கவிஞர் திரைப்படப்பாடலாசிரியர் நெப்போலியனின் கவிதை , சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்ற ஆதரவுடன் இயங்கி வரும் தி சப் ஸ்டேஷன் லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட்ல் ( 2013 ) இடம் பெற்றுள்ளது. காதலின் ( நட்பின் சினேகத்தின் ) பிரிவின் வலியின் சுவையைச் சொல்லும் வரிகளைக் கருப்பொருளாய் கொண்ட சிங்கப்பூரின் 12 கவிஞர்களின் கவிதைகள் இந்த வருடத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சீனம், மலாய், ஆங்கிலம், தமிழ் என நான்கு மொழிகளிலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் இடம் பெற்றுள்ளது . 2010ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ப்ராஜெக்ட்ல் ஒவ்வொரு மாதமும் புகழ்பெற்ற சிங்கப்பூர் கவிஞரும் அவரின் கவிதையும் சப்ஸ்டேஷன் லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட் தொகுப்பில் இடம் பெறுவதுடன் , இணையப் பக்கத்திலும் வெளியிடப்படும். அது மட்டுமன்றி அழகிய ஓவியத்துடன் வண்ண போஸ்ட் கார்டுகளாக ஆர்மினியன் சாலையில் அமைந்திருக்கும் சப் ஸ்டேஷன் அலுவலகத்திலும், சிங்கப்பூரின் பிரபல புத்தகக் கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதுவரை இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள மூன்று தமிழ் கவிதைகளில் கவிஞர் நெப்போலியனின் கவிதையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டும் சிங்கப்பூரின் பிரபல நவீன எழுத்தாளரும் படைப்பாளருமான இளங்கோவன் மற்றும் தமிழ்முரசு ஞாயிறு பதிப்பின் ஆசிரியரும் சிங்கையின் முற்போக்கு கவிஞருமான லதா அவர்களுடையது. மேலும் சிரில் வோங், டானியா டி ரொசாரியோ, இஷாஹமாரி, டான் சீ லே, ஜேசன் வீ, லீ யூ லியோங், ஜெரால்ட் யாம், பானி ஹேகல், பெட்டி சுஸியார்ஜோ, மயோ மார்ட்டின், இங் யீ செங், கேஸ்டன் இங், ஒவிடியா யு, லியோனா லோ என சிங்கப்பூரின் சீனம், மலாய் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் பிரபல படைப்பாளர்களின் கவிதைகள் இந்த தொகுப்பிலும் அதன் இணையப் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. 2011 ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற மூவிங் வோர்ட்ஸ் கவிதைப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிங்கப்பூர் எம்.ஆர்.டி நிலையங்களிலும், சிங்கப்பூர் கவிதைத் திரட்டிலும் இடம்பெற்ற கவிஞர் நெப்போலியனின் பயணம் மற்றும் கான்க்ரீட் காடுகள் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பினைப் படித்துவிட்டு சிங்கப்பூர் சப்ஸ்டேஷன் கவிஞர் நெப்போலியனை மின்னஞ்சலில் தொடர்புகொண்டு 2013ம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான காதல் கவிதையை லவ் லெட்டர்ஸ் ப்ராஜெக்ட்டிற்காக எழுதித் தரும்படிக் கேட்டது குறிப்பிடத்தக்கது. கவிஞர் நெப்போலியனின் கவிதையினை http://www.substation.org/
- மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
- பறக்காத பறவைகள்- சிறுகதை
- சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’
- இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
- கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
- வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3
- வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்
- அக்னிப்பிரவேசம்-20
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்
- பள்ளியெழுச்சி
- விற்பனைக்குப் பேய்
- விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்
- ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
- வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- விதி
- தாய்மை
- கவிஞர் நெப்போலியனின் காதல் கடிதங்கள் 2013
- உண்மையே உன் நிறம் என்ன?
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
- குப்பை
- கவிதை பக்கம்
- ரயில் நிலைய அவதிகள்