கோவிந்த் கருப்
விமர்சனம் அல்ல.. படிக்க வேண்டிய சில புத்தகங்களின் அறிமுகமே…
புத்தகம் 1:
திராவிட இயக்கம் : புனைவும் உண்மையும்..
முதலில் மலர்மன்னனின் நிர்பந்தமற்ற, எந்த விதமான எதிர்பார்ப்புமற்ற எழுதும் முறைக்கு வந்தனம்.
கடந்தகால பக்கங்களை புரட்டிப்பார்க்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள்.
அவற்றை எழுத்தில் வடிப்பவர்கள் மிக மிகச் சிலரே..
அதிலும், பாப்புலர் சிண்ட்ரோம் ஆட்டிப் படைக்காமல் எழுதுபவர்கள் மிக மிக மிக சிலரே.. அதில் ஒருவர் மலர்மன்னன்…
காலத்தில் தான் கடந்து வந்த பாதையின் காட்சிகளை அப்படியே வடிப்பதால் அவரின் எழுத்துக்கள் சத்திய எழுத்துக்காளாகின்றன…
அது இந்தப் புத்தகத்திலும் வியாபித்துக் கிடக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சியின் பெயர் வந்தது எப்படி..
சாணார்கள் என்றழைக்கப்பட்டவர்களை கிறிஸ்துவர்களாக முழுவதும் மாற்ற நடந்த முயற்சிக்கள்…
என்றெல்லாம் ஒன்று விடாமல் சொல்லி, இன்றைக்கும் உயிரோடு இருக்கும்,
பிராமின் – பிறபடுத்தப்பட்டோர் விஷயங்களை எடுத்துக் கொண்டு இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து வந்திருக்கிறார்.
அலைகடல் ஓடம் போல், நினைவலைகளில் நீந்தி இருக்கிறார்.
அது மட்டுமின்றி , தான் படித்த பல குறிப்புக்களுடனும் கலந்து விஷயங்களை எழுதியிருக்கிறார்.
புதியமாதவியின் ஒரு கூற்றுக் கூட அங்குச் சொல்லப்படுகிறது.
பிராமின்களை விட ஜாதிய இந்துக்கள் ஆடிய சாதி ஆட்ட வக்கிரம் இந்த அளவிற்கு இதுவரை பதிவுசெய்யப்பட்டதில்லை ..
பார்க்காக மட்டுமே நமக்கு தெரிந்த “நடேசன்” ”பொப்பிலி” முதல் இங்கு அனைத்தும் சொல்லப்படுகிறது.
தி.க , திமுக இரண்டுக்கும், திராவிட இயக்கம் என்ற சொற்றடர் மேலான ஈடுபாடு எத்தகையது என்பதும், இந்தி போராட்டத்தை அண்ணா கழுவி நிலை எடுத்ததும், மாணவர் முன்நடத்திய உண்மையும் என உள்ளது உள்ளபடி சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்…
புத்தகம் 2:
“ It happened along the Kaveri ” – a journey through space and time – by Padma Seshadr & Padma Malini sundararaghavan
இவர்கள் இருவரும் சென்னை ஸ்டெல்லா மேரிஸில் பணிபுரிந்த பேராசிரியர்கள்.
காவிரியின் 802 கிமீ நீளத்தை , குடகு, மைசூர், கொங்கு, சோழமண்டலம் என அதன் கரையோர நான்கு தேசபகுதிகளுக்கும் பயணித்து , அந்தக் கரையோர கலாச்சாரம், கோவில்கள் ,மற்றும் சில அபூர்வ விஷயங்களுடான அற்புதப் பயண அனுபவம்.
நிச்சயம் அறிவு பூர்வமான, உணர்வை தட்டியெழுப்பும் பதிவு.
தி.ஜா & சிட்டியின் ”நடந்தாய் வாழி காவிரியும்” , இந்த புத்தகமும் காவிரிக்கும் மனிதன் தந்த நன்றி வெளிப்பாடு..
இதில் விசேஷம் என்னவெனில், தி.ஜா தமிழ்நாட்டுக்காரர், பத்ம தோழிகள் கர்நாடகாக்காரர்கள்.
ஆச்சரியம், இவர்கள் தி.ஜா சிட்டியின் “நடந்தாய் வாழி காவிரியை” படித்தது இல்லையாம்… நான் காண்பிக்கும் வரை அதை கேள்விப்பட்டதில்லை என்றார்கள் – தமிழில் படிக்கத் தெரியாதாம்.
புத்தகம் 3:
உயிரே.. உயிரே.. –மாலன் –
கற்பனையென்ற யூக வசனங்களுடன் மாலன் கொணர்ந்திருக்கும் பிரபலமானவர்களின் காதல் கதைகள் விறுவிறுப்பாக இருக்கிறது.
அதிலும் மேரி கியூரி யின் காதல் வரலாறு மனம் கனக்கச் செய்கிறது.
மாலனின் எழுத்துக்களில் ஒரு நாகரீக மென்மை இருக்கும். அது இதிலும் தொடர்கிறதென்பது சிறப்பான ஒன்று…
சுவாரசியமான கற்பனை வசனம் கலந்த வரலாற்று உண்மை கதைகள்.
புத்தகம் 4:
நினைவு அலைகள் – டாக்டர் தி.சே.சௌ.ராஜன்
படித்து படித்து அனுபவிக்க வேண்டிய வரலாறு. யார் யாரையெல்லோமோ தலைவர் , ஈகை குணம் மிக்கவர், நாட்டிற்கு உழைத்தவர் என்று சொல்பவர்கள் இவரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர் ஆசி விழையச் சொல்கிறது நெஞ்சம்.
இந்த புத்தக அறிமுக கிடைத்தது திண்ணை.காம் தளத்தால், நன்றி.
கோவிந்த் கருப்
www.govindkarup.com
- பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார்
- தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….13 கி. ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’
- பேசாமொழி – வீடு சிறப்பிதழ்..
- நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும். . .
- பிசாவும் தலாஷ் 2டும்
- மணலும் (வாலிகையும்) நுரையும் – கலீல் ஜிப்ரான் – 8
- எலி
- ஒரு ஆன்மாவின் அழுகுரல்..
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 4
- பொம்மலாட்டம்
- கிளைகளின் கதை
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 1
- என் அருமைச் சகோதரியே ரிசானா..!
- தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’
- நூல்கள் வெளியீட்டு விழா
- திருப்பூர் அரிமா விருதுகள் 2013
- கலித்தொகையில் தொழில்களும் தொழிலாளரும்
- அசர வைக்காத பொய் மெய் – மேடை நாடகம்
- புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக
- இரு கவரிமான்கள் – 6
- வாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன்
- அக்னிப்பிரவேசம்-19
- திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -2
- வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)
- தாகூரின் கீதப் பாமாலை – 49 பிரிவுத் துயர்
- சொல்லித் தீராத சங்கிலி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !
- சாரல் விருது