அயீஷா அஸ்கார்
(எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற பாக்கிஸ்தான் பத்திரிக்கையில் ஜனவரி 4 2013இல் வெளியான கட்டுரை)
பெரும் போரில் பாலியல் பலாத்காரம் எவ்வாறு ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். 1971இல் கிழக்கு பாகிஸ்தான் போரின்போது, பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக கிளம்பிய குரல்களை நசுக்க, பல்லாயிரக்கணக்கான பெண்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒவ்வொரு வருடமும், பாகிஸ்தானிகள் போரின்போது சிறைப்படுத்தப்பட்ட போர்வீரர்களை பற்றி புலம்புவார்கள். ஆனால், அவர்கள் செய்த கொடூரமான செயல்களை பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.
சில ஜனநாயக சமூகங்களில், விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட சமூகத்தினரின் மீதுஆயுதமாக பாலியல் பலாத்காரம் உபயோகிக்கப்படுகிறது. அப்போது மற்ற சமூகங்கள் தங்களிடம் ஒன்றுமில்லை என்பது போல வாய் மூடி மௌனிகளாக இருக்கிறார்கள். பாகிஸ்தானில், பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் ஒருபோது நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவதில்லை. பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கூக்குரல், ”மேற்கத்திய ஏஜெண்டுகளின் அஜண்டாவாக” பிரச்சாரம் செய்யப்பட்டுவிடுகிறது.
முஸ்லீம் பெண்களை பலாத்காரம் செய்தது பற்றி பேசினாலோ, இஸ்லாமிய இமாம்கள், அந்த பெண்ணின் குணத்தை பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்து, பாலியல் பலாத்காரம் செய்த ஆணின் குற்றத்தை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் குற்றமாக மாற்றி ஏற்றிவிடுகிறார்கள். ஆனால், இந்துப்பெண்களின் மீது நடக்கும் பாலியல் பலாத்காரம் பற்றி பேச ஆளே இல்லை. ஒரு இஸ்லாமிய இமாமும் அதனை பற்றி பேசுவதே இல்லை. ஏனெனில் இங்கே இனவெறி கொளுந்து விட்டு எரிகிறது. இந்துக்கள் அரசியல் சட்ட அமைப்பின்படி ”தங்களது மதத்தை பின்பற்ற உரிமை உள்ளவர்கள்” என்று ஏட்டில் எழுதிவைத்துவிட்டு அதனை பற்றி ஒருவரும் கவலைப்படுவதில்லை. ஒருவர் சிந்து மாகாணத்தை சேர்ந்த கிராமப்புறத்தில் வாழும் ஒரு சிந்தி இந்து பெண்ணாகவோ ஏழையாகவோ இருந்தால், பாகிஸ்தானில் எல்லா விஷயங்களுக்கு அவருக்கு எதிராகவே இருக்கும். எவ்வளவுதான் அந்த பலாத்காரங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், அது தொலைக்காட்சிகளில் செய்தியாகக்கூட வராது. ஏனெனில், பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் காட்ட தகுந்த விஷயம் அல்ல.
டிசம்பர் மாதம் முழுவதும், பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக உமர் கோட் நகரத்தில் போராட்டம் நடந்துகொண்டே இருந்தது. ஆனால், அவை தொலைக்காட்சிகளில் காட்டப்படவேஇல்லை. மிகச்சமீபத்தில், இந்து குடும்பத்தை சேர்ந்த ஆறு வயதும் 14 வயதுமான இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது இளம்பிராயமும், மனிதமும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாலியல் பலாத்காரங்கள் முதலுமல்ல, அதிகாரத்திலிருப்பவர்கள் செய்த முதல் அட்டூழியமும் அல்ல. சிந்தி இந்துக்கள் வெகுகாலமாகவே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அதிகாரத்திலிருப்பவர்களால், இந்த இந்துக்களின் குரல் வெகுகாலமாகவே அமுக்கப்பட்டே வந்திருக்கிறது. இருப்பினும், இந்த அதிகாரத்திலுள்ளவர்களும்,பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் இஸ்லாமிய இமாம்களும், பெண்களின் உரிமைகளை பற்றி பேசுவது நாராசமாகவே உள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால், அவர்களை அதிகாரிகள் பாதுகாத்தால், ஒருவேளை சிந்து மக்களை அடக்குமுறை செய்வது அந்த அரசியல் கட்சியின் முக்கியமான உரிமையோ என்னவோ. பாலியல் பலாத்காரம் செய்தவர்களை பற்றி பேசுவதும், அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்பதும், ”ஜனநாயகத்தை” அவதூறு செய்வது என்று போலி அறிவுஜீவிகள் முழங்குகிறார்கள். ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களின் முன் நின்றாகவேண்டும் என்பதை இந்த போலி அறிவுஜீவிகள் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. பெரிய முஸ்லீம் ஜமீந்தாரர்களுக்கோ இந்த ஏழை இந்துக்களையும் பெண்களையும் சுரண்டுவது எளிய விஷயம். அதன் பின் அதனை நியாயப்படுத்த இந்த போலி அறிவுஜீவிகளை அனுப்பிவிட்டால் முடிந்தது.
பாகிஸ்தானில் ஒவ்வொரு மாதமும், 20-25 இந்து பெண்கள் கட்டாயமாக மதம் மாற்றப்படுகிறார்கள், பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று 2010 ஆசியன் மனித உரிமை கமிஷன் அறிவிக்கிறது. சிந்தி மொழி செய்தி பத்திரிக்கைகள் இதனை பிரசுரித்து வருகின்றன. ஆனால், ஆங்கில உருது மொழி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இந்த செய்திகளை அமுக்கிவிடுகின்றன. ஏனெனில் இந்த உருது ஆங்கில மொழி ஊடகங்களுக்கு எகிப்து, சிரியா, இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் பாலுறவு பலாத்காரமே முக்கியம். பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினர் மீது நடக்கும் பாலியல் பலாத்காரங்கள் முக்கியமல்ல.
உமர் கோட்டில் பாலுறவு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட இந்து சிறுமிகள் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் மீது நடந்த வன்முறைக்கு எந்த விதமான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. கிராம ஆஸ்பத்திரிகளில் கிடக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினருக்கு நீதி ஒவ்வொரு தினமும் மறுக்கப்படுகிறது. அதற்கப்புறமும், பாகிஸ்தானில் மேலடுக்குகளில் வாழும் பாகிஸ்தானிகளுக்கு சிந்து மாகாணத்திலிருந்து இந்துக்கள் வெளியேறுவது ஆச்சரியமாக இருக்கிறது!
Published in The Express Tribune, January 5th, 2013.
- மணலும் (வாலிகையும்) நுரையும் – (9)
- பறக்காத பறவைகள்- சிறுகதை
- சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….14 வண்ணநிலவன் – ‘கடல்புரத்தில்’
- இந்து முசுலிம் அடிப்படைவாதிகளால் பந்தாடப்படும் கமல்
- கற்றறிந்தார் ஏத்தும் கலியில்’ வாழ்வியல் அறங்கள்
- சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு
- வந்தியத்தேவன்: அவன் ஒரு கதாநாயகன்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -3
- வங்க தேசம் முதல் பாகிஸ்தான் வரை : இந்துப்பெண்களின் மீது தொடரும் பாலியல் பலாத்காரம்
- அக்னிப்பிரவேசம்-20
- மௌலானா அபுல் கலாம் ஆசாத் – பங்களாதேஷில் தாமதமாக வந்த நீதி
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சுருள் நிபுலாவிலிருந்து (Helix Nebula) வெளியேறும் சூரிய மண்டல வடிவுள்ள அண்டத் துண்டுகள்
- பள்ளியெழுச்சி
- விற்பனைக்குப் பேய்
- விழித்தெழுக என் தேசம் ! – இரவீந்திரநாத் தாகூர்
- ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம்
- வால்ட் விட்மன் வசன கவிதை -8 என்னைப் பற்றிய பாடல் (Song of Myself)
- பூரண சுதந்திரம் யாருக்கு ?
- விதி
- தாய்மை
- கவிஞர் நெப்போலியனின் காதல் கடிதங்கள் 2013
- உண்மையே உன் நிறம் என்ன?
- ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
- குப்பை
- கவிதை பக்கம்
- ரயில் நிலைய அவதிகள்