அற்புதங்கள் உடைப்பு: ஏன் புனித நீரை சாக்கடையிலிருந்து கண்டுபிடித்தேன்?

This entry is part 34 of 34 in the series 6 ஜனவரி 2013

சணல் எடமருக்கு/ ஜான் வொயிட் நியூ சயண்டிஸ்ட் இதழுக்காக ஜான் வொயிட் பேட்டி சமீபத்தில் மும்பையில் நீங்கள் ஆராய்ச்சி செய்த ”அற்புதம்” என்ன? மும்பையில் இருக்கும் அவர் லேடி ஆஃப் வேளாங்கண்ணி சர்ச்சை சார்ந்த மதகுருக்களும், கத்தோலிக்க மதத்தை சார்ந்த மக்களும், இயேசுவின் காலடியிலிருந்து வழியும் தண்ணீர் கடவுளின் ஒரு அற்புதம் என்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் இந்த ஒழுகும் தண்ணீரை சேமித்து அதனை குடித்தார்கள். இந்த தண்ணீர் தங்களது எல்லா நோய்களையும் தீர்க்கும் என்று […]

என் பார்வையில் தமிழ் சினிமா

This entry is part 3 of 34 in the series 6 ஜனவரி 2013

தமிழ் சினிமாவில் இலக்கியம் எழுத்து பற்றி எழுதச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது சைனாவில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் தேடினால் கிடைக்கலாமோ என்னவோ. லாப்லாந்தில் மொந்தன் பழம் எங்கே கிடைக்கும் என்று தேடலாம். இர்குட்ஸ்க் நகரில் காலையில் எழுந்ததும் இடியாப்பமும் குருமாவும் தேடலாம். நாமும் கடந்த 90 வருட காலமாக தமிழுக்கு ஒரு ஆவேசத்தோடு தொண்டை வரள கோஷமிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் வளர்ச்சியே தன் கொள்கையாகக் கொண்ட இயக்கம் அரசுக்கு வந்து இரண்டு தலைமுறை ஆன பிறகும், […]

காரசாரம். – பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு

This entry is part 33 of 34 in the series 6 ஜனவரி 2013

பொதிகையின் காரசாரம் நிகழ்ச்சிக்காக முகநூல் நண்பர் ப்ரேம் சாகர்  தொடர்பு கொண்டு பெண்சிசுக் கொலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா இல்லையா என்ற தலைப்பில் கருத்துக் கூற அழைத்திருந்தார். விழிப்புணர்வு இல்லை என்ற பகுதியில் நானும் விழிப்புணர்வு இருக்கிறது என்ற பகுதியில் கருத்துக் கூற என் கணவரும் இடம் பெற்றிருந்தோம். சமூக ஆர்வலர் ஷைலா சாமுவேல்  இப்போது விழிப்புணர்வு வந்து விட்டதாகவும் ஆனால் முன் காலங்களில் எல்லாம் பெண் பிள்ளை என்றால் தத்து யாரும் எடுப்பதில்லை எனவும் கூறினார். […]

உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை – 4

This entry is part 19 of 34 in the series 6 ஜனவரி 2013

விமர்சகர்களின் குற்றச் சாட்டுகளை மேலும் ஆராயலாம். கோவை குண்டு வெடிப்பிற்காக(1998) கைது செய்யப்பட ஒரு தீவிரவாதி, அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி(2002) தான் என்று காலத்திற்கு பிந்தைய ஒரு சம்பவத்தை கூறுகிறாராம்! இது படத்தில் உள்ள ஒட்டையாம். இப்படி ஒரு கண்மூடித் தனமாக கருத்தை எப்படி வெட்கமே இல்லாமல் வெளியே சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை! இதை சொல்லும் தீவிரவாதி அப்துல்லாவிடம் ‘நீ ஏன் கோவையில் குண்டு வைத்தாய்?’ என்று கேட்கப் படவில்லை. அவன், கோவையில் குண்டு […]

மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)

This entry is part 31 of 34 in the series 6 ஜனவரி 2013

Sand And Foam – Khalil Gibran பவள சங்கரி மேதையென்பவன், ராபினின் மிதமானதொரு வசந்தகால துவக்கத்தின் கீதமானவன். மோசமான இறகு படைத்ததோர் ஆன்மாவாயினும், அதுவும்கூட உடற்தேவையினின்று தப்பிக்க இயலாது. பித்தன் என்பதாலேயே அவன் உம்மையும், எம்மையும் விடக் குறைந்த தகுதியுடனான இசைக்கலைஞன் அல்லன்; ஒருகால் அவன் வாசிக்கிற அந்த இசைக்கருவி மட்டும் சிறிது ராகம் தப்பியதாக இருக்கலாம். இருதயத்தின் அமைதியினூடே உறைந்திருக்கும், தம் குழவியின் இதழ்களின்மீது இசைக்கும், ஒரு தாயின் பாடல் அது. நிறைவேறாத ஆசைகளென்பதே […]

திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு

This entry is part 30 of 34 in the series 6 ஜனவரி 2013

தமிழ்த்துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அழியா மதிப்புடையது திருக்குறள். அதன் அழிவின்மைக்குக் காரணம் அதனுள் உள்ள உண்மைத்தன்மையும் தற்சார்புத்தன்மையின்மையும்தான். திருக்குறளை அழிவில்லாமல் தினம் தினம் மக்கள் மத்தியில் உலாவச் செய்வதன் மூலம் மக்களிடத்தில் அமைதியையும், தெளிவையும், அன்பையும், அறிவையும், பண்பையும், சான்றாண்மையையும், நாகரீகத்தையும் மேம்பாடு அடையச் செய்ய இயலும். இதற்காக தினம் தினம் திருக்குறளைப் பரப்பும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள் என்ற பதிவுகளைக் கடந்து தற்போது திருக்குறள் டிஜிட்டல் […]

பத்து நாட்கள்

This entry is part 32 of 34 in the series 6 ஜனவரி 2013

முஷாரஃப் முதுநபீன் (முஷாஃபி) கார்த்திக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனது கல்லூரியின் கல்விச் சுற்றுலா அடுத்த நாள் தொடங்குகிறது. பத்துநாள் சுற்றுலா. எல்லே நீர்வீழ்ச்சி, ஹக்கல பூந்தோட்டம், காலிமுகத்திடல், பேராதனைப் பூங்கா, யாழ் நூலகசாலை என இலங்கையின் முக்கியமான இடங்களுக்கெல்லாம் பயனிக்கவிருக்கிறது சுற்றுலா குழு. சுமார் 2 மாதங்களாகவே சுற்றுலா பற்றிய பேச்சுக்கள் கல்லூரியைஆக்கிரமித்திருந்தன. பெயர் பதிவுசெய்தல்,பணம் அறவிடுதல், சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தல், கையேடுகளை பிரசுரித்து மாணவர்களுக்கு சுற்றுலா பற்றி அறிவூட்டல் என சுற்றுலாவுக்கு அனைவருமே […]

இரு கவரிமான்கள் –

This entry is part 29 of 34 in the series 6 ஜனவரி 2013

  சிறு தொடர்  கதை: ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். நான் அன்னிக்கே நினைச்சேன்..இப்படியாகும்னு .இந்தம்மா தான் ரமேஷ் நல்லவர்ன்னு யார் சொன்னாலும் கேட்காமல்   நம்பிகிட்டிருந்தாங்க..இப்ப என்னாச்சு….? அவரு தன்னோட  செல்வாக்கைக்  காட்டி மாதவியை தன் வலையில் சிக்க வெச்சுக்கிட்டாரு. நல்ல வேளையா  நம்ம பைரவியம்மா  அவருகிட்ட இருந்து பத்திரமாத் தப்பிச்சாங்க  அது வரைக்கும் எனக்கு சந்தோஷம் . ரத்தினம் மனசுக்குள் நினைத்தபடியே பைரவியின் வருத்தத்திற்கு ரமேஷ் தான் காரணமாயிருக்கலாம் என்று யூகித்தபடியே வண்டியை வீட்டுக்கு ஒட்டினார் […]

பெண்ணே !

This entry is part 28 of 34 in the series 6 ஜனவரி 2013

சீராளன் ஜெயந்தன் நான் ஆணாய் பிறந்தது வெட்கம் கோரப்பற்களும் கொடூர நகங்களும் குருதி சொட்டும் நாவும் குத்திக் கிழிக்கும் கொடுங்கோளும் கொண்டு சதை தேடி சதை தேடி பசியாறா பிணந்தின்னி சாகும் வரை சதை வேண்டும். காமக் கண்களும் கற்பழிக்கும் காமிரா கண்களும் எரியூட்டும் சேலைக்குள் ஊடுருவும் கண்கள் துகிலுரியத் துடிக்கும் மனசு அது எவளாயினும் எனக்கு வேண்டும். உடன் பிறந்தவள் தவிர்த்து யாரும் இல்லை சகோதரி என்று இறுமாப்பு பேச்சிலும் காமம் களியூரும். பணமும் புகழும் […]

எரிதழல் கொண்டு வா!

This entry is part 27 of 34 in the series 6 ஜனவரி 2013

  மூடியிருந்த அறைக் கதவின் வழியாக உயிரை உருக்கும் மரண ஓலம். தீயால கருகி எரிந்து துடிக்கும் இறுதி நேரத்து போராட்டம். தெருவில் கூட்டம் கூடிவிட்டது. யாரோ ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் போன் செய்தும் விட்டார்கள். படித்தவர்கள் குடியிருக்கும் அரசாங்க, டெலிபோன் குவார்டர்ஸ் பல மாடிக் கட்டிட்க் குடியிருப்பின் அருகில் உள்ள தனி வீடு. காலை ஷிப்ட் முடித்து வீட்டிற்கு  வந்தவர்கள் பக்கத்து வீட்டில் வந்த மரண ஓலமும், எரியும் வாசமும் கண்டு அரண்டு போய் மளமளவென காரியங்கள் […]