கணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்

author
1
0 minutes, 24 seconds Read
This entry is part 2 of 32 in the series 13 ஜனவரி 2013

BEN BRANTLEY

11ganesh1-articleLargeஇப்போதெல்லாம், நாடகங்களுக்கு சென்றபோது மிகுந்த ஆர்வத்துடன் உங்களுடைய எதிர்வினைகளை நீங்களே கேள்வி கேள்வி கேட்டிருப்பதும், மறு சிந்தனை செய்திருப்பதும் அதிகம் இருக்காது. சுயபரிசோதனை என்னும் கலை, இப்போதெல்லாம் பழகிப்போய், அதிர்ச்சி கூட ஏற்படுத்துவதில்லை.

ஆனால், பரிசோதனை நாடகங்களின் ராடார் விழாவின் கீழ் திறக்கப்பட்டுள்ள “கணேஷ் vs மூன்றாம் பேரரசு” (Ganesh Versus the Third Reich – இதில் மூன்றாம் பேரரசு என்பது ஹிட்லரின் அரசாட்சியை குறிக்கிறது) என்ற குறிப்பிடத்தகுந்த நாடகம், அதில் நடப்பதையெல்லாம் ஒரு சிந்தனையுமில்லாமல் வெறுமே உங்களை பார்க்க அனுமதிப்பதில்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம் என்று நினைத்துகொள்ளும் நாடக விசிறிகளுக்கு உணர்வுகளை தீர்க்கமடையச் செய்யும் மருந்து இந்த நாடகம்.

10ganesh2-popupஇந்த நாடகத்தின் தலைப்பு கூட, சங்கடமான நடுக்கங்களை ஏற்படுத்தக்கூடியது. ஹிட்லரின் ஜெர்மனியை யானை தலை கொண்ட கணேஷ் தெய்வம் எதிர்கொள்ளுமா? கல்லூரியில் கஞ்சா அடித்துகொண்டு படுத்துகிடக்கும் கல்லூரி மாணவர்கள் அசிங்கமான ஜோக்குகளையும், நாகரிக அரசியலுக்கு ஒவ்வாத விஷயங்களையும் கொண்டதாக ஒலிக்கிறது.

இல்லவே இல்லை. புரூஸ் க்லாட்வின் இயக்கி வடிவமைத்திருக்கும் இந்த நாடகம், உண்மையிலேயே கணேஷின் பயணத்தை( ஆம், உயிர்ப்புள்ள யானை தோற்றம் கொண்ட முகமூடி அணிந்த நடிகரால் நடிக்கப்படும் கதாபாத்திரம்) சொல்கிறது. முடிவற்ற பிரபஞ்ச வெளியிலிருந்து வெளியாகி, நாஜி சித்தரவதை முகாம்களும் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட பாதாள அறைகளும் கொண்ட இந்த உலகத்தில் பயணிப்பதை காட்டுகிறது. அவரது குறிக்கோள்? நன்மை பெருகும் புனித சமஸ்கிருத குறியீடான ஸ்வஸ்திகாவை காப்பாற்றுவதும் அதனை மீட்பதும்.

”கணேஷ்” திங்கட்கிழமையிலிருந்து பப்ளிக் தியேட்டரில் நடைபெறுகிற இந்த நாடகம் உண்மையிலேயே அந்த நாடகத்தை நடத்துவதில் இருக்கும் கஷ்டங்கள், கவலைகள் பற்றியது. இந்த நாடகத்தில், இந்த நாடகத்தின் நோக்க, என்ன, இது எதனை சாதிக்க விரும்புகிறது என்ற விவாதங்கள் நடைபெறுகின்றன. இப்படி ஏற்கெனவே பார்த்திருக்கிறீர்களா?

இந்த இடத்தில், இந்த நாடகத்தில் பங்கு பெறும் ஐந்து பேரில் ஒருவர் தவிர மற்றவர்கள் எல்லோருமே “அறிவுரீதியில் குறைபட்டவர்கள்” என்று நாடகமே குறிப்பிடுகிறது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

10ganesh3-popup”கணேஷ்” நாடகம் பார்க்க ஒன்றுமே தெரியாமல் உள்ளே சென்றால், இந்த நாடகத்தில் நடித்திருப்பவர்கள் (எல்லோருமே ஆண்கள்) எல்லோரும் தொழில்ரீதியான நடிகர்களிடமிருந்து எவ்வளவு வேறுபட்டவர்கள் என்பதை அறியலாம். (கணேஷ் நாடகம் இதனையும் உங்களை சிந்திக்க வைக்கிறது). உங்களுக்கு இருக்கும் நேரத்தில், திக்கிதிக்கி பேசினாலும் தன்னம்பிக்கையோடு பேசும் ஒருவரையும், அழுத்தி பேசும் இன்னொருவரையும், அந்த பேச்சுக்களை எப்படி அந்த நபர்கள் தங்களுக்கு சாதகமாக உபயோகப்படுத்திகொள்கிறார்கள் என்பதையும் கவனிக்கலாம்.

மார்க் டீன்ஸ், சிமான் லாஹெர்ட்டி, ஸ்காட் பிரைஸ், பிரியன் டில்லி ஆகிய உடல்குறைபாடுள்ளவர்கள், உடல் குறைபாடுள்ளவர்களாக நடிக்கிறார்கள். திரு. டில்லி அவர்களது கதாபாத்திரம், இந்த நாடகத்தின் எழுத்தாளராகவும், ”கணேஷ்” கதாபாத்திரமாகவும் வருகிறது. மற்ற கதாபாத்திரங்களை, (யூத சித்ரவதை முகாமிலிருந்து வெளியேறி தஞ்சமடைந்தவர், நாஜி காவலாளி, ஹிட்லர்) யார் ஏற்றுகொள்வது என்று சிறு விவாதம் நடக்கிறது. யார் யாருடைய கதாபாத்திரங்களை ஏற்றுகொள்வது என்று முடிவடைவது, ஆழ்ந்த உள்ளர்த்தங்களை கொண்டுள்ளது.

திரு. பிரைஸின் கதாபாத்திரம் திரும்பத் திரும்ப, இந்த நாடகம் நடத்துவதற்கு எதிர்ப்பும், செய்யும் வேலைகளுக்கு மறுப்பும் சொல்லுகிறது. இந்த கதாபாத்திரங்களை நடிப்பதற்கு நமக்கு உரிமையோ அல்லது அதிகாரமோ இருக்கிறது என்று கேட்கிறார். இவர் பிரச்னைகளை உண்டுபண்ணுபவர். இயக்குனர் டேவிடின் (லூக் ரையான் டேவிடாக நடித்திருக்கிறார்) பக்கத்தில் முள் போல குத்திகொண்டே இருக்கிறார். டேவிட் டாக்டர் மெஙெலே(Dr. Mengele) ஆக நடிக்கிறார். இவர் ஜெர்மன் மொழியில், நசிந்து போன மனித மாதிரிகள் மீதுள்ள ஆர்வத்தை பேசுகிறார்.

ரிகர்சலின் போது பார்வையாளர்களுக்கு உரை நிகழ்த்துவது ”ஆர்வத்தை தூண்டும் நாடகீய தருணமாக” இருக்கும் என்கிறார். “ஏ மக்களே, இங்கே ஒரு மீன் காட்சி சாலை அல்லது மிருககாட்சி சாலை பார்க்க வந்தீர்களா? இல்லை நீங்கள் ஒரு வினோத பிறவிகள் காட்சி பார்க்க வந்தீர்களா?”

டேவிட் இந்த நாடக தயாரிப்பின் உண்மை விளம்பி என்று எடுத்துகொள்ள வேண்டாம். உண்மையில் டேவிட் பாத்திரம் ஒரு அராத்து பாத்திரம். இலக்கியதரமான வார்த்தைகளை வைத்துகொண்டும், ஒருவருக்கு எதிராக மற்றவரை உபயோகப்படுத்திகொள்ளும் விளையாட்டுகளையும் செய்யும் ஒரு நாடக இயக்குனர் போன்ற அராத்து பாத்திரம்.

இவர் இந்த நாடகத்தின் பங்கு பெறும் நடிகர்களுக்கு அக்கறையுள்ள தந்தை போல தன்னை முன்னிருத்திகொள்கிறார். ஆனால், பெற்றோர் தங்களது அதிகாரம் தங்கள் தலைக்கு ஏறி அது குழந்தைகளை சித்ரவதை செய்யவும் இட்டுச்செல்லும் என்பது தெரிந்ததே. குழந்தைகளும் அதிகாரத்தை எதிர்த்து குரல்கொடுக்கின்றன.

பெரிய மற்றும் சிறிய அதிகார துஷ்பிரயோகங்களது குணாம்சங்களை வெளிக்காட்டுவதாக “கணேஷ்” இருக்கிறது. இந்த நாடகம், நாடக இயக்குனர் – ஹிட்லர் என்ற எளிய ஒப்பீடுகளை செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால், தனக்கு உகந்ததாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற உந்துதல்கள் எவ்வாறு நிதர்சனத்தை பல்வேறு வகைகளில் வளைக்கின்றன என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ரிகர்சல்களில் விளையாடப்படும் அதிகார விளையாட்டுகள் டேவிட் மட்டுமே செய்வதல்ல. நடிகர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாகவும் மறைமுகமாகவும், குரூரத்தை வெளிக்காட்டுகிறார்கள்.

மறு உருவாக்க மாயம் செய்யும் நாடகத்தின் எடுத்துக்காட்டாக கணேஷ் இருக்கிறது. பிளாஸ்டிக் திரைச்சீலைகளையும், நுண்ணிய ஒளியையும் வைத்துக்கொண்டு நாடகத்துக்குள் நாடகம் நடத்தும் இந்த நாடகம், உண்மையிலேயே அற்புதமானது (பெர்லினுக்கு ரயில் வண்டி போகும் காட்சி மிக சிறப்பானது)

இருந்தாலும், இன்னொரு உலகத்துக்கு தப்பி சென்றுவிட இந்த நாடக தயாரிப்பு அனுமதிப்பதே இல்லை. அந்த காட்சிகளை கீழிறக்கிக்கொண்டே இருக்கிறது. நிதர்சனத்துக்கு இழுத்து வந்துகொண்டே அது நாடகம் என்ற உணர்விலிருந்து தப்பிவிட அனுமதிப்பதில்லை. நாம் எவ்வாறு நாடகத்தை பார்க்கிறோம், அனுபவிக்கிறோம், நமது எந்த அனுபவங்களை அதற்கு எடுத்துகொண்டு வருகிறோம் என்ற சிந்தனையை செய்யும்படி தூண்டுகிறது. நடிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் என்ற எதிர்பார்ப்பையும் அது சிந்திக்க வைக்கிறது. நாடகத்தை விழாவாக ஆக்கும் நாடகமல்ல “கணேஷ்”. நாடகத்தை முடிவற்று புதுப்பித்துகொள்ளும் ஒரு தேடலாக நாடகத்தை ஆராயத்தூண்டுகிறது.

கணேஷ்” தடைகளை தகர்க்கும் தெய்வம். கணேஷின் குறியீட்டான குணம் இந்த நாடகத்தயாரிப்புக்கும் எண்ணற்ற வகையில் பிரயோகிக்கப்படலாம். இது சொல்லும் கதைகள் தடைகள் தகர்க்கப்பட்டு முடிவடைந்ததை சொல்வதோடு நிற்கவில்லை. தடைகளை தகர்ப்பது என்பது முடிவற்ற பயணம்.

Ganesh Versus the Third Reich
கணேஷ் vs மூன்றாம் பேரரசு

இயக்கம், வடிவமைப்பு: புரூஸ் க்ளாட்வின்
திரைக்கதை ஆலோசனை: மெலிஸ்ஸா ரீவ்ஸ்
ஒளி: ஆண்ட்ரூ லிவிங்க்ஸ்டன், புளூ பாட்டில்
அரங்க அமைப்பு: மார்க் குத்பெர்ட்ஸன்
அனிமேஷன்: ரியன் ஹிங்க்லி
இசை ஜோஹ்ன் ஜோஹன்ஸன்
உரைஇ: ஷியோ இடானி
ஒலி: ஹூக் கோவில்
மொழிபெயர்ப்பு: காரென் விட்டுன், க்ரெக் பெய்லி
மேடை நிர்வாகம்: ஆலிஸ் ப்ளெமிங்
தயாரிப்பு நிர்வாகம்: வான் லாக்கர்
தயாரிப்பு: ஆலிஸ் நாஷ்
A Back to Back Theater production,
the Public Theater as part of Under the Radar festival, Oskar Eustis, artistic director; Patrick Willingham, executive director; Mark Russell, festival director. At the Public Theater, 425 Lafayette Street Street, at Astor Place, East Village; (212) 967-7555, www.publictheater.org. Through Monday. Running time: 1 hour 45 minutes.
WITH: Mark Deans, Simon Laherty, Scott Price, Luke Ryan, Brian Tilley and Georgina Naidu.

மூலம்

Series Navigationகட்டாய உழைப்பு முகாம்களை சீர்திருத்த போவதாக சீனா கூறுகிறது.‘எனது பர்மா குறிப்புகள்’ ‍பற்றிய ஒரு வாசகனின் சில‌ குறிப்புகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    தங்கமணி says:

    நாடகம் போடுவதை பற்றிய நாடகம்! சிறப்பான முயற்சி.

    இந்த திறனாய்வுசிலமுக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *