வாசித்த சில.. புத்தகங்கள்…மலர்மன்னன், Padma Seshadr & Padma Malini , மாலன், டாக்டர் தி.சே.சௌ.ராஜன்

author
2
0 minutes, 8 seconds Read
This entry is part 22 of 30 in the series 20 ஜனவரி 2013

கோவிந்த் கருப்

விமர்சனம் அல்ல.. படிக்க வேண்டிய சில புத்தகங்களின் அறிமுகமே…

புத்தகம் 1:
திராவிட இயக்கம் : புனைவும் உண்மையும்..

முதலில் மலர்மன்னனின் நிர்பந்தமற்ற, எந்த விதமான எதிர்பார்ப்புமற்ற எழுதும் முறைக்கு வந்தனம்.
கடந்தகால பக்கங்களை புரட்டிப்பார்க்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள்.

அவற்றை எழுத்தில் வடிப்பவர்கள் மிக மிகச் சிலரே..

அதிலும், பாப்புலர் சிண்ட்ரோம் ஆட்டிப் படைக்காமல் எழுதுபவர்கள் மிக மிக மிக சிலரே.. அதில் ஒருவர் மலர்மன்னன்…

காலத்தில் தான் கடந்து வந்த பாதையின் காட்சிகளை அப்படியே வடிப்பதால் அவரின் எழுத்துக்கள் சத்திய எழுத்துக்காளாகின்றன…

அது இந்தப் புத்தகத்திலும் வியாபித்துக் கிடக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சியின் பெயர் வந்தது எப்படி..
சாணார்கள் என்றழைக்கப்பட்டவர்களை கிறிஸ்துவர்களாக முழுவதும் மாற்ற நடந்த முயற்சிக்கள்…
என்றெல்லாம் ஒன்று விடாமல் சொல்லி, இன்றைக்கும் உயிரோடு இருக்கும்,
பிராமின் – பிறபடுத்தப்பட்டோர் விஷயங்களை எடுத்துக் கொண்டு இண்டு இடுக்கெல்லாம் நுழைந்து வந்திருக்கிறார்.

அலைகடல் ஓடம் போல், நினைவலைகளில் நீந்தி இருக்கிறார்.
அது மட்டுமின்றி , தான் படித்த பல குறிப்புக்களுடனும் கலந்து விஷயங்களை எழுதியிருக்கிறார்.
புதியமாதவியின் ஒரு கூற்றுக் கூட அங்குச் சொல்லப்படுகிறது.

பிராமின்களை விட ஜாதிய இந்துக்கள் ஆடிய சாதி ஆட்ட வக்கிரம் இந்த அளவிற்கு இதுவரை பதிவுசெய்யப்பட்டதில்லை ..

பார்க்காக மட்டுமே நமக்கு தெரிந்த “நடேசன்” ”பொப்பிலி” முதல் இங்கு அனைத்தும் சொல்லப்படுகிறது.

தி.க , திமுக இரண்டுக்கும், திராவிட இயக்கம் என்ற சொற்றடர் மேலான ஈடுபாடு எத்தகையது என்பதும், இந்தி போராட்டத்தை அண்ணா கழுவி நிலை எடுத்ததும், மாணவர் முன்நடத்திய உண்மையும் என உள்ளது உள்ளபடி சொல்லப்பட்டிருக்கிறது.


 


தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்…


 


 


 


புத்தகம் 2:
“ It happened along the Kaveri ” – a journey through space and time – by Padma Seshadr & Padma Malini sundararaghavan

இவர்கள் இருவரும் சென்னை ஸ்டெல்லா மேரிஸில்  பணிபுரிந்த பேராசிரியர்கள்.
காவிரியின் 802 கிமீ நீளத்தை , குடகு, மைசூர், கொங்கு, சோழமண்டலம் என அதன் கரையோர நான்கு தேசபகுதிகளுக்கும் பயணித்து , அந்தக் கரையோர கலாச்சாரம், கோவில்கள் ,மற்றும் சில அபூர்வ விஷயங்களுடான அற்புதப் பயண அனுபவம்.
நிச்சயம் அறிவு பூர்வமான, உணர்வை தட்டியெழுப்பும் பதிவு.

தி.ஜா & சிட்டியின் ”நடந்தாய் வாழி காவிரியும்” , இந்த புத்தகமும் காவிரிக்கும் மனிதன் தந்த நன்றி வெளிப்பாடு..

இதில் விசேஷம் என்னவெனில், தி.ஜா தமிழ்நாட்டுக்காரர், பத்ம தோழிகள் கர்நாடகாக்காரர்கள்.


ஆச்சரியம், இவர்கள் தி.ஜா சிட்டியின் “நடந்தாய் வாழி காவிரியை” படித்தது இல்லையாம்… நான் காண்பிக்கும் வரை அதை கேள்விப்பட்டதில்லை என்றார்கள் – தமிழில் படிக்கத் தெரியாதாம்.


புத்தகம் 3:
உயிரே.. உயிரே.. –மாலன் –

கற்பனையென்ற யூக வசனங்களுடன் மாலன் கொணர்ந்திருக்கும் பிரபலமானவர்களின் காதல் கதைகள் விறுவிறுப்பாக இருக்கிறது.
அதிலும் மேரி கியூரி யின் காதல் வரலாறு மனம் கனக்கச் செய்கிறது.
மாலனின் எழுத்துக்களில் ஒரு நாகரீக மென்மை இருக்கும். அது இதிலும் தொடர்கிறதென்பது சிறப்பான ஒன்று…
சுவாரசியமான கற்பனை வசனம் கலந்த வரலாற்று உண்மை கதைகள்.


 


புத்தகம் 4:

நினைவு அலைகள் – டாக்டர் தி.சே.சௌ.ராஜன்

படித்து படித்து அனுபவிக்க வேண்டிய வரலாறு. யார் யாரையெல்லோமோ தலைவர் , ஈகை குணம் மிக்கவர், நாட்டிற்கு உழைத்தவர் என்று சொல்பவர்கள் இவரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர் ஆசி விழையச் சொல்கிறது நெஞ்சம்.
இந்த புத்தக அறிமுக கிடைத்தது திண்ணை.காம் தளத்தால், நன்றி.

கோவிந்த் கருப்
www.govindkarup.com

Series Navigationஇரு கவரிமான்கள் – 6அக்னிப்பிரவேசம்-19
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஆர். சத்தியபாமா says:

    மிகவும் பயனுள்ள பதிவு. புத்தகங்களை வாசிப்போர் இவ்வாறு கருத்தைப் பகிர்ந்துகொண்டால் அனைவருக்கும் உபயோகமாயிருக்கும். புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகங்கள், புத்தகங்களின் விலை, அவை கிடைக்கும் இடம் முதாலான விவரங்களையும் குறிப்பிட்டால் வாசகர்களுக்கு மேலும் உதவியாக இருக்கும். அறிமுகம் ஆவலைத் தூண்டிவிட்டு, நீயே தேடிப் படித்துப் பார்த்துக் கொள் என்று விலகிக் கொண்டுவிடலாமா?
    வாழைப் பழத்தை உரித்து வாயிலும் ஊட்ட வேண்டுமா என்று தயை செய்து கண்டிக்கக் கூடாது என வேண்டுகிறேன்!
    -ஆர். சத்தியபாமா

  2. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ கோவிந்த கருப் போன்ற விவரம் அறிந்த, கடந்த கால நிகழ்வுகளை கவனித்த அனுபவசாலிகள் செய்துள்ள மதிப்பீடு திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் நூலுக்கு கனம் ஏற்றும். தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் எனப் பரிந்துரை செய்துள்ளமைக்கு மிக்க நன்றி. இந்நூலை எழுத மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதிலும் பல்வேறு உபாதைகளுக்கிடையில்! இதற்குத் தக்க பலன் கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல வேளை, வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும் என்று சிலர் கருதியதுபோல நிகழ்ந்துவிடவில்லை என்பது உறுதியாகிறது.
    -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *