தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்

This entry is part 23 of 32 in the series 13 ஜனவரி 2013மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பின்னிருந்து அது என்னை அழைக்கிறது
திரும்பி வரும்படி நான்
பிரிந்து செல்லும் தருணத்தில் !
மேகத்தின் இடை வெளி களின்
ஊடே தெரியும்
உதய வேளை ஒளிக் கற்றைகள் !
காலை மழைப் பொழிவைச்
சகிக்காமல்
ஓலமிட்டுக் கீச்சிடும் பறவை
மீளும்படி
என்னை அழைக்கும்
மரக்கிளை மறைவி லிருந்து.

ஆற்று வெள்ளம் பொங்கி
நிழல்களுக் கடியிலே
யாரைத் தேடிக் கொண்டு
வேகமாய்ப் பாய்ந்து ஓடுகிறது ?
யார் பேரை அழைக்கிறது ?
என் ஆத்மாவின் உள்ளிருந்து
யாரது துடிப்புடன்
கழிந்திடும்
காலைப் பொழுதை நிறுத்திவிட
ஆசையாய்
யாசிக்க ஆரம்பிப்பது  ?

+++++++++++++++++++++++++
பாட்டு : 171   ஆகஸ்டு 8, 1923 இல்  கொல்கத்தா எம்பயர்  தியேட்டர் [Bisharjan] நாடகத்தில்   தாகூர்  62 வயதினராய் இருந்த போது  எழுதிப் பாடப் பட்டது.
+++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  January 8, 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationமணலும், (வாலிகையும்) நுரையும் – 7அம்மாவின் அங்கி!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *