டும் காணாதது மாதிரி இருக்கக் கையூட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ! யார் கண்டது?
மருத்துவக் கல்லூரரி மாணவர்கள் எதிர்த்து ரகளை செய்த கற்பழிப்புகள் போல் ஆயிரக்கணக்கில் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை இந்தியாவில் தலித் பெண்களுக்கும் ஏனைய பெண்களுக்கும் ஆயிரக்கணக்கில் நேர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. யாரும் கண்டுகொள்ளுவதில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. எத்தனை ஊர்களில் ஆண்கள் தங்களுக்குள் உள்ள பகைமையை எதிரிகளின் வீட்டுப் பெண்களை அவமானப்படுத்திப் பழி தீர்த்துக்கொள்ளுகிறார்கள்!
ஒரு பெண் ஆபத்தில் இருக்கும் போது அவள் கற்பைக் காப்பாற்ற அவள் அருகில் இருக்கும் ஆண்கள் தங்கள் உயிரைத் துச்சமாய்க் கருதி ஜடாயு போல் வீரத்துடன் செயல்பட வேண்டும் என்று தாம் எழுதிய ராமாயணத்தில் ராஜாஜி கூறுகிறார்.
ஆனால், இங்குள்ள ஆண்பிள்ளைகளோ, பாஞ்சாலியைத் துகிலுரித்த போது அதை வேடிக்கை பார்த்தவாறு செயலற்று, மனச்சாட்சியற்று, வெறும் பொம்மையாய் நின்றிருந்த மகாபாரதப் பீஷ்ம பிதாமகர்களைப் போலன்றோ செயல்படுகிறார்கள்! அது மட்டுமா? சில வேளைகளில் கூட்டுக் கற்பழிப்பாகவன்றோ ஒரு வன்செயலை மாற்றியும் விடுகிறார்கள்!
எனினும் தில்லி மாணவியின் கற்பழிப்பைக் கண்டித்த போராட்டத்தில் இத்தனை ஆண்கள் கலந்து கொண்டதே ஆறுதலான விஷயம்தான். ஆனால், இது கண நேரத்து ஆவேசமாய் நின்று விடக்கூடாதுதானே?
தங்கள் கல்லூரி மாணவி என்கிற அபிமானத்தில் அம் மாணவர்கள் கலந்துகொண்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்றெனினும், இதே மாணவர்கள் பிற பெண்களிடம் எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதற்கான விடை யாவரும் அறிந்ததே.
கற்பழிப்புக்குத் தண்டனையாய்க் குற்றவாளியைத் தூக்கில் போடுவதோ அவனது ஆண்மையைச் சிதைப்பதோ சரியான தீர்வாகாது. கற்பழிக்கப்படும் பெண் பின்னாளில் தங்களை அடையாளம் காட்டிவிடக் கூடாது என்பதற்காக அவளைக் கொன்று விடுவார்கள்.. மேலும், ஆண்மை சிதைந்த நிலையில் கசப்பும் காழ்ப்புமுற்று இந்த ஆண்கள் தங்கள் கைகளாலும் கால்களாலும் வன்முறைத்தனமான வேறு பல குற்றங்களை இழைப்பார்கள். எனவே வன்னுகர்வுக் குற்றவாளளிகளின் இரு கைகளையும், கால்களையும் வெட்டிவிடுவதே அவர்களுக்குச் சரியான தண்டனையாக இருக்கும். போனால் போகிறதென்று ஒரு கையை மட்டும் விட்டுவைக்கலாம்.
நிறைய எண்ணிக்கையில் காவல் துறை ஊழியர்களை ரோந்து சுற்ற விட்டால் பெண்கள் பாதுகாப்பாக இரவில் வீடு திரும்புவார்கள் என்று சொல்லப் பரடுகிறது. இதே காவல்துறையினரே பெண்களைக் கற்பழிக்க மாட்டர்கள் என்பது என்ன நிச்சயம்? காவ்ல் நிலையங்களில் நிகழாத கற்பழிப்பா!
எனவே, பெண்கள் அனைவருக்கும் தற்காப்புக் கலைப் பயிற்சி தரவேண்டும். இதற்கும் காலம் பிடிக்கும்.
சரியான கல்வி முறை, வளர்ப்பு, சுற்றுச்சூழல் ஆகியவை ஏற்பட்டு, இவற்றின் விளைவாக ஆண்கள் ஓரளவேனும் திருந்துவதற்கு இன்னும் பல்லாண்டுகள் ஆகுமாதலின், அந்த நாள் வுரும் வரையில் பெண்கள் இரவு நேரப் பயணம், நடமாட்டம் போன்றவற்றைத் தவிர்ப்பதே அவர்களுக்குப் பாதுகாப்பானது. வேறு வழி ஏதும் தற்சமயம் இருப்பதாய்த் தெரியவில்லை.
jothigirija@live.com
- கட்டாயக் காதலும் கற்பழிப்பும்!
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) அங்கம் -4 பாகம் -10 [முடிவுக் காட்சி]
- என் பார்வையில் தமிழ் சினிமா
- STOMA presented by Agni Koothu (Theatre of Fire) & The Substation
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- அனில் கிருஷ்ணனின் “ கடந்த காலத்தின் அழைப்பு “ ( a call from the past )
- வால்ட்விட்மன்வசனகவிதை -5 என் பாடத் துவக்கம்
- மனத்தில் அடையாத ஒரு காகம்
- இரவு விழித்திருக்கும் வீடு
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….. 11. கல்கி – விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
- வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 2
- நதி வெள்ளத்தின் துளி!
- வலி
- இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 47 இனிமைத் திருவடிவம்
- அக்னிப்பிரவேசம்-17
- ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4
- தவம்
- “தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்
- அம்முவின் தூக்கம்
- மகாலட்சுமி சுவாமிநாதன்
- தமிழ் ஆவண மாநாடு 2013
- அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீட்டு விழா
- எரிதழல் கொண்டு வா!
- பெண்ணே !
- இரு கவரிமான்கள் –
- திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு
- மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)
- பத்து நாட்கள்
- காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு
- அற்புதங்கள் உடைப்பு: ஏன் புனித நீரை சாக்கடையிலிருந்து கண்டுபிடித்தேன்?